செப்டெம்பரில் ஆரம்பித்த என் வலைப்பதிவுப் பயணத்தில் இதுவரை எண்பதுக்கும் அதிகமான பதிவுகள் இட்டுவிட்டேன்..
இதுவரை 25000+ ஹிட்ஸ் கிடைத்துள்ளன. தினமும் தவறாமல் வருகை தரும் அன்பு நெஞ்சங்களும் கிடைத்திருப்பது கண்டு மகிழ்ச்சி..
எனது எழுத்துக்கள் /பதிவுகள் உங்களுக்குப் பிடித்தனவாக அமைவது கண்டும் மகிழ்ச்சியே.ஆனால் நான் எனது பதிவுகளில் இதுவரை இவற்றைத் தான் எழுதுவேன் என்றோ,இதைத் தான் எழுதவேண்டும் என்றோ வரையறை வைத்துக் கொண்டதில்லை..எந்த நேரத்தில் எது தோன்றுகிறதோ அதை உடனே எழுதிவிட வேண்டும் என்று மட்டுமே யோசிக்கிறேன்.
சில நாட்களிலேதையும் எழுத மனதில் தோன்றாது.
ஹிட்ஸ் அதிகமான நாட்களை அடுத்த நாட்களில் ரொம்பவும் உற்சாகமாக ஏதாவது பதிவொன்றை இடவேண்டும் என்று மனம் உந்தும்.அந்த வேளையில் ஏதாவது சுவார்சயமான விஷயத்தை நானே தேடியெடுத்து எழுதிப் போட்டுவிடுவதும் உண்டு.
நண்பர்கள் அனுப்பும் சுவாரஸ்யமான படங்களும்(இலேசில் மற்றவர் கண்களுக்குத் தட்டுப்படாதவை மட்டும்) என் பதிவுகளில் வரும்.
ஆனால் அரசியல் பதிவுகளும் கிரிக்கெட் பற்றி எழுதும் பதிவுகளும் தான் கூடுதலான வரவேற்பை இதுவரை பெற்றிருக்கின்றன. எனினும் எனது பதிவுகளில் எல்லாம் வரும்.அனானிகள் உட்பட நான் எல்லோரையும் பின்னூட்டமிட அனுமதிப்பது அவரவர் தத்தம் கருத்துக்களை சொல்லி தெளிவு பெறட்டும்.ஆகவும் ஓவரானால் மட்டும் நான் தலையிடுவேன்.. ;)
எனது தனிப்பட்ட ஒலிபரப்பு வாழ்க்கை,தனிப்பட்ட உணர்வுகளை எழுதினாலும் கூட என் வலைப்பூவை ஒரு personal digital diaryஆக மாற்றிக்கொள்ள எனக்கு இஷ்டமில்லை.
இன்னொன்று,பத்தாண்டு கால ஒலிபரப்பு வாழ்க்கை பற்றி எழுத ஆரம்பித்தது பாதியிலேயே நிற்கிறது.. முழுமையாக பழைய நினைவுகளை அசைபோட்டு எழுத மூட் வாய்க்கவில்லை.. எப்போது மூட் வருகிறதோ,நேரமும் கூடி வருகிறதோ அப்போது தொடர்வேன்.
இப்போதைக்கு என் மனதில் படுபவை வரும்.
பின்னூட்டங்களின் எண்ணிக்கை தான் ஒரு பதிவின் தரத்தையும்,வரவேற்பையும் தீர்மானிக்கின்றன என்ற விடயத்திலும் எனக்கு உடன்பாடில்லை.
ஆனால் தமிளிஷ், தமிழ்மணம் போன்றவையே (இப்போது இன்னும் பல புதிய வலைச்சரங்களும் தோன்றி வளர்ந்து வருகிண்டறன) நண்பர்களையும் வருகைகளையும் அதிகரித்துள்ளன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை..
வலைப்பூ எழுத ஆரம்பித்த பிறகு வாசிப்பது கூடியுள்ளது. பல புது விஷயங்கள் தெரியவந்துள்ளது.
நண்பர்கள் கூடியுள்ளார்கள்.
பல புதிய சொற்பதங்கள் தெரிய வந்துள்ளது.. (பின்னூட்டம்,கும்மி,அனானி,மீ த பர்ஸ்ட், கும்மி, மொக்கை.. இப்படிப் பலபல.. )
ஆனால் அலுவலக நேரம் இதனுடேயே போகிறது.. ;) எப்ப தான் உருப்படியா வேலை செஞ்சோம்..
அடுத்தது காண்பது,கேட்பதையெல்லாம் பதிவாக்கிவிட மனசு நினைக்கிறது..
எல்லாவற்றையும் கொட்ட வடிகால் கிடைத்துள்ளது. ஆனால் நேரம் இல்லாத நேரம் பைத்தியம் பிடிக்க வைக்கும் அளவுக்கு அடிமையாக்கி விட்டதோ என்று சில சமயம் சிந்திக்கிறேன்.
பதிவராகி நடை பழகியாச்சு..
இன்னும் பறக்க பல தூரம் கடக்க வேண்டும்.. உங்கள் வாழ்த்துக்கள் வேண்டும்.. வருகைகளும்,வாசிப்புகளும் தான்..
===============================================
உலகின் முடிவு?
இவை நான் பார்த்து அதிசயித்த graphix பிரம்மாண்டம். ஒவ்வொன்றுக்கும் எல்லை இருப்பது போல உலகுக்கும் இருந்தால்? உலகின் முடிவிடம் இப்படித் தான் இருக்குமோ???