August 31, 2011

மண்ணாகிப் போன மங்காத்தா


அஜித்தின் ஐம்பதாவது படம், அதிலும் பெரிய நட்சத்திரப் பட்டாளம்.. வெங்கட் பிரபுவின் இயக்கம்.. ஏற்கெனவே ஹிட் ஆகிய பாடல்கள் என்று மங்காத்தாவுக்காகக் காத்திருந்ததன் பலனை அனுபவிக்க ஊடக அனுசரணை வழங்கியதால் கிடைத்த ஓசி டிக்கேட்டுக்களுடன் நிம்மதியாக இரவுக் காட்சிக்குப் போயிருந்தோம்...

ஆனால் சவோய் திரையரங்கில் முதல் காட்சி என்றது கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. காரணம் வழமையாகவே ஆங்கில, ஹிந்தி, சிங்களத் திரைப்படங்களை மட்டுமே திரையிடும் அத்திரையரங்கில் ஏதாவது வெகு சில பெரிய தமிழ்த் திரைப்படங்களை மட்டுமே திரையிடுவதுண்டு.

இல்லாவிட்டால் EAP நிறுவனம் வாங்கும் தமிழ்த் திரைப்படங்களின் முதல் காட்சியோடு சரி.
அதற்கும் ஆப்பு வைப்பதாக வேட்டைக்காரனின் முதல் காட்சி அமைந்தது பற்றி உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆர்வ மிகுதியால் ரசிகர்கள் ஆவேசப்பட்டு திரையரங்கின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதால் சவோய் திரையரங்குக்குப் பல லட்ச ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டதனால், இனி மேலும் தமிழ்த் திரைப்படங்களை த்திரையிடுவதே இல்லை என  EAP நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆனாலும் இந்த மங்காத்தா அறிவிப்பு கொஞ்சம் ஆச்சரியம் தான். ஒரு வேலை அஜித் ரசிகர்கள் ரொம்ப நல்லவர்கள் என்று நினைத்தார்களோ? 
ஆனால் திடீரெனப் பெய்த மழையும் சேர்ந்துகொள்ள, 10.30 க்கு ஆரம்பிகவேண்டிய காட்சி திரையரகுக்கு முன்னால் திரண்டிருந்த ஏராளமான ரசிகர்களின் முண்டியடித்தலுடன்  உள்ளே நுழைவதே பெரும்பாடாகியது.
கடைசியில் நண்பர்களின் கடும் முயற்சியினால் உள்ளே நுழைந்து ஆசனத்தில் இடம் பிடித்து 'மங்காத்தா' ஆரம்பிக்கும்போது நேரம் இரவு 11.45. 

ஓரளவு வசதியான ஆசனம் எனக்கும், என்னுடன் வந்தோருக்கும் கிடைத்தாலும், என் அருகே இருந்த இரு ஆசனங்களை வெளியே எங்களை உள்ளே எடுக்க உதவி மற்றவர்களை உள்ளே எடுத்துக்கொண்டிருந்த நண்பர்களுக்காகப் பிடித்துவைத்திருந்தேன்.
அந்த ஆசனங்களை வம்பினால் எடுக்க முயன்று, வாய்த்தர்க்கம் புரிந்து வலுச் சண்டைக்கு வந்த ஒருவரால் எழுத்தோட்டம், அஜித்தின் அதிரடி அறிமுகம் எல்லாம் பார்க்க முடியாமலே போச்சு...

ஆனால் ஒரே விஷயத்தை அந்தக் களேபரத்திலும் கவனித்தேன்.. அஜித் திரையில் வர கீழே இருந்த ஒருவர் ஓடிச் சென்று சீட்டுக்கட்டினால் திரைக்கு அபிஷேகம் செய்த 'கன் கொள்ளாக்' காட்சி... (அட பாவிகளா.. இங்கேயுமா?)

கொஞ்சம் அமைதியாக இன்னும் சில நிமிடங்கள் போக, கொஞ்சம் திரைப்படத்தோடு ஒன்றிக்க, மீண்டும் அதே வம்பு.. இம்முறை கொஞ்சம் கோபமாகக் கையினால் அடக்க வேண்டியேற்பட்டது எனக்கு.. 
பொது இடம், பதவி என்பதெல்லாம் கடந்து எழுந்த அந்தக் கோபம் தவிர்க்க முடியாதது.
நண்பர்களும் பொங்கி எழுந்துவிட்டார்கள்.
சில நிமிடப் பரபரப்புக்குப் பிறகு அந்த வம்பு நபர் வெளியே போய்விட அமைதியாகிப் போனாலும் எழுத்தோட்டம் தவற விட்டது, எழுந்த கோபம் குறையாதது படத்தை ரசிக்கவிடவில்லை.
எனினும் கதையின் வேகம் ரசிக்கவைத்துவிட இடைவேளையில் 'Strictly No Rules' அஜித் சொல்லிவிட , இனித் தான் "மங்காத்தாடா" என்று நானும் நினைத்துக்கொண்டேன்.

இன்று விடுமுறை முதலிலேயே எடுக்கத் தீர்மானித்திருந்ததனால் வீடு போனவுடன் விமர்சனப் பதிவொன்று போட்டிட வேண்டும் என்று திருப்தியோடு 'தலை'யை ரசிக்க ஆரம்பித்தால், எனக்குப் பின்னால் இருந்து படம் பார்த்துக்கொண்டிருந்த நம் நிறுவனத்தலைவர் 
"அடிபட்டு வெளியே நாம் தூக்கியெறிந்த பாம்பு அவ்வளவு நல்லதில்லை" என்று எச்சரிக்கை செய்ததால், சூழ்நிலை கருதியும், குடும்பத்தோடு வந்ததாலும் கொஞ்சநேரத்தில் புறப்படலாம் என்று முடிவெடுத்தேன்..
(அதற்குள் வெளியே காவல்துறை வேறு வந்து என்ன நடந்தது என்று என்னை அழைத்துக் கேட்டுப் போனதாலும் சில நிமிடங்கள் போயிருந்ததால் மீண்டும் ஒரு தடவை ஆரம்பமுதல் பார்க்கவேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்)

கடத்திய பணம் என்னவாச்சு என்று விநாயக், சகாக்களோடு தேடிக்கொண்டிருக்க, வாகனத்தை தேடி நாங்கள் வெளியே வந்தோம்..

படம் பாதியில் போச்சே என்ற கடுப்பு ஒரு பக்கம், தனியாக வந்திருந்தாள் துணிவாக நின்றிருக்கலாமே என்ற வெறுப்பு ஒரு பக்கமாக "மங்காத்தா" மண்ணாகிப் போச்சு எனக்கு.

பார்த்தவுடன் இப்படியான படங்களுக்கு சூடான விமர்சனம் வந்துவிடுமே, மங்காத்தாவுக்கு மட்டும் என்னாச்சு என்று அக்கறையாகக் கேட்டு மின்னஞ்சல், குறுஞ்செய்தி எனுப்பிய நண்பர்களுக்காக ஒரு சுய விளக்கம் இது..

(ரௌத்திரம் பார்க்கப் போனால் ஒரு வித்தியாச அனுபவம்.. மங்காத்தா முதல் நாளிலேயே ரௌத்திரம் காட்டவேண்டிய நிலை.. என்னடா லோஷா நடக்குது..
நல்லவனா இருக்க விடமாட்டாங்க போல..)

இன்றைய யாழ் பயணம் முடித்து, வந்து மீண்டும் முழுசாய் மங்காத்தா பார்த்த பின்னர் விமர்சனம் வரும்...
(ஓடிக்கொண்டிருக்கும் சொகுசு வண்டியில் பதிவை தட்டடிச்சு, பதிவேற்றுவதும் ஒரு சுகமான முதல் அனுபவம் தான்)

==============================
இன்னொன்று....

வேண்டாம் என்று 'விக்கிரமாதித்தன்' தடுத்தாலும் சொல்லித்தான் ஆகணும்..
காலியில் நடந்தது பார்த்தீங்களா?
இலங்கை அணியை அடிக்கடி மாற்றிக் குழப்புகிறார்கள் என்று தேர்வாளர்கள் மீது வரும் விமர்சனங்களுக்கு இடையிடையே நான் சொல்லும் பதில்.. இவ்வகையான தெரிவுகள்..
காலநிலை, கள நிலைக்கேற்ப செய்யப்படுபவை என்று....
(Selection of Horses for the causes)
இன்றைய அணித்தேரிவும் அத்தகையதே..

மந்திரவாதி எனப்பட்ட அஜந்த மென்டிஸ், ஒருநாள் தொடரில் பிரகாசித்து டெஸ்ட் அறிமுகம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷமிந்த எரங்க ஆகியோருக்கு மாற்றாக இன்று தெரிவு செய்யப்பட்ட சுரங்க லக்மால், ரண்டிவ் ஆகியோரின் பெறுபேறுகள் பாராட்டப்படக்கூடியவை.
273 என்ற ஒட்ட எண்ணிக்கைக்கு ஆஸ்திரேலியாவை மட்டுப்படுத்தியது பெரிய விஷயமே..


மைக் ஹசியை formக்குக் கொண்டு வந்தது மட்டுமே இலங்கைக்கு இனி சிக்கல்.
ஹசியின் இன்னிங்க்ஸ் திராவிட் பாணியிலான ஒரு பொறுப்பான ஆட்டம்.. பாவம் சதம் பெற முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.. 
டில்ஷானின் சிறப்பான வழிநடத்தலுக்குக் கிடைத்த பரிசு ஹசியின் விக்கெட்.

டில்ஷான் ஒரு டெஸ்ட் அணித் தலைவராக இன்று தான் எனக்கு சில தீர்மானங்கள் மூலம் மகிழ்ச்சியளித்தார்.
ஆனாலும் இனி துடுப்பாடும் இலங்கை முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களையாவது பெற்று இரண்டாம் இன்னிங்க்சிலும் ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும்.

இரண்டாவது இன்னின்க்சின் பத்து விக்கெட்டுக்களை எடுப்பது முரளிதரன் இல்லாத இந்த இலங்கை அணிக்கு சிக்கலாக அமையலாம்.
இன்றைய ஆஸ்திரேலியாவின் தடுமாற்றம் ஏழு ஆண்டுகளுக்கு முதல் இலங்கையில் இடம் பெற்ற இலங்கை - ஆஸ்திரேலிய தொடரை மீண்டும் ஞாபகப்படுத்தியது.
அந்தத் தொடரின் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் முதல் இன்னிங்சில் சுருண்டு பின்னர் மூன்று டெஸ்ட் போட்டிகளையுமே போராடி வென்றது அப்போதைய பொன்டிங்கின் ஆஸ்திரேலிய அணி.

ஆனால் இப்போதைய அணியில் எத்தனை மாற்றங்கள்..
அப்போது வென்று கொடுத்த ஷேன் வோர்னும் இல்லை. ஏனையோர் தடுமாறிய வேளையில் ஓட்டங்கள் குவித்த மார்ட்டின். லீமனும் இல்லை.

இலங்கைக்கு முரளியும் வாசும் மட்டுமே இல்லை.. காலி ஆடுகளம் இருக்கிறதே.. 
ஹெரத்தின் துல்லியமும், ரண்டீவின் சுழற்சியும் மிக்க நம்பிக்கை தருகிறது.
பார்க்கலாம்..
ஆஸ்திரேலியாவின் அச்சுறுத்தும் வேகப்பந்துவீச்சை அனுபவம் வாய்ந்த நம்பகரமான துடுப்பாட்ட வீரர்கள் முறி யடித்தால் எல்லாம் சுபமே..


இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்...
19 comments:

Ashwin-WIN said...

//"மண்ணாகிப் போன மங்காத்தா"//தலைப்ப பாத்து காண்டாகி வந்தன்.. அதானே நம்ம தல இந்த முறை ஏமாத்தல. உங்கள் விமர்சனத்துக்காக காத்திருக்கிறேன்.

Philosophy Prabhakaran said...

நானும் அதேதான்... தலைப்பை பார்த்து பதறியடிச்சு ஓடி வந்தேன்...

Philosophy Prabhakaran said...

மங்காத்தா – THIS IS MY F**CKING REVIEW
http://philosophyprabhakaran.blogspot.com/2011/09/this-is-my-fcking-review.html

KANA VARO said...

சவோய் தியேட்டரில் முதல் ஷோ பார்ப்பது குதிரை கொம்புதான். வேட்டைக்காரன், சுறா படங்கள் பார்க்க சென்ற போது ரவுடித்தனம் பண்ணிய ஒரு பரட்டை தலையன் தான் ஞாபகத்துக்கு வருகின்றான், சுறா படத்தின் போது உள்ளே நடந்த சண்டையில் அவனை வலுக்கட்டாயமாக போலீசார் வெளியேற்றினர். வெளியில் வந்த அவனும் கூட்டாளிகளும், கூட்டம் சேர்த்து படம் முடிந்ததும் வரும் மற்ற குழுவை தாக்க நிண்டார்கள். சிலவேளை அவனை தான் நீங்களும் சந்தித்தீர்களோ!

அடித்து பிடித்து மங்காத்தாவை பார்க்க முடியாத கவலை இருக்கிறது. பார்த்திடுவோம்.

Anonymous said...

மற்றவர் செய்தது சரியோ தவறோ. கைநீட்டுவது தவறு என்று உங்களுக்குத் தெரியாதா?

இலங்கையில் உங்கள் செல்வாக்கால் தப்பிவிடலாம். If it had been a different country, you would have been charged with assault ...

மாயனின் தொலைந்த ப‌க்கம் said...

சூடான உங்கள் மங்காத்தா விமர்சன பதிவைக் கண்ட பிறகுதான் மங்காத்தா ஆட நுழையலாம் என்றிருந்தேன்..(வட போச்சே..!!!)தலைப்பைப் பார்த்த்வுடனேயே சப்பென்று ஆகி விட்டது(படம்(தல இந்த முறையும் ஏமாத்திட்டாரோ என்டு..)கூடாதோ என்டு!!)..இப்படியொரு அனுபவமா..!!

Mohamed Faaique said...

//தலைப்ப பாத்து காண்டாகி வந்தன்.. அதானே நம்ம தல இந்த முறை ஏமாத்தல. உங்கள் விமர்சனத்துக்காக காத்திருக்கிறேன்.///

ரிப்பீட்டு...

பெருநாள் வாழ்த்திற்கு நன்றிகள்

பி.அமல்ராஜ் said...

அப்பா நீங்களும் ரவுடியா... சரி சரி விடுங்க பாஸ்.. பிழைச்சு போகட்டும்..

ஆகுலன் said...

தலைப்பை பார்த்து கொஞ்சம் சந்தோஷ பட்டேன்....ஆனா இப்புடி சொல்லிபுடீன்களே...........

ஷஹன்ஷா said...

என்ன செய்ய அண்ணா.....

ஒரு வேளை படம் பார்க்க வந்தவன் உங்க விமர்சன பதிவுகளை பார்த்து ஒரு வேளை காண்ட் ஆகியிருப்பானோ???

சரி சரி... மங்காத்தா ஆட்டம் போனாலும் நம்மளை வாழ வைக்கும் கிரிக்கட் ஆட்டத்தை மறக்கவில்லை பாருங்கோ... சூப்பர்....

யாழில் சந்திப்போம்..

நிலாரசிகன் said...

நானும் தான் நண்பரே தலைப்பை பார்த்து கடுப்பாகி வந்தேன் பின்னர் விமர்சனதிற்கு விமோசனம் கிடைத்தது..
தல கலக்கிட்டார் நண்பா

Raveendran said...

அண்ணா....!
தலைப்பிலேயே தலைய துக்க வச்சிட்டிங்க... ஆனாலும் இதன் பிறகு திரையரங்குகளுக்கு செல்லும் போது கவனமாக செல்ல்லுங்கள்....
http://ravi4thepeople.blogspot.com

Nirosh said...

தல படத்திற்கு நல்லா தலைப்பு வச்சீங்க போங்க.... எதிர்பார்க்கின்றேன் மீண்டும் முழுவதுமாய் ஒரு அலசலை.... எனக்கு படம் நன்றாக பிடித்திருந்தது.

திங்கள் சத்யா said...

த்தூ..

Vijayakanth said...

intha news than ippo hot talk boss... naan road la kelvipatta wisayam... parawa illaye neengale suya vaakkumoolam kuduththuteenga.... yaarukku theriyum antha nabarum blog vaasichu comment potaalum aachcharyamillai :P

Anonymous said...

அடடே அண்ணா...ஏமாத்திபுட்டீங்களே..உங்கட பதிவுத்தலைப்பை பாத்தவுடன் அடே என்னடா நம்ம தல படம் சரியில்லையோ எண்டு நினைச்சு ஒரு தடவை பாத்திற்று வந்து மீதிய வாசிக்கலாமே எண்டு ஓடோடி வந்தால் இப்படியாகிற்றே..ம்ம்

கார்த்தி said...

// இனி மேலும் தமிழ்த் திரைப்படங்களை த்திரையிடுவதே இல்லை என EAP நிறுவனம் அறிவித்திருந்தது.
ஆனால் அதன்பின் அவர்கள் பையா திரைப்படத்தை இங்கேதான் முழுவதுமாக திரையிட்டிருந்தார்கள்.
அண்ணே உண்மைய மற்ற ஆக்களுக்கு இடம்பிடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததுதானே? உண்மையில் என்ன நடந்ததெண்டு எனக்கு வடிவா தெரியாது

மண்ணாகிப் போன மங்காத்தா என்னும் கடும் ஆத்திரைத்துடன் வந்திருந்தேன் ஏனெண்டால் அஜித் ரசிகன் இல்லாத எனக்கே ரொம்ப பிடித்திருந்தது. ஏன் சார் நீங்களும் மற்றவங்கள் மாதரி தலைப்புக்கும் உள்ளாடக்கத்துக்கும் சமபந்தமில்லாம எழுதியிருக்கீங்க.

கைப்புள்ள said...

எங்க சங்கத்து ஆள அடிச்சவன் எவன் ?

ஏய் கட்டதுரை உனக்கு கட்டம் சரியில்ல.. next டு வேலாயுதம் சவோய்ல meet பண்றேன்.

Anonymous said...

SOrry anna unga thalaipae pathathum thittittaen ipothaan theriyuthu.....waiting for yoour review

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner