மனப் பிரமை என்று நினைத்தால்.. ஒரு நிமிட இடைவெளியில் மறுபடி ஒரு தடவை.
தனியே இருந்து வேற பார்த்துக் கொண்டிருந்தேன்.. என்னடா இது ஏதாவது ஆவி-அமானுஷ்யமோ என்று பார்த்தால்..
அதற்குப் பிறகு எதுவும் இல்லை.
இது நடந்தது 12.55அல்லது ஒரு மணியளவில்.
ஆனால் போல ஊடகவியலாளரான நண்பர் விபுலன் தொலைபேசியில் அழைத்து சொன்ன பிறகு தான் விஷயமே தெரியும்.
கொழும்பில் நிலநடுக்கமாம்.
அடுக்குமாடிகளில் பெரியளவு அதிர்வு தெரிந்துள்ளது.
தெகிவளை,வெள்ளவத்தை,பம்பலப்பிட்டி பகுதிகளில் காலி வீதியில் மக்கள் பெரும் பதற்றத்தோடும் பயத்தோடும் திரண்டுள்ளார்களாம்.
மேலதிக விபரங்கள் இதுவரை தெரியவில்லை.
லேசான அதிர்வு தான்.
இலங்கையில் வேறு பகுதிகளில் எப்படி எனத் தெரியவில்லை.
அதன் பின் தான் செல்பேசியைப் பார்த்தால் ஒரு smsசில கள் வந்திருந்தன.. இந்த திடீர் அதிர்ச்சியைப் பற்றிக் கேட்டு..
What happened?
u felt a shook up?
Was it an earth quake?
Will Tsunami strike again?
இவை தான் வந்த பொதுப்படையான கேள்விகள்..
ஆனால் கொடுமை நான் அழைத்த சிலர் ஆழ்ந்த உறக்கத்தில்.அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை.
சரிதான்.. உலக அழிவு நெருங்கி வருது போல..
சற்று முன்னர் காலநிலை அவதான மையத்தைத் தொடர்பு கொண்டால் அங்கும் டென்ஷனில் இருந்த ஒருவர் இலங்கைக் கரையோரப் பகுதியில் சிறு நிலா அதிர்வு ஏற்பட்ட விஷயத்தை சொன்னார்.
ஆனால் தொடர் அதிர்வுகள் இருக்காதென்றும் தாம் 'நினைப்பதாக' ஆறுதல் சொல்லியுள்ளார்.
So dont worry.. be happy.