சோதனை மேல் சோதனை.. அவ்வ்வ்வ்..

ARV Loshan
11

நம்ம குறும்புப் பயல் கவிஞர் பப்புமுத்து விட்ட ஒரு பகிரங்க சவாலுக்காக இந்த தில்லான, தைரியமான, ரிஸ்க்கான ஆனால் மொக்கையான பதிவு...

உள்ளே வாசிக்க இறங்க முதலே சொல்லிடுறேன்..

Caution

காது, கண்களில் ரத்தம் வாங்க தயாரா இருந்தா மட்டும் மேற்கொண்டு வாசியுங்க..
தரம், தராதரம், அஸ்கு, புஸ்கு பார்க்கிற சீரியஸ் பார்ட்டி சாரி.. டீ இன்னும் வரல..
இது வெறும் மொக்கை..மொக்கை.. மொக்கையன்றி வேறேதும் அல்ல..


உலகையே அழ வைக்கிற "சோதனை மேல் சோதனை" பாடலை சந்தோஷமான பாடல் என்றும் மகிழ்ச்சியான, மங்களகரமான தருணங்களில் அடிக்கடி ஒலிக்கும் "இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே" பாடலை சோகப் பாடல் என்றும் நிறுவ வேண்டுமாம்..

நிறுவல், தேற்றம் அப்பிடீன்னு எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே..
அட A/L காலத்தில் கஷ்டப்பட்டு ஆசிரியர்கள் சொல்லித் தந்தவை.. 
நாம தான் அப்பிடியான அஜீரனமாக்கிற விஷயங்களை காதிலேயே போட்டுக்குறதில்லையே.. 
இப்ப இந்தக் குஞ்சு கேட்குது.. 
ஏதோ நம்மால முடிஞ்சது..


இரு பாடல்களினதும் ஒவ்வொரு வரியாக எடுத்து நான்கைந்து நாளாக மாறி மாறி, பாடி வாசித்து, பகுத்து எல்லாம் பார்த்தும் அர்த்தங்களில் அனர்த்தம் புகுத்த முடியவில்லை.

ஆனால் சவால் சவால் தான்.. 
சளைக்கமாட்டான் இந்த விக்கிரமாதித்தன்..

தங்கப் பதக்கம் பட காட்சி எல்லாம் மறந்திடுங்க.. 

அதே பாடல் வரிகள்..
நம்ம வைகைப் புயல் வடிவேலுவின் இப்போதைய 'அவ்வ்வ்' நிலையை யோசித்துப் பாருங்கள்...

படமே கையில் இல்லாமல் இருப்பவரிடம் கிரி படத்தில் வந்த காட்சி மாதிரி ஆர்த்தி கேட்கிறார், "என் மாமா கையில படமே இல்லை?"
"ரொம்ப நல்லவேன்னு சொல்லிட்டாங்கம்மா" என்ற சிறிய, சிரிக்க வைத்த டயலோக்கிற்குப் பதிலாக இந்தப் பாடல்....



சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
( மாமா… காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.
அந்த நதியே காஞ்சி போய்ட்டா??
துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.
ஆனா தெய்வமே கலங்கி நின்னா??
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்??? )
நானாட வில்லையம்மா சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி 


இப்ப சிரிக்க முடிகிறதா? :)

எப்பூடி?

============

வைதேகி காத்திருந்தாள் படப் பாடல்.. துள்ளி வரும் சந்த வரிகளுக்காகவும், இனிமையான பின்னணி இசைக்காகவும் எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று இது.. 

இதை வைத்து சோகப் பாடலாக மொக்கை போட சிம்பிள் வழிகள் இரண்டு .....

ஒன்று - பாடலில் ஒரிஜினலாக நடித்த கேப்டன் விஜயகாந்தையே இப்போதுள்ள தோற்றத்துடன் இதே பாடல்க்கு நடிக்க வைத்துக் கற்பனை செய்து பாருங்கள்..
கண்களில் ரத்தக் கண்ணீர் வருதா இல்லையா?

இரண்டு - 


சர்வதேசப் பதிவர் ஆயில்யன் அண்மையில் திருமண பந்தம் புகுந்தார்.. 
இன்னொரு சித்தப்பாப் பதிவரும் விரைவாக செட்டில் ஆகப் போகிறார்.. 

அவர்களின் திருமணம் பற்றியல்ல நான் சொல்லப் போறது..
இது ஒரு நீண்ட 'டொக்கு' காதல் திருமணம் ஆவது பற்றியது.. ;)

நம்ம திருமலைக் குஞ்சுவின் ஆஸ்தான கனவு நாயகி எம்மா வொட்சன்.. 
என்னாது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் ஷேன் வொட்சனின் அம்மாவா என்று யாரும் எக்குத் தப்பாக் கேட்டுராதீங்க.. 
தன்னுடைய கனவுக் கன்னியைத் தெரியாமப் போச்சே என்ற அவமானம்+கவலையில் சிரட்டைக்குள் நீரூற்றி பவன் தற்கொலை செய்துகொள்ளப் போகிறான். 


இந்த எம்மா வொட்சன் தான் Harry Potter இல் கதாநாயகி.. 
(Harry Potter அப்பிடின்னா என்னா என்று யாராவது கேட்டால் கொலை விழும் சொல்லிப் போட்டேன்)

நம்ம குஞ்சுவும் எம்மாவும் திருமணம் முடித்தால் எப்படி இருக்கும்? 
அவர்கள் இருவருக்கும் ஆனந்தக் கண்ணீர் வந்தாலும், நமக்கென்னவோ வரப்போவது கழிவிரக்கம் தானே....

(அட இதை வாசிச்ச உடனேயே அங்கே பாருங்க லண்டன் மாமா "கருமம்.. கன்ராவி" என்று காறித் துப்புவதை)

இப்ப சரியாப் போச்சா? 

குஞ்சு - எம்மா ஜோடியைப் பார்த்து 'ரசித்துக்கொண்டே' பாடல் வரிகளை மேயுங்கள்..
கர்ண கடூரக் கவலையாகப் பாடல் இருக்கும்..



இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ கண் திறந்தால் சுகம் வருமோ

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே

பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே
பூவினைத்தூவிய பாயினில் பெண்மனம் பூத்திடும் வேளையிலே
நாயகன் கை தொடவும் வந்த நாணத்தை பெண் விடவும்
நாயகன் கை தொடவும் வந்த நாணத்தை பெண் விடவும்
மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச...மங்கை உடல் கெஞ்சக் கெஞ்ச
சுகங்கள்...சுவைக்கும்...இரண்டு...விழிகளில்
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ கண் திறந்தால் சுகம் வருமோ
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே...ஏ...ஏ
கரிமகரிஸ ரிகம கமத ஸதரி ஸதம தஸரிகமத மதமதஸரி
ஸாஸ ஸாஸ ஸாஸ ஸாஸ ஸரிகரி ரிஸஸதபமக
ரீரி ரீரி ரீரி ரீரி ரிகமககரி ரிஸஸததம

மாவிலை தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமணமோ
ஆலிலையோ தொட ஆளில்லையோ அதில் ஆடிடும் என் மனமோ
காதலின் பல்லவியோ அதில் நான் அனுபல்லவியோ
காதலின் பல்லவியோ அதில் நான் அனுபல்லவியோ
அங்கத்திலே ஏழு ஸ்வரம் இன்பத்திலே நூறு வரம்
மிதந்து...மறந்து...மகிழ்ந்த...நெஞ்சத்தில்

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ கண் திறந்தால் சுகம் வருமோ
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே...ஏ...ஏ
 


யாரு கிட்ட?


பப்பு முத்துவுக்கே பெப்பே.. :) :) :)



Post a Comment

11Comments

Please Select Embedded Mode To show the Comment System.*