பனியனுள் சனியனும் தோனியும் தோல்வியும் - ட்விட்டடொயிங் - Twitter Log

ARV Loshan
11
முன்னைய எனது ட்வீட்களின் தொகுப்புப் பதிவுக்கு 
கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து இது இரண்டாவது தொகுப்பு...
(வரவேற்பு கிடைக்கலேன்னா மட்டும் விட்டிடுவேனா?)
 தொடர்ந்து திண்ணையில் கச்சேரி போடாதோருக்காக என்னாலான ஒரு சின்ன சேவை...

இதோ....

ட்விட்டடொயிங் - Twitter Log



எனக்கு இந்த மாதிரி கள்ளு சாவி.. கள்ள சாவி எல்லாம் வேண்டாம் ;) என் மனக் கதவு எப்போதும் திறந்தே கிடக்கும் ;) #எப்பூடி? #Loshanism
18 Jul

நீங்கள் கொடுப்பதற்கு வாக்குகள் வேண்டாம்.. நிறைய இருக்கு.. அவற்றைத் திருப்பிக் கொடுங்கள். #Elections #Loshanism
20 Jul

இலவசமாகக் கிடைப்பவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அவையெல்லாம் உங்களுக்கு எப்போதோ கிடைத்திருக்கவேண்டியவையே.. #election #Loshanism
20 Jul

பொய்க்கும் நடிப்புக்கும் இடையில் நேரடியான தொடர்பு மறைமுகமாக இருக்கு.. அப்படியானால் நடிகர்கள் = பொய்யர்கள்??
20 Jul

 ராஜா, ரஹ்மானும் காப்பியடித்தவர்கள் தான். வித்யாசாகர் தன்னை விளம்பரப்படுத்தி முன்னிறுத்தத் தெரியாதவர்
21 Jul

எல்லாத்துக்கும் அழும் சில முதலைகளைப் பார்க்க வெறுப்பாய் இருக்கிறது.. அல்ல அல்ல சலிப்பாய், சிரிப்பாய் இருக்கிறது.

வரும் வழியில் எதோ ஒரு வாகனத்தில் அடிபட்ட நாய்க்குட்டியின் வேதனை ஊளை இன்னும் மனதில் உழல்கிறது :(
21 Jul

உழைத்தால் தான் எல்லோருக்கும் சோறு. சும்மா உக்காந்தா சோறு போட யாரு.. மின்சாரக்கண்ணா சொன்ன நல்ல விஷயம்.. #vidiyal
22 Jul


மன்மதன் அம்பு - தகிடு தத்தம் & வேங்கை - என்ன சொல்லப் போறே;  DSPஒரே தாளக்கட்டில் கொஞ்சம் மெட்டு மாற்றி இருக்கிறார் #அவதானிப்பு

வம்பு செஞ்சா வஞ்சம் வைப்பேன்.. அன்பு செய்தா அடங்கி நிப்பேன்.... பந்தம் படப் பாலில் பதிந்த வரிகள்..
22 Jul


யார் வரவேண்டும் என்பதை விட, யார் வரக் கூடாது என்பதே முக்கியம்.... #தேர்தல் #VoteEarly
23 Jul


தெய்வத்திருமகள் வந்த பிறகு - முன்பு அபியும் நானும் தந்த அதே Feeling, இந்த தந்தை-மகள் உறவு ஒரு trend ஆகி இருக்கிறது #அவதானிப்பு
23 Jul


தவறான புரிதல்களும், தவறான வழிகாட்டல்களை ஏற்றுக்கொள்வதும் வீணான புலம்பல்களிலேயே விட்டு வைக்கும். #அவதானிப்பு
23 Jul

எதையும் செய்ய, சொல்ல, செய்யச்சொல்ல முதல் யோசிக்கணும்.. நடந்துமுடிந்த எவையும் வாழ்க்கையில் ரீவைண்ட் செய்தால் வரா #Loshanism
23 Jul

இத்தனை அழகாய்ப் பாடிய மஞ்சுளா அதன் பின் எங்கே போனார்? உன்னைத்தானே - நல்லவனுக்கு நல்லவன் @vettrifm #vidiyal
25 Jul

சலூனில் ஒலித்த பழைய பாடல்கள் வீடு வந்த பிறகும் மனதில் சீடியாக சுழல்கின்றன. பாச மலர், சவாலே சமாளி, பணத்தோட்டம், அன்பே வா + etc








இன்று பகல் ஒரு வானொலியில் - பெண் அறி - யாரடி நீ மோகினி ஆண் அறி - உங்களை சொன்னீங்களா? பெண் அறி - மோகினி என்ன செய்யும் 1/2
2/2 பெண் அறி - மோகினி என்ன செய்யும் தெரியும் தானே? ஹீ ஹீ #என்ன கொடுமை 

இரு நண்பர்கள் தமக்குள்ள பேசிக் கொள்ளாதிருக்க மூன்றாவதாக நாம் நடுவில் இருப்பது தான் உலகில் சகிக்க முடியாத தர்மசங்கடம்.. #அனுபவம் #அவஸ்தை


குமரி குமரி சைஸு குமரி.. பார்த்துவிட்டா காலி மெமரி. கத்தரி கத்தரி பார்வை கத்திரி பார்த்துப்புட்டா ஆசுபத்திரி. என்ன lyrics பா. #காஞ்சனா


ஒரே சொல்.. ஆனால் எப்படி அர்த்தம் மாறிப் போகிறது.. தாத்தா.. சிங்களத்தில் அப்பா.. தமிழில் அப்பாவின்/அம்மாவின் அப்பா... #அவ்வ்


அஞ்சு எடுத்தவன் அமைதியா இருக்க ரெண்டு எடுத்தவன் துள்ளுரானாம் ;)


- ஸ்ரீசாந்த் பற்றிப் போட்ட ட்வீட்





அழுத்தமாக சில விஷயங்கள் பேசும்போது பலருக்கும் 'மட்டும்' என்ற சொல் புரிவதில்லைப் போலும்..








சனியன்களை இழுத்து பனியனுக்குள் ஏன் போட்டுக்கொள்ள வேண்டும்? #போலி 




ராமராஜனுக்குக் கொடுத்து இந்தப் பாடலைக் கொன்றுவிட்டார்களே.. நிலவுக்குப் பிறந்தவள் இவளோ - மேதை











யாழ் மாவட்ட MP எண்ணிக்கையைக் குறைத்தாலாவது UNP அடுத்தமுறை எதிர்க்கட்சியாக வருமா? அரசாங்கம் +எதிர்க்கட்சி கூட்டு சதி?  










Post a Comment

11Comments

Please Select Embedded Mode To show the Comment System.*