அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
June 03, 2010
25
கடந்த இரண்டு மூன்று நாட்களாக எனக்கு மெயிலிலும் ட்விட்டர் இத்யாதிகளிலும் ஏன் சில சமயம் smsஇலும் கூட வந்து இம்சைப்படுத்தி இரவு தூங்குகிற கொஞ்ச நேரத்தில் கனவிலும் வருகிற சில பஞ்ச்/பஞ்சர் வசனங்கள் இவை..
ஊரே பத்தி எரியும் நேரம் நீ வேற எண்ணெய் ஊத்த வாரியா? அப்பிடியெல்லாம் யோசிக்காதீங்க.
பிரச்சினை தீரும் நேரம் அமைதியாக இருந்து யோசிச்சுப் பார்த்தீங்கன்னா, அந்த நேரம் கொதித்துக் கொட்டிய வார்த்தைகள் பின்னர் வடிவேலு ரக காமெடியா இருக்கும்..
so be cool, relax and enjoy.. :)
திருடருக்கு தேள் கொட்டிய கதையாக இந்த வசனங்களில் சில உங்களில் யாருக்காவது அளவெடுத்தாற்போல அமைந்துபோனால் தொப்பியை நீங்களே எடுத்து தலையில் போட்டு துள்ளி அடிக்காதீங்க.. :)
நான் அவனில்லை..
அரசியலிலை இதெல்லாம் சகஜம் என்பது போல பதிவுலகத்திலையும் இதெல்லாம் சகஜம்..
நாங்கள் இருக்கிறமில்லை
நீங்கள் என் நண்பர்களில்லை..
கூட்டம் சேர்க்கிறீங்கப்பா..
நான் ரொம்ப்பா நல்லவன்..
நல்ல நடிக்கிறீங்கப்பா..
அவன் என் நண்பன்,, (தளபதி டயலொக் போல..)
நானும் தமிழன் தாண்டா..
முடிஞ்சா நிரூபியுங்கோ..
தெரியாமல் இருப்பது பல இடங்களில் நிம்மதியான மனநிலையைத் தருகிறது. அனுபவியுங்கள்
என்னது காந்தி செத்துட்டாரா? அவ்வ்வ்வ்வ்
நிம்மதி போச்சு
நம்பித்தானே ஆகணும்.
இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் #விளம்பரம்
யாரைய்யா அது
அனானி தானே நீ ஏன் இதுக்கெல்லாம் பயப்பட போய்க்கிட்டே இரு நாங்க இருக்கம் உன்னைத் தொடர...
போலிகளை நாங்கள் எப்போதுமே வெறுக்கிறோம், அழிப்பதற்கு விரும்புகிறோம்.
ஆகவே உங்கள் பயணம் தொடரட்டும்.
"தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்"
சில புண்ணாக்கு அரசியல் எனக்கு அத்துப்படி
கருத்துக்களைக் கருத்துக்களால் வெல்லுவோம். வாருங்கள்
மிஞ்சி மிஞ்சி போனா எனக்கெதிரா ஒரு ப்ளாக் தொடங்குவாய்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
அந்தக் கருத்தின் நோக்கம் நாம் அறிவோம்.
திசைதிருப்பப்படுவதை நாம் அறிவோம்.
அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்
பனங்காட்டு நரி(கள்) எங்க சலசலப்புக்கு அஞ்சுமா....
கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.
ஒரு சிலருக்கு சுயவிளம்பரம் தேடுவதுதான் வேலை........என்ன உலகமையா
இது.....
நாட்டாமை சொம்பு காணோம் :)
புரியுது ஆனா அவுங்க பெரிய ஆளுங்க :))
செய்ய தோணுச்சு செஞ்சுட்டேன் இப்பிடியெல்லாம் கேள்வி கேட்டா அழுதுடுவேன்
சச்சினை ஒரு தடவை bowledல எடுத்திட்டு ஒருத்தன் பெரிய ஆளாக முயற்சித்தான் பிறகு மென்டிஸ் போன்ற bowlersசே வந்து அடி அடியெண்டு அடிச்ச பிறகு ஓடிட்டான்
மனிதன் எல்லாம் தெரிந்துகொண்டான், வாழும் வகை புரிந்து கொண்டான், இருந்தபோதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை
கொய்யால விழுந்தும் மீசைல மண் படலயா? ஓ.. சேவ் பண்ணிட்டீங்களோ..:P
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. இருட்டினில் நீதி மறையட்டுமே..
கொன்றால் பாவம் தின்றால் போச்சு.
அரசியல் ஒரு ஆலமரமாம்... அவ்வ்வ்... அது உண்மைதானுங்கோ
பல இடங்களில் சர்ச்சைகளிலிருந்து ஒதுங்க நினைக்கிறேன், ஆனால் முடிவதில்லை. சர்ச்சைகள் சண்டைகள் எங்குமே, எவருக்கே மகிழ்ச்சியைத் தரப் போவதில்லை..
யோவ்... இந்த நாடகத்த முடியுங்கப்பா.... முடியேல.... கண்ணக்கட்டுது.... :(
ம்... அரசியல்கள்.... அமைதி... வன்மங்கள்.... திரும்ப அமைதி.... வாழ்க்கை....
முடிந்தால் அந்த விஷமப் பின்னுட்டத்தை எனக்கு அனுப்பவும்
*சில புண்ணாக்கு அரசியல் எனக்கு அத்துப்படி*
*பனடோல் சரி வராவிட்டால், வைத்தியரை நாட தயங்கமாட்டேன்
‘தனக்குத் தனக்கென்றால் தான் சுளகு படக்குப் படக்கென்று அடிக்குமாம்?
*கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்தால் உலகம் இருண்டுவிடாது *
மனித வாழ்வென்பது ஏதாவது கட்டத்தில் தனிமனித நலத்தை நோக்கியே பிரயாணிக்கிறது.
அது மற்றவர்களின் பயணத்தை குழப்பாமல் பயணித்தால் போதும்.
இந்தியாவில் இந்தப்பருப்பு அவிஞ்சது; ஆனால், இங்கு பச்சைத்தண்ணியில் பருப்பு
அவியாது.
காலில் கட்டி பார்க்க முதல் மண்டைக்குள் கட்டியை உறுதி செய்ய
வேண்டும்...
நேரடியாக குற்றம் சுமத்துகின்றேன்.
. உணர்ச்சி வசப்பட்டும்.. ஆசைகளிலும்... ஆத்திரத்திலும் வரும் அநாமதேய பின்னூட்டங்களும் சரி, பதிவுகளும் சரி
எச்சங்களை விட்டே செல்லும்..
உங்களுக்கு வந்தால் அது ரத்தம், எங்களுக்கு வந்தால் அது தக்காளிச் சட்னி.
என்னய்யா நியாயம்?
உங்களின் தக்காளிச் சட்னிக்கு பரிகாரம் கூறியும் கேட்கவில்லையென்றால்,
ஓடுற ஓணானை பிடித்து விட நானொன்றும் முட்டாளில்லை.
கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்
இங்கு கள்ளனும் தோட்டக்காரனும் ஒரே ஆள் தானோ ???
அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்
அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.
இங்கு கள்ளனும் தோட்டக்காரனும் ஒரே ஆள் தானோ ???
ஒரு சிலருக்கு சுயவிளம்பரம் தேடுவதுதான் வேலை........என்ன உலகமையா
இது.....
பனங்காட்டு நரி(கள்) எங்க சலசலப்புக்கு அஞ்சுமா....
நீ போலிசில் புகாரளி? உரிய நடவடிக்கை எடு?
உன்னில் தவறு இல்லை எனக் காட்டு?
மறைந்திருந்து அம்பெய்வோன் ஒரு நாள் மார் வெடித்துச் சாவான்
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
உங்களுக்கு பக்கத்திலை தான் இருக்கிறன்?
காழ்ப்புணர்ச்சியிலேயே மனம் அரைவாசி வெந்து வேகியிருக்கும். ..
இப்ப கண்டுபிடிச்சிட்டாங்கள் எண்டவுடன மிச்சமீதியெல்லாம் நொந்து
நூடில்ஸாகியிருக்கும்...
பதிவுலகம் என்பது ஒரு பொழுதுபோக்கு அல்லது களிக்கும் இடம்.
இங்கு விளம்பரங்களும், பிரபலங்களும் தேட முற்படின், வன்மங்களைத் தீர்த்துக்
கொள்ள முற்படின், பழிவாங்கல்களுக்கு பதிவுகளை பயன்படுத்த முற்படின் பயணம்
அவ்வளவு சிறப்பாக இருக்காது.
ஏன் உங்களுக்கு ஒரு சக பதிவர் மீது இப்படியான குரோதம்?
அவருக்கும் எனக்கு இருபதாண்டுகாலப் பகை இருந்தது.
அதனால்தான் அவரின் தளத்தை ஹக் செய்தேன்.
அதைப் பற்றி உங்களுக்கென்ன கவலை?
அது எங்கள் இருவருக்குமள்ள தனிப்பட்ட பிரச்சினை.
have your "Kulayadi sandai" on some other place.
ரஜினி,அஜித்,விஜய்,விஷால்,ரித்தீஷ் ஏன் வடிவேலு,கவுண்டமணி இவங்கல்லாம் கூட தோத்துருவாங்க தானே..
இதுல நான்,நண்பர்கள்,அவன்,இவன் ஏன் நீங்கள் சொன்ன வசனங்கள் கூட இருக்கலாம்..
அதான் யாரால் எப்போது எங்கே சொல்லப்பட்டது என்று குறிப்பிடவில்லை..
ரசிச்சு சிரிச்சீங்களா?
இனிக் கொஞ்சம் சீரியஸா சிந்திப்போம்..
சொந்தக் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் பரந்த இடம்,பலரும் பல விதத்தில் பரவலாக உலவுகிற இடம் என்ற காரணத்தால் இங்கே கருத்து மோதல்கள்,சர்ச்சைகள் சாதாரணமே.. பிரச்சினை வராவிட்டால் அது பூமியே இல்லை..
ஆனாலும் அற்ப காரணங்கள்,அனாவசிய முரண்பாடுகள் இனியும் வேண்டாமே..
திருடர்கள் தானாய்த் திருந்தட்டும்.. வருந்தட்டும்..
எல்லோரையும் இந்த வேண்டாத சர்ச்சை அசிங்கப் படுத்தி இருக்கிறது..
எல்லோரும் ஒரு விதத்தில் குழம்பி வேதனையோடும் அவமானத்தோடும் இருக்கிறோம்..
ஆனால் இதுவும் கடந்து போகும்..
மனதில் தெளிவு இருப்போர்,மடியில் கனமில்லாதோர் கலங்கத் தேவையில்லை..
இது தான் நான் எனக்கும் என் நண்பர்களுக்கும் சொல்வது..
போலிகளையும் பொய்களையும் ஒதுக்கிவிட்டு (ignore them)உடலில் பட்ட சேற்றையும் தட்டிவிட்டு வாருங்கள்.. தொடர்ந்து நடப்போம்.. :)
என்னடா அரசியல் அதாவது பதிவுலக அரசியல் என்று சொல்லிட்டு கலைஞர் படம் போட்டிருக்கானே.. குசும்பு தான்னு யோசிக்கிறீங்களா?
உண்மையா அதுக்கும் இவர் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..
இன்று இந்த தமிழினத் தலைவருக்கு,செம்மொழி கண்ட செம்மலுக்கு,நடிகர்களின் நாயகருக்கு,அரசியல் சாணக்கியருக்கு அகவை 86.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லலாமே என்று தான்..
வாழ்த்துக்கள் கலைஞரே..
இன்னும் பல நூறு ஆண்டுகள் நல்லா இருங்க.
உங்க கருணை எங்கள் மீது பட்டுக் கொண்டே இருக்கட்டும்..
மானாட மயிலாட,பெண் சிங்கம் போல இன்னும் பல இலக்கியப் படைப்புக்கள் தருக..
ஐய்யா.. உங்களுக்காக இன்று காலையில் உங்களை வாழ்த்தி 'விடியல்' நிகழ்ச்சியில் நீங்கள் ஆற்றிய நல்ல விஷயங்களையும் செய்த அறிய சாதனைகளையும் (மட்டும்) தொகுத்து நிகழ்ச்சி செய்தேன்..
கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்..
எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் மணிக்கணக்காக விருது,பாராட்டு விழாக்களில் பொறுமையாக அமர்ந்து இருக்கும் உங்களுக்கு இரண்டரை மனித்தியால் வானொலி நிகழ்ச்சி எல்லாம் ஜுஜுப்பீ என்று எனக்குத் தெரியாதா?