தமிழ் திரை நட்சத்திரங்களில் யார்,யார் வலைப்பதிவராக இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை எனக்கு.எனினும் பின்னணிப் பாடகி சின்மயீ ஆங்கிலத்தில் ஒரு வலைப்பூவை வைத்துள்ளார்.அற்புதமாக எழுதியும் வருகிறார்.
வலைப்பதிவுகள் மூலமாக இந்தப் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களை அதிகரித்துக் கொள்ளும் அதேவேளை பகிரங்கமாக சொல்ல முடியாத சில விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளக் கூடும்.எனினும் மனதில் பட்டதை சொல்லப் போகிறேன் பேர்வழி என்று அமீர்கான் நாய்க் குட்டியையும்,ஷாருக்கானையும் ஒப்பிட்டு விழி பிதுங்கியதைப் போல சம்பவங்களும் உண்டு.
அதுபோன்ற ஒரு சுவாரஸ்ய சம்பவம் தான் இது..
இப்போது நியூசீலாந்து அணி ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவது அனைவரும் அறிந்ததே..
அந்த அணியின் (நியூசீலாந்து) புதிய,இளம் வீரர் வேகப் பந்துவீச்சாளரான இயன் ஒ பிரையன்.இவரும் நம் போல வலைப்பதிவு எழுதுவதை வழக்கமாகக் கொண்ட ஒருவர்.

இவர் என்ன செய்தார், தற்போது நடைபெற்றுவரும் அடேலைட் டெஸ்ட் போட்டிக்கு முதல் நாள் தனது வலைப்பதிவில் தான் துடுப்பெடுத்தாடும் வேளையில் பவுன்செர் பந்துகளை சந்திப்பது அறவே பிடிக்காதென்றும்,பவுன்சர் பந்துகள் என்றால் தனக்குப் பயம் என்றும் எழுதி இருந்தார்.
அதுசரி உலகின் முன்னணித் துடுப்பாட்ட வீரர்கள் பலருக்கே பவுன்சர் பந்துகளை சந்திக்கப் பயம் இருக்கும் வேளைகளில் பத்தாம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடும் ஒ பிரையன் எம்மாத்திரம்.
ஆஸ்திரேலிய வீரர்கள் இவரது பதிவை வாசித்தனரோ என்னவோ ஒ பிரையன் துடுப்பெடுத்தட வந்தவுடனேயே மிட்செல் ஜோன்சன் வீசிய முதல் பந்தே பவுன்சர்! அடுத்த பந்தும் அவ்வாறே! அடுத்த ஓவரிலேயே பிரெட் லீ வந்தார்..இரண்டு பந்துகளில் ஒ பிரையன் பவிலியன் திரும்பினார். லீயின் பவுன்சருக்கு பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார்.
நேற்று நடந்த இந்த சம்பவத்துக்குப் பிறகு தனது வலைப்பதிவில் "இனிமேலும் என் பதிவுகளில் எனக்கு எதுக்குப் பயம்;எதுக்குப் பயமில்லை என்று எழுதவே மாட்டேன் " என்று புலம்பி இருக்கிறார் ஒ பிரையன்.
எனினும் இன்று லீயைப் பழிவாங்கிக் கொண்டார் ஓ பிரையன். தனது பவுன்சர் பந்தில் ஆட்டமிழக்கச் செய்தார் ஓ பிரையன். லீக்கும் ஒரு வலைப்பூ இருந்தால் அவரும் ஏதாவது எழுதியிருப்பார்.

பி.கு .. சில நண்பர்கள் தலைப்பைப் பார்த்தவுடன் வேறு யாரோ (!) ஒருவர் பற்றி பரபரப்பான விஷயம் தான் வந்திருக்கிறது என்று நினைத்து வாசிக்கவந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.. ;)
9 comments:
ஹாஹா...
You know how to bring people to your blog... Good.. Keep it.. :P
//பி.கு .. சில நண்பர்கள் தலைப்பைப் பார்த்தவுடன் வேறு யாரோ (!) ஒருவர் பற்றி பரபரப்பான விஷயம் தான் வந்திருக்கிறது என்று நினைத்து வாசிக்கவந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.. ;) //
நற.நற...
//பி.கு .. சில நண்பர்கள் தலைப்பைப் பார்த்தவுடன் வேறு யாரோ (!) ஒருவர் பற்றி பரபரப்பான விஷயம் தான் வந்திருக்கிறது என்று நினைத்து வாசிக்கவந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.. ;) //
:( :) ;)
"சப்" என்று போச்சு
//பி.கு .. சில நண்பர்கள் தலைப்பைப் பார்த்தவுடன் வேறு யாரோ (!) ஒருவர் பற்றி பரபரப்பான விஷயம் தான் வந்திருக்கிறது என்று நினைத்து வாசிக்கவந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.. ;) //
:)
அன்பின் லோஷன், அவசரம் கருதி இதிலும் பதிகின்றேன். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். யாரவது இதைப்பார்த்து விட்டு உதவினால் மிக்க நன்றி. பேரளவில் உயிர்களை காப்பற்றலாம்.
வேண்டுகோள் - http://thesamnet.co.uk/?p=3637 - மீன்களின் நடத்தையை ஆய்வு செய்வது அவசியம்! இந்த தகவல் உண்மையானதா ? இலங்கையை சேர்ந்த சகோதர, சகோதரிகள் தயைகூர்ந்து இதைப்பற்றி விசாரித்து எனக்கு தகவல் தரவும். என்னுடைய வலைப்பதிவிலும் இதைப்பற்றி பதிந்துள்ளேன். http://gnuismail.blogspot.com/2008/10/blog-post.html- மீண்டுமொரு சுனாமி ?
// சுனா பாணா said...
அதெல்லாம் சரிண்ணே எங்க போபால் விஷவாயு பத்தி ஒண்ணும் கானோமே!//
ஆமாம்.போபால் விஷவாயு பற்றிய விவரங்களை காணவில்லை. ஆனால் இந்த அனைத்து விபத்துகளுக்கும் இடையேயான ஒற்றுமை என்னவென்றால் இவையனைத்தும் செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்ட, அதில் மனிதர்களின் அஜாக்கிரதையால் அல்லது ஒரு சில மனிதர்களின் பொறுப்பற்ற நடத்தையால் ஏற்ப்பட்டவைகளாகும்.
ஆனால் இயற்கையாக ஏற்படும் பேராபத்துகளில் இருந்து உயிருள்ளவைகளை காக்க வாய்ப்பு இருந்தும் ஒரு சில மனிதர்களின் பொறுப்பற்ற நடத்தையால் பெரும் உயிரிழப்புகள் ஏற்ப்பட்டதை மறக்கவியலாது. உதாரணம் : 2004-ல் ஏற்ப்பட்ட கடற்கோள்/ஆழிப்பேரலை (சுனாமி-Tsunami)குறித்த தகவலை முன்னரே ஒரு சிலர் அறிந்தும் (நானும் இதில் சேர்த்தி தான்) அதை சரியான நேரத்தில், சரியான நபர்களிடத்தே கொண்டு சேர்க்க தவறியதால் ஏற்ப்பட்ட பாரிய உயிரிழப்பை நினைவில் கொள்ளலாம். அந்த குற்ற உணர்ச்சியால் தான் இந்த "ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" (http://www.ina.in/itws/) யை இது வரை நடத்தி வருகின்றோம்.
மேலும் ஆழிப்பேரலை குறித்து யாரும் பெரும் கிலி கொள்ள தேவையில்லை. அதனால் கடற்கரையின் இருபுறமும் அதிகபட்சமாக 2 கி.மீ வரை தான் சேதத்தினை ஏற்ப்படுத்திட இயலும்.நாம் ஆழிப்பேரலையை முன்கூட்டியே கணித்து அதைப்பற்றிய விவரத்தை சரியான நேரத்தில், சரியான நபர்களிடத்தே கொண்டு சேர்த்து விட்டால் ஏகப்பட்ட உயிர்களை காப்பற்றிவிடலாம். மேலும் இலங்கை, இந்திய மீனவர்களிடம் இதை சேர்த்துவிட்டால் அவர்கள் தங்களுடைய மீன்பிடி படகுகளை இயக்கி ஆழிப்பேரலை வருவதற்க்குமுன் கடலுக்குள் சென்றுவிடலாம்.கடலில் அவர்கள் 2கி.மீ தூரம் தாண்டிவிட்டால் பயமில்லை.இதனால் பெருமளவில் உயிர் மற்றும் பொருள் சேதத்தினை தவிர்த்திடலாம். இந்த விஷயம் நிறைய பேர்களுக்கு தெரியாது. காரணம் இந்தேனேஷியாவில் பாரிய பூகம்பம் ஏற்ப்பட்டு ஏறத்தாழ 2 மணி நேரம் கழித்தே ஆழிப்பேரலை இலங்கை மற்றும் இந்திய கடற்கரைகளை தாக்கியது. சரியான நேரத்தில் தகவல்கள் பகிரப்பட்டு இருந்தால் சேத அளவு கணிசமாக குறைந்து இருக்கும். இனிவரும் காலங்களில் இதை நாமனைவரும் செயல் படுத்துவோம்.
with care and love,
Muhammad Ismail .H, PHD,
:)
அன்பின் லோஷன்,
//தமிழ் திரை நட்சத்திரங்களில் யார்,யார் வலைப்பதிவராக இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை எனக்கு.//
நடிகை ரேவதி கூட ப்ளொக் எழுதிவருகிறார்.
Post a Comment