மக்கள் தலைவன் மகிந்த வாழ்க

ARV Loshan
38

வெளிவந்துகொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளில் பாதிக்கு மேலே வெளிவந்துள்ள நிலையில், இப்போதே 15 லட்சம் வாக்குகளால் முன்னிலை பெற்றுள்ளார் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.தனது இரண்டாவது பதவிக்காலத்தை வளமான எதிர்காலம் நோக்கியதாக ஆரம்பிக்க இருக்கின்ற மக்களின் மன்னனுக்கு வாழ்த்து சொல்லும் பதிவு இது.

சதவீத அடிப்படையிலும் இனி ஜெனரல் சரத் பொன்சேகாவினால் நெருங்க முடியாது.
சிறுபான்மையினரின் வாக்குகள் பெருமளவில் பொன்செகாவுக்குக் கிடைத்தும், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை வென்ற மக்கள் தலைவன் மகிந்த ராஜபக்ச மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா 94ஆம் ஆண்டு நிகழ்த்திய வாக்குகளின் சாதனையை இப்போது நெருங்கிக் கொண்டிருக்கிறார்.மகத்தான வெற்றி இது..

மோசடி,வன்முறை என்று யார் இனிக் கூப்பாடு போட்டாலும் எடுபடாது.. இத்தனை பெரிய வித்தியாசத்தை மோசடிகளால் ஏற்படுத்த முடியுமா?

சிறுபான்மை அவ்வளவும் ஒன்றாக சேர்ந்தும் பெரும் பெரும்பான்மையை தோற்கடிக்க முடியாது என்பது தெளிவு. இனியாவது நான் முன்னைய பதிவில் சொன்னது மாதிரி பின் மண்டையைப் பாதுகாப்போம்..

தேர்தல் கடமையில் நேற்றிரவில் இருந்து ஒரு வினாடி கூட உறங்காமல் வானொலியில் முடிவுகளை சொல்லிக் கொண்டே, ட்விட்டர், Facebook மூலமாக நண்பர்கள்,நேயர்களோடும் முடிவுகளைப் பகிர்ந்துகொண்டேன்.(ஜனநாயகக் கடமை)

ஜனாதிபதி வெற்றிக் கனி பறிக்கிறார் என்றவுடனேயே ஆனந்தக் கூத்தாடிய எம்மில் பலருள் நானும் ட்விட்டர், Facebook மூலமாக வழங்கிய தகவல் துளிகளை, மன்னருக்கு வழங்கிய வாழ்த்துக்களை இங்கே தொகுப்பாகத் தருகிறேன்..

தூக்கம் வராமல் ஜாலியாக இருக்க எத்தனைஎல்லாம் செய்யவேண்டி இருந்தது.. ;)

ஜனநாயக நாட்டில் இராணுவ ஆட்சி நடக்க விடுவமா? நாங்கல்லாம் யாரு? மக்கள் தலைவன் மகிந்த வாழ்க..

பேசாமல் பொது வேட்பாளரா நம்மசிவாஜி சிங்கத்தையே போட்டிருக்கலாமோ.. பெரிசா வித்தியாசம் இருந்திருக்காது

தோளில் துண்டு போட்டவர் தலையில் துண்டு போடுவார்னு பார்த்தா, எல்லோரது மண்டையிலும் குண்டு போட்டிட்டாரே.. ;)

மனுஷன் மாத்தறை,மொனராகலையில் எல்லாம் பத்து பதினைந்து வாக்கு எடுத்திருக்கு.பொது வேட்பாளரா இருந்திருந்தால் கலக்கி இருக்கும் #Sivajilingam

இந்த ஒருநாள் கூத்துக்கு எத்தனை நாள் கஷ்டப்பட்டோம்.. பாவம் எங்கள் ஜனாதிபதி.. நிறையக் காசை செலவழிக்க வச்சுப் போட்டாங்கள்.. ;)

ஆகா. இதைத் தான் ஜனாதிபதி அவர்கள் எமது வானொலிக்காக அன்று சொன்னார்.வெற்றியின் சின்னம் வெற்றிலை சின்னம்.. வெற்றிலை சின்னம் வெற்றியின் சின்னம்

எனது நண்பர் திரிகரன் என்பவர் சொன்னவை..

நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்..., குழந்தைகளின் பாசம் தெரிந்த தந்தையான எம் தலைவர் அதிமேதகு மகிந்த ராஜபக்ஷ அவர்களே எங்கள் வளமான எதிர்காலம்....

போரை வென்ற மாதிரி எங்கள் ஜனாதிபதி நாட்டையும் அபிவிருத்தி செய்வார்... அவர் அன்றைக்கு சொன்னார் “போரை முடிவுக்கு கொண்டு வருவன்” என்று... முடிவுக்கு வந்திச்சா?... இன்றைக்கு சொல்லுறார் “இனி அபிவிருத்தி தான் இலக்கு” என்று... அதையும் நிச்சயம் பண்ணுவார்... நம்புங்க சார்... நம்பிக்கை தானே வாழ்க்கை...

இன்னும் பல வாழ்த்துக்கள் பார்க்கவிரும்புவோர், என் facebookஐயோ, ட்விட்டரையோ பாருங்கள்..

'ஸ்தூதி' சொல்லவே உனக்கு என்கிட்டே வார்த்தை இல்லையே..

ஜனாதிபதியின் வெற்றி மேலும் பிரம்மாண்டமாகி,உறுதியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இன்னும்பல பரபரப்பு செய்திகளும், புதிய தகவல்களும் வெளிவந்தவண்ணம் உள்ளன.

எனக்கும் வளமான எதிர்காலம் ஒன்றின் மீது ஆசை இருக்கு.. :) ஆனபடியால் வாழ்த்தோடு நிறுத்திக் கொள்கிறேன்..

கடந்த முறையைவிட மிகப்பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வருகின்ற எங்கள் மன்னர் அதிமேதகு ஜனாதிபதி வாழ்வாங்கு வாழ்க.. அவர் தயவில் நாமும் வளமோடு வாழ்வோம்.

இலங்கையில் இனி மீண்டும் வளமான எதிர்காலம் தொடரும்;தொடங்கும்.



மக்கள் தலைவன் மகிந்த வாழ்க

எல்லாம் ஒரு பக்கம் இருக்க, கொழும்பில் சிங்கத்தமிழன் சிவாஜிலிங்கத்துக்கு 548 வாக்குகளும் , நாடு முழுவதும் 3000க்கு கிட்டவாக வாக்குகளும் போட்ட வள்ளல்களை யாராவது எனக்குக் காட்டுங்களேன்.. பார்க்க ஆசையா இருக்கு..

இன்னும் கொஞ்சம் நேரத்தில் எல்லா முடிவுகளும் வந்திடும்.. வீட்டுக்கு போய் கும்பகர்ணத்தூக்கம் ஒன்று போடப் போகிறேன்.. உங்களுக்கும் எனக்கும் வளமான எதிர்காலம்.


Post a Comment

38Comments

Please Select Embedded Mode To show the Comment System.*