இலங்கை வலைப்பதிவரின் முதலாவது சந்திப்பு பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்பட்டது. இது பதிவர்களுக்கும் ஊடகவியலாளருக்கும் இடையிலான கலந்துரையாடல் & சந்திப்பாக இருக்கிறம் சஞ்சிகை ஏற்பாடு செய்யும் ஒரு நிகழ்வு.
அண்மைக்காலமாக இலங்கையில் உள்ள எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல் வலைப்பதிவருக்கும் களம் அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் இருக்கிறம் ஈடுபட்டு வருவது நீங்கள் எல்லோரும் அறிந்ததே.
இருக்கிறம் சஞ்சிகையால் நடத்தப்படவுள்ள இந்த சந்திப்பு எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி, பூரணை விடுமுறை தினத்தன்று கொழும்பு 07இல் அமைந்துள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
மாலை 3 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பிக்கும் என்றும் கலந்துரையாடல்களோடு விருந்துபசாரமும் தாகசாந்தியும் இடம்பெறும் என்றும் (நம் பதிவர் சந்திப்பில் வடையும் பட்டிசும் டீயும் மட்டும் தந்தோம் என்ற நண்பர்களே சந்தோசமா?) இருக்கிறம் சார்பில் அதன் இணை ஆசிரியர் சஞ்சித் எமக்கு தெரிவிக்கிறார்..
.jpg)
அனைத்து வலைப்பதிவர்களையும், இலத்திரனியல்,அச்சு ஊடகவியலாளர்கள் அனைவரையும் இச் சந்திப்பில் இணைந்துகொள்ளுமாறு அழைத்துள்ளனர். கொழும்பு தவிர்ந்த பிற மாவட்டத்திலுள்ள நண்பர்களும் கலந்துகொள்ள வாய்ப்பாகவே விடுமுறை நாளில் நடத்துகின்றார்கள்.
இலங்கை வலைப்பதிவர் குழுமத்தில் தங்கள் மின்னஞ்சல்களை தந்துள்ளவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அழைப்பை அனுப்பவதாகவும், ஊடக நிறுவனங்களுக்கு நேரில் அழைப்பைக் கையளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியா,மற்றும் வெளிநாடுகளில் உள்ளோரும் வரலாம்.. டிக்கெட் செலவுகள்,பயண செலவுகளை நீங்கள் யாரும் பொருட்படுத்தாத பட்சத்தில்.. எங்கள் அன்புக்கு முன்னால் இதெல்லாம் ஒரு பொருட்டா என்ன?
உங்கள் வருகைகளை எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் உறுதிப்படுத்துமாறு கேட்டுள்ளனர்.. இருக்கிறமின் மின்னஞ்சல் irukiram@gmail.com
தொலைபேசி 0113150836
மேலதிக விபரங்கள் இருக்கிறம் சஞ்சிகையால் எமக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பில்..
.jpg)
வாங்க..
மீண்டும் சந்திக்கலாம்,சிந்திக்கலாம்,கை கோர்க்கலாம், கலகலக்கலாம்..
(கைகலப்பு விஷயங்கள் ஏதும் இருந்தால் பேசியும் தீர்த்துக்கலாம்.. )
31 comments:
சந்திப்போம். வடை பட்டீசை விட வேறு உணவுகளும் உண்டென்று நல்ல செய்தியொன்றை நீங்கள் சொல்லியும் வராமல் இருப்பேனா....
மகிழ்ச்சிக்குரிய செய்தி. நிச்சயம் கலந்துகொள்வேன்.
லோஷன் அண்ணா அப்ப நாங்களும் வரலாமோ ...............
ஹி....... ஹி......... ஹி................
லொள்ளு கூடித்தான் போச்சு இல்ல
வரட்டா ........!
இல்ல... இல்ல.... போயிற்று வாறன் எண்டு சொல்ல வந்தேன் அண்ணா ...
varavenum pola thaan iruku. but vara mudiyathu. mh....! vazhthukal
சந்திப்பு சிறப்புற வாழ்த்துக்கள்
:-) கலக்குங்கள்
பதிவர்களுக்கும் ஊடகவியலாளருக்கும் இடையிலான இந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.
கருப்புதின்னக் கூலியா? வந்துட்டாப் போச்சு!
சந்திப்பு இனிதே நடக்கட்டும்! நாம் தான் தவறிவிடுகிறோம்!
ஆஜர்
//இந்தியா,மற்றும் வெளிநாடுகளில் உள்ளோரும் வரலாம்.. டிக்கெட் செலவுகள்,பயண செலவுகளை நீங்கள் யாரும் பொருட்படுத்தாத பட்சத்தில்.. எங்கள் அன்புக்கு முன்னால் இதெல்லாம் ஒரு பொருட்டா என்ன? //
வாழ்த்துகள் லோசன்... உங்கள் அன்புக்கு எங்களுடை அன்புகள் சம்ர்ப்பணம்
உள்ளேன் ஐயா
எல்லோரும் வருக! நேராய், ஒளியாய், குரலாய், கருத்தாய் இணைக! அன்பு லோஷனுகான நன்றிகளோடும் அன்போடும்
இளையதம்பி தயானந்தா
சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாகவும் கலகலப்பாகவும் நடைபெற வாழ்த்துக்கள் லோஷன்
தாயகத்தின் சந்திப்புக்களில் கலந்து கலகலக்க முடியவில்லையே என்ற கவலைதான் ஒரு புறம்
என்றாலும் வலையுலகத்தின் வளர்ச்சியில் ஒரு அங்கமாக இது அமையும் என்றால் ஐயமில்லை
வாழ்த்துக்கள்
அப்ப மீண்டும் வடை சாப்பிட ஒரு நல்ல வாய்ப்பு...
விடமாட்டமில்ல.....
வருவோம்! சந்திப்போம்! பிரிவோம்! சந்திப்போம்!
நானும் உள்ளேன் ஐயா....
ஆனா ஒரு சின்ன சந்தேகம்...
பூரணை நாளில (அதாங்க... பறுவம்...) நடத்தப் போறாங்களே., என்னப்போல ஆக்களுக்கலெ்லாம் பறுவத்தில கூடுறதாம் எண்டு சொல்லுவாங்கள்... பிரச்சினை இல்லயே....???
ஐயோ!வடையா எனக்கு ரொம்ப பிடிக்குமே!
ஆனால் வரமுடியாம எருக்குதே?
என்ன பண்ண?
போயா தினமென்றதால் காலேஜ் விடுமுறை கிடைக்குமென நினைக்குறேன்...
பலமுறை சந்திக்கும் நாம், ஏன் நேற்று கூட அக்னி வைபவத்தில் பார்த்தும் கதைக்க முடியவில்லை... இங்காவது வந்து கதைக்கலாமான்னு பார்ப்போம் ???
கென்ட் கிரிக்கெட்டில ஒரே போத்தல் சோடாவை இருவரும் குடிச்சதும்... உங்க கையில அடிபட்டதும் இன்னும் நினைவுல இருக்கு எனக்கு... உங்களுக்கு..???
நண்பரே இருக்கிறம் ! சந்திப்புக்கு வருகிறம் ;>)
~சேது
இன்னொரு சந்திப்பா நாடு தாங்காது.
யோ வாய்ஸ் (யோகா) said...
சந்திப்போம். வடை பட்டீசை விட வேறு உணவுகளும் உண்டென்று நல்ல செய்தியொன்றை நீங்கள் சொல்லியும் வராமல் இருப்பேனா....//
வாங்க யோகா.. அதானே பார்த்தேன். உங்க பிரியத்துக்குரிய குளிர் விரட்டி இல்லையா?
========
Dr.எம்.கே.முருகானந்தன் said...
மகிழ்ச்சிக்குரிய செய்தி. நிச்சயம் கலந்துகொள்வேன்.//
வாருங்கள் வைத்தியரே.. கடந்த முறை தவறவிட்டதை இம்முறை வந்து ஈடு செய்யுங்கள்.
======================
Balavasakan said...
லோஷன் அண்ணா அப்ப நாங்களும் வரலாமோ ...............
ஹி....... ஹி......... ஹி................
லொள்ளு கூடித்தான் போச்சு இல்ல
வரட்டா ........!
இல்ல... இல்ல.... போயிற்று வாறன் எண்டு சொல்ல வந்தேன் அண்ணா ...//
நீங்களும் வரலாமே தம்பி.. தூரமும் வயதும் தடையில்லை
===============
நிரூஜா said...
varavenum pola thaan iruku. but vara mudiyathu. mh....! vazhthukal//
இதென்ன? வடிவேலு மாதிரி? வாங்களேன்..
கானா பிரபா said...
சந்திப்பு சிறப்புற வாழ்த்துக்கள்//
நன்றி.. டிக்கெட் போட்டுட்டீங்களா?
==========
’டொன்’ லீ said...
:-) கலக்குங்கள்//
நன்றி.. டிக்கெட் போட்டுட்டீங்களா?
வேந்தன் said...
பதிவர்களுக்கும் ஊடகவியலாளருக்கும் இடையிலான இந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.//
நன்றி வேந்தன்.. தாங்கள் வரவில்லையோ?
=============
Subankan said...
கருப்புதின்னக் கூலியா? வந்துட்டாப் போச்சு!//
யாருய்யா இது? கரும்பெல்லாம் தாராங்கன்னு இருக்கிறம் சொல்லவே இல்லையே.. ;)
சரி சரி வாங்க
======
தங்க முகுந்தன் said...
சந்திப்பு இனிதே நடக்கட்டும்! நாம் தான் தவறிவிடுகிறோம்!//
ம்ம்ம்.. வெகு விரைவில் சந்திக்கும் நாள் வரும்..
======
colvin said...
ஆஜர்//
நன்றி..வாங்க
:)
ஆ.ஞானசேகரன் said...
//இந்தியா,மற்றும் வெளிநாடுகளில் உள்ளோரும் வரலாம்.. டிக்கெட் செலவுகள்,பயண செலவுகளை நீங்கள் யாரும் பொருட்படுத்தாத பட்சத்தில்.. எங்கள் அன்புக்கு முன்னால் இதெல்லாம் ஒரு பொருட்டா என்ன? //
வாழ்த்துகள் லோசன்... உங்கள் அன்புக்கு எங்களுடை அன்புகள் சம்ர்ப்பணம்//
ஆகா நண்பா.. அன்பு தாங்கலையே.. :)
=========
ஆதிரை said...
உள்ளேன் ஐயா//
நன்றி பையா.. அதுக்கு முதலில் உங்கள் ட்ரீட்டையும் முடிப்பது நல்லது என நினைக்கிறேன் :)
இளையதம்பி தயானந்தா said...
எல்லோரும் வருக! நேராய், ஒளியாய், குரலாய், கருத்தாய் இணைக! அன்பு லோஷனுகான நன்றிகளோடும் அன்போடும்
இளையதம்பி தயானந்தா..//
நன்றி அண்ணா.. உங்களையும் அன்று ஏதோ ஒரு விதத்தில் சந்திக்கலாம் என்று நினைக்கிறேன்
===============
கரவைக்குரல் said...
சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாகவும் கலகலப்பாகவும் நடைபெற வாழ்த்துக்கள் லோஷன்//
நன்றி சகோ..
தாயகத்தின் சந்திப்புக்களில் கலந்து கலகலக்க முடியவில்லையே என்ற கவலைதான் ஒரு புறம்
என்றாலும் வலையுலகத்தின் வளர்ச்சியில் ஒரு அங்கமாக இது அமையும் என்றால் ஐயமில்லை
வாழ்த்துக்கள்//
வெகு விரைவில் அதற்கும் ஒரு காலம் வரும் என்று நம்புவோமாக..
நிச்சயமாக.. அதற்கு தானே கூடுகிறோம்
sanjeevan said...
அப்ப மீண்டும் வடை சாப்பிட ஒரு நல்ல வாய்ப்பு...
விடமாட்டமில்ல.....//
வடை மட்டுமில்லை.. இம்முறை வகை வகையா இருக்காம்.. ;)
=========
ஆதித்தன் said...
வருவோம்! சந்திப்போம்! பிரிவோம்! சந்திப்போம்!//
வாருங்கள்.. பழகலாம்..
கனககோபி said...
நானும் உள்ளேன் ஐயா....//
வாங்கய்யா.
ஆனா ஒரு சின்ன சந்தேகம்...
பூரணை நாளில (அதாங்க... பறுவம்...) நடத்தப் போறாங்களே., என்னப்போல ஆக்களுக்கலெ்லாம் பறுவத்தில கூடுறதாம் எண்டு சொல்லுவாங்கள்... பிரச்சினை இல்லயே....???//
அதெல்லாம் சோ சிம்பிள்.. உங்களை மாதிரி எத்தனை பேரைப் பார்த்திட்டம்.. ;) சும்மா வாங்க
========
அனுபவம் said...
ஐயோ!வடையா எனக்கு ரொம்ப பிடிக்குமே!
ஆனால் வரமுடியாம எருக்குதே?
என்ன பண்ண?//
அப்பிடின்னா வடைக்காகவாவது வாங்களேன்..
UsaMa said...
போயா தினமென்றதால் காலேஜ் விடுமுறை கிடைக்குமென நினைக்குறேன்...
பலமுறை சந்திக்கும் நாம், ஏன் நேற்று கூட அக்னி வைபவத்தில் பார்த்தும் கதைக்க முடியவில்லை... இங்காவது வந்து கதைக்கலாமான்னு பார்ப்போம் ???
கென்ட் கிரிக்கெட்டில ஒரே போத்தல் சோடாவை இருவரும் குடிச்சதும்... உங்க கையில அடிபட்டதும் இன்னும் நினைவுல இருக்கு எனக்கு... உங்களுக்கு..???//
அப்படியா நேற்றும் வந்தீர்களா?
எனக்கும் ஞாபகமிருக்கு சகோதரா.. வாருங்கள் சந்திப்போம்.
==============
K. Sethu | கா. சேது said...
நண்பரே இருக்கிறம் ! சந்திப்புக்கு வருகிறம் ;>)
~சேது//
அய்யா வாருங்கள்.. மீண்டும் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி
என்ன கொடும சார் said...
இன்னொரு சந்திப்பா நாடு தாங்காது.//
வந்திட்டீங்களா? உங்கள மாதிரி ஒருத்தன் இருந்தால் போதும்..
அப்போ இம்முறையும் வருகிற உத்தேசம் இல்லைப் போல..
நல்லது ஆனால் வராமல் வந்தது போல் சொல்லும் எண்ணம் இருக்கோ? ;)
மேலே உள்ள comment என்னால் post பண்ணப்பட்டதல்ல. இருந்தாலுல் அதில் உள்ள கருத்து யார் எழுதினாரோ அவரையே சேரும். (நாடு தாங்காது என்று jokeக்கு சொல்லியிருக்க கூடும்)
உங்கள் பெயரை பாவித்து அல்லது Anonymous ஆக சொல்லியிருக்கலாமே. மத்தவங்க கடுப்ப என்மேல திருப்புறதுல என்ன சந்தோஷமோ?
//உங்கள மாதிரி ஒருத்தன் இருந்தால் போதும்..//
ஏன் அண்ணா அப்படி சொன்னீங்க?
//வராமல் வந்தது போல் சொல்லும் எண்ணம் இருக்கோ? ;)// அப்படி ஒருநாளும் வாதிடுபவனல்ல. வந்தேன் வந்தேன் வந்தேன் ...
இளையதம்பி தயானந்தா கலந்துகொள்வதால் ஏறியிருக்கு.. அவர் தமிழும் கருத்துக்களும் எனக்கு உடன்பாடானவை என்பதால் கலந்துகொள்ளக்கூடும்.
Post a Comment