October 20, 2009

ஸீரோ டிகிரி, கூகிள் வேவ் & யாழ்தேவி


நேற்றுக்காலை மின்னஞ்சலைத் திறந்தால் யாழ்தேவி திரட்டியின் நிர்வாகியிடம் இருந்து ஒரு மின்னஞ்சல்.

என்னை யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவராகத் தெரிவுசெய்திருப்பதாகவும், எனது நட்சத்திர வாரம் அடுத்த திங்கட்கிழமை (Next Monday) முதல் ஆரம்பமாவதாகவும், என்னைப் பற்றிய தகவல்களைப் பதியுமாறு ஒரு சுட்டியும் கொடுத்திருந்தார்.

அடுத்த திங்கள்தானே, 13நாள் பதிவுகள் எதுவும் போடாமலிருந்ததற்கு சேர்த்துவைத்து ஒரு வாரம் முழுக்கப் பட்டை கிளப்பலாமென்று சொல்லி வேறு வேலைகளில் மும்முரமாகிவிட்டேன்.

பின்னர் காலைச்சாப்பாட்டின் பின் கிடைத்த நேரத்தில் ஏற்கனவே பதிவிற்குத் தயாராக Draftஇல் இருந்த புதுமொழிகளடங்கிய 'கலகல' பதிவொன்றைப் பதிவேற்றிவிட்டு ஆதவன் விமர்சனங்களுக்கு வந்த பின்னூட்டங்களுக்கு பதில் வழங்கிக்கொண்டிருந்தேன்.

அந்த நேரம் தங்கமுகுந்தன் அவர்களின் பின்னூட்டம் யாழ்தேவி நட்சத்திரப் பதிவரானதற்கு வாழ்த்து சொல்லிவந்தது.

பரபரவென்று யாழ்தேவி தளம் போய்ப்பார்த்தால் நட்சத்திரப்பதிவராக என் பெயர் கொஞ்சம் குழப்பம்&கொஞ்சம் கடுப்போடு – யாழ்தேவி நிர்வாகிக்கும் - யாழ்தேவி குழுவில் அங்கம் வகிக்கும் நண்பர் வந்தியத்தேவனுக்கும் மின்னஞ்சல் அனுப்பி இதுபற்றிய விளக்கம் கோரினேன்.

யாழ்தேவி நிர்வாகிகள், தானியங்கி மின்னஞ்சல் பொறிமுறையில் ஏற்பட்ட குழப்பமே இது எனவும், தாமதத்துக்கு மன்னிப்பு கோரியும் - நேற்று (திங்கள்) முதல் ஆரம்பிக்குமாறும் கேட்டிருந்தார்.

பிறகென்ன... ஸ்டார்ட் மியூசிக் தான்....

பதிவுலகில் நுழைந்து 3 மாதங்களிலேயே தமிழ்மண நட்சத்திர வாரம் கிடைத்தது. இப்போது யாழ்தேவியில் கிரமமாக என் பதிவுகளை இட ஆரம்பித்து சில வாரங்களில் நட்சத்திர மகுடம்.

நன்றிகள்.

யாழ்தேவியின் முன்னைய நட்சத்திரப் பதிவர்கள் - எதிர்கால நட்சத்திரப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.


யாழ்தேவியின் வாக்களிப்புப்பட்டையில் ஒரு சுவாரஸ்யம் பதிவின் வரவேற்பைத் தெரிந்து கொள்ளலாம் எனினும் ஒரு குறை யார் வேண்டுமானாலும் + அல்லது - போடலாம்.
ஆனால் புதிய வாசகர்களுக்கு இது வாய்ப்பானதும் கூட.

எனக்கு இதுவரை 104 +களும், 44 -களும் கிடைத்துள்ளன. இதில் 21 -கள் விஜய் ரசிகர்களால் வழங்கப்பட்டவை.
(பின்னே என்னை சிலர் கொலைவெறியுடன் தேடி திரிவது எனக்கு வந்த சில மின்னஞ்சல்களில் இருந்து புரிந்தது..)

--------------------

அண்மைக்காலமாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'கூகிள் வேவ்' (Google wave)தனது ஆரம்ப அறிமுகப் பதிப்பை வெள்ளோட்டம் விட்டுள்ளது.

முன்பு gmail அழைப்புத் தேடி அலைந்தது போல – (எனக்கு அலையவேண்டிய தேவை முன்பும் இருக்கவில்லை.) நண்பர்கள் கூகிள் வேவ் அழைப்புக்கும் தேடிய வண்ணம் உள்ளனர்.

எனக்கு சக வலைப்பதிவர் நண்பர் ஆதிரை அழைப்பு அனுப்பியிருந்தார் எனினும் பெரிதாக கூகிள் வேவ் என்னை ஈர்க்கவில்லை. ஆரம்பக்கட்டம் (preview/trial mode)என்ற காரணமோ தெரியவி;ல்லை.

எப்போதும் நான் கூகிள் கட்சி என்ற காரணத்தால் கூகிள் வேவும் user friendlyஆகவும், தற்போதுள்ள gmail உடன் இணைந்தியக்ககூடியதாகவும் மேம்படும் என நம்பயுள்ளேன்.

தற்போது கூகிள்வேவில் அலையடிக்கும் சுழியோடி நண்பர்கள் எனக்கு ஆலோசனைகள் தரவும்.

--------------

நீண்டகாலத் தேடலின் பிறகு சாரு நிவேதிதா எழுதிய 'ஸீரோ டிகிரி' நூல் நேற்று கிடைத்துள்ளது. வந்தியத்தேவனிடம் இந்த நூல் உள்ளது என்று தன் பதிவின் மூலம் அறியத்தந்த மருதமூரானுக்கு நன்றிகள்.

சாருவின் தளப்பக்கத்தின் தீவிரவாசகனாக இருந்தாலும், அவரது வேறு பல நூல்களை வாசித்திருந்தாலும் ஸீரோ டிகிரி மட்டும் கிடைத்திருக்கவே இல்லை.

கிடைத்த நேரத்துக்குள் மளமளவென்று 30-35 பக்கங்கள் வாசித்துவிட்டேன். சாருவின் எழுத்து நடை, பொருள் நன்கு அறிந்தவன் என்பதால் கதையிலோ, பொருளிலோ, பாத்திரங்களிலோ இதுவரை எவ்வித அதிர்ச்சியும் இல்லை; பிரமிப்பு மட்டுமே!

எனினும் சாருவின் முன்னுரையில் முதல் பந்தியைப் பாருங்கள்...
'அகதி முகாம்கள் உட்பட இன்று உலகளாவி பரந்து கிடக்கிறது தமிழ் சமூகம். அதற்கும், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் அளிக்கப்பட்ட கொடையே ஸீரோ டிகிரி.'

இது பிரகடனமா – அல்லது ஞானச் செருக்கா?

'மனநோய் விடுதியின் ஜன்னல் கம்பிகளுக்கு ஊடாக நீளும் கைகள்
ஆற்றங்கரை வேப்பமரத்தடியில் படுத்துறங்கும் பிச்சைக்காரன்
செவிமடலில் உரசிச் செல்லும் தனிந்த சிறகு
ஊசி முனை வழியே யானையை இழுத்துச் செல்லும் செப்படிவித்தை – எழுத்து'

தனது மிக வெளிப்படையான பட்டப்பகிரங்க கருத்துக்கள், சில மஞ்சள், பச்சை எழுத்துக்களை (சில இடங்களில் சமூகத்தைக் காட்டுகிறார் - சில இடங்களில் தன் தனிப்பட்ட எண்ணங்களை ஊட்டுகிறார்) தவிர்த்துப் பார்த்தால் சாருவின் எழுத்துக்கள் வலிமையும், அழகும் நிறைந்தவை.

ஸீரோ டிகிரியை எனக்குப் பின் தனக்குத் தருமாறு வந்தியிடம் முறை வைத்துள்ள கரன் - இப்போது கந்த சஷ்டி விரத காலம் - விரதம் முடிந்த பிறகு வாசிக்கிறேன் என்றாராம்.

இன்னொரு நண்பர் புத்தகத்தின் சில பக்கங்களை ரொம்ப ஆர்வமாக வாசித்துப் பார்த்துவிட்டு 'சே... பொருத்தமாகக் கொஞ்சம் படங்களும் போட்டிருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்' என்று மனவருத்தப்பட்டுக்கொண்டார்.


12 comments:

Tech Shankar said...

congrats

maruthamooran said...

ஸீரோ டிகிரியை வாசிக்க தூண்டியதில் என்னுடைய பங்கு இருப்பதற்கு மகிழ்ச்சியே……… முழுமையாக வாசித்துவிட்டு பதிவொன்று இடுங்கள். ஏதாவது விவாதத்தை ஆரம்பிக்கலாம்.

Subankan said...

வாழ்த்துக்கள். கூகுல் வேவ் கிடைத்துவிட்டதா? அவ்வ். நானும் விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்கிறேன். கிடைக்கும் என்ற நம்பிக்கையும் போய்விட்டது.

வேந்தன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

sanjeevan said...

வாழ்த்துக்கள் லோசன்அண்ணா.
அங்கேயும் போய் நம்ம விஜயை போட்டுத்தாக்காதீங்க அண்ணா.

Unknown said...

நானும் யோசித்தேன்... யாழ்தேவியில் நட்சத்திரப் பதிவரென்று உங்கள் பெயர் இரு்ககிறறது. ஆனால் நீஞ்கள் அதுபற்றி எதுவும் சொல்லவில்லையே என்று...
யாழ்தேவி நட்சத்திரத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

//21 -கள் விஜய் ரசிகர்களால் வழங்கப்பட்டவை.
(பின்னே என்னை சிலர் கொலைவெறியுடன் தேடி திரிவது எனக்கு வந்த சில மின்னஞ்சல்களில் இருந்து புரிந்தது..) //

ஹி ஹி....
உங்கள் சில பதிவுள் விஜய் இரசிகர்கள் ஏன்று சொல்லுபவர்களிடம் அடிவாங்கியமை உண்மை தான்...
ஆனால் இவர்கள் விஜய் இரசிகர்கள் இல்லை அண்ணா.
இரசிகன் என்றால் அந்த நடிகர் செய்யும் அனைத்திற்கும் ஆமாம் போடுவதுத தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்...
திருந்த வேண்டியவர்கள்...

யோ வொய்ஸ் (யோகா) said...

நட்சத்திர பதிவரானதற்கு வாழ்த்துக்கள்.

கூகுல் வேவ் அழைப்பு தேடி தேடி வெறு போயுள்ள நான் கொஞ்சம் பொறாமையையும் அனுப்பிவிடுகிறேன்.

Unknown said...

///'சே... பொருத்தமாகக் கொஞ்சம் படங்களும் போட்டிருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்' என்று மனவருத்தப்பட்டுக்கொண்டார்///

அப்ப என்னாலையும் வாசிக்க முடியாது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் பட்டையை கிளப்புங்க

SShathiesh-சதீஷ். said...

வாழ்த்துக்கள் அண்ணா.

ஆதிரை said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

//ஸீரோ டிகிரியை எனக்குப் பின் தனக்குத் தருமாறு வந்தியிடம் முறை வைத்துள்ள கரன் - இப்போது கந்த சஷ்டி விரத காலம் - விரதம் முடிந்த பிறகு வாசிக்கிறேன் என்றாராம்.//
அப்படிங்கண்ணா.... :)

வந்தியத்தேவன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

யாழ்தேவியில் அதிகம் மைனஸ் வாங்கியவர் நீங்கள் தான். எனக்கு யாரோ ஒரு புண்ணியவன் சகட்டுமேனிக்கு ஒவ்வொரு பதிவிலும் மைனஸ் அடிக்கின்றார்.

எனக்கும் ஆதிரை கூகுள் வேவ் அனுப்பினவர் ஆனால் நான் இன்னமும் அலையடிக்கத் தொடங்கவில்லை. அலையடிப்பது அவ்வளவு யாக இல்லை. சில நாட்கள் காத்திருப்போம்.

//இன்னொரு நண்பர் புத்தகத்தின் சில பக்கங்களை ரொம்ப ஆர்வமாக வாசித்துப் பார்த்துவிட்டு 'சே... பொருத்தமாகக் கொஞ்சம் படங்களும் போட்டிருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்' என்று மனவருத்தப்பட்டுக்கொண்டார்.//

என்ன கொடுமை இது. ஆனாலும் சாருவின் எழுத்தில் பல இடங்களில் சுவாரஸ்யம் இலாமல் இருக்கின்றது. இன்னமும் நான் முற்றுமுழுதாக வாசிக்கவில்லை. சில சூத்திரங்கள் எல்லாம் போட்டிருக்கின்றார் விளங்கவில்லை.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner