May 07, 2009

83இல் தமிழர், 84இல் சீக்கியர்.. ஒரு ஒப்பீட்டுக் குமுறல்


இந்த பதிவு எப்போதோ எழுத ஆரம்பித்தாலும், இது போலவே ஆனால் இன்ன்னும் கொஞ்சம் காரமாக ஒரு மின்னஞ்சல் உலவிக் கொண்டிருந்ததனால் (சீக்கியரின் மயிரை விட மதிப்பற்றதா? தமிழனின் உயிர்.............)
உடனடியாக இதையும் போட்டிக்கு பதிவேற்ற விரும்பவில்லை.. எனினும் இப்போது இந்தியாவின் தேர்தல் காலம்.. இலங்கை பற்றி ஏட்டிக்கு போட்டியாக கருத்துகள் வரும் வேளையிலும் என்னுடைய மனக் குமுறல்களைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்..  


84ல் இந்தியாவில் இந்திராகாந்தியின் கொலையைத் தொடர்ந்து எழுந்த வன்முறை அலையும் - பலியான எண்ணற்ற சீக்கியர்களும் வரலாற்றில் மறக்கமுடியாத துயரம்!


கொலையாளிகள் அந்த இனத்தவர் என்பதற்காக ஒட்டுமொத்த வன்முறையும் அவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதும், பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டு – பற்பல சொத்துக்கள் சூறையாடப்பட்டதும் மனிதத்திற்கு அப்பாற்பட்ட – மனிதகுலமே வெட்கப்படவேண்டிய இழிசெயல்!

CBI அறிக்கையும் - இந்திய நாடாளுமன்றத் தேர்தலும் 25 ஆண்டுகால ரணங்களை மீண்டும் கீறிவிட

அமைச்சர் ப.சிதம்பரம் மீது சப்பாத்து வீச்சு

ஊடகவியலாளர் ஜர்னனல் சிங்கின் கொதிப்பும். தன் இனத்தின் பாதிப்பு பற்றிய உணர்வும், சீக்கியரின் 25 ஆண்டு காலம் மாறாத காயத்தின் பிரதிபலிப்புகள், ஆர்ப்பாட்டங்கள்.

84 வன்முறைகளின் காரணகர்த்தாக்கள் / பின் நின்றவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்ற காங்கிரஸ் முன்னணித் தலைவர்களான ஜக்தீஸ் டைட்லர் மற்றும் சஜ்ஜான் ஆகியோர் மீது பரவலாக எழுந்த கண்டனங்களும், இம்முறை தேர்லில் அவாகளைப் போட்டியிட வாய்ப்பை காங்கிரஸ் கட்சி வழங்க்ககூடாது என்றும் எழுந்த ஆவேசக் குரல்களின் உறுதி காங்கிரசையே பணியச் செய்திருக்கிறது.

ப.சிதம்பரத்தின் சீக்கியர்களுக்கான அனுதாபமும், டைட்லர் சீக்கிய சமூகத்திடமும் முழு இந்தியாவிடமும் கேட்ட மன்னிப்பும் சில சேதிகளைச் சொல்லியுள்ளது.

25 வருடம் முன்பு இடம்பெற்ற வன்செயல்களுக்கும், படுகொலைகளுக்கும் நீதி கிடைத்ததோ இல்லையோ, அந்த செயல்கள் அநீதியானவை, வருந்தத்தக்கவை என்ற உண்மையை வெளிப்படையாக இந்திய அரசும், அமைச்சர்களும் ஏன் முழு இந்தியாவுமே ஏற்றுக்கொண்டுள்ளது.

என்னதான் இருந்தாலும் இந்தியாவில் மதச்சார்பின்மையும், ஜனநாயகமும் ஓரளவாவது செத்துவிடாமல் உயிர்த்திருக்கின்றன என்பதற்கு வேறு சான்று தேவையா?

அதுவும் ஒரு சீக்கியரையே தமது பிரதமராக மீண்டும் தெரிவுசெய்யக்கூட இந்தியர்கள் தயாராகிவிட்டார்கள் என்றும் கருத இடமுண்டு.

( எனினும் இம்முறை அத்வானி பிரதமராக வந்தால் மாற்றமொன்று கிடைக்கும் என்று மனசு சொல்கிறது. இந்தியர்களின் எண்ணம் எப்படியோ? )

எனினும் 83இல் எம் இலங்கையில் , குறிப்பாக கொழும்பிலும், மலையகத்திலும் இன்னும் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த தமிழருக்கு நடந்த அநீதிக்கு? 

இதுவரை மன்னிப்பு சிற்சில தடவைகள் அரசியல் லாபங்களுக்காகக் கோரப்பட்டாலும், இழைக்கப்பட்ட கொடுமைகள், அநீதிகளுக்கான தர்மம் இன்னமும் கிடைக்காமலேயுள்ளது.


                                   83 கறுப்பு ஜூலையின் சில கோரக் காட்சிகள் அந்த வடுக்கள் மறையாமலேயே மேலும் மேலும் பல ரணங்கள் - பல நிரந்தரமானவை! 
83க்கே இன்னமும் நியாமும் நீதியும் கிடைத்தபாடில்லை.

அப்படியிருக்கையில் இன்று வரை நடக்கும் அழிவுகள், சுத்திகரிப்புக்களுக்கு எப்போது நியாயம் கிட்டும்? (முதலில் முற்றுப்புள்ளி எப்போதுன்னு சொல்லுங்கப்பா )

இல் கப்பலேறி, வள்ளம் ஏறி தென்னிந்தியக் கரைகளில் அடைக்கலம் தேட ஆரம்பித்த ஈழ அகதிகளின் அவல வாழ்வு இன்று வரை இருபத்தாறு ஆண்டுகளாக தொடர்கிறது.. 

84ல் ராஜிவ் காந்தி சீக்கியர் மீதான கட்டவிழ்த்துவிடப்பட்ட திட்டமிடப்பட்ட வன்முறைகளுக்குப்பின் சொன்னாராம்.
"ஒரு ஆலமரம் வீழ்ந்த பிறகு அதன் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் என்று அனைவரும் அறிந்துகொள்ளட்டும்"

சரி அதைத்தான் தாயின் படுகொலையால் மனம் நொந்து போன மகனின் கூற்றாகவே எடுத்துக்ககொண்டாலும், இதே விளைவுகளைப் பின்னர் இலங்கையிலும் தமிழர்களை அனுபவிக்க வைத்தவர் ராஜிவ். (ஆலமரம் எதுவும் சாயாமலேயே)

இதற்காக நான் எப்போதுமே ராஜிவ் காந்தியின் கொலையை நியாயப்படுத்தப் போவதில்லை.

அதன் ஏராளமான பின் விளைவுகள் இன்றுவரை தொடர்நது கொண்டேயிக்கின்றன. ஈழத்தமிழர்களுக்கே இதன் பாதிப்புக்கள் அதிகமெனினும் - ஆலமரமாக ராஜிவ் காந்தியே வீழ்ந்த பின்தான் பயங்கர விளைவுகள் அதிகமாகி இன்று விஷவாயு வரை வந்துள்ளதாக தெரிகிறது.

83 ஜீலைக் கலவரம் இலங்கையில் இடம்பெற்ற பின் அப்போதைய இலங்கையின் ஜனாதிபதி J.R.ஜெயவர்தன உதிர்த்த முத்துக்கள். "கொதிப்படைந்திருந்த சிங்களவரின் மன உணர்வுகள் இப்படி வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன"

3வது நாளில் தான் அவரது கருத்துக்கள் இவ்வாறு வெளியாகின.

கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட ஒரு முக்கிய காரணி அன்னை இந்திரா என்று எப்போதுமே ஈழத் தமிழரால் அன்போடும் நன்றியோடும் நினைவு கூறப்படும் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கை ஜனாதிபதிக்கு கொடுத்த நிர்பந்தமும்,எச்சரிக்கையும் தான்...

அந்த ஆலமரம் சாய்ந்தபோது தங்கள் உறவே பிரிந்தது போல அழுது அரற்றினார்கள் அத்தனை ஈழத் தமிழர்களும். 

சிங்களவரின் பொறுமை, பெருந்தன்மை அதிகரித்ததோ அல்லது தமிழர் தொகை கொழும்பிலும், மேல் மாகாணத்திலும் அதிகரித்ததோ 26 ஆண்டுகளாக மீண்டுமொரு இனக்கலவரம் இல்லை.

இனி அப்படியொன்று வராது என்று உறுதியாகத் தெரிகிறபோதும் வந்தாலும் யாரும் தலையிட முடியாது.. தலையிட்டால் "Mind your own business"
பதில் வரும் என்று ஐ.நா முதல் அமெரிக்கா, இந்தியா வரை அனைவருக்குமே தெரியுமே..

ஆனால் பொதுவாகப் பழகுகின்ற சிங்களவர்களுக்கும் இப்போது உயிரின் மதிப்பு,அருமை தெரிகிறது..   34 comments:

Anonymous said...

//சிங்களவரின் பொறுமை, பெருந்தன்மை அதிகரித்ததோ அல்லது தமிழர் தொகை கொழும்பிலும், மேல் மாகாணத்திலும் அதிகரித்ததோ 26 ஆண்டுகளாக மீண்டுமொரு இனக்கலவரம் இல்லை.//

எல்லோருடைய மனதிலுமுள்ள கேள்வி.

good post

இர்ஷாத் said...

//ஊடகவியலாளர் ஜர்னனல் சிங்கின் கொதிப்பும். தன் இனத்தின் பாதிப்பு பற்றிய உணர்வும், சீக்கியரின் 25 ஆண்டு காலம் மாறாத காயத்தின் பிரதிபலிப்புகள், ஆர்ப்பாட்டங்கள்.//

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு காங்கிரஸ் அரசின் அணுகுமுறைக்கு எதிரான செயற்பாடாக முஸ்லிம் கிரிஸ்தவ மக்களுக்கு எதிரான போக்கை இன்று வரை கடை பிடிக்கிற பிஜேபிக்கு ஆதரவளிப்பது இந்தியா தன் கண்ணையே குத்திக்கொள்வது போலாகாதா..

//காங்கிரசையே பணியச் செய்திருக்கிறது.//

இதுவரை பிஜேபி பணியவில்லையே?

//என்னதான் இருந்தாலும் இந்தியாவில் மதச்சார்பின்மையும், ஜனநாயகமும் ஓரளவாவது செத்துவிடாமல் உயிர்த்திருக்கின்றன என்பதற்கு வேறு சான்று தேவையா?//

அது காங்கிரஸ் அரசில் தான் நடந்திருக்கிறது..

//சிங்களவரின் பொறுமை, பெருந்தன்மை அதிகரித்ததோ அல்லது தமிழர் தொகை கொழும்பிலும், மேல் மாகாணத்திலும் அதிகரித்ததோ 26 ஆண்டுகளாக மீண்டுமொரு இனக்கலவரம் இல்லை.//

வவுனியா அகதி முகாம்களுக்கு வெசாக் தன்சல் திருப்பி விடப்பட்டிருப்பது, பல முஸ்லிம் நிறுவனங்கள் உதவி செய்வது (எதுவும் நிர்பந்தங்களும் இன்றி உதவ வேண்டும் என்ற தூய மனத்துடனேயே) தொடர்பான செய்திகள் ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்னும் குரோதத்தை தேக்கி வைக்கும் ஊடக திட்டமிடல்கலாகவே பார்க்கிறேன்.. BBC சொல்லும்போது கூட இங்கு யாரும் சொல்வதில்லை


//ஆனால் பொதுவாகப் பழகுகின்ற சிங்களவர்களுக்கும் இப்போது உயிரின் மதிப்பு,அருமை தெரிகிறது..//

இந்த யுத்தம் மீதான அவர்களின் நம்பிக்கை பெரும்பாலும் ஒரு Depression இன் வெளிப்பாடாகவே இருக்கிறது...

தங்க முகுந்தன் said...

ஐயா முதுகெலும்பற்ற பெயரில்லாதவரே!
எல்லோருடைய மனதிலும் என்று ஏன் பொய் சொல்கிறீர்!
விடுதலைப் புலிகள் இன்று எதிர்பார்ப்பது அதைத்தானே! இப்போது மாத்திரமல்ல பிரேமதாசாவைக் கொன்றபோதும் இதைத்தான் எதிர்பார்த்தார்கள்!
அவர்கள் உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு என்று சொல்லிவிட்டு இன்று தப்பி ஓடி தஞ்சம் கேட்பது ஒருபுறம்! தஞ்ச நாடுகளிலிருந்து தமிழர்களை விரட்டி அடிக்கும் நிலையையும் ஏற்படுத்துகிறார்கள்!
தமிழருடைய சர்வதேச தலையீட்டைக் கோரிய நாம் இன்று பயங்கரவாதிகள் என்று முத்திரையிடப்பட்டதுதான் மிச்சம்!
தயவுசெய்து யாரும் என்னைக் கோபித்துக் கொள்ளாதீர்கள்!
இதுதான் யதார்த்தம்.
முதலில் பேச்சுவாரத்தைக்கு ஒரு மனத் தூய்மையுடன் செல்லவேண்டும்.
1985களிலிருந்து பேசுகிறோம்- பேசியவர்களைத் துரோகி என்றுசொல்லிக் கொன்றுவிட்டு இன்று 1985இல் தமிழர் இருந்த நிலையை விடக்கீழ்நிலைக்கல்லவா இந்தப் போராட்டம் கொண்டுவந்துவிட்டிருக்கிறது!
தண்ணீருக்கு கையேந்தும் நிலையில் தமிழன் - இதுதேவையா!

Anonymous said...

//சிங்களவரின் பொறுமை, பெருந்தன்மை அதிகரித்ததோ அல்லது தமிழர் தொகை கொழும்பிலும், மேல் மாகாணத்திலும் அதிகரித்ததோ 26 ஆண்டுகளாக மீண்டுமொரு இனக்கலவரம் இல்லை.//

Globalization and media's extreme growth is the reasons for this. Sinhala blood is still the same. Even it is worser than 80s.. Cos, Please note Hela Urumaya JVP were not in 80s.. They became in early 2000s.

நிரூஜா said...

//ஆனால் பொதுவாகப் பழகுகின்ற சிங்களவர்களுக்கும் இப்போது உயிரின் மதிப்பு,அருமை தெரிகிறது..
அண்ணா...! நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால் அது தவறோ என்று எண்ணத்தோன்றுகின்றது, சந்தர்ப சூழ்நிலைக்கள்.
நான் தற்போது IITல் (தேவை என்றால் மட்டறுங்கள்) பயின்றுவருகின்றோம். அண்மையில் எமது வருடாந்த கலைவிழா நடைபெற்றது. அதில் ஒரு நாடகம் அரங்கேற்றியிருந்தோம். அதன் பொழிப்பாக ஒருவர் வந்து, "War is not a solution for anything" என்று கூறுவது போல் அமைத்திருந்தோம். ஆனால், நாம் கலைவிழாவில் இதைச் சொல்லும்போது...., அரங்கத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டதோடு, "war is the solution for everything" என்ற குரல்கள் ஓங்கி ஒலித்து அரங்கை அதிரவைத்தது.
மற்றவர்களை அது எவ்வாறு பாதித்ததோ தெரியாது, ஆனால் அடிப்படைவாதிகளான என்னையும் எனது நன்பர்களையும் அது மிகவும் பாதித்தது. இருந்தும் நாம் எதுவும் பேசமுடியாத எமது உணர்வுகளை அடக்கியிருக்கவேண்டியவர்களாக ஆக்கப்பட்டோம்.

இதில் ஆச்சரியப்படும் விடயம் என்னவென்றால், அதில் இருந்த அனைவருமே, எம்மைப்போல் 20 - 23 வயது நிரம்பியவர்கள். அவர்களின் மனதில் தமிழ்ர்கள் அனைவருமே புலிகளாகவும் தீவிரவாதிகளாகவுமே பொருள்படுகின்றார்கள்....!


இன்னுமொரு விடயம்: நம்மாட்கள் மேல்மாகாணத்தில் செய்யும் அட்டகாசங்களைப் பார்த்தால் எனக்கு சிலநேரம் வியப்பாகவும் கேலியாகவும் தான் இருக்கின்றது.

Anonymous said...

போங்கடா பொழப்பத்த பயலுகளா

Anonymous said...

த்ங்கமுகுந்தன் நீ ஆனந்த சங்கரியின் அடிவருடி நீயெல்லாம்பேச வந்துவிட்டாய்.

Anonymous said...

what about self genocide carried out by LTTE i.e assassination of great tamil leader Amirthalingam and other leaders?

Anonymous said...

//தங்க முகுந்தன் said...அவர்கள் உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு என்று சொல்லிவிட்டு இன்று தப்பி ஓடி தஞ்சம் கேட்பது ஒருபுறம்! தஞ்ச நாடுகளிலிருந்து தமிழர்களை விரட்டி அடிக்கும் நிலையையும் ஏற்படுத்துகிறார்கள்!//

உங்கள் சொகுசு வாழ்வுக்கு ஏதாவது பாதிப்பா?

பழைய அகிம்சை போரட்டங்களை எப்படி அவ்வளவு சீக்கிரமாக மறக்கிறீர்கள்.

Anonymous said...

இதில் ஆச்சரியப்படும் விடயம் என்னவென்றால், அதில் இருந்த அனைவருமே, எம்மைப்போல் 20 - 23 வயது நிரம்பியவர்கள். அவர்களின் மனதில் தமிழ்ர்கள் அனைவருமே புலிகளாகவும் தீவிரவாதிகளாகவுமே பொருள்படுகின்றார்கள்....!
-------------------------
இவ்வாறு இவர்கள் ஒற்றுமையாய் எமக்கு துன்பம் தர ,அதற்கு வேறு விளக்கமும் செய்வது சரி என்று கொடுக்கிறார்கள் !, அனால் நம் இனமோ அழிவுகளையும் இழ்புகளையும் சந்தித்தும் நம்மிடையே ஒற்றுமை இன்னும் இல்லை ,ஒருவரை ஒருவர் குறைகூறிக்கொண்டே உள்ளோம்.என்ன சாபமோ தெரியவில்லை !

Anonymous said...

நம் சகோதர இனம் இவ்வாறு இவர்கள் ஒற்றுமையாய் எமக்கு துன்பம் தர ,அதற்கு வேறு விளக்கமும் செய்வது சரி என்று கொடுக்கிறார்கள் !, அனால் நம் இனமோ அழிவுகளையும் இழ்புகளையும் சந்தித்தும் நம்மிடையே ஒற்றுமை இன்னும் இல்லை ,ஒருவரை ஒருவர் குறைகூறிக்கொண்டே உள்ளோம்.என்ன சாபமோ தெரியவில்லை !

இவ்வாறு குறைகூறுபவர்கள் என்னதான் முடிவு அவர்கள் வைத்துள்ளார்கள் ?அதை எல்லோருக்கும் சொன்னால் நல்லது !நல்லவனாய் இருப்பது கடினம் துரோகியாய் இருபது சுலபம்

Anonymous said...

வவுனியா அகதி முகாம்களுக்கு வெசாக் தன்சல் திருப்பி விடப்பட்டிருப்பது, பல முஸ்லிம் நிறுவனங்கள் உதவி செய்வது (எதுவும் நிர்பந்தங்களும் இன்றி உதவ வேண்டும் என்ற தூய மனத்துடனேயே) தொடர்பான செய்திகள் ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்னும் குரோதத்தை தேக்கி வைக்கும் ஊடக திட்டமிடல்கலாகவே பார்க்கிறேன்.. BBC சொல்லும்போது கூட இங்கு யாரும் சொல்வதில்லை
----------------------------
நன்மை செய்யும் நோக்கம் இருந்ததால் உமக்கு ஏன் விளம்பரம் தேவைப்படுகின்றது ?

Anonymous said...

இன்னுமொரு விடயம்: நம்மாட்கள் மேல்மாகாணத்தில் செய்யும் அட்டகாசங்களைப் பார்த்தால் எனக்கு சிலநேரம் வியப்பாகவும் கேலியாகவும் தான் இருக்கின்றது.
--------------------------------
என்ன மொட்டை மாடிஜில் ஆட்டம் கூத்து செய்வதுதானே ! இதைத்தான் சொல்வது துன்பத்திலும் இன்பம் கண்பது என்பதோ ?
இதனால்த்தான் என்னவோ நமது சகோதர இனம் நம்மை எல்லோரையும் சக்கிலியன் என்று கூறுகிறான் !

Anonymous said...

இன்னுமொரு விடயம்: நம்மாட்கள் மேல்மாகாணத்தில் செய்யும் அட்டகாசங்களைப் பார்த்தால் எனக்கு சிலநேரம் வியப்பாகவும் கேலியாகவும் தான் இருக்கின்றது.
--------------------------------
என்ன மொட்டை மாடிஜில் ஆட்டம் கூத்து செய்வதுதானே ! இதைத்தான் சொல்வது துன்பத்திலும் இன்பம் கண்பது என்பதோ ?
இதனால்த்தான் என்னவோ நமது சகோதர இனம் நம்மை எல்லோரையும் சக்கிலியன் என்று கூறுகிறான் !

Sanga said...

If anyone missed da last nite "Ungalil yarr Adutha Prabudeva" Prem Gobal Performance (Ealam Special)- check the below link.

http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ

Anonymous said...

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி பார்த்தீர்களா?
சொல்ல வார்த்தை இல்லை.

http://video.yahoo.com/watch/5020271

கிராமத்து பயல் said...

அண்ணே இதுக்கு எல்லாம் என்ன போடுறது எண்டு தெரியேல்ல

Anonymous said...

//நன்மை செய்யும் நோக்கம் இருந்ததால் உமக்கு ஏன் விளம்பரம் தேவைப்படுகின்றது ?//

யார் விளம்பரம் தேவை என்று சொன்னது? முதலில் தமிழை வாசித்து பொருள் விளங்க பழகுங்கள்...
:D
:D

குரோதத்தை தேக்கி வைக்கும் திட்டமிடல்களாக இருக்க கூடாது என்று தானே சொல்லப்ப்பட்டிருக்கிறது

Unknown said...

"ஒரு விருட்சம் சாய்கிற போது பூமி நடுங்கத்தான் செய்யும். என் அம்மா செத்தால் அதற்காக மூன்றாயிரம் பேர் சாகத்தான் வேண்டும்’’ என்ற புண்ணியவான் ராஜீவ்காந்தி போய்ச் சேர்ந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒரு இந்திராகாந்தியின் உயிருக்கு மூன்றாயிரம் சீக்கிய மக்களின் உயிர்கள் பழிவாங்கப்பட்டது என்றால் ஒரு ராஜீவ்காந்தியின் உயிருக்கு லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களின் ரத்தத்தைக் குடித்துக் கொண்டிருக்கிறார் சோனியா.

நேரடியாக நரவேட்டையில் ஈடுபடுவதைக் காட்டிலும் தனக்குத் தோதான பாசிஸ்ட் ஒருவனை உருவாக்கி அவனது கையில் பிஸ்டலைக் கொடுப்பது தேர்ந்த பாசிஸ்டுகளின் கைவண்ணம். அதைத்தான் இப்பொழுது இந்தியாவும் செய்து கொண்டிருக்கிறது. ஆயுதங்கள், தொழில் நுட்ப உதவிகள், பண உதவி போன்ற அனைத்தையும் கொடுத்து எப்படிச் சுட வேண்டும் என்று சிங்கள இராணுவத்திற்கு குறியும் பார்த்துக் கொடுக்கிறது இந்திய ராணுவம்.

இந்தியா, இலங்கைப் பிரச்சனை யில் தலையிட்டு போரை நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்று தமிழ் நாட்டின் பல்வேறு தரப்பினரும் பல்வேறு குரலில் ஏற்ற இறக்கங் களுடன் வலியுறுத்திவிட்டனர். முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன், போன்றோர் தீக்குளித்து தங்கள் இன்னுயிரை மாய்த்தும்விட்டனர். ஆனால், இந்திய ஏகாதி பத்தியமோ, சென்ற வாரம் வரை கள்ள மௌனம் சாதித்து வந்தது. சென்ற வாரம் பிரணாப் முகர்ஜி, இந்தியா இன்னொரு நாட்டின் நிர்வாகங்களில் தலையிட முடியாது என்று முகத்திலடித்தாற் போல் கூறிவிட்டார். தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும், இந்தியா ஆயுதங்கள் எதுவும் கொடுக்கவில்லை என்றும் இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸ் மிகப்பெரிய தியாகம் செய்துள்ளது என்றும், இன்னொரு நாட்டின் விவகாரங்களில் மத்திய அரசு தலையிடாது என்றும் அரைவேக்காட்டுத் தனமாக திரும்பத் திரும்பக் கூறிவருகிறார். தமிழ்நாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கிளைக் கழகமாகவே மாறிவிட்ட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழீழம் எரிந்து கொண்டிருக்கையில் தன் மீதான தமிழக மக்களின் வெறுப்பை அனுதாபமாக மாற்றும் முயற்சியாக மருத்துவ மனையில் தங்கி, அதில் தோல்வியை சந்தித்திருக்கும் தமிழக முதல்வர் கருணாநிதியோ, சகோதர யுத்தம் கூடாது, இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அமைதி வழியில் தீர்வு காணப்பட வேண்டும், இந்தியா இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்கவில்லை என்று பாடிய பாட்டையே திரும்பத் திரும்ப காங்கிரசின் குரலாக பாடிக்கொண்டிருக்கிறார்.

இந்தியா உண்மையிலேயே இலங்கையின் விவகாரங்களில் தலையிட்டதில்லையா? இவர்கள் அனைவரும் மக்களை முட்டாள் களாகவே கருதி, தொடர்நது பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மக்கள், தலைவர்களை விட ஆழ்ந்து சிந்திப்பவர்களாகவும் மிகப்பெரிய அறிவாளிகளாகவும் இருக்கிறார்கள. இவர்களை யாரும் நம்பத் தயாராக இல்லை. இந்திய ராணுவம் இலங்கையில் இருந்து வெளியேறிய அவமானகரமான நிகழ்வுக்குப் பிறகு இந்தியா இலங்கையில் தலையிட்டதில்லை என்பதெல்லாம் சுத்தப்பொய். இந்தியாவின் கண்ணசைப்பு இல்லாமல் இலங்கையில் சிறு அசைவு கூட ஏற்படாது என்பதுதான் உண்மை. அது நேற்றும் இன்றும் நாளையும் இலங்கையை தனது அறிவிக்கப்படாத காலனியாகவே வைத்திருக்கும். அமெரிக்கா விற்கு எப்படி இந்தியாவோ அது போல இலங்கை இந்தியாவுக்கு.

Multi national Army இந்து மகா சமுத்திரமும் அதை அண்டிய நாடுகளும் தென்கிழக்கும் இருக்கும் வரை இந்தியாவின் போர் வெறி ஓயப்போவதில்லை. ஏதோ ஒருவகையில் யாராவது ஒரு தரப்பினர் மூலம் இலங்கையின் நிம்மதியைக் குலைப்பதும். இனவாதத் தீயை ஊதி விட்டு வளர்த்தெடுப்பதுமே இன்றைய இந்தியாவின் இருப்பு. இந்தியாவின் இந்த விருப்பங் களிலிருந்தும் ஆக்ரமிப்பு ஆசையிலிருந்துமே எண்பதுகளில் அவர்கள் பல்வேறு போராளிக் குழுக்களை உருவாக்கினார்கள். தங்களின் விருப்பங்களுக்கு உட்பட்டு அடியாள் வேலைபார்க்கும் கூட்டமாக போராளிக் குழுக்களை மாற்றியதன் விளைவுதான் சகோதரப்படுகொலைகள். அந்தக் கொலைகளின் சூத்திரதாரி இந்தியாவே. இதைப்பற்றி இப்பொழுது காங்கிரசின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் முன்பு தெளிவாகவே கூறிவிட்டார்.

திம்பு பேச்சுக்களின் முடிவில் ஒரு குழுவுக்குத் தெரியாமல் இன்னொரு குழுவுக்கு ஆயுதங்கள் கொடுத்து ஈழத்தின் கிழக்குக் கரைகளில் இறக்குவதும். தங்களின் போலி ராணுவ புரட்சிக்கு ஈழப் போராளிகளை பயன்படுத்துவதுமாக போராளிகளை கைக்கூலிகளாக மாற்றினார்கள். ஈழ மக்களின் விடுதலைப் போருக்காக இந்தியாவின் உதவிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் வந்த விடுதலைப் புலிகளோ இந்தியாவின் அடியாட்களாக மாற மறுத்தனர். விளைவு இந்தியாவின் விருப்பங்களை நிறைவேற்றத் தொடங்கிய குழுக்களுக்கும் ஈழ மக்களின் விடுதலைப் போருக்கு மட்டுமே போராடிய விடுதலைப் புலிகளுக்கும் தவிர்க்க முடியாமல் சகோதரப் படுகொலைகள் துவங்கியது. அன்றைய சகோதரப் படுகொலைகளில் புலிகள் வெற்றி பெற்றார்கள். ஒரு வேளை புலிகள் கொல்லப்பட்டு இன்னொரு அமைப்பு அதில் வெற்றி பெற்றிருந்தால். அந்தக் குழுவால் ஈழ மக்களின் சுதந்திரப் போரை முன்னெடுத்திருக்க முடியாது.

மாறாக இந்தியாவின் அடியாளாக இருந்து இலங்கையின் இன முரணைப் பயன்படுத்தி அந்தப் பிரச்சனையை தீரவிடாமல் நீரூற்றும் இந்தியாவ¤ன் அடியாள் குழுவாகவே இருந்திருக்கும். ஆனால் புலிகள் ஒரு பக்கம் இந்தியாவுக்கு அடிபணியவில்லை. இலங்கைக்கும் அடிபணியவில்லை. விளைவு இந்தியாவால் புலிகளின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆக, இலங்கை ராணுவத்தோடு சேர்ந்து புலிகளை அழித்து விட்டு பழைய பாணியில் ஈழத் தமிழ்த் தேசீய ராணுவம் என்கிற பெயரில் ஆயுதக் குழுக்களை உருவாக்கி இலங்கை அரசை இனப் பிரச்சனையிலிருந்து மீள விடாமல் தன் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கு அது முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதன் விளைவாகத்தான் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரும், சமீப காலங்களில் புதிதாக உருவாகியுள்ள பிள்ளையான், கருணா கும்பல்கள். இதுதான் இந்தியாவின் சதி.

இதற்கு சமீப காலங்களில் பல எடுத்துக்காட்டுகளை கூற முடியும். சர்வதேச முயற்சிகளை குலைத்தது யார்? ஆனையிரவை வென்று ராணுவ ரீதியில் புலிகள் பலம் பொருந்திய நிலையில் இருந்த பொழுது நார்வேயின் அனுசரணையுடன் சமாதான முயற்சிகள் தொடங்கியது. தமிழர் தாயகத்தின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் புலிகள் தங்களின் நீதி நிர்வாக ஆட்சியை நிறுவி இருந்தார்கள். சிங்களப் பேரினவாதி களின் ராணுவ ஆட்சிக்குள் வாழ்வதைக் காட்டிலும் தமிழ் மக்கள் நிம்மதியாகவே புலிகளின் ஆளுகைக்குள் வாழ்ந்தார்கள். ஒரு போராளி அமைப்பிற்கே உண்டான இயற்கையான பலவீனங்கள் எதையும் புலிகள் தங்கள் மக்களிடம் காட்டிக் கொண்டதில்லை. இலங்கை இனப்பிரச்சனையை ஆகக் கூடிய சுதந்திரத்துடன் தீர்த்து விடவே விரும்பினார்கள்.

ஆனால் இந்தியா? இந்தியாவுக்கும் நார்வே முன்னெடுத்த சமாதான முயற்சிகளுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையா? இந்தியா உண்மையிலேயே ஒதுங்கித்தான் இருந்ததா? என்றால் இல்லை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமாதானக் காலத்தில் புலிகளை பலவீனப் படுத்த இந்தியா இலங்கையுடன் கைகோர்த்திருந்தது. இந்த சமாதானக் காலத்தில்தான் மேற்குலக நாடுகள் புலிகள் மீது தடைகளைக் கொண்டு வந்தார்கள். அது எப்படி ? யுத்தம் நடைபெறும் காலத்தில் இல்லாமல், சமாதானக் காலத்தில் பேச்சுவார்த்தை மேஜையில் பிரச்சனைக்குரிய இருதரப்பும் அமர்ந்திருக்கும்போது சமாதானத்தை முன்னெடுக் கிறோம் என்று கூறிக்கொண்டு, அதோடு தொடர்புடைய நாடுகள் புலிகள் மீது எவ்வாறு தடை விதிக்க முடியும் என உங்களால் சிந்திக்க முடியும் என்றால் இந்தியா இலங்கையோடு இணைந்து புலிகளுக்கு எதிராக சர்வதேச அளவில் முன்னெடுத்த துரோகத்தையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

நார்வே முன்னெடுத்த பேச்சு வார்த்தையில் தமிழர் தரப்பு தயாரித்த தீர்வுத்திட்டங்கள் எல்லாமே டில்லி ஆட்சியாளர்களின் அறிவுக்கு அப்பாற்பட்டு நடந்த தில்லை. தயாரிக்கப்பட்ட, முன் வைக்கப்பட்ட எல்லா கோரிக்கைகளுமே, பரிந்துரைகளுமே இந்திய ஆட்சியாளர்களின் பார்வைக்கு முதலில் வைக்கப்பட்டது. அப்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருந்தது பாரதீய ஜனதா கட்சி. ஈழத்தின் அமைதி குறித்த எந்த பார்வையும் இல்லாத பி.ஜே.பி வழக்கம் போல் அதை பிராந்திய நோக்கில் அணுகியது. ஆனால் 2004-மே மாதம் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி சர்க்கார் ஆட்சிக்கு வந்து மன்மோகன் சிங் பிரதமர் ஆனது முதல் நார்வேயின் கைகள் கட்டப் பட்டன. வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பொருளாதார நலன்களில் பிரதான காரணி வகிக்கும் ஏ-9 சாலை மூடப் பட்டதோடு சமாதான முயற்சிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. அத்தோடு இந்தியா கொடுத்த அழுத்தத்தில் இலங்கை முன்னெடுத்த தடை நடவடிக்கைகள் வெற்றியளித்தது.

Ealam Chjldren முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் புலிகள் அமைப்பை மட்டுமல்லாமல், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களையும் முடக்கின. ஈழத்தில் நிலவிய நான்காண்டு கால அமைதி இந்தியாவின் வன்மத்தினால் முடிவுக்கு வந்தது. அதற்குள் கருணாவையும் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து நயவஞ்சகமாக வெளியேற்றி தனது ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் திட்டத்தை இந்தியா வகுத்துக் கொடுக்க அதுவும் இந்தியாவின் விருப்பப்படி ஈடேறியது. கிழக்கு மாகாணத்தை மீட்டு இந்தியாவின் செல்லப்பிள்ளையான பிள்ளையானை ஆட்சியில் அமர்த்தவும் உதவியது. இன்று பிள்ளை யானுக்கு இலங்கை அரசின் ஆதரவு இருக்கிறதோ இல்லை இந்தியாவின் ஆதரவு இருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி என்னும் பெயரில் தன் வியாபாரத்தை கடைபிடித்து வருகிறது இந்தியா. கருணா இலங்கை அரசின் தீவீர விசுவாசி ஆன பின்பு பிள்ளையானை இன்று தன் கைக்குள் வைத்துக் கொண்டு கிழக்கில் கபடியாடிக் கொண்டிருக்கிறது இந்தியா இன்று.

கிழக்கை வென்று வசந்தத்தை பரிசளித்த ராஜபக்ஷேவுக்கு ராணுவ தள வாடங்கள், ரேடார்கள், உளவுக் கருவிகள், பீரங்கிகள், உளவு விமானங்களையும் அதை இயக்க பொறியாளர்களையும் அனுப்பிய இந்தியா தனது தென் பிராந்திய கடல் எல்லையை பெரும் பதட்டத்திற்குள்ளாக்கி அங்கு தன் கப்பல் படையை அடிக்கொன்றாக தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

இன்று வன்னி மக்கள் எதிர் கொள்ளும் படுகொலைகளுக்கு இந்தியாவே காரணம். பல்லாயிரம் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படுவதற்குக் காரணமான இலங்கை ராணுவத்தின் செய்கைகளில் இந்திய இராணுவத்தின் பங்கு மிகப்பெரிய அளவு இருக்கிறது என்று சொன்னால், அதில் உண்மை இல்லாமல் இல்லை. இந்தியா இப்பொழுது தான் மிகப்பெரிய வெற்றியை நெருங்கிக் கொண்டி ருக்கிறோம் என்றும் இலங்கையின் மொத்த பிரதேசமும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து தனக்குக் கிட்டும் என்றும் கனவு கண்டு கொண்டிருக்கிறது. இந்திய அரசுக்கு முக்கிய இடைஞ்சலாக இருந்து கொண்டிருப்பது, முல்லைத் தீவில் குற்றுயிரும் குலையுயிருமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டரை லட்சம் தமிழர்களும், இந்தியாவால் இன்று வரை வீழ்த்தப்பட முடியாமலிருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பும்தான். ஆகவே இடையில் இருக்கும் தடைகளை அகற்றி தனது கனவை நிறைவேற்றுவதற்கு முழு மூச்சாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது. புலிகளைச் சொல்லி இன்னும் எத்தனையாயிரம் மக்களைக் கொன்றொழிக்கப் போகிறது இந்தியாவும் இலங்கையும் என்று தெரியவில்லை. அப்படியே புலிகளை அழித்து விட்டாலும் இந்த பிரச்சனை தீர இந்தியா விரும்புமா?

இதுதான் இன்றைய தினத்தில் பிரதானக் கேள்வி. விரும்பாது. ஏனென்றால், ஈழத்தின் பூகோள அமைப்பும் அதன் கடற்கரைத் துறைமுகங்களும் இந்திய ஏகாதிபத்திய முதலாளிகளின் கழுகுக் கண்களை நீண்ட காலமாக உறுத்திக் கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களின் முதலீடுகளை பல்கிப்பெருகச் செய்வதற்கு ஏற்ற சொர்க்க பூமியாக இலங்கையையும், குற¤ப்பாக தமிழீழப்பகுதிகளையும் நினைத்துக் கொண்டி ருக்கிறார்கள.

அதற்கு அவர்களுக்கு இடையூறாக இருப்பது விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டும்தான். ஆகவே, விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கு என்ன விலையேனும் கொடுப்பதற்கு இநதிய ஆளும் வர்க்கம் தயாராக இருக்கிறது. இதன் மூலம் தங்களால் நீண்ட காலமாக வீழ்த்தப்பட முடியாத எதிரியான விடுதலைப் புலிகளை ஒழித்தல், இலங்கை அரசை தனது காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருதல், தனக்கு விசுவாசமான ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு ஏற்ற சாம்ராஜ்யத்தை ஈழத்தில் உருவாக்குவதற்கு உதவி புரிதல் என பல முனை வெற்றிகளை ஈட்ட முடியும் என கருதுகிறது. அதற்காக ஆயுத உதவி, தொழில் நுட்ப உதவி, பண உதவி என எதையும் செய்யத் தயாராக இருக்கிறது. ராஜபக்சே அரசு அதைப் பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்கிறது.

Ealam Tamils ஆனால் இந்த நேரத்தில் தாய்த் தமிழகமோ 7 வீர மறவர்களின் இன்னுயிரைப் பலிகொடுத்து நெருப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. அதைப் பயன்படுத்தி மக்கள் எழுச்சியைக் கொண்டுவர வேண்டிய தலைவர்களோ உறங்கிக் கொண்டிருக் கிறார்கள். ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டி தி.மு.க. அரசைக் கலைத்து துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கெண்டிருக்கும் தி.மு.க.வோ இன்று ஈழத் தமிழர்களுக்காக மிகப்பெரிய தியாகத்தை தாம் செய்திருப்பதாக கூறிக்கொண்டு அதே காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து, தமிழர்களைக் கொல்லும் காங்கிரசின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் மக்கள் எல்லாவற்றையும் அமைதி யாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ராஜீவ் கொலைக்குப் பிறகு ஈழத் தமிழருக்கு என்ன நடந்தாலும் தமிழக மக்கள் மௌனிகளாக சகிப்பார்கள். ஏனென்றால் நாம் ஆகப்பெரிய விலை கொடுத்தி ருக்கிறோம் என்றுதான் காங்கிரஸ் கட்சி முதலில் நினைத்தது. ஆனால் முத்துக்குமார் கொழுத்திய நெருப்பு காங்கிரஸை சுட்டுப் பொசுக்கியதோடு அதன் துரோகத்துக்கு துணை நிற்கும் நபர்களையும் இன்று தனிமைப்படுத்தி இருக்கிறது.இந்திய ராணுவ முகாம்கள் முற்றுகைக்குள்ளாகின்றன,மத்த�
��ய மாநில அரசு அலுவலகங்களில் அதிக எண்ணிக் கையிலான பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது இலங்கை அரசின் எல்லா அலுவலகங்களுக்கும் நூற்றுக்கணக்கான போலீசாரைக் கொண்டு பாதுகாப்புக் கொடுத்திருக்கிறார்கள். அதை எல்லாம் விட காங்கிரஸ் கொடியை யாரும் எரிக்கக் கூடாது என நடந்த கைதுகளை எல்லாம் மீறி தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் காங்கிரஸ் கொடிகள் தீக்கிரையாக்கப்படுகிறது. கொடிக்கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. சீர்காழி ரவிச்சந்திரன் என்கிற காங்கிரஸ் நிர்வாகி தீக்குளித்து மாண்ட பிறகு தமிழகத்தில் எங்காவது காங்கிரஸ் கொடிக்கம்பம் இருந்தால் அதற்கும் இரண்டு போலீசைப் போட்டு கொடிக்கம்பத்துக்கு காவல் கொடுத்திருகிறார்கள். இது மாற்றத்திற்கான காலம். எண்பதுகளில் கிளர்ந்த மக்கள் இனி ஈழ மக்களுக்காக கிளரமுடியாது என்ற எண்ணங்கள் எல்லாம் பொய்யாய் பழங்கதையாய்ப் போனது. எண்பதை விட ஈழ நெருப்பு தமிழகத்தை தகிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

தமிழர்களைக் கொன்றொழிக்கத் துணை போகும் காங்கிரஸ் கட்சிக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் பாடை கட்டுவார்கள். துணைபோகும் தி.மு.க.விற்கு துரோக வரலாற்றின் அத்தியாயத்தில் முக்கிய பக்கங்களை ஒதுக்குவார்கள். ஆனால், இந்தியாவின் கனவு ஈழத்தில் நிறைவேறுமா? என்று பார்த்தோமானால், ஈழத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை வீழ்த்த முடியாது. பல டக்ளஸ் களையும், ஆனந்தசங்கரிகளையும், பிள்ளையான் களையும் இந்தியா உருவாக்கும் அதே நேரத்தில் ஈழத்தில் பிறந்த தாயருத்தி பத்து பிரபாகரன்களை உருவாக்கி ஈழ மண்ணுக்கு பரிசளிப்பாள். இந்தியாவால் டக்ளஸ்களை மட்டுமே உருவாக்க முடியும். ஆனால் வன்னியோ புதிய போராளிகளை ஈன்றெடுக்கும். இந்தியா எத்தனை மாய்மாலங்கள் செய்தாலும் அதன் கனவு நிறைவேறாது

Unknown said...

Please go to following link .

Vijay Tv is realy good

http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-06-18/1546-2009-05-08-00-05-48

Unknown said...

Tamils should think a alternative way. Nothing gonna happen, if you yelling 'we want eelam'.
So many tamils still support LTTE.
But Tamils, those who are in Vanni do not support them.
Sinhala people are helping those IDPs. But how about Tamils?
Didn't you see the videos showing LTTE's real face?
Come on guys...
This your leader's real face...
See how he enjoyed his life, despite Tamils are suffering...
http://defence.lk/new.asp?fname=20090506_Album2

Unknown said...

நன்றி திரு லோசன் அவர்களே.

எனது கட ந்த மடல். மின்னஞ்சலில் எனக்கு வ ந்த மடல்.

Anonymous said...

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி பார்த்தீர்களா?
சொல்ல வார்த்தை இல்லை
--------------------------
ஓடுவது சுத்த தமிழ் இரத்தம்! .பார்த்து அழுததுதான் மிச்சம் எம்மால் என்ன புடுங்க முடியும் இங்கே.

ஈழச்சோழன் said...

தங்க முகுந்தா!

நீர் எந்த உலகத்தில் ஐயா இருக்கிறீர்?.

"ஃஃஃஅவர்கள் உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு என்று சொல்லிவிட்டு இன்று தப்பி ஓடி தஞ்சம் கேட்பது ஒருபுறம்! "ஃஃஃஃஃ


இத்தனை ஆயிரம் புலிகளில் உங்கள் இராணுவத்திடம் (பொட்டை பயலுகள்) எத்தனை புலிகள் ஐயா தஞ்சம் கோரியிருக்கிறார்கள். இதுவரைக்கும் உடம்புக்கு முடியாத இரண்டு கிழட்டு புலிகளை மட்டுமே உங்களால் பிடிக்கமுடிந்தது. பிறகு நீங்கள் என்னத்தை கதைக்கிறீங்கள்.


ஃஃஃஃ"1985இல் தமிழர் இருந்த நிலையை விடக்கீழ்நிலைக்கல்லவா இந்தப் போராட்டம் கொண்டுவந்துவிட்டிருக்கிறது!"ஃஃஃஃ

புலி இன்று தோல்வியடைந்தாலும் இன்று உலகநாடுகள் முழுவதும் எங்கள் பிரச்சனையே முதன்மை பொருள். இப்படித்தான் 1985 இல் இருந்ததா?. நானை முழுப்புலியும் செத்து காவியமாகி விட்டாலும் புலிகள் இருக்கும் போது கூட தர மறுத்ததையும் சிங்களவன் தமிழனுக்கு கொடுக்கவேண்டிய நிலை இப்போது. வெளிநாட்டு (மேற்கத்தைய) அரசுகள் எல்லாம் தற்போது உணர்வால் தமிழர்கள் பக்கமே. ஆனாலும் சில பொதுவான அரச உறவுகளில் உள்ள நடைமுறை சிக்கல்கள் அவர்களை ஒரு வரையறைக்குள் வைத்திருக்கின்றன.

புலிகளின் கட்டமைப்புக்கள் அழிந்தாலும் அவர்கள் வென்றுவிட்டார்கள்.

தங்கராஐ் said...

இர்ஷாத்!

நீங்கள் சார்ந்த இனம் இராணுவத்தோடு சேர்ந்து எங்களுக்கு செய்ததையெல்லாம் மறக்க முடியுமா?. ஒரே மொழியை பேசுகின்றோம் என்ற ஒரு உணர்வுகூட இல்லாமல் உங்கள் ஆட்கள் செய்த அநியாயங்கள் மறக்கமுடியுமா?. எங்களுக்கு கஸ்டமான நேரத்தில் ஆறுதலாக உறவாக இருந்திருக்க வேண்டிய நீங்கள் எப்படியெல்லாம் இருந்தீங்க?. எப்படியெல்லாம் தமிழனை வெருட்டி உழைத்தீர்கள்?. புலி உங்களை துரத்தினால் நீங்கள் புலிகளை துரத்துவதோடு நின்றிருக்க வேண்டுமா இல்லையா?.

இப்ப தமிழனுக்கு செய்ய வேண்டிதையெல்லாம் சிங்களவர்கள் செய்து முடித்த விட்டார்கள். அடுத்தது...? ஆணைக்கொரு காலம் வந்தால' பூனைக்கும் ஒரு காலம் வரும்ஃ பொறுத்திருப்போம'ஃ

Anonymous said...

Tamils should think a alternative way. Nothing gonna happen, if you yelling 'we want eelam'.
So many tamils still support LTTE.
But Tamils, those who are in Vanni do not support them.
Sinhala people are helping those IDPs. But how about Tamils?
இதைத்தான் சொல்லுவது விளக்குமாத்தால் அடித்துவிட்டு குஞ்சமும் குடையும் கொடுப்பது என்றோ ?

இரா.வி.விஷ்ணு (ராஜ் ) said...

வீட்டுக்கு வந்து கணணிக்கு பக்கத்தில் அமர்ந்தவுடன் வீட்டார் முதலில் பார்க்கச்சொன்னது உங்களில் யார் அடுத்த பிரபுதேவா! என்கிற நிகழ்ச்சியைத்தான் இன் நிகழ்ச்சியை நான் நேரம் கிடைக்கும்போது எப்போவாவது பார்ப்பேன். பிறேம்கோபாலை என்ன சொல்ல அவரின் உணர்வுக்கு தமிழனாய் தலைவணங்குகிறேன்.அழுகையை மறந்து சில நாட்களாகிவிட்டது இன்று அழ வைத்திருக்கின்றனர் பிறேம்கோபால் குடும்பத்தினர். உறவுகளின் உயிர், வாழ்க்கை, சந்தோஷம், கதி அனைத்தையும் இழந்த {*உண்மையில் இன்று பாதிக்கப்பட்டிருக்கின்ற தாயக வாழ் தமிழர்..} அந்த மனிதனின் உண்மை மனநிலையை வெறும் 10 நிமிடத்துக்குள் உரணர்த்தியிருக்கின்றார். புலம்பெயர் தமிழரின் பல வருட போராட்ட உணர்வையும் மிஞ்சி நிற்கிறது இவர் படைப்பு. இழப்பின் ஜதார்த்தத்தை காட்டியிருக்கிறார். எனக்கு ஒன்று பூரியவில்லை அரசியல் சார்புள்ள பல இணையத்தளங்கள் இவ் வீடியோவை லிங் கொடுத்து வெளியிட்டுள்ளன "என்ன உணர்வுகனையும் அரசியலாக்க ஆயத்தப்படுத்துகிறார்களா" உங்கள் பக்கசார்பு குப்பை அரசியலால் உண்மை உணர்வுகளை கொச்சைப்படுத்தி விடாதீர்கள் பிளைப்புவாதிகளே. இரக்க உணர்வு தழிழ் உணர்வு அனைத்துமே தமிழர்க்கு கூடவே பிறந்தது {{பணத்துக்கும் பிழைப்புக்கும் ஆதிக்கத்துக்குமாய் அரசியல் வாதிகளானவர்களையும் அவர்களின் தெண்டர்களையும் தவிர்ந்து}} அது இறக்கும்வரை கூடவே வரும். லோஷன் அண்ணா கேட்டது போல் தமிழர் அவலத்துக்கு என்று முற்றுப்புள்ளி!! விரைவில் வர பிராத்திப்போm இயலுமானார் அல்லல் பட்டவர்க்கு ஏதோ ஒரு வழியில் உதவ முயற்சிப்போம்.

ஈழச்சோழன் said...

Mr True Tamil (?) !

Please read this article if u have time. Please

http://kundumani.blogspot.com/2009/05/blog-post_08.html

தங்க முகுந்தன் said...

சர்வதேசமே இன்று வாய்மூடி மௌனியாக நிற்கிறது.

நீதி கோருபவன் தான் நீதி வழங்க ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற தமிழரசுக்கட்சித் தலைவர் செல்வாவின் நிலையில் இன்று யார் நிற்கிறார்கள்?

இர்ஷாத் குறிப்பிட்டதைத்தான் நான் முன் மொழிகிறேன்!

வடக்கு வாழ் முஸ்லிம் சகோதரர்களுக்கு என்ன நடந்தது!

இந்தியப் பிரதமருடைய கொலை துக்ககரமானது என்றார்கள்!

ஏகப் பிரதிநிதிகள் என்று சொல்லி இன்று மக்களை (ஏதும் இல்லாமல்) ஏதிலியாக்கிய பெருமையே நமது ஈழப் போராட்டத்துக்கு உண்டு!
கொஞ்சம் வெளியில் வந்து பிபிசியையும் ஏனைய ஊடகங்களையும் - நோர்வேத்தூதுவர் எரிக் அவர்களுடைய கருத்தையும் அறியுங்கள்!

தங்க முகுந்தன் said...

எமது பிழைகளைக் கொஞ்சம் நாம் சிந்தித்து ஆறாவது அறிவைக் கொண்டு திருத்த வேண்டும். இல்லை நான் செய்வதே சரி என்றால் ஒன்றும் நடவாது!
1984இல் வெலிக்கடை படுகொலையின் ஓராண்டு நினைவுக்கு கூட்டணி
நடத்திய உண்ணாவிரதத்தை குழப்பினார்கள். விஜிதரனுடைய பல்கலைக்கழக உண்ணாவிரதத்தை குழப்பியடித்து கடத்திக் கொலை செய்தார்கள். பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக வில்லுப்பாட்டும் தெருக் கூத்தும் வைத்துவிட்டு பிரேமதாசாவுடனும் பேசினார்கள். பின்பு குண்டு வைத்தார்கள். 2002இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திய ரணிலுக்கும் வாக்குப் போடாமல் மௌனமானார்கள். பாராளுமன்றப் பதவிகளை தூற்றி அவர்களைக் கொன்று ஒழித்துவிட்டு – நியாயமாக நீதிக்காகப் போராடிய ஒரு கட்சியை உடைத்தார்கள்! தாங்களும் பின்னர் பிரிந்தார்கள். நீலனின் தீர்வுத் திட்டம் உகந்தது என்று சொல்லிய அரசியல் ஆலோசகர் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளி வைக்கப்பட்டார். இவையெல்லாவற்றுக்கும் மேலாக என்னால் சொல்ல முடிந்தது ஒன்று! கடவுள் தான் எம்மைக் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா சொல்லியதற்குக் காரணம் என்ன தெரியுமா!
அவரது காலத்தில் தான் சிவகுமாரன் மரணமடைந்ததும் வங்கிக் கொள்ளைகள் இடம்பெற்றதும் ஆயுத கலாச்சாரம் உருவெடுத்ததும்! வன்முறை எமக்கு ஒத்துவராது என்று தீர்க்கதரிசனமாக அறிந்திருந்த தந்தையின் சொல்லு இன்று எந்தளவுக்கு நியாயமானது என்று சிந்திக்க வேண்டுகிறேன்!

Hamshi said...

Mahinda Rajapaksha uses the truthless measures to suppress the war in tamilpeople.Including Indian gover and support them.

mano said...

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி பார்த்தீர்களா?

பார்த்து அழுததுதான் மிச்சம் எம்மால் என்ன புடுங்க முடியும் இங்கே.

இர்ஷாத் said...

தங்கராஐ் நான் கேட்கவேண்டியதெல்லாம் நீங்கள் கேட்கிறீர்கள்..

//நீங்கள் சார்ந்த இனம் இராணுவத்தோடு சேர்ந்து எங்களுக்கு செய்ததையெல்லாம் மறக்க முடியுமா?//

ஆங்கிலேய அரசுடன் போராடி சிங்கள இனவாதிகளை விடுவித்தது யார் என்று தெரியுமா?

//ஒரே மொழியை பேசுகின்றோம் என்ற ஒரு உணர்வுகூட இல்லாமல் உங்கள் ஆட்கள் செய்த அநியாயங்கள் மறக்கமுடியுமா?//

யாழ்பாணத்தில் துரத்தியதையா அல்லது சமீபத்தில் குரங்குபாஞ்சான் அல்லது முதூரில் துரத்தியதையா சொல்கிறீர்கள்?

//எங்களுக்கு கஸ்டமான நேரத்தில் ஆறுதலாக உறவாக இருந்திருக்க வேண்டிய நீங்கள் எப்படியெல்லாம் இருந்தீங்க?//

அந்த நேரம் நீங்க செஞ்சிருக்க வேண்டியது.. ஆனால் துரத்தும்போது மௌனித்து போயிருந்தீர்களே?

//எப்படியெல்லாம் தமிழனை வெருட்டி உழைத்தீர்கள்?//

கொள்ளையடித்ததை சமாதானம் பேசும்போது திருப்பி கொடுத்திருக்கலாம்..

//புலி உங்களை துரத்தினால் நீங்கள் புலிகளை துரத்துவதோடு நின்றிருக்க வேண்டுமா இல்லையா?//

ஆமாம்.. நீங்களும் புலிகளை விட்டு தள்ளி இருந்திருக்கலாம்.. Automatic ஆக புலிகள் மட்டும் துரத்தபட்டிருப்பார்கள்..

பழைய கதை தேவயில்லை.. ஒற்றுமையாக இருப்போம் என்று ஒரு பின்னூட்டம் இட்டால் மீண்டும் ஆரம்ப புள்ளிக்கு கொண்டு வந்து விடுகிறீர்கள்..

Past is Past. Lets build together...அதற்கு உங்கள் மற்றும் ஊடக உதவி தேவை என்று மட்டுமே நான் கூற, நீங்க எங்க கொண்டு வாறீங்க? அதை செய்வோமா?

Anonymous said...

புலிகள் மீலாத் விழாவில் நடந்த தாக்குதலை மறுத்திருந்தார்களா? இத்தாக்குதல் தமிழ் ஊடகங்களால் கண்டிக்க பட்டதா? யாராவது பதிவெழுதினார்களா? தெரிந்தால சொல்லவும்..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner