August 04, 2011

நத்தை, நாம், நாடாளுமன்றம் .... இந்த வீடு நமக்கு சொந்தமில்லை பாடுடா சின்னதம்பி


பத்திரமாய் புத்தம்புதுசாய் 
பளபளக்கப் போட்டு நடந்த 
வெளிநாட்டு சப்பாத்தின் 
முதல் சில அடிகளில் 
பரிதாபமாக 
நசுங்கிச் செத்தது 
பல மணிநேரம் செலவழித்து 
சில அடிகள்
நகர்ந்த 
பாவப்பட்ட நத்தை


இன்று அதிகாலை வேலைக்குப் புறப்பட்ட போது நடந்த சம்பவம்....

------------------------------------

சங்கிலியன் சிலை திறப்பு ஒரு பக்கம், நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாணப் பிரதிநித்துவம் குறைக்கப்பட்டது மறுபக்கம் என்று தேர்தல் முடிந்தாலும் யாழ்ப்பாணம் செய்திகளில் முதன்மை பெறுவது தவிர்க்கமுடியாததாகி இருக்கிறது.

சங்கிலியன் சிலை எப்படி இருக்கப் போகிறது என்ற ஊகங்கள் எல்லாவற்றுக்கும் விடையாக வாள் ஏந்தி, உயரப்பிடித்திருக்கும் தங்க நிற சங்கிலியன் சிலை நேற்றுத் திறக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு ஆறுதல்...

அரசியலைத் தாண்டியதாக வரலாறு எப்போதும் முக்கியம் தானே...

--------------------------

ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து தேர்வாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைவதை என்ன செய்து தடுக்கப் போகிறோம்??
தேர்தல் ஆணையாளர் சார்பாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல பேட்டியளிக்கிறார்.
அது தேர்தல் ஆணையாளருக்கு உள்ள "சுயாதீன சுதந்திரமாம்".

இவ்வளவு நாளும் 'பரிசீலனை'இல் இருந்த ஒரு விடயம், தேர்தல் ஆணையாளர் நடக்கலாம் என்று சொல்லிவந்த ஒரு விடயம், இனி நிச்சயமாக நிறைவேறும் என்ற பயம் இப்போது உருவாகிவிட்டது.

தமிழ்க்கூட்டமைப்பு இனி என்ன செய்யும்? அரச பக்கம் இருக்கும் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் பதில்?

ஊடகங்கள் நாம் குரல் எழுப்பி மட்டும் எதுவித பயனும் கிடைக்காது என்பது வரலாற்றில் நாம் உணர்ந்தது.
தமிழ் அரசியல்வாதிகள் குரலை உயர்த்தியும் அவ்வாறே..
நடப்பது நடக்கத் தான் போகிறது.

ஆனால் இது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தோடு போய்விடாது என்பதே பெரிய அச்சம்...

சில நாட்களுக்கு முன் நான் இட்ட ஒரு ட்வீட்டும், பின் அதற்கு பேஸ்புக்கில் (Facebook) வந்த நண்பர்களின் கருத்துக்களும் இதற்கு தெளிவு....

(என்னைப் பற்றிப் பரவாயில்லை, அந்த நண்பர்களின் Privacy கருதி இங்கே சுட்டியை மட்டுமே தருகிறேன்)

https://www.facebook.com/arvloshan/posts/10150730018220368

என்ன தான் நடக்கட்டுமே.. என்று இருந்துவிட முடியாத விஷயம் இது..

ஆனால் அடுத்த கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் தொகை (வாக்காளர்) குறைந்துள்ளதால் எங்கே அந்த நான்கு உறுப்பினர்களைக் கூட்டவுள்ளார்கள்???

யாழ்ப்பாணத்திலிருந்து அதிகளவு தமிழ் மக்கள் வந்து குடியேறிய மாவட்டமான கொழும்பு?
அப்படியானாலும் அங்கே குறித்த நான்கையும் இங்கே தருவார்களா?
அல்லது இரண்டு இங்கே மற்ற இரண்டை, கம்பஹாவுக்கும், வேறேங்காவதற்கும் கொடுப்பார்களா?

என்ன நடக்குமோ? எப்படி நடக்குமோ?

---------------------------

இதற்குப் பொருத்தமோ என்னவோ..
ஒரு பாடல்...

நான் என்றோ கேட்டு ரசித்த ஒரு பாடல்..
பல நாளாக மனதில் மறந்து போயிருந்த பாடல், அண்மையில் வெற்றி FM இசைக் களஞ்சியத்துக்கு எம்மிடம் இல்லாத பாடல்களாகத் தேடித்தேடித் தரவிறக்கியபோது அகப்பட்டது...

அதையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசை..
கவிஞர் வாலி எழுதிய பாடல் என நினைக்கிறேன்..

திரைப்படம் - ஏழை ஜாதி
இசை - இளையராஜா
பாடியவர் - இளையராஜா 

விஜயகாந்தும் அப்போது இந்திய நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி இருந்த ஜெயப்ரதாவும் நடித்த படம்..


பாடலைக் கேட்டும் ரசியுங்கள்....வாழ்க்கையை இப்படியே எடுத்துக்கொண்டால் எந்தவொரு மனக்கஷ்டமும் இல்லை..

கண்ணீரை கண்டவுடன் கைவிரலால் துடைத்திடு
உன் பெயரை சரித்திரத்தில் மனிதன் என்று பொறித்திடு
இன்னொருவன் வாழ ஒரு ஏணியை போல் மாறு
உள்ளம் உள்ள உன்னை இங்கு வெல்லுறவன் யாரு


குற்றம் செய்த பேரை கண்டு அஞ்சாமல் தான் மோது
உண்மை என்றும் வெல்லும் என்று சத்தம் போட்டு பாடு

இந்த வரிகள் மனதில் ஓட்டிக் கொண்டன..


இதே போல இதே படத்தில் பாலசுப்ரமணியம் பாடிய இன்னொரு வடிவத்தையே நான் முதலில் தவறாக  இணைத்திருந்தேன்.. திருத்திய Open Talkக்கு நன்றிகள்..

இது S.P. பாலசுப்ரமணியம் பாடிய வடிவம்..

இரண்டிலும் வரிகள் வேறுபட்டிருக்கின்றன..


உடனுக்குடன் பாடலைக் கேட்கும் வடிவில் மாற்றித் தந்த தம்பி கன்கோனுக்கும் நன்றிகள்.

அண்மைக்காலத்தில் தரவிறக்கி நாள் முழுக்க காது சலிக்காமல் கேட்டு ரசித்த சில பாடல்கள்...

சலங்கையில் ஒரு சங்கீதம் படத்தின்...
"கனவா இது உண்மையா?"
"யார் அழைத்தது கனவு ராணியா?"
"யாரோடு யாரோ"
மூன்றும் வினாவுடன் முடியும் பாடல்கள்...

அள்ளித் தந்த பூமி - நண்டு

மழலையின் மொழியின் அழகிய தமிழ் - பிள்ளைப் பாசம்
அம்மன் கோவில் தேரழகு - சொந்தம் 16

இவை இரண்டும் சகோதரன் பிரபா அனுப்பியவை..


இன்னும் இரு விஷயங்கள்..

* நாளை மாலை கொழும்புத் தமிழ் சங்கத்தில் இடம் பெறவுள்ள நிகழ்ச்சி ஒன்றில் "இன்றைய நிலையில் இலத்திரனியல் ஊடகங்கள் எதிர்நோக்கும் சவால்கள்" என்னும் தலைப்பில் உரையாற்றவுள்ளேன்.
மாலை 6 மணிக்கு.. 

* தம்பி பவன் (பப்புமுத்து, குஞ்சு etc பெயர்களால் அழைக்கப்படுபவர்) ஒரு சவாலை அனுப்பியுள்ளார். அதற்காகவும் ஒரு பதிவு இடவேண்டும்..


***** நத்தையும் தன் வீட்டை சுமந்துகொண்டு தான் செல்கிறது என்ற விடயம் இப்போது மனதில் உறுத்திய ஒரு விடயம்... :(
17 comments:

பி.அமல்ராஜ் said...

அருமையான பதிவு.. அண்ணா அந்த புதிய சங்கிலியன் மன்னனுடைய சிலையில் வாளை காணவில்லை என்று செய்தி வந்ததே.. இறுதியில் சிலையில் அதை வைத்துவிட்டார்களா?

Mohamed Faaique said...

முதல் கவிதை சூப்பர்....

யோ வொய்ஸ் (யோகா) said...

காலத்துக்கு தேவையான அலசல்...

பார்ப்போம் :(

நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து பாடல்களும் ஒரு காலத்தில் நான் அதிகம் ரசித்த பாடல்கள் இப்போது பணி சுமை காரமாக கேட்பது அரிது

Open Talk said...

நீங்கள் இணைத்த பாடல்வரிகளும் பாடலும் வேறுவேறானவை!

Open Talk said...

நீங்கள் இணைத்த பாடல்வரிகளிற்கான பாடல்...
http://tamilmp3songslyrics.com/songpage/Eazhai-Jaadhi-Cinema-Film-Movie-Song-Lyrics-Intha-veedu-namakku/2126

கன்கொன் || Kangon said...

//

குற்றம் செய்த பேரை கண்டு அஞ்சாமல் தான் மோது
உண்மை என்றும் வெல்லும் என்று சத்தம் போட்டு பாடு //

யதார்த்த வாழ்வில் இது எப்போதுமே சாத்தியமாகுமோ தெரியாது, ஆனால் நல்ல வரிகள் தான்.
பாடலையும் இரசித்தேன்.

ஆகுலன் said...

நான் என்னடா பாட்டு கேட்குது எண்டு பார்த்தா இதுதான் விடயமா.......

Shafna said...

நத்தைய நசுக்கிட்டு கவிதை வேறா? வாழ்க உங்கள் வெளிநாட்டு சப்பாத்து... அது அதற்கான வீட்டை சுமந்து செல்வதுவும் எமக்கான ஒரு பாடமோ? நசுக்கிய நத்தைக்காக வந்த கவிதை ரசனை.. பாட்டெல்லாம் சூப்பர். எனக்கு இந்த பாடல் ஞாபகத்திறகு வருது.. ஒன்னுமே புரியலே உலகத்திலே.என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது...

நிரூபன் said...

பத்திரமாய் புத்தம்புதுசாய்
பளபளக்கப் போட்டு நடந்த
வெளிநாட்டு சப்பாத்தின்
முதல் சில அடிகளில்
பரிதாபமாக
நசுங்கிச் செத்தது
பல மணிநேரம் செலவழித்து
சில அடிகள்
நகர்ந்த
பாவப்பட்ட நத்தை//

பூடகமாய்ப் பொருள் சொல்லும் கவிதை,
நத்தை எனும் குறியீட்டு வடிவம் தாங்கி, நகர்ந்து சென்ற ஞாபக அலைகளை மீண்டும் மனக் கண் முன்னே கொண்டு வருகின்றது.

நிரூபன் said...

அல்லது இரண்டு இங்கே மற்ற இரண்டை, கம்பஹாவுக்கும், வேறேங்காவதற்கும் கொடுப்பார்களா?//

அவ்...இன்னும் குறைப்பார்களேயன்றி,கூட்டிக் கொடுக்க மாட்டார்கள் பாஸ்.

நிரூபன் said...

இந்த வீடு நமக்கு....
சிட்டுவேசன் சோங்ஸ்..கலக்கலாப் போட்டிருக்கிறீங்க,
வீடு நமக்குச் சொந்தமில்லைத் தான்.
குறுக்கே பூனைகளும், குள்ள நரிகளும் ஓடுகின்ற போது((((;

நிரூபன் said...

இலத்திரனியல் ஊடகங்கள் எதிர்நோக்கும் சவால்கள்" என்னும் தலைப்பில் உரையாற்றவுள்ளேன்.
மாலை 6 மணிக்கு..//

வாழ்த்துக்கள் பாஸ்,

நிரூபன் said...

இலத்திரனியல் ஊடகங்கள் எதிர்நோக்கும் சவால்கள்" என்னும் தலைப்பில் உரையாற்றவுள்ளேன்.
மாலை 6 மணிக்கு.. //

வாழ்த்துக்கள் பாஸ்,

உரையின் எழுத்து வடிவம் இருந்தால் ஆறுதலாகப் பதிவேற்றுங்க. படிகிறோம்.

கார்த்தி said...

என்னத்த சொல்லி என்னத்த செய்ய? பாத்து சிரிச்சுக்கொண்டே இருப்பம்!!

ஷஹன்ஷா said...

பாடலுடன் பதிவை படிக்கும் போது பல விடயங்கள் தெரிந்தன...
என்ன செய்வது.. இனிமேல் இப்படித்தான்...


இன்னொரு விடயம்..சங்கிலியன் சிலை குறித்து..,

யாழில் இடம்பெறும் வீதி அகலமாக்கும் பணி தற்போது துரித கதியில் நடைபெறுகின்றது..(இனிமேல் எப்படியோ தெரியல) இப்பணிகள் நல்லுார்,முத்திரைசந்தியை நெருங்கும் போது தற்போது புதிதாக அமைக்கப்பட்டு திலகத்தால் திரைநீக்கம் செய்யப்பட்ட சிலை மீண்டும் இடிபடும் வாய்ப்புள்ளது...
இப்படி இடித்து இடித்தே தமது அரசியலை வளர்க்க போறாங்க...

இளையராஜாவின் குரலில் அமைந்த பாடலை அண்மையில் நண்பன் ஒருவனின் கையடக்க தொலைபேசியில் கேட்டதும் அவனிடம் இருந்த பெற்றுக்கொண்டேன்..
ஆனால் S.P.B ன் குரலில் பாடலை இன்றுதான் கேட்கின்றேன்.. நன்றி

உங்கள் உரையின் ஒலிவடிவம் மற்றும் எழுத்து வடிவத்தை எதிர்பார்க்கின்றேன்...

Komalan Erampamoorthy said...

இது தொட‌ர்பான‌ என்னும் ஒரு விட‌ய‌ம் வ‌வுனியா வில் அதிக‌ரித்துள்ள‌ ச‌ன‌த்தொகைக்கு ஏற்ப‌ நாடாளும‌ன்ற‌ உறுப்பினர்க‌ளை அதிகரிப்பாற்க‌ளா?மேலும் இது போன்ற‌ அடிப்ப‌டையில் தான் ப‌ல்க‌லைக‌ள‌க‌த்துக்கும் தெரிவுசெய்கிரார்க‌ள் ஆனால் வ‌வுனியாவில் 1995 ச‌ன‌த்தொகை அடிப்ப‌டையில் தெடரிவுசெய்கிரார்க‌ள் என‌வே யாழ்ப்பாண‌த்தில் குறைத்தால் வ‌வுனியா போன்ற‌ இட‌ங்க‌ளில் என்ன‌ செய்ய‌ப்போகிறார்க‌ள்????

Bavan said...

:-))

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner