அண்மைக்காலமாக எனக்கு 'இலங்கையின் உண்மைத்தமிழன்' என்று பட்டமே கொடுத்துவிட்டார்கள் இங்கேயுள்ள பதிவுலகத் தங்கங்கள்.
ஏதாவது அரசியலா எல்லாம் யோசிக்காதீங்கோ..
உ.த அண்ணாச்சி மாதிரி ரொம்ப நீள,நீளமாக பதிவுகளை நீட்டுகிறேன் என்பது தான் காரணமாம்.
என்ன செய்வது, ஏதாவது எழுதவென்று அமர்ந்தால் நினைத்த அத்தனை விஷயங்களையும் அறிந்த, சொல்லக்கூடிய அத்தனை விஷயங்களையும் கொட்டாவிட்டால் மனம் ஆறுதில்லையே...
பதிவுகள் நீண்டதால் எனது ஓடைகளிலும்(feeds) பெரும் பிரச்சினை ஏற்பட்டும் தமிழ்மணம் திரட்டியில் பதிவுகள் சேர்க்க முடியாமல், என்னுடைய பல நண்பர்கள்,வாசகர்கள் வாசிக்க முடியாமல் நிறைய சிக்கல் எல்லாம் ஏற்பட்டு, நண்பர்கள் பலரின் ஆலோசனையால் எல்லா சிக்கல்களையும் மூன்று நாட்கள் போராடி இன்று தான் தீர்த்தேன்.
முக்கியமாக நன்றிகள் கங்கோன் கனக கோபிக்கு.
இந்த சிக்கலால் தான் இன்னொரு ஆச்சரியமான விஷயமும் எனக்கு தெரியவந்தது.. ஓடைகள் மூலமாக என் பதிவுகளை 510 பேர் வாசிக்கிறார்களாம். அட.. :)
பதிவுகள் நீளமாவதால் வாசிப்போர் குறைந்ததாக இதுவரை தெரியவில்லை. அப்படியா என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கப்பா..மாற முயல்கிறேன்.. ;)
நான் உண்மைத்தமிழன் இல்லை என நிரூபிக்க இன்றைய 'சிறிய' பதிவு..
நாளை ஜனாதிபதி தேர்தல்.. மாறுமா மாறாதா என்பதே கேள்வி..
மாறாதைய்யா மாறாது என்கிறது அண்மைய நிலவரம்.
மாற்ற நினைத்தால் மாற்றலாம் எனும் நம்பிக்கை எல்லோருக்கும் இருக்குமோ தெரியாது..
வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது..
நாளை வாக்களிப்பின்போது இன்னும் மோசமாகும் என நினைக்கிறேன்.
பாவம் அப்பாவி மக்கள் & வாக்காளர்கள்.
ஏற்கெனவே லட்சக் கணக்கானோருக்கு வாக்காளர் அட்டைகளும், அடையாள அட்டைகளும் கிடைக்கவில்லையாம்.
மோசடி வாக்குகள்,வாக்குப் பெட்டிகள் பற்றிய செய்திகள் எல்லாம் வருகின்றன.
புதன் கிழமை பொது,வங்கி விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுக்கு அந்த அதிர்ஷ்டமும் இல்லை.. வர்த்தக விடுமுறை இல்லையாம்..
தேர்தல் ஒலிபரப்பு என்றாலே எனக்கு இருக்கும் உற்சாகமும் இம்முறை தேர்தல் ஆணையகத்தால் விதிக்கப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகளால் கொஞ்சம் வடிந்துபோயுள்ளது.
மிச்சச் சொச்சங்களை சொல்றதுக்குத் தான் செய்தி தளங்களும், வானொலிகள்,பத்திரிகைகளும் இருக்கே..
அன்பான இலங்கை மக்களே.. வாக்கு உள்ளோர்.. ஏதோ பார்த்து பொறுப்பா, மனசாட்சிப்படி, எதிர்காலத்தையும் சிந்தித்து வாக்களியுங்கோ..
பின்மண்டையில் சேதம் வராமல் பக்குவமா நடந்து கொள்ளுங்கோ..
என்னுடைய 'சிறிய' பதிவை முடிக்கு முன்..
அண்மையில் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் செம நக்கல் திரைப்படமான (இனித் தான் வெளிவர இருக்கும்) 'தமிழ்ப்படம்' திரைப்படத்திலிருந்து ஒரு பாடல்..
நம் நாட்டு தேர்தல் சூழ்நிலையில் யாரோ ஒருவருக்கு பிரசாரப்பாடல் போலவும் இருக்கு..
கொஞ்சம் அவதானமாக வரிகளைக் கேட்டு ரசியுங்களேன்..
இந்தப்பாடல் இயற்றியவரும், பாடியவரும் சம்பந்தப்பட்டவர்களுமே இதுக்கெல்லாம் பொறுப்பு..
மீண்டும் அடித்து சொல்கிறேன்..
நான் உண்மைத்தமிழன் அல்ல..