
இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் பான் கி மூனை வரவேற்கும் முகமாக ஒரு வாழ்த்து,வரவேற்பு மடல்..
பான் - கீ - மூன் பெருமகனே வாழ்க நீர்!
வாருமையா வாரும்...
நீர் வந்த இடம் இப்போ 'நல்ல' இடம்...
நேரம் பார்த்து வந்துள்ளீர்...
வந்தனங்கள் உமக்கு...
வடக்கின் வசந்தம் பார்க்க வந்தீரோ?
வன்னியின் வசந்தம் பார்த்துப் போவீரோ?
நேர காலம் பார்த்து வருவதில்
தமிழ் சினிமா பொலிசுக்குப் பிறகு நீர் தான்!
எம் மக்கள் அவலம் எட்டிப்பாருங்கள் என்று
எத்தனை தடவை ஐயோ – ஐயோ என்று
ஐ.நாவிடம் எத்தனை தடவை கேட்டும்
பூட்ரோஸ் காலியின் செவிகள்
பூட்டியே கிடந்தன...
கோபி அண்ணானோ
பாலஸ்தீனம் - ஈராக் - கொசாவோ
பின் தீமோரோடு பிசியானார்...
நீர் தான் இரங்கி - இன்று
இலங்கைக்கு இறங்கி வந்தீர்...
பான்-கீ-மூன் என்ற
பரம இரக்க வள்ளலே
வாரும்!
சமாதானம் கொண்டு வரும் சபைத்
தலைவர் நீர்!
சமர் நடக்கும் போது சத்தமின்றி
இருந்துவிட்டு
காட்டுக்கு ஒரு தூதுவரை
சப்பையாக அனுப்பிவிட்டு
(உமது மூக்கை சொல்லவில்லை)
பரம இரக்க வள்ளலே
வாரும்!
சமாதானம் கொண்டு வரும் சபைத்
தலைவர் நீர்!
சமர் நடக்கும் போது சத்தமின்றி
இருந்துவிட்டு
காட்டுக்கு ஒரு தூதுவரை
சப்பையாக அனுப்பிவிட்டு
(உமது மூக்கை சொல்லவில்லை)
சரித்திர வெற்றியை
கொண்டாடிக்கொண்டிருக்கும்
எங்கள் சாதனைத் தலைவன்
ஜனாதிபதியைப்
பாராட்டிப் போக வந்தீரோ?
வவுனியா (நலன்புரி) முகாம் மக்கள்
நலமே இருப்பது பார்த்து
நீர் மனம் குளிர்ந்திருப்பீர்...
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
இப்போ தினம் பெய்யும் மழையால்
குளிரும் கண்டியில்
இலங்கைத் தலைவனைக் கண்டு
இன்று அகமும் புறமும்
மேலும் குளிர்ந்திருப்பீர்...
ஒருவேளை
விஸ்வ கீர்த்தி ஸ்ரீ திரி சிங்கலாதீச்ச்வர விருது பெற்ற
எங்கள் சன அதிபதியை நீரும் வாழ்த்திப் போக வந்தீரோ?
இல்லையேல்
எங்கள் அயல் நாடு அன்புக்குரிய இந்தியா
'ராஜிவ் காந்தி' விருது அளித்து கௌரவித்தது போல
நீரும் உம் பங்குக்கு
நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்கிறோம் என்று
சொல்லிப் போக வந்தீரோ?
தமிழினத் தலைவரும்,
தேர்தலுக்கு ஒரு சில நாட்கள் முன்னிருந்து
'திடீர்' தமிழினத் தலைவியாக மாறிய செல்வியும்
வராத எங்கள் திருநாட்டுக்கு வந்து
இலங்கைத் தீவின் 'புதிய' சமாதானக் கோலம்
காண வந்த
பான் - கீ - மூன் பெருமகனே வாழ்க நீர்!
ஒன்றாக இருந்த கொரியா இரண்டாகி
எப்போது சேருவோம் என்று
காத்துக்கிடக்கும் மக்களை
சேர்கிறோம் - சேர்க்கிறோம் என்று
பேய்க்காட்டி பிரித்தே வைத்து
பெரிய நாடுகளின் வால்களில் ஒன்றாக வாழ்ந்து வரும்
கொரியாவின் மைந்தன் நீர்
'ஒன்றுபட்ட' இலங்கைக்கு வந்துள்ளது
என்ன பொருத்தமோ?
மீண்டும் இந்த ஒப்பீடு மட்டும் வந்து தொலைக்கிறது..
ஐ.நா சபை பொதுச் செயலர் நீரும்
தமிழ் சினிமா போலீசும் ஒன்றே..
எல்லாம் முடிந்த பிறகே
என்டர்....
கொண்டாடிக்கொண்டிருக்கும்
எங்கள் சாதனைத் தலைவன்
ஜனாதிபதியைப்
பாராட்டிப் போக வந்தீரோ?
வவுனியா (நலன்புரி) முகாம் மக்கள்
நலமே இருப்பது பார்த்து
நீர் மனம் குளிர்ந்திருப்பீர்...
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
இப்போ தினம் பெய்யும் மழையால்
குளிரும் கண்டியில்
இலங்கைத் தலைவனைக் கண்டு
இன்று அகமும் புறமும்
மேலும் குளிர்ந்திருப்பீர்...
ஒருவேளை
விஸ்வ கீர்த்தி ஸ்ரீ திரி சிங்கலாதீச்ச்வர விருது பெற்ற
எங்கள் சன அதிபதியை நீரும் வாழ்த்திப் போக வந்தீரோ?
இல்லையேல்
எங்கள் அயல் நாடு அன்புக்குரிய இந்தியா
'ராஜிவ் காந்தி' விருது அளித்து கௌரவித்தது போல
நீரும் உம் பங்குக்கு
நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்கிறோம் என்று
சொல்லிப் போக வந்தீரோ?
தமிழினத் தலைவரும்,
தேர்தலுக்கு ஒரு சில நாட்கள் முன்னிருந்து
'திடீர்' தமிழினத் தலைவியாக மாறிய செல்வியும்
வராத எங்கள் திருநாட்டுக்கு வந்து
இலங்கைத் தீவின் 'புதிய' சமாதானக் கோலம்
காண வந்த
பான் - கீ - மூன் பெருமகனே வாழ்க நீர்!
ஒன்றாக இருந்த கொரியா இரண்டாகி
எப்போது சேருவோம் என்று
காத்துக்கிடக்கும் மக்களை
சேர்கிறோம் - சேர்க்கிறோம் என்று
பேய்க்காட்டி பிரித்தே வைத்து
பெரிய நாடுகளின் வால்களில் ஒன்றாக வாழ்ந்து வரும்
கொரியாவின் மைந்தன் நீர்
'ஒன்றுபட்ட' இலங்கைக்கு வந்துள்ளது
என்ன பொருத்தமோ?
மீண்டும் இந்த ஒப்பீடு மட்டும் வந்து தொலைக்கிறது..
ஐ.நா சபை பொதுச் செயலர் நீரும்
தமிழ் சினிமா போலீசும் ஒன்றே..
எல்லாம் முடிந்த பிறகே
என்டர்....
24 comments:
இப்போது பார்க்கையில் தமிழ் சினிமா யதார்த்தம் நிறைந்ததாய் தோன்றுகின்றது. ஒருவரைப் பலர் கொடுமைப்படுத்தும் போது அசையாது நின்று வேடிக்கை பார்ப்பது
///எல்லாம் முடிந்த பிறகே
என்டர்....///
என்று இன்னும் பல.......
அண்னா...சரியா சொன்னீங்கள்..
'எல்லாம் முடிந்த பிறகே
என்டர்....'
உள்ள விசருக்க வந்து கடுப்பை கிளறுறாங்கள்:
It's a shame that the politicians don't do what they should but everything else. If each individual had dared to do their role in both family and society, there would be zero conflict.
Nalla eluthi irukkeenga.
இந்தாளு எதுக்கு இலங்கைய பாக்க வர்றாரு???............. எல்லம் முடிஞ்ச பிறகு என்ன.............
முகு சொன்னதை வழி மொழிகிறேன், உவன் வந்து தான் என்ன வராவிட்டால் தான் என்ன
சரியாக சொன்னீர்கள்!
சாவதற்க்கு முன்னால் வரசொன்னால்...
கருமாதிக்கு வரானுங்க!
weldone
superb solid punch loshan!!!
irresponsible cunning personalities!!
//ஐ.நா சபை பொதுச் செயலர் நீரும்
தமிழ் சினிமா போலீசும் ஒன்றே..
எல்லாம் முடிந்த பிறகே
என்டர்....//
இதைக் காட்டிலும் சாலப் பொருத்தமான ஒப்பீடும் இவ்வுலகில் இருந்திட வாய்ப்பில்லை.
பூந்தல் கண் பிசாசு ...
அவிஞ்ச கண் அனக்கோண்டா...
சப்ப மூக்கு சகுனி...
எரியும் போது சொறிஞ்சு கொண்டிருந்திட்டு இப்ப என்னத்துக்கு வாரான் பரதேசி ?
எங்கயாவது கரப்பான் பல்லி கிடைச்சா பொரிச்சு திண்டு கொண்டிருக்க வேண்டியதுதானே?
உவனுக்கெல்லாம் கமுக மரம் ரெண்ட வளைச்சு கால் ரெண்டையும் ஒவ்வொண்டில கட்டிட்டு கதற கதற அவிட்டு விடோணும் மந்தி எங்கட எல்லாளன் செஞ்ச மாதிரி..
உந்த பூந்தல் கண் பரதேசியளுக்கும் அமெரிக்காவுக்கும் ஒருக்கா கொழுவி நடுவில எனக்கொரு சான்ஸ் கிடைச்சா .. மவனே...
ரத்தம் கொதிக்குது..
ஒரு சின்ன இனம் தன்ட சக்திக்கு மீறி எவ்வளவு செய்திச்சு... கேடு கெட்ட பேயள் , பெட்டைப்பயலுகள் எல்லாம சேந்து நசுக்கிப் போட்டு இப்ப யாருக்கு படங் காட்டிறாங்கள்?
மன்னிக்கவும்... உங்கள் பதிவை பார்த்ததும் வந்த கோபத்தில் சூடாக எழுதிவிட்டேன்.. தயவு செய்து தப்பாக நினைக்க வேண்டாம்...
என்ன செய்வது , யாரிடமாவது சொல்லிக் கத்த வேண்டும் போன்றிருந்தது.. :(
பின்னூட்டங்களை பிரசுரிக்காமல் விட்டமைக்கு நள்றிகள்...
( பிறகு இதை பிரசுரிக்கிறேல்ல ;) )
ஐ.நா சபை பொதுச் செயலர் நீரும்
தமிழ் சினிமா போலீசும் ஒன்றே..
எல்லாம் முடிந்த பிறகே
என்டர்....
நல்ல பதிவு ...
சும்மா நம்மள பேய்காட்ட வாரன்,
வா ப்பா வா ... வந்து எமது அரசு தரும் விருந்தை உண்டு செல் ..
மிஞ்சி போனால் .. ஒரு யானை சிலை தருவர் ...
இப்படித்தானே நாடு நாடாக சென்று .. செய்தவர்
இருந்து பாப்போம் .. என்ன நடக்குது என ..
எனத்தான் நியூஸ் இணையதளம் பார்த்தாலும் ... உங்கட ப்லோக் வாசித்தல் தன கொஞ்சம் உண்மை விளங்கும் .. பார்த்து அண்ணா ..
நன்றி -
நல்ல பதிவு ...
உங்களுக்காவது தெரியும் என நினைத்தேன் உங்களுக்கும் தெரியாதா ?
பார்போம் என்ன நடக்குது என .
எல்லோரும் சொல்ல நினைததத நீங்க சொல்லிற்றிங்க ...
Good lines.I feel they r all comming from S.Ltimepass.where to go these days All world members?
all tamil people ai kadavulthan kappaththanum..wait and see.enna anna evaluvu kalam pinthi unga blogger.Anyway before ur anypublish think well.Small request..bcoz not freedom ourcountry for tamilpeople.takecare.I came ur blogger 18/5,19/5/2009 ..but u not publish anything.Anyway takecare ur self.u r a familyman.
நீங்கள் சிலரை திருப்த்திபடுத்துவதற்காக தான் இதை எழுதியுள்ளீர்கள் என்பது தெரிகிறது.
Do you expect U.N to support LTTE?
It's ridiculous...
They never gonna support LTTE.
Sinhala people are celebrating LTTE's defeat, not Tamils' defeat.
Our president is saying that he will give us a solution, So why are you all yelling?
If you want Eelam, why didn't you join LTTE and fight? Because your family is important to you. So you are expecting innocent young people to fight and give you Eelam and after that you all will enjoy it.
One of my English friend said me that 'it seems that cheating Tamils pretty easy' while talking about Nakkeeran's graphic works. I think my friend is very much true.
ஒஸாமவை பார்த்திருப்பார்கள், சதாமை பார்த்து இருப்பார்கள்.. இப்பிடி ஒரு தலைவனை பார்த்திருக்க மாட்டார்கள் இந்த கோமாளி மூன்கள்.இப்ப தான் துடிச்சுபோனாரம்.. இதென்ன சின்னப்புள்ள தனமால்ல இருக்கு,,.. அத்தனை பேரும் வீரர்கள். யாரும் அனுதாபப்பட்டு அவர்களை கொச்சப்படுத்ததேவையில்லை.. கவிதைகள் வடித்து அவர்களை கலைப்பொருள் ஆகவும் தேவை இல்லை (உங்களுக்கும் தான்)...
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே. தன்னாலே வெளி வரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே...... ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே.....
நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை. லேட்ராகத்தான் வந்திருக்கிறார் ஆனாலும் நல்ல வெயிற்ரோடு வத்திருப்பார் என்னு நினைக்கிறன். குறைந்த பட்சமேனும் அவர் மூலமாகத்தான் இலங்கை அரசுக்கு உறுதியான உதவி கிடைக்கும் என்பது உண்மைதானே {யார் யார் சுறுட்ட திட்டம் போட்டிருங்காங்களோ?}.
ஐ.நா சபை பொதுச் செயலர் நீரும்
தமிழ் சினிமா போலீசும் ஒன்றே..
எல்லாம் முடிந்த பிறகே
என்டர்....
நிசம் தான்...
சரியான ஒப்புமை
ஈழ தமிழர்கள் கிண்டலும் நக்கலும் செய்யும் நிலையில் இல்லை என்று அறிகிறேன், ஒப்பாரிகளை மூட்டை கட்டிவிட்டு, அறிவார்ந்த உலக உறவுகளை ஏற்படுத்தி கொள்ளுங்கள்! வியாபார உலகத்தில் நட்டத்திற்கு ஈழதமிழனோடு கூத்தடிக்க ஆரும் வர மாட்டார்கள், வரும் தலைவர்களையும் கவிதை எழுதி கெடுக்கவேண்டாம், ஆக வேண்டிய வேலையை பாருங்கள், புலம்பலையும் வெட்டி வீர உறைகளையும் நிறுத்துங்கள்!
நீங்க மட்டும் திறமோ? சனம் சாகேக்க IPL பாத்துட்டு இப்ப அவர் செத்த பிறகு அழுறீங்க.. அவற்ற உசிர் மட்டுமோ உசிர்?
எண்டாலும் அண்ணா உங்களுக்கு தயிரியம் கொஞ்சம் கூடத்தான்..
அதுசரி..
எல்லாத்துக்குள்ளையும் எனக்கு பிடிச்சதெண்டா
//ஒருவேளை
விஸ்வ கீர்த்தி ஸ்ரீ திரி சிங்கலாதீச்ச்வர விருது பெற்ற
எங்கள் சன அதிபதியை நீரும் வாழ்த்திப் போக வந்தீரோ?
இல்லையேல்
எங்கள் அயல் நாடு அன்புக்குரிய இந்தியா
'ராஜிவ் காந்தி' விருது அளித்து கௌரவித்தது போல
நீரும் உம் பங்குக்கு
நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்கிறோம் என்று
சொல்லிப் போக வந்தீரோ?//
தான்
செய்தாலும் செய்வினம்....
ஆயிரம் எதிரிகள் எம்மைக் காட்டிகொடுத்தாலும் தொப்புள் கொடியுறவு என்று இருந்த இந்தியாவின் செயல்பாடுகள் தான் ஆயிரம் ஆட்லரிகளாக தாக்குகின்றன
http://kandumkaanaan.blogspot.com/2009/05/blog-post_29.html
தொப்புள் கொடியாவது! தாலிக் கொடியாவது!
எல்லாமே தூக்குகொடிதான் மச்சி!!
Post a Comment