June 07, 2010

நகூடீசிகா - திங்கள் ஸ்பெஷல் மசாலா


நகூடீசிகா - திங்கள் ஸ்பெஷல் மசாலா 


நன்றிகள்..

சனிக்கிழமை எனது பிறந்தநாளுக்கு ஏராளமான வாழ்த்துகளை சொல்லி,அனுப்பி,பதிவிட்டு என்னை ஆனந்த வெள்ளத்தில் திக்குமுக்காட செய்த அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும்,நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

முதல் நாளிலிருந்தே smsகள், Facebook மூலமான வாழ்த்துக்கள்,மின்னஞ்சல்கள் என்று வர ஆரம்பித்திருந்தன.
இது வழமை தானெனினும், இம்முறை வழமையை விட அதிகம்.
நானே வயது ஏறுகிறது என்று கொஞ்சம் கவலைப்பட ஆரம்பித்திருக்கும் நிலையில் இந்த வாழ்த்துகள் 'உங்கள் மீது அன்பு,அக்கறை கொள்ள நாமிருக்கிறோம்' என்று இந்த வாழ்த்துக்கள் உற்சாகம் தந்திருக்கின்றன.

அநேகமாக யாருக்கும் இம்முறை நான் sms மூலமாக நன்றி என்று பதில் அனுபவில்லை.
பின்னே இரண்டு நாட்களில், ஏன் இன்றும் கூட மூன்றாவது நாளாக வந்து சேர்ந்த smsகள் ஐந்நூறுக்கும் மேலே.
இத்தனைக்கும் பதில் அனுப்பப் போனால் செல்பேசி பில் ஏறி டப்பா டான்ஸ் ஆகிடும்..

எனவே தான அனைவர்க்கும் பொதுவாக நேற்று Facebookஇல் நன்றிகளைப் பகிர்ந்திருந்தேன்..இன்று விடியலில் நன்றி சொல்லிவிட்டேன்.இப்போது இந்தப் பதிவினூடாக.

இம்முறை நான் எதிர்பாராத ஒரு விடயம் பதிவுகளின் மூலமான வாழ்த்துக்கள்.

வந்தியத்தேவன், கங்கோன், சதீஷ், பிரபா, ஏத்தாழை இன்பாஸ், நிர்ரோஜா, ஜெகதீபன் இந்த ஆறு நண்பர்கள்/தம்பிமாருக்கும் நன்றிகள்.
உங்கள் அன்பு,நட்பு, நீங்கள் என் மேல் வைத்துள்ள அபிமானம்,அக்கறை நெகிழ வைக்கிறது.

மீண்டும் சொல்கிறேன்.. நான் கொடுத்து வைத்தவனே.


இன்னொரு விடயம்..
ஐந்தாம் திகதி இன்னொரு பதிவர் சிறுகதை மன்னர் சயந்தனுக்கும் பிறந்தநாள்.
இங்கே அவருக்கான வாழ்த்தையும் பதிகிறேன்.


கூத்து

இலங்கையில் நடைபெற்ற IIFA 2010 படுதோல்வியாகவும்,ஏமாற்றமாகவும் இறுதி நேரத்தில் இலங்கை சிங்கள திரை நட்சத்திரங்களுக்கு ஏமாற்றத்தையும்,அவமானத்தையும் தந்து, பின் ஜனாதிபதியின் மனக் கசப்புடன் அவசர அவசரமாக முடிந்துள்ளது.

ஒரு சர்வதேச விழா எப்படி ஏற்பாடு செய்யப்படக் கூடாதோ IIFA அப்படி நடந்திருக்கிறது.

அரசியல் சர்ச்சைகள் பல முன்னணி நட்சத்திரங்களைத் தடுத்து நிறுத்த,எதிர்பார்த்த அளவு விருந்தினர் வருகையோ,வெளிநாட்டு முதலீடுகளோ கிடைக்கவில்லை.

இது போதாக்குறைக்கு சனியன்று இலங்கை ஜனாதிபதி அழைத்த விருந்துக்கு முக்கிய நட்சத்திரங்கள் வராமல் விட்டது ஜனாதிபதியைக் கடுப்பாக்கி இருக்கிறது.
முக்கிய நட்சத்திரங்களில் அனில் கபூர் மட்டும் வந்திருந்தாராம்.

இதனாலேயே சனி இரவு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்ளவில்லையாம்.

அடுத்தது இலங்கையின் சிங்களத் திரைப்பட சிரேஷ்ட கலைஞர்களை ஒரு பொருட்டாகக் கூட எடுக்கவில்லையாம்.பலருக்கு அழைப்பில்லை;சிலரை அழைப்பை விரும்பினால்  சுற்றுலா சபை அலுவலகத்தில் வந்து எடுக்க சொல்லப்பட்டதாம்.
இவ்வளவுக்கும் வந்திருந்த ஹிந்தி நட்சத்திரங்களை விட எத்தனையோ விருதுகளை சர்வதேச மட்டத்தில் வென்றவர்கள் இந்த சிங்கள நட்சத்திரங்கள்.

சீராக அழைத்து செருப்படி வாங்கிய கதை இது.
Fashion show இல் சங்கக்கார இலங்கையின் பொலிவூட் அழகி ஜக்குளினுடனும், சல்மான் கான் செலினா ஜெயிட்லீயுடனும்..(ஆமாங்கோ அதே ட்விட்டர் பட அழகி தான்)

இந்த மூன்று நாள் கூத்துக்காக இலங்கையினால் செலவிடப்பட்ட மொத்தத் தொகை 700 மில்லியன் ரூபாய்.
இதில் நமது வரிப்பணம் மட்டும் 450 மில்லியன் ரூபாய்.

இப்போது எதிர்க்கட்சி இதற்கு விளக்கமும்,கணக்குக் காட்டும்படியும் கேட்கிறது..
பார்ப்போம் இனி நடக்கும் கூத்தை.



டீசில்வா

IIFA இலங்கையில் நடந்தது நல்லதோ கூடாதோ,
ஒரே ஒரு மகிழ்ச்சியை எனக்கு தந்தது.

என் ஆதர்ச கிரிக்கெட் வீரர், இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அரவிந்த டீ சில்வாவின் துடுப்பாட்டத்தை மீண்டும் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.

இந்திய நட்சத்திரங்களும், ஜடேஜா(பழைய அஜய் ஜடேஜா ),கைப் போன்ற வீரர்களும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சின்ன ஜனாதிபதி நாமல் ராஜபக்ச ஆகியோரோடு விளையாடிய IIFA கண்காட்சிப் போட்டியிலேயே டீ சில்வாவின் துடுப்பாட்டம் பார்க்கக் கிடைத்தது.

அதே நடை, அதே துடுப்பு சுழற்றி அடிக்கும் லாவகம், அவரது trade mark ஆன check drive,Point ஊடாக cut செய்துவிடும் லாவகம் என்று அரவிந்த என்றும் அரவிந்த தான்..

மூன்று நாளுக்கும் இலவச பாஸ் கிடைத்தும் அலுவலக அலவாங்குகள் காரணமாக போகக் கிடைக்காததில் உண்மையாகக் கவலைப் பட்டது இந்த கிரிக்கெட் போட்டிக்குத் தான்.

இப்போது அரவிந்த இலங்கை கிரிகெட் தேர்வாளர் குழுத் தலைவர்.
அடுத்த உலகக் கிண்ணம் வெல்லும் அணியைத் தெரிவு செய்யவே தான் எண்ணியுள்ளதாகவும்,தனது முடிவுகளில் எந்தவிதமான தலையீடும் இருக்கக் கூடாதென்றும் அறுதியாக சொல்லியிருக்கிறார்.
இவரது நேர்மை,துணிச்சலில் மிக நம்பிக்கையுடையவன் நான்.
மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

IPL மாதிரியாக மாகாண மட்ட Twenty 20 போட்டிகளை நடத்துவதைப் பற்றியும் சொல்லி இருக்கிறார்.

தலையீடுகள் இன்றி தெரிவுகளிலும் அபார ஆட்டம் ஆட வாழ்த்துகிறேன்.

இந்த கண்காட்சி போட்டிகளில் நான் ரசித்த இன்னொருவர் அஜய் ஜடேஜா.. இன்னமும் மனிதர் எப்படி விளையாடுகிறார்.
துடுப்பாட்டத்தில் நிதானம்,பந்துவீச்சில் துல்லியம்,களத் தடுப்பில் வேகம் என்று கலக்கினார்.

தனது அதிக ஆசையால் பாதியிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விளக்கப்பட்டிராவிட்டால் இப்போதும் உலகின் தலைசிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவர்.

 சில இந்திய Bollywood ஸ்டார்களும் சிறப்பாகவே விளையாடி இருந்தனர்.குறிப்பாக சுனில் ஷெட்டி.
பேசாமல் சிம்பாப்வேக்கு இவர்களில் ஒரு சிலரை அனுப்பி இருந்தால் கூட இந்தியா கொஞ்சமாவது தப்பி இருக்கும் போல.. ;)

சிம்பாப்வே + கிரிக்கெட்

ஏழு பேருக்கு ஓய்வு கொடுத்து இளையவரை அனுப்பி இந்தியா சிம்பாப்வேயில் மூக்குடைபட்டு விட்டது.
ரெய்னா தலைவராகக் கற்றுக் கொள்ள இன்னும் நிறையவே இருக்கு.
இந்திய சீனியர் அணிபோலவே ஜூனியர் அணியும் பந்துவீச்சிலும் களத்தடுப்பிலும் நிறையவே சொதப்புகிறது.

துடுப்பாட்டமும் தேவையான நேரங்களில்,அழுத்தங்களில் அகப்பட்டு அடிபட்டுப் போய்விடுகிறது.

இந்தத் தொடர் மூலம் தமது இமேஜ்களை உயர்த்திவிட்டுக் கொண்டோர் மூவர் மட்டுமே..
ரோஹித் ஷர்மா, விராட் கொஹ்லி, ரவீந்திர ஜடேஜா..

ஆசிய கிண்ணப் போட்டிக்கான அணி இன்று அல்லது நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்வாளர்கள் யாரையெல்லாம் தூக்கிக் கடாசப் போகிறார்கள் பார்க்கலாம்.

இலங்கையில் இளைய அணி கலக்குகிறது.
யார் யாரை நம்பி அனுப்பினார்களோ அவர்கள் தங்கள் வரவுகளை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்கள்.


சங்கா இனி நம்பி துடுப்பாட்டம் & தலைமைத்துவத்தில் கவனம் செலுத்தலாம்.
விக்கெட் காக்கவும் அதிரடிக்கவும் தினேஷ் சந்திமால் தயார்.

இளங் கன்றுகளுக்கே உள்ள பயமின்மை,துடிப்பு என்பவற்றுடன் திறமை,ஸ்திரமும் கொண்ட சரியான கலவை சந்திமால்.
கன்னி சதமும் பெற்று தன் வருகையை சத்தமாக அறிவித்துள்ளவருக்கு சபாஷ்.

அடுத்தவர் ஜீவன் மென்டிஸ்.
பத்து வருடப் பொறுமையும் தொடர்ச்சியான உள்ளூர் சகலதுறைக் கலக்கலும் வீண்போகவில்லை.
நம்பிக்கையான் சுழல் பந்துவீச்சும், தேவைக்கேற்ற துடுப்பாட்ட அணுகுமுறையும் ஜீவனை இலங்கையின் அடுத்த உலகக் கிண்ண அணியின் முக்கிய வீரராக மாற்றும் என நம்புகிறேன்.
இன்னொரு மென்டிஸ் இலங்கைக்கு..

டில்ஷான் மீண்டும் formக்கு திரும்பியுள்ளார்.. நல்ல சகுனம்.
கபுகெடற அதிரடிக்கிறார்.
குலசேகர,துஷார,ரண்டிவ் ஆகியோர் சிறப்பாகவே தொடர்கிறார்கள்.
ஏஞ்சலோ மத்தியூஸ் காயத்திலிருந்து மீள அபாரமான அணியொன்று தயார்.


சிம்பாப்வேயின் தொடரும் வளர்ச்சியும் உள்நாட்டில் கலக்கும் பெறுபேறுகளும் அபாரம்.
எந்த சுழல் பந்தை வைத்து இந்தியா உலகை மிரட்டியதோ அதை வைத்தே இந்தியாவுக்கு குழி தோண்டியது ஆச்சரியம்.
இந்தியாவுக்கெதிரான இரு வெற்றிகள் சிம்பாப்வேக்கு புதிய தெம்பு தரும்.
கலக்கட்டும் தொடர்ந்து.


காயம்,கால்பந்து + கார்ட்டூன் 

உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகளுக்கு இன்னும் நான்கே தினங்கள்.
தம்பி அஷோக்பரன் தமிழில் உலகக் கிண்ணக் கால்பந்து விடயங்களைப் பதிந்திட ஒரு வலைப்பதிவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.


இன்னும் ஒரு பதிவு கூட நான் பங்களிக்கவில்லை.
அசோக வருகிறேன். நான்கு நாட்களுக்குள் ஒரு பதிவை இடுகிறேன்.

முக்கிய அணிகளின் பல முக்கிய வீரர்கள் காயங்கள்,உபாதைகள் காரணமாக வெளியேறிவருவது  கவலை.
உலகக் கிண்ணம் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் களை இழந்துவிடுமோ என்று எண்ணவேண்டியுள்ளது.

இங்கிலாந்தின் நட்சத்திரம் பெக்காமைத் தொடர்ந்து தலைவர் ரியோ பெர்டினன்ட், ஜெர்மனியின் தலைவர் மிக்கேல் பலாக், பிரேசிலின் கோல் காப்பாளர் சீசர்,இத்தாலியின் பிர்லோ,நெதர்லாந்தின் ஆர்ஜன் றோப்பேன், ஐவரி கொஸ்டின் டீடியர் ட்ரோக்பா என்று வரிசையாக நட்சத்திரங்கள் காயமுற்றுக் கொண்டு வருகிறார்கள்.

ஒரே ஆறுதல் எனது அபிமான அணி ஆர்ஜெண்டீனாவின் லியோனல் மெஸ்ஸி காயத்திலிருந்து குணமடைகிறார் என்பது.

பார்க்கலாம்.. உலகின் விறுவிறு வேக உலகக் கிண்ணம் இம்முறை என்ன ஆச்சரியங்களைத் தருகிறது என்று..


அண்மையில் நான் ரசித்த ஒரு கார்ட்டூன்..
புவி வெப்பமாதலின் விளைவு..

49 comments:

கன்கொன் || Kangon said...

பிறந்தநாள் - :))

பதிவர் சயந்தனுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

IIFA - ஆர்வமில்ல... :-|

இரசித்தது - அரவிந்த... வார்த்தைகள் தேவையில்லை.
அடுத்தது களுவிதாரண பாய்ந்து பிடித்த சில பந்துகள்.

அணித்தெரிவு: பார்ப்போம்... நம்பிக்கை இருக்கிறது.

இருபதுக்கு இருபது: தேவையா என்று யோசிக்கிறேன் வெளிநாட்டு வீரர்கள், பெரியளவிலான தொடர். :(

சிம்பாப்வே தொடர்: இந்தியா - can't play short pitch balls, can't play swinging ball, now can't play spinning balls...
Brighter future...

சந்திமால்: நம்பிக்கையூட்டுகிறார்.
சங்கக்காரவிற்கு விடுதலை கிடைக்கும் என்று நம்புகிறேன்.

கால்பந்து: ஹி ஹி... அப்பிடியெண்டா கையால தட்டிக்கொண்டுபோய் அந்த வளையத்துக்குள்ள போடுற விளையாட்டுத் தானே?

கன்கொன் || Kangon said...

// நகூடீசிகா //

நன்றிகள்,
கூத்து,
டீசில்வா,
சிம்பாப்வே+கிறிக்கற்,
காயம்+கால்பந்து +கார்ட்டூன்...

ம் ம்...
நான் ஏதோ வேற மொழி வார்த்தையெண்டு தேடினன்...
அவ்வ்வ்வ்...

sivaruban said...

sorry for the late wishes..இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.....

வந்தியத்தேவன் said...

Welcome

ஹாஹா அண்ணே ஒரு சந்தேகம் IIFA இந்தியன் திரைப்பட அமைப்பா இல்லை ஹிந்தியன் திரைப்பட அமைப்பா ஒரு தென்னிந்தியப் படத்திற்க்கோ அல்லது வங்காளப் படத்திற்க்கோ இதுவரை விருது கிடைத்ததில்லை ஹிஹிஹி, மம்முட்டி சொன்னது போல் IIFAஎன்பது International Indi Film association என்பது சரிதான்.

சிங்கங்கள் வயதுபோனாலும் சிங்கம் சிங்கம் தான்.

கிரிக்கெட் போட்டியில் மந்திராபேடியும் அந்த ஒல்லியனும் அடிச்ச கூத்தையும் நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பையும் பார்த்து நொந்துபோனேன் நம்ம அமைச்சர்களைச் சும்ம்மா கூப்பிட்டு விட்டு இந்திய வியாபாரிகளை வைத்து பரிசு அளித்தார்கள்.

சந்திமால் மூத்த வீரர்களை ஐயே ஐயே என அழைப்பதை அவதானிக்கவில்லையா?

கால்பந்து சம்பந்தமான தொகுப்புகள் வர்மாவின் அன்புடன் வலையில் தமிழில் இருக்கின்றது.

"ராஜா" said...

//சிம்பாப்வேயில் மூக்குடைபட்டு விட்டது.

ஏன் ஒரு போட்டியில் இலங்கை அணியை தோற்கடித்து உள்ளதே?

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

எங்கள் நாடுதானே இந்த IIFA புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஏனோ நினைக்கத் தோன்றவில்லை.. :(

என்.கே.அஷோக்பரன் said...

ஐஃபா வீணாணது கவலை என்றாலும் அது தோல்வியடைந்ததில் ஒரு மகிழ்ச்சி. மக்கள் பணத்தில் கூத்தடிக்க நினைத்தால் இதுதான் கதி, கடைசியில் கவலையுடன் தான் முடியும்.

தாங்கள் அந்த வலைப்பதிவில் எழுதவேண்டும் நன்றி! எனக்கும் பரீட்சைக்காலம் என்பதால் அந்த வலைப்பக்கம் எட்டிப்பார்த்தே பல வாரங்களாகிறது. இந்த வெள்ளி முதல் தொடங்கிவிட வேண்டியதுதான்....

காயமடைந்தோர் பட்டியல் இன்னும் நீளுகிறது... குணமடைவார் என எதிர்பார்க்கப்பட்ட கானா அணி நட்சத்திர வீரர் எஸ்ஸியன் உடற்தகமை பெறாததால் உலகக்கிண்ணத்திலிருந்து விலகினார். நைஜீரிய அணி வீரர் ஜோன் ஒபி மிகேல் காலில் காயங்காரணமாக அணியிலிருந்து விலகினார். றியோ ஃபேடினன்ட் காயமடைந்தது, இங்கிலாந்துக்கு பெரிய இடி, ஏனெனில் அவரது இடத்துக்கான மாற்றுவீரரான லெட்லி கிங்கின் உடற்தகுதி மோசமானது, ஒருவாரத்தில் இரண்டு போட்டிகள் முழுமையாக விளையாடினாலேயே ஐயா இரண்டு வாரத்திற்கு காயங்காரணமாக ஒதுங்கிவிடுவார், அவருக்கு அடுத்ததாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள உதிரி வீரர் டோஸன் தங்கியிருக்கக்கூடிய வீரர்அல்ல, அவர் எப்ப நல்லா விளையாடுவார் எப்ப புஸ் ஆவார் என்று யாராலும் சொல்ல முடியாது, மேலும் இங்கிலாந்து அணியில் ஏற்கனவே காயமடைந்த கரத் பறியும் இணைத்தக்கொள்ளப்பட்டுள்ளார். இவர் முதல் போட்டியில் விளையாடுவது சாத்தியமில்லை எனினும் இரண்டாவது போட்டிக்கிடையில் குணமடைந்துவிடுவார் என இங்கிலாந்து முகாமையாளர் ஃபபியோ பபெல்லோ தெரிவித்திருந்தார்! இங்கிலாந்து நிலமை கவலைக்கிடம் தான், ஆனாலும் வாய்ப்பு இருக்கிறது!

டீடியே ட்றொக்பாவினது காயம் என்னைக் கவலை கொள்ள வைக்கிறது. இந்த சீசனில் செல்ஸி கழகத்தின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தவர் ட்றொக்பா, ஐவரிக் கோஸ்ட்-இன் தலைவரும், நம்பிக்கை நட்சத்திரமும் அவர்தான். கையிலேதோன் காயம் என்பதால் விரைவில் குணமடைந்து விளையாடுவார் என்று நம்புவோம், அதனால்தான் அவரை அணியிலிருந்து நீக்காமல் தொடர்ந்து வைத்திருக்கிறார்கள்.

மிக்கேல் பலக்கின் காயம் ஜேர்மனிக்குப் பெரிய அடி. ஜேர்மனியின் முன்னாள் வீரரும் உலக காற்பந்து வரலாற்றின் முக்கிய மற்றும் சிறப்பு வீரர்களுள் ஒருவருமான பெக்கன்பவர் அண்மையில் தெரிவித்த கருத்தில் பலக்கின் தலைமைத்துவம் இல்லாதது ஜேர்மனியின் வாய்ப்பைப் பாதித்திரப்பதாகக் கூறியிருந்தார்.

ஆயன் றொபன் மீண்டு வருவது அதிகளவில் சாத்தியமாகவே படுகிறது. ப்ரேசில் அணியின் கோல் காப்பாளர் ஜீலியோ இரண்டாவது போட்டிக்குத் தகுதி பெற்றுவிடுவார் என்று ப்ரேசில் அணியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.!

இம்முறை வழமையைவிட உலகக்கிண்ணத்திற்கு முன்பாக பல முக்கிய வீரர்கள் காயமடைந்தமை கவலையளிக்கிறது!

Jana said...

இறுதி கார்ட்ரூன் பல விடயங்களை சிந்திக்க வைக்கின்றது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

belated birthday wishesh

நிரூஜா said...

சயந்தன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

அரவிந்த, ஜடேஜா கலக்கல்களைப் பார்த்தேன். லிட்டில் களுவை விட்டுவிட்டீர்களே...! குள்ளமான அந்த உருவத்தின் அதே துடிப்பும் அதே புண்முறுவல் கூடிய சிரிப்பும் அப்படியே இருந்தது...!

இந்திய அணியின் தோல்வி - no comments ;)

Riyas said...

லோசன் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

எத்தனையோ பேர் பசியில் வாடும் போது இந்த விழா எல்லாம் தேவையேயில்லை..

Anonymous said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் லோஷனண்ணா. 5ம் திகதி யாருக்கோ வாழ்த்தவேணும் என்டு நினைவு வந்தது. யாருக்கு என்று மட்டும் ஞாபகம் வரேல்ல. வயசு போகுது. =((

புரொபைல் படம் நன்றாக இருக்கிறது. உடம்பு கொஞ்சம் மெலிஞ்சு இருக்கிறது போல இருக்கு. நல்லம். விடாமல் எக்சர்சைஸ் செய்யுங்கோ.

//எங்கள் நாடுதானே இந்த IIFA புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஏனோ நினைக்கத் தோன்றவில்லை.. :(//
Woo. What a delightful thought. உங்களை மாதிரி தமிழன்கள் இருக்கும் வரை எமக்கு விடிவே இல்லை.

- Mukilini V

Subankan said...

:))

தலைப்பைப்பாத்து கொஞ்சம் ஓவராத்தான் எதிர்பாத்திட்டமோ :p

யோ வொய்ஸ் (யோகா) said...

மூத்த பதிவர் சயந்தனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பிறந்த நாளன்று சந்தோஷபட வைக்கும் ஒரே விடயம், நம்மை மறக்காமல் வாழ்த்துவதே. இல்லையா பின்ன வயது போவது கவலையான விடயம் தானே.

IIFA போட்டி பார்க்க கிடைக்கவில்லை, பரிசு வழங்கல் மட்டுமே பார்க்க கிடைத்தது. அரவிந்த விளையாடியது தெரியாது, தெரிந்திருந்தால் பள்ளி காலத்தை போல அலுவலக்திற்கும் கட் அடித்து போட்டியை பார்த்திருப்பேன். அரவிந்த டீ சில்வா என்னும் துடுப்பாட்ட வீரரின் பேட்டிங்கை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

பார்ப்போம் அந்த மனுஷன் நல்லா தேர்வு செய்தாலும் அரசியல் தலையீடு வந்தால் அவர் என்ன செய்வார்? வெளியே சனத்தை அணியில் வைக்க சொல்லியிருந்த அரசியல்வாதிகள் தினேஷ் சந்திமால் என்னும் திறமையான வீரரை போட்டியில் பங்கு பெறாமல் செய்ததன் விளைவு 20-20 உலக கிண்ண போட்டிகளில் தெரிந்தது. ஆசிய கிண்ண போட்டிக்கு சனத் விளையாடுவார் என பட்சி சொல்கிறது.. பார்ப்போம் என்ன நடக்குமென்று.

சென்ற ஆசிய கிண்ண இறுதி போட்டியில் சனத் இந்தியாவிற்கு (முக்கியமாக ஆர்.பீ.சிங்கின் பந்திற்கு) அடித்த அடி இன்னும் மனதில் இருக்கிறது. ஆனாலும் சிங்கத்திற்கு வயதாகி விட்டது. என்ன செய்ய

சிம்பாவேயில் இன்று நம்மவர்களும் சுருண்டு விட்டனர். ஆடுகளத்தை காரணம் காட்டி இதை ஒதுக்கவியலாது காரணம், எந்த ஆடுகளத்திலும் சாதிக்க வேண்டிய வெறி மற்றும் பயிற்சி இருக்க வேண்டும், அவுஸ்திரேலிய அணியை போல...

கால்பந்து உலக கிண்ண பதிவை எதிர்பார்த்திருக்கிறேன்.

ரொம்ப பெரிய பின்னூட்டமோ?

யோ வொய்ஸ் (யோகா) said...

நகூடீசிகா

என்ன பேர் இது? ரூம் போட்டு யோசித்து பேர் வைத்தீங்களோ?

EKSAAR said...

இம்முறை இன்னொரு புது வாழ்த்துமுறை.. நீங்கள் நன்றி செலுத்தியபின் எனது வாழ்த்து..

பாதி சதம் அடித்திருக்கும்
பதிவுலகின்
பரிதிக்கு வாழ்த்துக்கள்.
நீவிர் கலைஞரின் வழியில் செம்மொழுக்கு
செழுமை சேர்ப்பீராக..

EKSAAR said...

//அரசியல் சர்ச்சைகள் பல முன்னணி நட்சத்திரங்களைத் தடுத்து நிறுத்த,எதிர்பார்த்த அளவு விருந்தினர் வருகையோ,வெளிநாட்டு முதலீடுகளோ கிடைக்கவில்லை.//

தமிழ்நாட்டின் முட்டாள்தனமான எதிர்ப்புக்கு இலங்கைப்பதிவர்கள் பதில் சொல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

விருந்தினர் வராவிட்டால் பரவாயில்லை.. சுற்றுலாப்பயணிகள் வந்தால் போதும்.. கொழும்பில் பல நட்சத்திர ஹோட்டல்கள் நிரம்பி வழிந்தது தெரியாதா?

முதலீடுகள் எதிர்பார்க்கப்படவில்லை.. அவை ஒரு நாளில் இடம்பெறும் இன்ஸ்டட் விடயங்களும் அல்ல..

யார் குரைத்தாலும் இலங்கை அபிவிருத்தியடையும்.. யுத்தத்தை வெற்றிகொண்டதுபோல..

//விருந்துக்கு முக்கிய நட்சத்திரங்கள் வராமல் விட்டது//

இரவெல்லாம் கிளப்பிங் இருக்கையில் அதிகாலை 11 மணிக்கு அழைத்தால் யார் வருவர்?

//அடுத்தது இலங்கையின் சிங்களத் திரைப்பட சிரேஷ்ட கலைஞர்களை ஒரு பொருட்டாகக் கூட எடுக்கவில்லையா//

யார் சிரேஷ்டம் என்பதில் அவர்களுக்கு தெளிவில்லை. ஜனாதிபதிக்கு வால் பிடிப்பவர்கள் மட்டும்தான் என்று சிலர் வாதம்..

அந்தந்த நாட்டு நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதென்றால், அமெரிக்காவில் ஐபா நடந்தால் அமெரிக்க கலைஞர்களுக்கே இடம் போதாதே..

//இவ்வளவுக்கும் வந்திருந்த ஹிந்தி நட்சத்திரங்களை விட எத்தனையோ விருதுகளை சர்வதேச மட்டத்தில் வென்றவர்கள் இந்த சிங்கள நட்சத்திரங்கள்.//

அவை 3ஆம் உலக நாடுகளுக்கான விருதுகள்.. மாலினி பொன்சேகா என்பவா விட சல்மான் கானை பல மடங்கு மக்களுக்கு தெரியும்.. விடியலில் கேட்டுப்பாருங்கள் மாலினி பொன்சேக்கா யார் என்று.. இன்றைய ஜக்குலினை தெரியாத தமிழர்களுக்கு அவரையா தெரிந்திருக்கப்போகிறது?

சிரேஷ்ட கலைஞர் என்று இருப்பவர்களைவிட சர்வதேச ரீதியில் அதிகம் அறியப்பட்ட இராஜ், பாதியா, சந்தூஷ் போன்றோர் எவ்வளவோ மேல்..

(ஜனாதிபதி தேர்தல் விவாதங்களில் சிங்கள கலைஞர்களே இதை தெளிவாக்கினர். பார்க்கவில்லையா?)

//இந்த மூன்று நாள் கூத்துக்காக இலங்கையினால் செலவிடப்பட்ட மொத்தத் தொகை 700 மில்லியன் ரூபாய்.
இதில் நமது வரிப்பணம் மட்டும் 450 மில்லியன் ரூபாய்.//

ஆக 700 - 450 = 250
250 மில்லியன் இலங்கைக்கு வெளிநாட்டில் இருந்து செலவிடப்படவில்லையா?

அதிலும் இலங்கை செலவிட்ட 450 மில்லியனில் பாதை திருத்தியது எல்லாம் கணக்கில் சேர்க்க முடியுமா.. பாதையை ஐபா இந்தியாவுக்கா எடுத்துப்போகப்போகிறது?

தவிர இந்த 450 மில்லியன் ஒரு முதலீடே..

கொழும்பு சிறீலங்கா என்பதெல்லாம் செலவில்லாமலே உலகெங்கும் விளம்பரமாகிவிட்டதே..

தவிர வந்த விருந்தினர்களும் சுற்றுலாப்பயணிகளும் செலவிட்டதெல்லாம் இலங்கைக்கு வருமானமே..

ஐபா கிரிக்கட் உண்மையிலேயே நன்றாக நடந்தது. UNICEF உடன் முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு செலவிட ஒரு தொகை கிடைத்திருக்கிறது. இதற்கு இந்த புலிவால்கள் ஒரு சதமும் கொடுக்கவில்லை.

//மூன்று நாளுக்கும் இலவச பாஸ் கிடைத்தும் அலுவலக அலவாங்குகள் காரணமாக போகக் கிடைக்காததில் உண்மையாகக் கவலைப் பட்டது இந்த கிரிக்கெட் போட்டிக்குத் தான். //

உண்மையைச்சொல்லுங்கோ.. துரோகி பட்டம் கிடைக்கும் என்ற பயம்தானே காரணம்..

//IPL மாதிரியாக மாகாண மட்ட Twenty 20 போட்டிகளை நடத்துவதைப் பற்றியும் சொல்லி இருக்கிறார்.//

அடை இலங்கை கிரிக்கட்டுக்கும் கூட வர் அறிவிக்கவில்லை!

இதுக்குமேல பின்னூட்டம் போட்டா உங்க பதிவ விட நீளமா போகும்..

EKSAAR said...

//மதுவதனன் மௌ. / cowboymathu
எங்கள் நாடுதானே இந்த IIFA புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஏனோ நினைக்கத் தோன்றவில்லை.. :( //

நினைக்காவிட்டால் இலங்கையில் இலவசக்கல்வி திட்டத்தில் இலவச சீருடைத்திட்டத்தில் படிததற்கும் நட்டம்..

EKSAAR said...

நகூடீசிகா

இது ஹகூனமடாடா இன் கொப்பி தானே?

ARV Loshan said...

கன்கொன் || Kangon said...

இரசித்தது - அரவிந்த... வார்த்தைகள் தேவையில்லை.
அடுத்தது களுவிதாரண பாய்ந்து பிடித்த சில பந்துகள்.//

ம்ம் நான் களுவைப் பற்றி சொல்லவில்லை. காரணம் களு ஆடிய வேளை நான் தொலைகாட்சி பார்க்கவில்லை.



இருபதுக்கு இருபது: தேவையா என்று யோசிக்கிறேன் வெளிநாட்டு வீரர்கள், பெரியளவிலான தொடர். :(//

iifa தேவை எனும்போது இது தேவையில்லையா? எக்சாரிடம் கேளுங்கள்.. ;)



சிம்பாப்வே தொடர்: இந்தியா - can't play short pitch balls, can't play swinging ball, now can't play spinning balls...
Brighter future...//

ஹீ ஹீ..


கால்பந்து: ஹி ஹி... அப்பிடியெண்டா கையால தட்டிக்கொண்டுபோய் அந்த வளையத்துக்குள்ள போடுற விளையாட்டுத் தானே?//

உங்களுக்கு அது பற்றி தெரியாமலே இருபது மைதானங்களுக்கு நல்லது தம்பி.. ;)

====================

கன்கொன் || Kangon said...
// நகூடீசிகா //

நன்றிகள்,
கூத்து,
டீசில்வா,
சிம்பாப்வே+கிறிக்கற்,
காயம்+கால்பந்து +கார்ட்டூன்...

ம் ம்...
நான் ஏதோ வேற மொழி வார்த்தையெண்டு தேடினன்...
அவ்வ்வ்வ்....//

ஹா ஹ.. கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே என்று தான்..

ARV Loshan said...

sivaruban said...
sorry for the late wishes..இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.....//

நன்றி சகோ..
================

வந்தியத்தேவன் said...

ஹிஹிஹி, மம்முட்டி சொன்னது போல் IIFAஎன்பது International Indi Film association என்பது சரிதான்.//

ம்ம் இதையும் சேர்த்துத் தான் தமிழ்,மலையாள நட்சத்திரங்கள் வராமல் விட்டார்களோ??




கிரிக்கெட் போட்டியில் மந்திராபேடியும் அந்த ஒல்லியனும் அடிச்ச கூத்தையும் நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பையும் பார்த்து நொந்துபோனேன் நம்ம அமைச்சர்களைச் சும்ம்மா கூப்பிட்டு விட்டு இந்திய வியாபாரிகளை வைத்து பரிசு அளித்தார்கள்.//

இந்திய வியாபார விழா என்றால் அப்படித் தான். ;)



சந்திமால் மூத்த வீரர்களை ஐயே ஐயே என அழைப்பதை அவதானிக்கவில்லையா?//

அது மட்டுமா? சங்கா,களு, என் முன்பிருந்த இந்தியாவின் நயான் மோங்கியா, பாகிஸ்தானின் மொயின் கானை விட சத்தமாக கத்துகிறார்.



கால்பந்து சம்பந்தமான தொகுப்புகள் வர்மாவின் அன்புடன் வலையில் தமிழில் இருக்கின்றது.//

அப்படியா? வாசிக்கிறேன்

ARV Loshan said...

"ராஜா" said...
//சிம்பாப்வேயில் மூக்குடைபட்டு விட்டது.

ஏன் ஒரு போட்டியில் இலங்கை அணியை தோற்கடித்து உள்ளதே?//

ஒ அது மட்டும் உங்களுக்குப் போதுமா?

இரு தடவை சிம்பாப்வேயிடம் தோற்றதும்,இறுதிக்கு வராமல் போனதும் பரவாயில்லை.??

======================

மதுவதனன் மௌ. / cowboymathu said...
எங்கள் நாடுதானே இந்த IIFA புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஏனோ நினைக்கத் தோன்றவில்லை.. :(//

உண்மை தான் மது..

ஹிந்தி நட்சத்திரங்களுக்கே விருதுகள் என்பதும் நூற்றில் ஒரு காரணமாக இருக்கலாம்.

ARV Loshan said...

என்.கே.அஷோக்பரன் said...
ஐஃபா வீணாணது கவலை என்றாலும் அது தோல்வியடைந்ததில் ஒரு மகிழ்ச்சி. மக்கள் பணத்தில் கூத்தடிக்க நினைத்தால் இதுதான் கதி, கடைசியில் கவலையுடன் தான் முடியும்.//

ம்ம்ம்ம்

உங்கள் கால்பந்து பிந்திய தகவல்களுக்கு நன்றிகள்.. பதிவையும் எதிர்பார்கிறேன்.

===============


Jana said...
இறுதி கார்ட்ரூன் பல விடயங்களை சிந்திக்க வைக்கின்றது.//

ம்ம்ம்

==========

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
belated birthday wishesh //

நன்றி ரமேஷ்.. :)

கன்கொன் || Kangon said...

// iifa தேவை எனும்போது இது தேவையில்லையா? எக்சாரிடம் கேளுங்கள்.. ;) //

அண்ணே...

அவர் பொருளாதார அறிஞர், பொருளாதார முன்னேற்றம் பற்றிக் கதைச்சார், நான் கிறிக்கற் விரும்பி, கிறிக்கற்றப் பற்றிக், கிறிக்கற்றப் பற்றி மட்டுமே கதைச்சன்... ;)

ARV Loshan said...

நிரூஜா said...

அரவிந்த, ஜடேஜா கலக்கல்களைப் பார்த்தேன். லிட்டில் களுவை விட்டுவிட்டீர்களே...! குள்ளமான அந்த உருவத்தின் அதே துடிப்பும் அதே புண்முறுவல் கூடிய சிரிப்பும் அப்படியே இருந்தது...!//

ம்ம் மேலே கண்கோனுக்கு களு பற்றி சொன்ன பதிலே உங்களுக்கும்.. :)



===============

Riyas said...
லோசன் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. //

நன்றி..

எத்தனையோ பேர் பசியில் வாடும் போது இந்த விழா எல்லாம் தேவையேயில்லை..//

இந்தப் புரிதல் நிறையப் பேருக்கு இல்லையே..

ARV Loshan said...

Anonymous said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் லோஷனண்ணா. 5ம் திகதி யாருக்கோ வாழ்த்தவேணும் என்டு நினைவு வந்தது. யாருக்கு என்று மட்டும் ஞாபகம் வரேல்ல. வயசு போகுது. =((//

ஒ நீங்களா?

வாங்கோ வாங்கோ.. நன்றி..

வயசு போறதோட இந்தப் பக்கமே மறந்து போச்சுப் போல.. ;)



புரொபைல் படம் நன்றாக இருக்கிறது. உடம்பு கொஞ்சம் மெலிஞ்சு இருக்கிறது போல இருக்கு. நல்லம். விடாமல் எக்சர்சைஸ் செய்யுங்கோ. //

நன்றி.. எல்லாம் உங்க ஆசீர்வாதம்..



//எங்கள் நாடுதானே இந்த IIFA புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஏனோ நினைக்கத் தோன்றவில்லை.. :(//
Woo. What a delightful thought. உங்களை மாதிரி தமிழன்கள் இருக்கும் வரை எமக்கு விடிவே இல்லை.

- Mukilini V //

அட அட இது எப்ப இருந்து.. நீங்களா இது பற்றிப் பேசுவது?
உண்மையிலேயே நீங்கள் முகிலினி, அதே முகிலினி தானா?

ARV Loshan said...

Subankan said...
:))

தலைப்பைப்பாத்து கொஞ்சம் ஓவராத்தான் எதிர்பாத்திட்டமோ :ப//
அப்பிடி என்ன தான் எதிர்பார்த்தீங்க?

----------------

ARV Loshan said...

யோ வொய்ஸ் (யோகா) said...

பிறந்த நாளன்று சந்தோஷபட வைக்கும் ஒரே விடயம், நம்மை மறக்காமல் வாழ்த்துவதே. இல்லையா பின்ன வயது போவது கவலையான விடயம் தானே...//

ம்ம் அது மட்டுமா/ ட்ரீட் என்று எதோ கேட்டு தொல்லைப் படுத்தும் நண்பர்கள்.. ;)




பார்ப்போம் அந்த மனுஷன் நல்லா தேர்வு செய்தாலும் அரசியல் தலையீடு வந்தால் அவர் என்ன செய்வார்? வெளியே சனத்தை அணியில் வைக்க சொல்லியிருந்த அரசியல்வாதிகள் தினேஷ் சந்திமால் என்னும் திறமையான வீரரை போட்டியில் பங்கு பெறாமல் செய்ததன் விளைவு 20-20 உலக கிண்ண போட்டிகளில் தெரிந்தது. ஆசிய கிண்ண போட்டிக்கு சனத் விளையாடுவார் என பட்சி சொல்கிறது.. பார்ப்போம் என்ன நடக்குமென்று.//

ஏன்யா இப்பிடி அபசகுனமாய்.. விடுங்களேன்.. நா.உ ஓய்வெடுக்கட்டும்.. இப்போ என்ன அவசரம்.. உலகக் கிண்ணப் போட்டி வரை ஓய்வெடுக்கட்டுமே.. ;)




சிம்பாவேயில் இன்று நம்மவர்களும் சுருண்டு விட்டனர். ஆடுகளத்தை காரணம் காட்டி இதை ஒதுக்கவியலாது காரணம், எந்த ஆடுகளத்திலும் சாதிக்க வேண்டிய வெறி மற்றும் பயிற்சி இருக்க வேண்டும், அவுஸ்திரேலிய அணியை போல...//

என்னன்னே இது? ரஜினியோடு வடிவேலுவை ஒப்பிடுறீங்க.. ;)

நாம எல்லாம் சிரிப்பு போலீஸ்..



கால்பந்து உலக கிண்ண பதிவை எதிர்பார்த்திருக்கிறேன்.//

வரும்..



ரொம்ப பெரிய பின்னூட்டமோ?//

எதை சொன்னீங்க? ஒ இதுவா?
நான் பதிவும்ன்னு நினைச்சில்லையா பின்னூட்டம் அடிக்கிறேன்.. ;)

=================

யோ வொய்ஸ் (யோகா) said...
நகூடீசிகா

என்ன பேர் இது? ரூம் போட்டு யோசித்து பேர் வைத்தீங்களோ?//

இல்லை ஐய்யா என் ரூமில் இருந்தே தான்..

ஒவ்வொரு அம்சத்தினதும் முதல் எழுத்து..
கருப்பு சிங்கம் கண்டுபிடிச்சிட்டில்ல..

ARV Loshan said...

EKSAAR said...
இம்முறை இன்னொரு புது வாழ்த்துமுறை.. நீங்கள் நன்றி செலுத்தியபின் எனது வாழ்த்து..//

நீங்க எதிலேயும் வித்தியாசம் தானே.. ;)



பாதி சதம் அடித்திருக்கும்
பதிவுலகின்
பரிதிக்கு வாழ்த்துக்கள்.
நீவிர் கலைஞரின் வழியில் செம்மொழுக்கு
செழுமை சேர்ப்பீராக...//

அது செம்மொழிக்கா? ;)

இப்போ நீங்கள் கலைஞருக்கும் சப்போர்ட்டா?

===============

ARV Loshan said...

EKSAAR said...

தமிழ்நாட்டின் முட்டாள்தனமான எதிர்ப்புக்கு இலங்கைப்பதிவர்கள் பதில் சொல்லாதது ஏமாற்றமளிக்கிறது. //

ஏன் சொல்லவேண்டும்? என்ன சொல்லவேண்டும்?

எது முட்டாள் தனம்?

அது அது அவரவர் கோணத்தில்.

எங்கள் எல்லோர் சார்பிலும் நீங்களே எதிர்ப்பைப் பதிவு செய்யலாமே..



விருந்தினர் வராவிட்டால் பரவாயில்லை.. சுற்றுலாப்பயணிகள் வந்தால் போதும்.. கொழும்பில் பல நட்சத்திர ஹோட்டல்கள் நிரம்பி வழிந்தது தெரியாதா?//

அது ஐபாவுக்கு தானா? சொல்லவே இல்லை.




யார் குரைத்தாலும் இலங்கை அபிவிருத்தியடையும்.. யுத்தத்தை வெற்றிகொண்டதுபோல..//

அபிவிருத்தி அடையத்தான் வேண்டும்.. ஆனால் யுத்தத்தை வெற்றி கொண்டது போலல்ல..யுத்த வெற்றியின் வடுக்கள் நீங்கள் அறியாததா?



//விருந்துக்கு முக்கிய நட்சத்திரங்கள் வராமல் விட்டது//

இரவெல்லாம் கிளப்பிங் இருக்கையில் அதிகாலை 11 மணிக்கு அழைத்தால் யார் வருவர்?//

ஹாஹ் நியாயமான கேள்வி தான்..




அந்தந்த நாட்டு நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதென்றால், அமெரிக்காவில் ஐபா நடந்தால் அமெரிக்க கலைஞர்களுக்கே இடம் போதாதே..//

கூப்பிட்டாலும் அமெரிக்கர்கள் வந்திருப்பார்களா என்பது வேறு கதை..


மாலினி பொன்சேகா என்பவா விட சல்மான் கானை பல மடங்கு மக்களுக்கு தெரியும்.. விடியலில் கேட்டுப்பாருங்கள் மாலினி பொன்சேக்கா யார் என்று.. இன்றைய ஜக்குலினை தெரியாத தமிழர்களுக்கு அவரையா தெரிந்திருக்கப்போகிறது?//

கொஞ்சம் படித்த,வாசிக்கின்ற, செய்தி அறிந்த மக்களுக்கு மாலினியையும் தெரியும்,ஜக்குலினையும் தெரியும் அவர்களுக்கு மேலேயும் தெரியும்.தமிழர்கள் எல்லோருமே கிணற்றுத் தவளைகள் அல்ல..

நீங்கள் தமிழர் என்று சொன்னது தமிழ் பேசுபவர்களைத் தானே/




(ஜனாதிபதி தேர்தல் விவாதங்களில் சிங்கள கலைஞர்களே இதை தெளிவாக்கினர். பார்க்கவில்லையா?)//

அதில் அவர்கள் என்ன தான் சொல்லவில்லை?



//இந்த மூன்று நாள் கூத்துக்காக இலங்கையினால் செலவிடப்பட்ட மொத்தத் தொகை 700 மில்லியன் ரூபாய்.
இதில் நமது வரிப்பணம் மட்டும் 450 மில்லியன் ரூபாய்.//

ஆக 700 - 450 = 250
250 மில்லியன் இலங்கைக்கு வெளிநாட்டில் இருந்து செலவிடப்படவில்லையா?//

ரொம்ப முக்கியம் இது.. நல்ல கணக்கு.



அதிலும் இலங்கை செலவிட்ட 450 மில்லியனில் பாதை திருத்தியது எல்லாம் கணக்கில் சேர்க்க முடியுமா.. பாதையை ஐபா இந்தியாவுக்கா எடுத்துப்போகப்போகிறது?//

எத்தனை பாதைகள்? எண்ணிக் காட்டுங்கள்.அதில் மக்கள் அதிகம் பயணிக்கின்ற பாதை எது? வெளிநாட்டு நட்சத்திரங்கள் வந்து சென்ற பாதைகள் மட்டுமே ஒப்புக்கு மினுக்கப்பட்டன.




கொழும்பு சிறீலங்கா என்பதெல்லாம் செலவில்லாமலே உலகெங்கும் விளம்பரமாகிவிட்டதே..//

இதை விட யுத்தம் மற்றும் கிரிக்கெட் நல்ல விளம்பரங்கள் தம்பி..

யுத்தம் நடக்கும்போதும் அதைவிட போர்க்குற்ற விசாரணை பற்றி உலகமே சொல்லும்போதும் உலகம் முழுக்க இலங்கை பற்றித் தெரிகிறது.




தவிர வந்த விருந்தினர்களும் சுற்றுலாப்பயணிகளும் செலவிட்டதெல்லாம் இலங்கைக்கு வருமானமே..//

இது என்ன கொடும சார்.. அவர்கள் எல்லாம் ஒசீப் பார்ட்டிகள் என்று உங்களுக்கு தெரியாதா?



ஐபா கிரிக்கட் உண்மையிலேயே நன்றாக நடந்தது. UNICEF உடன் முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு செலவிட ஒரு தொகை கிடைத்திருக்கிறது. இதற்கு இந்த புலிவால்கள் ஒரு சதமும் கொடுக்கவில்லை.//

எந்தப் புலி வால்கள்? கொடுத்தால் அரசு வாங்கி இருக்கும்?



//மூன்று நாளுக்கும் இலவச பாஸ் கிடைத்தும் அலுவலக அலவாங்குகள் காரணமாக போகக் கிடைக்காததில் உண்மையாகக் கவலைப் பட்டது இந்த கிரிக்கெட் போட்டிக்குத் தான். //

உண்மையைச்சொல்லுங்கோ.. துரோகி பட்டம் கிடைக்கும் என்ற பயம்தானே காரணம்..//

யாரிடம்? மற்றவருக்காக பயந்து வாழ்வோரில்லை நாம்.. :)அது உங்களுக்கே தெரியும்.




//IPL மாதிரியாக மாகாண மட்ட Twenty 20 போட்டிகளை நடத்துவதைப் பற்றியும் சொல்லி இருக்கிறார்.//

அடை இலங்கை கிரிக்கட்டுக்கும் கூட வர் அறிவிக்கவில்லை!//

அப்படியா/ இது அவருக்கு தெரியுமா?



இதுக்குமேல பின்னூட்டம் போட்டா உங்க பதிவ விட நீளமா போகும்..//

அது சரி.. இவ்வளவும் சொல்லிய பிறகா?


அதுசரி ஒரே ஒரு கேள்வி..

நீங்கள் ஐபாவின் உத்தியோகபூர்வ பேச்சாளரா? ;)

ARV Loshan said...

EKSAAR said...
நகூடீசிகா

இது ஹகூனமடாடா இன் கொப்பி தானே?//

இதுக்குத் தான் சொல்வது கொஞ்சம் யோசிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் உங்களுக்கு முதல் இடப்பட்ட பின்னூட்டங்களை வாசிக்க வேண்டும்.. :)

என்ன கொடும சார் இது

Its me said...

யுத்தத்தை வெற்றி கொண்டது போல அபிவிருத்தி அடையும் என்றால்.. எப்படி...

50 000 சனத்தைக் தின்று அபிவிருத்தி அடையுமா..

Anonymous said...

//50 000 சனத்தைக் தின்று அபிவிருத்தி அடையுமா..//

Installmentல கொடுத்திருந்தா 2 பங்காகியிருக்கமாட்டாதா?

Anonymous said...

"இப்போ நீங்கள் கலைஞருக்கும் சப்போர்ட்டா?"

ஒரே பிறந்தநாள்.. :D

SShathiesh-சதீஷ். said...

பதிவர் சாந்தனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். பெரிய்ய்ய்ய்ய்யாஆஆஅ பதிவு....நன்றி அண்ணா

lalithsmash said...

அரவிந்த விளையாடியது ரொம்ப சந்தோஷம்

எனக்கும் இவரால்தான் Cricket மீதே ஆசை வந்தது

Loshan Do you know the Link to watch IIFA Cricket or the Link to the Scorecard.

என்றும் அனானி said...

விபச்சாரிகளின் கூத்தில் குளிர் காய்வது நாட்டுக்கு ரொம்ப தேவை. இதற்கும் வழமை போல் sms போட்டி வைத்து dialog க்கு உழைத்து கொடுக்கலாமே! இளையவர்களை வழி கெடுப்பதில் இந்த வானொலிகளின் பங்கு மகத்தானது

ARV Loshan said...

கன்கொன் || Kangon said...


அவர் பொருளாதார அறிஞர், பொருளாதார முன்னேற்றம் பற்றிக் கதைச்சார், நான் கிறிக்கற் விரும்பி, கிறிக்கற்றப் பற்றிக், கிறிக்கற்றப் பற்றி மட்டுமே கதைச்சன்... ;)//

அவர் பொருளாதார அறிஞரா ப்ரோக்கரா என்று தெரியாது.. ஆனால் நீங்கள் ஒரு கிரிக்கெட் அறிஞர் என்று நேற்று க்ரிக்கின்போவின் மூலம் அறிந்தோம்..
Cricinfo புகழ் கறுப்பு சிங்கம் cricket analyst கங்கோன் வாழ்க..

ARV Loshan said...

Its me said...
யுத்தத்தை வெற்றி கொண்டது போல அபிவிருத்தி அடையும் என்றால்.. எப்படி...

50 000 சனத்தைக் தின்று அபிவிருத்தி அடையுமா..//

அவ்வளவு தானா? குறைவு போல இருக்கே,...

================

Anonymous said...
//50 000 சனத்தைக் தின்று அபிவிருத்தி அடையுமா..//

Installmentல கொடுத்திருந்தா 2 பங்காகியிருக்கமாட்டாதா?/

என்ன ஒரு கொடுமையான எண்ணம்..
================

Anonymous said...
"இப்போ நீங்கள் கலைஞருக்கும் சப்போர்ட்டா?"

ஒரே பிறந்தநாள்.. :த//
கலைஞர் போலவே நீங்களும் சாரி எக்சாரும் ஜூன் மூன்றா?

ARV Loshan said...

SShathiesh-சதீஷ். said...
பதிவர் சாந்தனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//

தம்பி சாந்தன் அல்ல.. சயந்தன்.. ;)



பெரிய்ய்ய்ய்ய்யாஆஆஅ பதிவு....நன்றி அண்ணா//

பெரிய பதிவுக்கா? வெல்கம்.. ;)

ஆனால் இதைவிடப் பெரிய பதிவெல்லாம் எனக்குத் தெரிந்த ஒரு பதிவர் எழுய்துகிறார்.. பெயர் கூட ச என்று ஆரம்பிப்பதாகத் தகவல்.

==================

lalithsmash said...
அரவிந்த விளையாடியது ரொம்ப சந்தோஷம்

எனக்கும் இவரால்தான் Cricket மீதே ஆசை வந்தது//

யாருக்குத் தான் இல்லை.. இலங்கையில்.



Loshan Do you know the Link to watch IIFA Cricket or the Link to the Scorecard.//

இல்லையே

ARV Loshan said...

என்றும் அனானி said...
விபச்சாரிகளின் கூத்தில் குளிர் காய்வது நாட்டுக்கு ரொம்ப தேவை. இதற்கும் வழமை போல் sms போட்டி வைத்து dialog க்கு உழைத்து கொடுக்கலாமே! இளையவர்களை வழி கெடுப்பதில் இந்த வானொலிகளின் பங்கு மகத்தானது//

நீங்கள் வேறெங்கோ போட வேண்டிய பின்னூட்டத்தை இங்கே கொண்டு வந்து விட்டீர்களோ? ;)

நான் தேவை என்று எங்கேயுமே சொல்லவில்லை.

sms போட்டிவைத்து காசழிப்பது? நாம்?நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

அனானி இல்லை.. நீங்கள் அஞ்ஞானி..

தமிழன் தாயகத்திலிருந்து said...

ஆரம்பத்திலே இந்த விழா வெற்றி பெறக்கூடாது என்பதில் கருத்து கொண்டவர்களில் நானும் ஒருவன், மக்கள் இன்றும் ஒரு நேர சாப்பாடு கிடைக்காமல், படுக்க வீடு இல்லாமல் மரங்களில் கிடக்கும் மாம்பழத்தையும்,பலாப்பழத்தையும் ,சோழத்தையும் உண்டு கொண்டிருக்கிறார்கள், இவர்கள் சம்பெயினிலும், சிகப்பு கம்பளத்திலும் புரண்டுகொண்டிருக்கிறார்கள்,ஆனாலும்தமிழரைப்பகைத்தால் நாட்டை அபிவிருத்தி நோக்கி நகர்த்த முடியாது என்று மீண்டும் உறைப்பாக அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது......அத்துடன் உண்மையிலே நானும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டேன் விருது வழங்கும் விழாவினால், சனிக்கிழமை இரவு வெள்ளவத்தையில் இருந்து மட்டக்குளிக்கு போய்க்கொண்டிருந்தேன் மனைவியுடன்,பஞ்சிகாவத்தையில் 176,155 பஸ்ஸை போகவிடவில்லை,பிறகு நடக்கதொடங்கினோம் மட்டக்குளி நோக்கி ... இதில் கொடுமை அனைத்து கார்கள்,வான்கள் போக அனுமதிக்கப்பட்டன,ஓட்டோக்களோ பஸ்களோ அனுமதிக்கப்படவில்லை,நாங்க எவ்வளவு தூரமும் நடக்கபழக்கப்பட்டுவிட்டோல் தொடர் இடப்பெயர்வுகளால் ,ஆனால் மனைவியின் கதி.... பாவம் ரொம்ப கஸ்டப்பட்டு விட்டார்.... மக்களை தெருவில் விட்டு அடுத்தவனை கண்ணாடி கூட்டில் உபசரிக்கிறர்கள்...

சிம்பாவே டீம் பற்றி கட்டாயாம் அண்மைக்கால நிலவரப்படி சொல்லணும்னா

"சிம்பாவேன்னா சின்னப்பசங்கள்னு நினைச்சீங்களாடா ,சிங்கம்டா,வெறித்தனமா Ground ல தனிய நின்டு வேட்டையாடி பார்த்திருக்கிறியா, ஓங்கி அடிச்சா ஆறு போலும் சிக்ஸர்தான் பார்க்குறியா எண்டு ' நம்ம டீமைப்பார்த்துக்கேட்ட மாதிரி இருந்திச்சு....

EKSAAR said...

//ஏன் சொல்லவேண்டும்? என்ன சொல்லவேண்டும்?//

எமது நாடு இது.. இங்குதான் நீங்களும் நானும் இலவசக்கல்வி முதல் பல விடயங்களை அனுபவிக்கிறோம். அதனால் சொல்லவேண்டும்..

ஐபாவை புறக்கணிக்கும் நீங்களெல்லாம் ஏன் தமிழ் படத்தை இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு விற்று அவர்களை சுரண்டுகிறீர்கள் அன்று கேட்கவேண்டும்..

Mind ur own business என்றும் சொல்லவேண்டும்

என் எதிர்ப்பை நான் பதிவுசெய்திருக்கிறேன்..

//யுத்த வெற்றியின் வடுக்கள் நீங்கள் அறியாததா?//

அறியாததல்ல.. ஆனால் அது தொடராமல் முடிக்கப்பட்டிருக்கிறது.

ஒப்புக்கு மினுக்கப்படவில்லை. தேவையான அளவு வேலைகள் நடந்துள்ளன..

//இதை விட யுத்தம் மற்றும் கிரிக்கெட் நல்ல விளம்பரங்கள் தம்பி..//

$53 மில்லியன் பெறுமதியான இலவச விளம்பரம் கிடைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

//யுத்தம் நடக்கும்போதும் அதைவிட போர்க்குற்ற விசாரணை பற்றி உலகமே சொல்லும்போதும் உலகம் முழுக்க இலங்கை பற்றித் தெரிகிறது//.

அதையெல்லாம் தமிழ் ஊடகங்களை வாசிப்பவர்கள்தான் அறிவார்கள். அது தமிழ் ஊடக தமிழரை நம்பிய ஊடகங்களின் விளம்பர உத்தி

//எந்தப் புலி வால்கள்? கொடுத்தால் அரசு வாங்கி இருக்கும்?//

புலம்பெயர் தமிழர்கள்.. சனம் அடிச்சுக்கிட்டு சாகத்தான் காசு குடுப்பாங்களா? சனத்துக்கு உதவ மாட்டாங்களா?

//அப்படியா/ இது அவருக்கு தெரியுமா?//

இலங்கை கிரிக்கட் இன் உத்தியோகபூர்வ அறிவிப்பை பார்க்கலையா?

//நீங்கள் ஐபாவின் உத்தியோகபூர்வ பேச்சாளரா? ;) //

இல்லை. இது என் கடமை..

//ப்ரோக்கரா //

இது தேவையற்ற விமர்சனம்..

Komalan Erampamoorthy said...

இந்திய திரைப்பட விழாவுக்கு 700 மில்லியன் ரூபா செலவு செய்ய முடியும் ஆனால் வன்னி மக்களுக்கு வீடு கட்டமட்டும் பணம் இல்லயாம் எமது மாண்புமிகு ஜனாதிபதியிடம்.....

எட்வின் said...

iifa = என்னமோ போங்க;
அரவிந்த் டி.சில்வா = என்றும் கலக்கல்
கார்ட்டூன் ரசிக்க வைத்தது; யோசிக்கவும் வைத்தது.
சிம்பாப்வே = அசர வைத்து விட்டார்கள்
கால்பந்து = காயங்கள் வருத்தமளிக்கின்றன. இன்று போர்ச்சுக்கலின் நானியும் வெளியேறி விட்டார்.

Anonymous said...

//இந்திய திரைப்பட விழாவுக்கு 700 மில்லியன் ரூபா செலவு செய்ய முடியும் ஆனால் வன்னி மக்களுக்கு வீடு கட்டமட்டும் பணம் இல்லயாம் எமது மாண்புமிகு ஜனாதிபதியிடம்...//

பிளேன் எல்லாம் வாங்கி சண்டை பிடிச்ச ஆக்களுக்கு வீடு கட்ட காசு இல்லையாம்..

//50 000 சனத்தைக்//
அதில் எத்தனை புலி? ஆயுத தாரிகளையெல்லாம் அந்த கணக்கில சேக்க கூடாது

Karthick Chidambaram said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Komalan Erampamoorthy said...

Anonymous::

உங்களாள் அப்படி சொல்ல முடியாது காரணம் அவர்கள் அதை இடிக்கவில்லை அது மட்டும் இன்றி அரசாங்கம் என்பது தன் கடமையை தட்டிக்களிக்கமுடியாது.அது மட்டும் இன்றி 700 மில்லியன் அல்ல 110 கோடி,மற்றும் தமிழ் கூட்டமைப்பு உலக நாடுகளிடம் பணம் பெற்றுத்தருவதாக செல்லி இருக்கிரது...,உங்களுக்கு நேரம் இருந்தாள் வன்னி மக்கள் எப்படி இருக்கிரார்கள் என்று சென்று பாருங்கள் அதன் பின் எப்படி கதக்கமாட்டீர்கள்

சயந்தன் said...

பதிவர் சாந்தனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//

தம்பி சாந்தன் அல்ல.. சயந்தன்.. ;)//

:) :)

அரை ஆண்டுகளாகப் பதிவு இடாவிட்டாலும் இன்னும் என்னைப் பதிவராகக் கருதும் உங்கள் பெருந்தன்மைக்காகவே ஸ்ரேயா சில குறிப்புக்கள் எழுத உள்ளேன்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner