ICC 2009 விருதுகள்..

ARV Loshan
13

ICC 2009 விருதுகள்..

தற்போது தென் ஆபிரிக்காவின் ஜொகநெஸ்பெர்க் நகரில் நடைபெற்றுவரும் 2009ஆம் ஆண்டுக்கான ICC விருதுகள் வழங்கும் விழாவிலிருந்து சில விருதுகள் வழங்கப்பட்ட தகவல்கள் இதோ..

சிறந்த நடுவராக பாகிஸ்தானின் அலீம் டார் தெரிவு செய்யப்பட்டார்..
கடந்த ஐந்து தடவைகளும் ஆஸ்திரேலிய நடுவரான சைமன் டௌபெளுக்கே இந்த விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது..



சிறந்த ட்வென்டி 20 பெறுபேறுக்கான விருது இலங்கை அணியின் திலக்கரத்ன தில்ஷானுக்கு கிடைத்தது.
இங்கிலாந்தில் இவ்வருடம் நடைபெற்ற உலகக் கிண்ணத்தின் அரையிறுதியில் மேற்கிந்தியத்தீவுகளுக்கேதிரான அரையிறுதியில் 57 பந்துகளில் டில்ஷான் பெற்ற 96 ஓட்டங்களே அவருக்கான விருதைப் பெற்றுக் கொடுத்தன.

அவருடன் போட்டியிட்டவர்கள் மேற்கிந்திய அணித்தலைவர் க்ரிஸ் கெய்ல் மற்றும் பாகிஸ்தானிய அதிரடி சகலதுறை வீரர் ஷகிட் அப்ரிடி.

சிறந்த வளர்ந்து வரும் வீரருக்குரிய விருது ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் பீட்டர் சிட்டிளுக்கு கிடைத்தது.


டெஸ்ட் அந்தஸ்து அற்ற அணிகளுள் சிறந்த வீரருக்கான விருது அயர்லாந்து அணியின் தலைவர் வில்லியம் போட்டேர்பீல்டுக்கு வழங்கப்பட்டது.



சிறந்த நடத்தைக்குரிய அணியாக (கிரிக்கெட் தாத்பரியத்துக்குரிய அணி) நியூ சீலாந்து தேர்வு செய்யப்பட்டது..

இந்த விருது நியூ சீலாந்துக்கு கிடைப்பது இது இரண்டாவது முறை.. (2004 ஆம் ஆண்டு முதலில் கிடைத்தது) இந்த விருதை நியூ சீலாந்தைத் தவிர இலங்கை,இங்கிலாந்து ஆகிய அணிகள் மாத்திரமே வென்றுள்ளன.. (இரண்டும் தலா இரு தடவைகள்)

இந்திய அணித்தலைவர் தோனி தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக உலகின் தேர்வு செய்யப்பட்ட சர்வதேச ஒரு நாள் அணியின் தலைவராகத் தேர்வானார்..

தேர்வு செய்யப்பட்ட சிறந்த வீரர்கள் அடங்கிய அணி..

World ODI team of the year: Virender Sehwag (Ind), Chris Gayle (WI), Kevin Pietersen (Eng), Tillakaratne Dilshan (SL), Yuvraj Singh (Ind), Martin Guptill (NZ), MS Dhoni (Ind, captain, WK), Andrew Flintoff (Eng), Nuwan Kulasekara (SL), Ajantha Mendis (SL), Umar Gul (Pak), 12th man: Thilan Thushara (SL)


இந்த ஆண்டின் உலக டெஸ்ட் அணியின் தலைவராகவும் தோனியே தேர்வாகியுள்ளார்.. உலக டெஸ்ட் அணி..

World Test Team of the Year: Gautam Gambhir (India), Andrew Strauss (England), AB de Villiers (South Africa), Sachin Tendulkar (India), Thilan Samaraweera (Sri Lanka), Michael Clarke (Australai), MS Dhoni (India, capt & wk), Shakib Al Hasan (Bangladesh), Mitchell Johnson (Australia), Stuart Broad (England), Dale Steyn (South Africa), Harbhajan Singh (India, 12th man)



பிற்சேர்க்கை.. @ 12.37 இந்தியாவின் கௌதம் கம்பீர் இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.. பலத்த போட்டியின் மத்தியில் அவுஸ்திரேலியா வீரர் மிட்செல் ஜோன்சன், இலங்கையின் திலான் சமரவீர, இங்கிலாந்து அணித்தலைவர் அன்றூ ஸ்ட்ரோஸ் ஆகியோரை முந்தியுள்ளார் கம்பீர்.


பிற்சேர்க்கை 2.. @ 12.50

இந்திய அணித்தலைவர் தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு விருது.. இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் .. சக வீரர்கள் சேவாக்,யுவராஜ் சிங் ஆகியோரையும் மேற்கிந்தியத் தீவுகளின் ஷிவ்னறேய்ன் சந்தர்போலையும் முந்தியுள்ளார் தோனி..

இந்த வருடத்தின் மிகப்பெரும் விருதான வருடத்தின் சிறந்த வீரருக்கான விருது அவுஸ்திரேலியா அணியின் இளம் புயல்,சகலதுறை வீரர் மிட்செல் ஜோன்சனுக்கு கிடைத்துள்ளது.

அவரது டெஸ்ட்,ஒருநாள் பெறுபேறுகள் சக போட்டியாளர்களான கம்பீர்,தோனி,ஸ்ட்ரோஸ் ஆகியோரை முந்தி வெற்றி பெற வைத்துள்ளன.

தகவல்கள் நன்றி cricinfo

Post a Comment

13Comments

Please Select Embedded Mode To show the Comment System.*