எங்கள் அன்பு நண்பர் பதிவர் குசும்பனுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாக இன்று காலை எனக்கு sms போட்டிருந்தார்..
மிக்க மகிழ்ச்சி & வாழ்த்துக்கள் குசும்பரே..
அண்மையில் அவர் ஊருக்கு புறப்படுவதாக கூகிள் சாட்டில் சொன்னபோதே வாழ்த்துக்களை சொல்லி..
குசும்பரே உமது குசும்புகள் குறும்புகளுக்கென்றே வாரிசாக ஒரு குட்டிக் குசும்பன் வந்து பிறப்பான் என்று வாழ்த்தி இருந்தேன்.
"இது வரைக்கும் நான் விடும் குசும்புகளை அடக்க ஒரு மகள் தான் வந்து பிறப்பால் என்றே எல்லோரும் வாழ்த்துகிறார்கள்;நீங்கள் தான் முதல் தடவையாக மகன் பிறப்பான் என்று வாழ்த்தியுள்ளீர்கள்"என்று மகிழ்ச்சியோடு நெகிழ்ந்தார் குசும்பர்..
என் வாக்கும் வாழ்த்தும் பலித்ததில் மகிழ்ச்சி..
குசும்பன் தம்பதியர்க்கும், அவர்களுக்கு குதூகலம் கொடுக்க வந்திருக்கும் குட்டிக் குசும்பனுக்கும் அனைத்துப் பதிவுலகம் சார்பாகவும் வாழ்த்துக்கள்..