May 21, 2009

எது உண்மை? யாரை நம்புவது?

இந்தப் பதிவு சில வேளை உளறலாகவோ , புரியாத மாதிரியாகவோ இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.. வழமையான பதிவு அல்ல இது.. தட்டச்சிக் கொண்டு போகிறபோக்கில் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டுகிறேன்..

எச்சரிக்கையாக இரு.. கவனமாக பதிவிடு என்று மனம் எச்சரித்தாலும் உணர்வுகள் விடுவதாக இல்லை..

நான்கைந்து நாட்களாக மனதில் குமுறியதை கொட்டுகிறேன்..

திங்கட்கிழமைக்குப் பிறகு எனக்கு வலையுலகப் பக்கம் வரவே பிடிக்கவில்லை..

எதை எழுதுவது.. எழுத பல விஷயம் இருந்தாலும் எழுத இருந்தால் அழுகை தான் வருகிறது.. எல்லாம் முடிந்து போனதே.. இனி என்ன..

எத்தனை ஆயிரம் உயிர்களைப் பலிகொடுத்து, எத்தனை வருடங்களை வீணாக்கி கண்ட பலன் என்ன..

இழவு வீடாக்கி புலம்ப எனக்கு விருப்பம் இல்லை.. அதுபோல உறுதியாகத் தெரியாமல் வீண் நம்பிக்கை அளிக்கவும் மனம் உடன்படவில்லை..

என்ன வாழ்க்கை இது.. எப்போதும் பயந்துகொண்டே வாழும் இந்த இலங்கை வாழ்க்கை எப்போதையும் விட இப்போது கசக்கிறது.. வெளிப்படையாக எழுதக் கூடிய, உணர்வுகளைக் கொட்டக்கூடிய புலம்பெயர் மற்றும் தமிழக நண்பர்களைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது.. மனம் விட்டு அழக்கூட முடியாமல் நாங்கள்..

என்ன நடக்குது என்று ஒன்றுமே புரியவில்லை..

இருக்கிறாரோ இல்லையோ, முப்பது வருட கால உரிமைப் போராட்டம் முடிவுக்கு வந்ததாகவே கருதவேண்டியுள்ளது. சிலர் இல்லை என்று கோபித்து மறுத்தாலும் உண்மை இதுதானே..

நம்ப முடியவில்லை.. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்து விட்டதைப் போல.. ஒரு பெரும் சாம்ராஜ்யமே சரிந்து விழுந்ததைப் போல..

நம்புவதா நம்பாமலிருப்பதா என்று எனக்கு தெரியவில்லை.. ஒரு சகாப்தம் சரிந்ததாக இங்கே இன்னமும் கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள்,எழுச்சிப் பாடல்கள், கிரிபத் எனப்படும் பால்சோறு வழங்கல்,பட்டாசுகள் என்று மகிழ்ச்சியும் உற்சாகமும் கரை புரண்டோடோடுகிறது..

இல்லை அண்ணர் இன்னமும் உயிருடன் எங்கோ இருக்கிறார் என்று மறுபக்கம் செய்திகள், ஆதாரங்கள் காட்டிப் பரபரக்கின்றன.. எதை நம்புவது?

யுத்த முடிவு, ஈழத்தின் முடிவு, DNA, ஒரு கொடியின் கீழ், இனி யாரும் சிறுபான்மை இல்லை, தப்பிவிட்டார் இப்படி பல விஷயங்கள் ஒன்றாகப் போட்டு குழப்பி எடுத்தாலும், மனம் நிறைய ஒரு மிகப் பெரிய வெறுமை..

தயவு செய்து யாராவது உண்மை சொல்லுங்களேன் என்று கெஞ்சி அழவேண்டும் போல மனம் தவிக்கிறது..

சிறுவயது முதல் நேசித்து மனதில் இடம் கொடுத்து வைத்த ஒருவரை இழந்துவிட்டோம் என்று எண்ண மனம் இடம் கொடுக்குதில்லை.

87இல் சுதுமலையிலும், பின்னர் வன்னியில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டிலும் நேரிலே கண்டிருக்கிறேன்.. கண்களால் உள்வாங்கி மனதிலே இருத்திக் கொண்ட மானசீக கதாநாயகன்.. இன்னும் பலப்பல..

எல்லாமே முடிந்து போனதா? இல்லாவிட்டால் அப்படியொன்றும் பயப்படுகிற மாதிரி நடக்கவில்லையா?

சில விஷயம் எனக்குப் புரிந்த மாதிரி இருந்தாலும் உண்மை எது என்று ஆழமாக உள்ளிறங்கி அலச மனசு இடம் கொடுக்கவில்லை..
மனதுக்கு துன்பம் தருவதாக எதுவும் நடந்திருக்கக் கூடாது என்றே இன்னமும் என் மனம் எண்ணுகிறது.

மனம் நிறைய கேள்விகள் போலவே ஆழமாக அடுக்கடுக்காக அப்பிய கவலையும் விரக்தியும்..

பெரிதாகப் பிரார்த்தனை செய்யாத எனக்கு அன்று முழுவதும் கண்ணீருடன் பிரார்த்திக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.. எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்ற பதற்றமும் கவலையும் ஒரு பக்கம்.. மனதில் உள்ள எண்ணங்களை வானொலியில் பேசும்போதோ அலுவலக சக சிங்கள நண்பர்களுடன் பேசும்போதோ காட்டிக் கொள்ளக் கூடாது என்ற மனவோட்டம் ஒருபக்கம்..

நீண்ட நாட்களுக்குப் பின் பலமுறை நான் அழுத்தும், அலுவலகத்தில் முதல் தடவை நான் அழுததும் (யாரும் பார்க்காமல்) இந்த ஒரு சில நாட்களில் தான்..

இந்த சில நாட்களில் எங்கள் அலுவலக சிங்கள நண்பர்கள் நடந்துகொண்ட விதம் உண்மையில் மனிதாபிமானமானது.. என்ன தான் வெடி கொளுத்தியும் சிரித்தும் ஆர்ர்ப்பரித்தும் யுத்தத்தில் வென்ற மகிழ்ச்சியைக் காட்டினாலும் எங்களுடன் பேசும் போது பக்குவமான வார்த்தைகளைக் கையாண்டார்கள்.

என்ன இருந்தாலும் 'அவர்கள்' உங்கள் அன்புக்குரியவர்கள் என்பதை உணர்த்தியது அவர்கள் எமக்கும் எங்கள் உணர்வுகளுக்கும் அளித்த கௌரவம்.

அவர்களிலும் ஒருசிலர் இந்த கொலையையும், காட்டப்பட்ட சடலத்தையும் இன்று வரையும் நம்பவில்லை.

நிகழ்ச்சிகள் செய்ய மனம் இடம் தரவில்லை.. நாம் ஊடகவியலாளர்கள் தான்.. பொதுப்படையானவர்கள் தான்.. நடுநிலையாளர்கள் தான்.. அதற்காக சொந்த வீட்டில் இழவு நடக்கும்போது சந்தோஷமாக பாடல் போட்டு சிரித்து நகைச்சுவை சொல்லிக் கொண்டே நிகழ்ச்சி செய்ய முடியுமா?

பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிவது அறிந்து கொண்டே நிகழ்ச்சிகள் வழங்கியவர்கள் தான்.. ஆனால் இது முற்றிலும் வேறுபட்டதே..

பொறுக்க முடியாமல் 'தேசிய விடுமுறை தினமான' நேற்று வீட்டிலே நின்று கொண்டேன்..

இணையத்தில் மேய்ந்த போது எத்தனை விதமான எத்தனை எத்தனை பதிவுகள்.. எத்தனை கட்டுரைகள்..

சிலவற்றை வாசித்தபோது கண்ணீர்.. சிலவற்றை வாசித்தபோது பெருமிதம்.. சிலவற்றை வாசித்தபோது நம்பிக்கை கலந்த நிம்மதி..

இந்திய சகோதரர்களே நன்றிகள்.. உங்கள் உணர்வுகளுக்கும், எம்மைப் புரிந்து கொண்டமைக்கும்..

உங்கள் யாருடைய பதிவுகளுக்கும் பின்னூட்டம் நான் இடவில்லை.. மன்னியுங்கள்.. வாசித்தபின் பின்னூட்டமிட வார்த்தைகள் இல்லை என்னிடம்..

மீண்டும் மீண்டும் நண்பர்கள் மட்டும் உரித்தாகட்டும் உங்கள் எல்லோருக்கும்.. உங்களுக்கு சொல்வதற்கு நன்றி மட்டுமே என்னால் தரக்கூடிய உயர்ந்த வார்த்தைகள்..
இங்கிருந்து கொண்டு எங்களால் இவை மட்டுமே செய்ய முடியும் நண்பர்களே..

எமக்காக எழுந்து நின்றவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று இறைவன் என்ற ஒருவன் இருப்பானேயானால் அவனிடம் இப்போது உண்மையாகவே பிரார்த்திக்கிறேன்.. எந்த இழப்பையும் விரும்பாத எனக்கு இந்த இழப்பை தாங்கும் வலிமை கிடையாது..

உண்மையான உண்மைகள் இனி எப்போது வெளிவருமோ யாருக்கும் தெரியாது..

ஆனால் இனி நடக்கப்போபவை என்ன?

எதற்காக இத்தனை இழப்புக்களை நாம் சந்தித்தோமோ அவை கிடைக்குமா? (சற்றுக் குறைவான சமாதானம், சந்தோசம் கிடைக்கலாம்.. ஒரு குறைந்தபட்ச நம்பிக்கை தான்)

வரலாறுகள் பல திரிபு படுத்தப்பட்டு, மரணித்தவர்கள் மாபெரும் குற்றவாளிகள் ஆக்கப்படலாம்.. பல உண்மைகள் பிணங்களோடு பிணங்களாக குழி தோண்டிப் புதைக்கப்படலாம்.. நீதி நியாயங்கள் உரிமைகளோடு மறைக்கப்படலாம்.. குரல் கொடுக்க ஒருவரும் இல்லாமல் போகலாம்.. உரிமைகளைப் பங்கெடுக்கவும், தலைமை தாங்கவும் பலர் தலையெடுக்கலாம்.. பலரின் தலைகளும் எடுக்கப்படலாம்..

இன்று வரை வருகின்ற செய்திகள் எல்லாமே குழப்பமாக இருக்கின்றன.. உண்மை எப்போது வெளிவந்தாலும் ஒரு பக்கம் முற்றுப் புள்ளி பலமாகவே தெரிகிறது.. இனி வெளி அழுத்தங்கள் எவையுமே ஒன்றும் செய்ய முடியாது..

அடுத்தகட்டம் என்னவென்று எங்களால் சொல்ல முடியவில்லை.

நடப்பவை நடக்கட்டும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பதைத் தவிர வேறு என்ன தான் செய்ய முடியும்..


பி.கு -
இதை காலையிலிருந்தே பலவாறு யோசித்து, குழம்பியபடி தட்ட்டச்சிக் கொண்டிருந்த போதே பல்வேறு இணைய செய்திகளையும் வாசித்தேன்.. சிங்கள சக ஊழியர்களும் அந்த செய்திகள், படங்கள் பார்த்து கொஞ்சம் சந்தேகம், கொஞ்சம் அச்சம் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.. 'இறக்கவில்லை இருக்கிறார்' என்ற தலைப்போடு படத்தோடு பரவும் மின்னஞ்சல் நாளை தலைப்பு செய்தியாகலாம்..

நாளை இலங்கையில் யுத்த வெற்றி பெற்ற படையினரை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற இருக்கும் நிலையில் இந்த செய்திகள் (குறிப்பாக தமிழ்வின், நக்கீரன்) இலங்கையில் பெரும்பான்மையினர் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் எவ்வாறானதாக இருக்கும் என்று எனக்கு யோசிக்க முடியவில்லை.

இதற்கிடையில் இன்று ராஜிவ் காந்தியின் நினைவு தினம்.. இன்று காலை அதை வானொலியில் சொன்ன போது ஆழமான பெருமூச்சொன்று வந்தது.

இன்று 21ஆம் திகதி.. அண்ணர் இறந்ததாக செய்தி வந்தது 18ஆம் திகதி.. விதியா? திட்டமிட்ட சதியா?74 comments:

Anonymous said...

கண்களால் உள்வாங்கி மனதிலே இருத்திக் கொண்ட மானசீக கதாநாயகன்.. வீரன்.. இன்னும் பலப்பல..

Anonymous said...

நண்பா... கலங்க வேண்டாம்... கண்ணீர் மறைப்பதால் அதிகம் தட்டச்ச முடியவில்லை...

நம்பிக்கையுடன் இருப்போம்... ஈழமாக இருந்தாலும் தமிழகமாக இருந்தாலும் உண்மையான தமிழருக்கு அவர் உடன் பிறவா அண்ணன்தான்... இந்த சமூகத்தின் நிரந்தரத் தலைவன்தான்...

அண்ணன் இருக்கிறார்... நிச்சயம் வருவார். இதற்கு எந்த சான்றும் தேவைல்லை... எந்த டிஎன்ஏ முடிவும் தேவையில்லை. நம்புவோம்!

Vinojasan
envazhi@gmail.com

Unknown said...

முடியாது . இருக்கவே முடியாது.

மனம் பதறுகிறது. என்ன செய்ய ? எதை நம்ப ?

தமிழகத்திலும் ஒரு காலத்தில் நடந்த நம்பமுடியாத , நம்ப
வேண்டியதான ஒரு நிகழ்வு போல இது தெரிகிறது.(சந்தனக்காடு)

நக்கீரனுக்கு நன்றி.

Anonymous said...

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

எனது அலுவலகத்திலும் எந்த ஒரு சின்ன செய்திக்கும் என்னிடம் வந்து ஏதாவது கருத்துக் கேட்கும் சிங்கள நண்பர்கள் அன்றிலிருந்து இப்பிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர்களுக்கும் புரிந்திருக்கிறது எங்கள் நிலை.

சந்தனமுல்லை said...

கவலைப்படாதீர்கள் லோஷன்! நம்பிக்கையுடன் இருப்போம்!!

REFLEX said...

ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பம். உங்கள் பதிவே இன்று எல்லோருடைய மனநிலை. அவர் திரும்பி வருவார் என நம்புவோம்.

யாழ் Yazh said...

உண்மை இதுதான்
ஒவ்வொரு தமிழனின் உள்ளக்குமுறல் இதுதான்
அது karunanithi யாக இருந்தாலும்......

நம்பிக்கையுடன்

SUBBU said...

:(((((((((((((9

குடந்தை அன்புமணி said...

தங்களின் பதிவை படிக்கவே கொஞ்சம் நேரமானது. அந்த அளவுக்கு இடையில் நிறத்தி நிறுத்தி படித்தேன். சக ஊழியர்களின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. சமூக பொறுப்புகளுக்கு வந்தவர்களுக்கு மனிதம் பொதுவானதுதானே...இறந்தது பொய் என்றே நம்புகிறோம். பொய்யாக இருக்கவே விரும்புகிறோம்.

கானா பிரபா said...

ஊர்வலங்கள்,எழுச்சிப் பாடல்கள், கிரிபத் எனப்படும் பால்சோறு வழங்கல்,பட்டாசுகள் என்று மகிழ்ச்சியும் உற்சாகமும் கரை புரண்டோடோடுகிறது..
//

இவை மட்டும் போதுமே இன்னும் எங்கள் பிரச்சனை ஓயவில்லை என்று, இனிமேல் தான் இன்னும் பல சவால்களையும், சோதனைகளையும் கடக்க வேண்டும், இப்படியான செய்திகள் ஒரு சோர்வைக் கொடுத்தாலும் நாம் செய்ய வேண்டிய பணிகள் முன்னே மலையளவாக இருக்கின்றன,

தீப்பெட்டி said...

என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியவில்லை...
மன உறுதிதான் முக்கியம்.. தளர வேண்டாம்..
எம்மக்கள் மீண்டுஎழுவீர்கள் .....

Anonymous said...

நம்புவதா நம்பாமலிருப்பதா என்று எனக்கு தெரியவில்லை.. ஒரு சகாப்தம் சரிந்ததாக இங்கே இன்னமும் கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள்,எழுச்சிப் பாடல்கள், கிரிபத் எனப்படும் பால்சோறு வழங்கல்,பட்டாசுகள் என்று மகிழ்ச்சியும் உற்சாகமும் கரை புரண்டோடோடுகிறது..
http://1.bp.blogspot.com/_Ej-f-HNpkUM/ShTPGuIYu1I/AAAAAAAAAdU/gwuD3jYozjY/s1600-h/scan.jpg

d ni n w

Anonymous said...

அண்ணன் உயிரோடு இருந்தாலும் முப்பது வருடங்களுக்கு பின் நாம் இருப்பது அதே இடத்தில்.. இல்லை இல்லை minus பல்லாயிரம் உயிரிழப்புகளும் கோடிக்கணக்கான சொத்தளிப்புகளும்.. இருந்து திரும்பி ஆரம்பித்து இன்னொரு முப்பது வருடங்கள்.. தாங்குமா..

- ராம்ராவணா said...

நண்பரே.. ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இருக்கும் வலி உங்கள் எழுத்துகளில் புரிகிறது.. நீங்கள் இருக்கும் இதே மனநிலையில் தான் நானும்.. என்ன எழுதுவது என்றே புரியவில்லை.. செய்தியை நான் கேள்விப்பட்டதும்.. இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லையே என்று மனதை தேற்றிக்கொண்டேன்.. ஆனால் செய்தி வெளிவந்ததும்.. அந்த படக்காட்சிகளை கண்டதும்.. இப்போது இதிலே ஏதோ கபடம் இருப்பதாகவே தோன்றுகிறது.. யுத்தம் முடிவடைந்துவிட்டது என்று அறிவித்த பின்னர்.. பிறந்ததில் இருந்து சாவுகளை மட்டுமே கண்டும் கேட்டும் இருந்த எனக்கு.. இனி மேல் சாவுகள் குறைந்துவிடும் என்ற உண்மையை சந்தோஷமாக யோசித்தாலும்.. இன்று வரையில் அவை தொடருகின்றன.. என்ன பயன்? கறுப்பு ஜூலை மீண்டும் வந்துவிடுமோ என்று தோன்றியது.. இப்போது அப்படி நடக்காது என்றே தோன்றுகிறது.. காலம் இலங்கை வாழ் தமிழர்களுக்கு பதில் சொல்லட்டும்.. வெளி நாட்டில் இருக்கும் நண்பர்களே.. தயவு செய்து உங்கள் மன வேதனைகளை கொஞ்சம் அடக்கிவைதுக்கொள்ளுங்கள்.. நீங்கள் அங்கே கதறும் போது எல்லாம் இங்கே எத்தனை உயிர்கள் பறிக்கப்படுகின்றன என்று உங்களுக்கு தெரியாது.. தேவைப்படும் போது எரிமலையாய் வெடிக்கட்டும்..

- ராம்ராவணா said...

நண்பரே.. ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இருக்கும் வலி உங்கள் எழுத்துகளில் புரிகிறது.. நீங்கள் இருக்கும் இதே மனநிலையில் தான் நானும்.. என்ன எழுதுவது என்றே புரியவில்லை.. செய்தியை நான் கேள்விப்பட்டதும்.. இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லையே என்று மனதை தேற்றிக்கொண்டேன்.. ஆனால் செய்தி வெளிவந்ததும்.. அந்த படக்காட்சிகளை கண்டதும்.. இப்போது இதிலே ஏதோ கபடம் இருப்பதாகவே தோன்றுகிறது.. யுத்தம் முடிவடைந்துவிட்டது என்று அறிவித்த பின்னர்.. பிறந்ததில் இருந்து சாவுகளை மட்டுமே கண்டும் கேட்டும் இருந்த எனக்கு.. இனி மேல் சாவுகள் குறைந்துவிடும் என்ற உண்மையை சந்தோஷமாக யோசித்தாலும்.. இன்று வரையில் அவை தொடருகின்றன.. என்ன பயன்? கறுப்பு ஜூலை மீண்டும் வந்துவிடுமோ என்று தோன்றியது.. இப்போது அப்படி நடக்காது என்றே தோன்றுகிறது.. காலம் இலங்கை வாழ் தமிழர்களுக்கு பதில் சொல்லட்டும்.. வெளி நாட்டில் இருக்கும் நண்பர்களே.. தயவு செய்து உங்கள் மன வேதனைகளை கொஞ்சம் அடக்கிவைதுக்கொள்ளுங்கள்.. நீங்கள் அங்கே கதறும் போது எல்லாம் இங்கே எத்தனை உயிர்கள் பறிக்கப்படுகின்றன என்று உங்களுக்கு தெரியாது.. தேவைப்படும் போது எரிமலையாய் வெடிக்கட்டும்..

ரணங்கள் said...

நான் உங்களுடைய கருத்தை வரவேற்கின்றேன்.....
அடுத்த தலைமுறைக்கு உங்கள் போன்ற ஊடகத்துறையினரால் எதாவது செய்ய முடியும்.
தலைவர் இறந்துவிட்டதாக செய்தி வந்த இரவு உணவு அருந்துவதற்காக ஒரு கடைக்குப் போயிருந்தேன் இரவு 12 மணி இருக்கும் எமது தமிழ் இளைஞர்களும் சிங்கள இளைஞர்களும் சேர்ந்து தண்ணி அடித்து சந்தோசத்தைக் கொண்டாடினார்கள். அதை பார்த்த போது தமிழனுக் ஏன் இன்னும் விடிவு கிடைக்க வில்லை என்று தெரிகின்றது

Anonymous said...

our leader is watching his own death news hahaahahaaa

http://onlymovienews.blogspot.com/2009/05/prabhakaran-alive-nakeeran-tamil.html

This time the war will be different.

Member of 5th Eelamwar.
Middle east

அஹோரி said...

தலைவர் இருக்கார். இந்த முறை மக்களை தலைமை தாங்க செய்வார். இது நடக்கும். ஈழம் பிறக்கும்.

- ராம்ராவணா said...

நண்பரே.. ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இருக்கும் வலி உங்கள் எழுத்துகளில் புரிகிறது.. நீங்கள் இருக்கும் இதே மனநிலையில் தான் நானும்.. என்ன எழுதுவது என்றே புரியவில்லை.. செய்தியை நான் கேள்விப்பட்டதும்.. இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லையே என்று மனதை தேற்றிக்கொண்டேன்.. ஆனால் செய்தி வெளிவந்ததும்.. அந்த படக்காட்சிகளை கண்டதும்.. இப்போது இதிலே ஏதோ கபடம் இருப்பதாகவே தோன்றுகிறது.. யுத்தம் முடிவடைந்துவிட்டது என்று அறிவித்த பின்னர்.. பிறந்ததில் இருந்து சாவுகளை மட்டுமே கண்டும் கேட்டும் இருந்த எனக்கு.. இனி மேல் சாவுகள் குறைந்துவிடும் என்ற உண்மையை சந்தோஷமாக யோசித்தாலும்.. இன்று வரையில் அவை தொடருகின்றன.. என்ன பயன்? கறுப்பு ஜூலை மீண்டும் வந்துவிடுமோ என்று தோன்றியது.. இப்போது அப்படி நடக்காது என்றே தோன்றுகிறது.. காலம் இலங்கை வாழ் தமிழர்களுக்கு பதில் சொல்லட்டும்.. வெளி நாட்டில் இருக்கும் நண்பர்களே.. தயவு செய்து உங்கள் மன வேதனைகளை கொஞ்சம் அடக்கிவைத்துக்கொள்ளுங்கள்.. நீங்கள் அங்கே கதறும் போது எல்லாம் இங்கே எத்தனை உயிர்கள் பறிக்கப்படுகின்றன என்று உங்களுக்கு தெரியாது.. தேவைப்படும் போது எரிமலையாய் வெடிக்கட்டும்..

கலையரசன் said...

//இந்த சில நாட்களில் எங்கள் அலுவலக
சிங்கள நண்பர்கள் நடந்துகொண்ட விதம்
உண்மையில் மனிதாபிமானமானது..//

இங்க நா வேல செய்யற அலுவலகத்தில...
சிங்களர்களிடம், மளையாளிகள் பார்ட்டி
கேட்டுக்கிட்டு இருக்கானுங்க...
இத பார்த்துட்டு என் மனசு பட்டபாடு,
வார்த்தை இல்லணே!

வெற்றி-[க்]-கதிரவன் said...

உங்கள் உணர்வுகளை முழுவதுமாக புரிந்துகொள்ள முடிகின்றது.

அனைத்து கேள்விகளுக்கும் காலத்திடம் பதில் உள்ளது...

"இந்தநிலையும் மாறும்"

Jegatheepan said...

கவனம் அண்ணா ...! இன்னும் ஒரு இழப்பை தாங்கும் சக்தி எங்களுக்கில்லை .......

ரெஜோலன் said...

லோஷன் . . . பத்திரிகைகளும் இணையமும் பல செய்திகளை பதிந்திருந்தாலும் . . மனம் நம்ப மறுத்துவிட்ட செய்தி அது,. அது பற்றி அதிகம் அலட்டி கொள்ளவில்லை நான், . காரணம் . . அப்படி ஏதும் நடந்திருந்தால் நம் மனதுக்கு முதலில் தெரிந்திருக்குமே என்பதுதான் அது.

மேலும் இன்றைய இணைய செய்திகளால் நம் நம்பிக்கை இன்னும் கூடி இருக்கிறது. நம்பிக்கை என்ன உறுதியாக சொல்ல முடிகிறது.

இவற்றை எல்லாத்தையும் விட தினமும் காலை வந்து உங்கள் வலைப்பதிவை திறந்து திறந்து பார்த்து ஏமாந்து. . என்ன ஆயிற்றோ என்ற பதட்டம் ஏற்ப்பட்டதே . . . அப்பா கொடுமைதான். . இன்று உங்கள் பதிவை கண்டதும் மனது நிறைவாக இருக்கிறது, . . அமைதியாக இருக்கிறது. . .

பயப்படாதீங்க நம்ம ஆளு வருவாரு . . கொஞ்சம் அவகாசம் தேவை . . .

risy said...

ungal thalaiwan sathuttan

Anonymous said...

தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து சிறிலங்கா அரசு பரப்பி வரும் பொய்ப் பிரச்சாரம் குறித்து தமிழ் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை.

புல்லட் said...

எல்லாருக்கும்தான் கவலை! உலகத்தோடயே எப்படியப்பா மோதுறது? அதுதான் இப்பிடியாப்போச்சுது ...
ஆனா கவனம் இப்பிடி எழுதினா மறுபடியும் ஆப்ப அடிக்க வருவாங்கள்...

பக்கத்தில இருந்தாலும் கதைக்க கடும் பயம்... அப்பிடி ஒரு நாட்டில இருக்கிறம்... பிறகு என்னத்த செய்ய?


கவலையளை இங்கயாது பகிர்ந்து கொள்ளுவம் :'(

சுபானு said...

மானசீக கதாநாயகன்.. வீரன்.. எங்கே... ? உணர்வுள்ள எல்லோருக்கும் அவர்தான் உண்மையான கதாநாயகன்..

உங்களைப் போலத்தான் எந்தன் நிலையும் இரண்டு நாட்களாக மனம் ஒருநிலையில் இல்லாமல் அல்லற்படுகின்றது ... நம்பிக்கையொன்றே மனதினைத் தேற்ற ஒரே வழி... காலம் பதில்சொல்லும்... அதுவரை தலைவனை எதிர்பார்த்துக் காத்திருப்போம்...

சுபானு said...

// சிறுவயது முதல் நேசித்து மனதில் இடம் கொடுத்து வைத்த ஒருவரை இழந்துவிட்டோம் என்று எண்ண மனம் இடம் கொடுக்குதில்லை.

சுபானு said...

// ஒரு பெரும் சாம்ராஜ்யமே சரிந்து விழுந்ததைப் போல..

போல இல்லை அண்ணா.. சரித்து விழுத்திவிட்டார்கள்... நாளைய வரலாறு கூறட்டும். அதையும் திரிபுபடுத்தி மாற்றிவிடுவார்கள்...கவனமாக இருக்கவேண்டியது மக்கள்தான்...

தலைவனால் தொடங்கப்பட்ட போரட்டம் இன்று மக்களின் கைகளிடம் கொடுக்கப்பட்டுவிட்டது...

Anonymous said...

PALAYANG HUTTO YANDA KERI PAKAYAAAAAAAAAAAAAAAAAAAAA. LTTE TA PUKA DEEPANG GIHILLA

முகமது பாருக் said...

கலங்காதிங்க தோழா.. உயிர் பலிகள் ஏதும் வீண் போவதில்லை வரலாறுகளின் பக்கங்கள் திறந்தே உள்ளது..நம்பிக்கையோடு இருங்கள் எதுவும் தவறாக நடக்கவில்லை..

உங்களுக்கு ஏற்கனவே ஒரு கசப்பான சம்பவம் நடந்துள்ளதால் இத்துடன் முடித்து கொள்கிறேன்...நம் இனத்தின் தேசிய தலைவருக்கு வயது 5000 க்கும் மேல்..காலம் பதில் சொல்லும் நாம் நமது கடமையை லட்சியத்தை நேர்கோட்டில் எடுத்து செல்வோம்....

தோழமையுடன்

முகமது பாருக்

பீஷ்மர் said...

தோழா.. புலம்புவதை நிறுத்திவிடு.. எமது கதாநாயகனுக்கு முடிவென்பது இல்லை. சூரிய புத்திரனுக்கு நிகர் எவருமில்லை.. நானும் உன்னைமாதிரி வெம்பி அழுதது நிறைய நாட்களின் பின்னர்தான்.. தனது தாயின் மறைவின்போதும் ஒருதுளி கண்ணீர் காணாத என் தந்தையின் கண்கள்கூட பனித்தது கண்டது அன்றுதான்..

சாவு வேண்டுமானால் வீரனுக்கு வரலாம்; நமைக்காக்கும் தெய்வங்களுக்கலவே.!

Anonymous said...

hi brother,
first of all i want to let you know that i'm a ex-navy commander .I'm always been updating with the war news.Let me explain the situation in army tactics view.Here you need to know that ,geographical factor is the MOST IMPORTANT for a win or capture in war.Taking the last part where our leader said to be live;(pls refer this with google map and sla map)
1)no matter how big or superior the army is,they can penetrate them with 3 to 10 blasts(in between div 58 and 59)
2)SLA just stretches for few nautic miles in the sea.which can be easily cheated by high speed boat.then comes indian navy-which cant use heavy arms(due to diplomatic policies of indian gov)
3)So, no worries.If leader wants ,he can easily cross it.
4)besides that,indian policies is the main reason for the attacking style.
5)SLA starts the attack on the eastern part of eelam ,which is purposeful start to avoid future diplomatic pressures.(this should be the finishing part if they want a real capture)India is playing double sided game with world and Sl to form hollow capture.

So, you no need to worry.

With regards
tamilan(malaysia)

srilankan said...

prabaharan irukiran andral ann innamum waliya wara illa? nega mathap pattru illa andru sonningala ithu annan? annan ne aluhira onda thalaiwana prabaharan ne pahirangama singhala moly il patty kodu onnaium army wanthu thukik kittu porandu. ok coment a onda side la podu ok (payam illawittal)

vanathy said...

உங்கள் மனத்தின் வலி புரிகிறது.
எங்களுக்கும் அதே நிலைதான் .
ஒரு உறவினர் இறந்தாலே எத்தனை நாள் துக்கம் கொண்டாடுகிறோம்
இப்போதோ பல்லாயிரக்கணக்கான உறவுகளை ஒரே சமயத்தில் இறந்த துயரம்.
மனம் தளராதீர்கள்.
சுதாரித்துக் கொண்டு எழத்தான் வேண்டும்.
வெளியில் உள்ளவர்களுக்கு நிறையக் கடமைகள் உள்ளன.
கவனமாக இருங்கள்.
-வானதி

ஈழச்சோழன் said...

எல்லாளனை துட்டகைமுனு கொன்றான் என்று என் வரலாற்று ஆசிரியர் எனக்கு கற்பித்தபோது நான் பட்ட வேதனைக்கு மருந்தாக எனது தந்தையால் அறிமுகப்படுத்தப்பட்டவர் எங்கள் அருமைத்தலைவர். அன்றிலிருந்து இன்றுவரை தலைவரை நினைக்காத அவரைப்பற்றி பேசாத நாளே எனக்கு கிடையாது.

என் வாழ்நாளில் அவரை ஒரு முறையேனும் கைகளால் சந்தித்துவிடவேண்டும் என்பது எனது மிகப்பெரிய ஆசை. வேற்று நாட்டவர்களுக்கு என் தலைவனைப்பற்றி கூறும் போதெல்லாம் எனக்கெழுந்த சந்தோசம் அளவிட முடியாதது.

பிரபாகரன் என்ற தனிமனிதனை உங்கள் எல்லாவிதமான கோட்பாடுகளையும் கழற்றிவிட்டு வெற்றுக்கண்களால் பாருங்கள் அப்போது புரியும் அவனின் தனித்தன்மை.

அண்ணா......அண்ணா...அண்ணா
நீ எங்களுக்கு வேணுமண்ணா.....
அப்பா வேண்டாம்...அம்மா வேண்டாம்...நீதான் எனக்கு வேணுமண்ணா...

வா அண்ணா...சீக்கிரம் வெளியேவந்து
எனக்கு உயிர்தா அண்ணா....

நீ இல்லாத இந்த உலகத்தை என்னால்..நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை....அண்ணா

வா அண்ணா....சீக்கிரமே வந்துவிட...

எங்களுக்கு தனி ஈழத்தைவிட நீதான் முக்கியம். உன்னில் தானே இவ்வளவு நாளும் கண்டோம் ஈழத்தை.

எங்களுக்கு நீ இருப்பதை உறுதிபடுத்திவிடு அவ்வளவும் காணும். இந்த சிங்களவனிட்டை அடிபட்டு நாம் செத்தாலும் பரவாயில்லை நீ வேண்டுத் எமக்கு...

வா....அண்ணா வா...எமக்கு விசர் பிடித்து நாயாய் அலையமுன் தரிசனம் தந்துவிடு அண்ணா.... அவர்கள் வென்றாலும் பரவாயில்லை ...நீ இருந்தால் அதுவே எமக்கு பெரியவெற்றி. வா....அண்ணா ...வா...சீக்கிரமாக வா...

kniroshansl said...

அண்ணா கவலை வேண்டாம்......
சாகா வரம் பெற்றவர் எங்கள் அண்ணன்....
கேட்பவன் கேனயன் என்றால், கேபயிலும் நெய் வடியுமாமே... தெரியுமோன்னோ.....

வேத்தியன் said...

இந்த ஆதங்கம் ஒவ்வொரு தமிஅனுக்கும் இருக்கிறது லோஷன் அண்ணா...

கொஞ்சம் வித்தியாசமாக அதை எழுதியிருக்கிறேன்..
முடிந்தால் பார்க்கவும்...

http://jsprasu.blogspot.com/2009/05/blog-post_21.html

Mal Ramanathan said...

ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்

ஆயினும் போரது நீறும், புலி

ஆடும் கொடி நிலம் ஆறும்.

பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்

பாசறை ஆயிரம் தோன்றும், கருப்

பைகளும் ஆயுதம் ஏந்தும்.

மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை

மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த

சிங்கள கூட்டங்கள் ஓடும்

புதுவை இரத்தின துரை எழுதிய வரிகளே என் நினைவில் வருகின்றன
(இது யாரோ ஒருவரின் வலைப் பூவில் இருந்தது)


சிங்கள வெறியன் மட்டுமல்ல ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது, எந்த கட்சி ஆண்டாலும் அந்த கட்சியுடன் கூட்டுசேர்ந்து வாழ் நாள் அமைச்சர்களாக இருப்பவர்களுடைய (இவர்கள் தமிழ் பேசுபவர்கள்) கூட்டத்தவர்களும் கூத்தாடுகிறார்கள்.

இப்ப இறந்து போன மாவீரர்கள் கல்லறையில் இருந்து "வருவேன் வருவேன் கட்டாயம் வருவேன்" என்ற அருந்ததி பட வசனங்கள் ஒலிப்பதாக ஒரு உணர்வு!!
பசில் ஐயா கொட்டாபெய ஐயா ஆப்பு உங்களுக்கு எப்பவும் தயாராக உள்ளது.
விரைவில் நீங்களே அதில் வந்து அமர்வீர்கள்!!
அப்போ காயப்பட்ட இடத்துக்கு ஒத்தடம் பிடிக்க, கழுவிவிட முரளீதரன் உயிருடன் இருக்க மாட்டான்.
(முரளீதரன் தமிழின துரோகி பிணங்களை காட்டி கொடுத்தவனின் நிஜப்பெயர். இவன் எமது முன்னாள் கிழக்கு தளபதி என்று சொல்வதில் மிகவும் கேவலப்படுகிறேன்)

Unknown said...

ஈழச்சோழன் எழுதியதைப் படிக்கும் போது கண்களில்
கண்ணீர் வருகிறது.

நக்கீரனைப் படிக்கும் போது நெஞ்சில் நம்பிக்கை வருகிறது.

கடவுள் இருக்கிறார். கவ்லைப்படுவோம்.

நிச்சயம் நம்பிக்கை வெல்லும்.

Anonymous said...

நண்பா கலங்க வேண்டாம்
நம்பிக்கையுடன் இருப்போம்

Afran AHM said...

எனது தாத்தா எனக்கு சொல்லி தந்துள்ளார் எவ்வாறு நாங்கள் எமது மண்ணை விட்டு எமது சொத்துக்களை விட்டு எமது உறவுகளை விட்டு எமது தொழிலை விட்டு இரவோடு இரவாக துரத்தப்பட்டோம் என்று
ஒரு மனிதனுக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன.
அண்ணா நீங்கள் அவருடைய இருண்ட பக்கத்தை பார்க்கவில்லை
ஆனால் அது என்ன என்பதை நாங்கள் கேட்டு அறிந்துள்ளோம்
இவருடைய மரணத்துடன் இலங்கைக்கு ஒரு விடிவு நிச்சயம் வரும்
ஒரு மனிதனின் இறப்பை குதூகலித்து கொண்டாடும் அளவுக்கு நான் ஒரு பிணம் தின்னி இல்லை
இவருடைய ஆத்மா சாந்தி அடையவும் இலங்கையில் மீளும் இது போன்ற ஒரு யுத்தம் வராமல் இருக்கவும் எல்லாம் வல்ல அல்ஹாவை பிரார்த்திக்கிறேன்

Anonymous said...

சரிவுகள் வீழ்ச்சியல்ல..... நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

The real losers will be the one who are celeberating now…

Anonymous said...

http://gossiplanka.blogspot.com/2009/05/after-death-of-prabhakaran.html

Unknown said...

பதிவின் மூலமாகவாவது தமிழனின் ஆதங்கங்களை வெளீப்படுத்த‌
முடிவதால் பதிவர்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை.

வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம்.,

தொலைக்காட்சி ஒன்றை உலகம் முழுவதும் கிடைக்கும் படியாக சேட்டிலைட் மூலமாக DTH மூலமாக இந்தியா கவரேஜ் உடன் ஒரு நாளைக்கு 2 மணி நேரமாவது கிடைக்கும் படி செய்தால் புலம் பெயர் தமிழர்கள், தமிழர்கள்
மனம் மாற வழி கிடைக்கும்.

Unknown said...

"பதிவர்களே ஈழத்து பிரச்சினையில் குளிர்காயாதீர்கள்"

மேற்படி கருத்து சொல்பவர்களுக்கு,

பதிவின் மூலமாகவாவது தமிழனின் ஆதங்கங்களை வெளீப்படுத்த‌
முடிவதால் பதிவர்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை.

வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம்.,

தொலைக்காட்சி ஒன்றை உலகம் முழுவதும் கிடைக்கும் படியாக சேட்டிலைட் மூலமாக DTH மூலமாக இந்தியா கவரேஜ் உடன் ஒரு நாளைக்கு 2 மணி நேரமாவது கிடைக்கும் படி செய்தால் புலம் பெயர் தமிழர்கள், தமிழர்கள்
மனம் மாற வழி கிடைக்கும்.

Anonymous said...

நம்பிக்கையுடன் இருப்போம்!!

Anonymous said...

ராஜ கோபுரம் எங்கள் தலைவன்......சாய மாட்டார்...கவலையை விடுங்கள் அண்ணா.....

Anonymous said...

ராஜ கோபுரம் எங்கள் தலைவன்......சாய மாட்டார்...கவலையை விடுங்கள் அண்ணா.....

Anonymous said...

LTTE leadership safe: Tiger intelligence official
[TamilNet, Friday, 22 May 2009, 09:49 GMT]
Head of International Secretariat of the Intelligence wing of the LTTE, Mr. Arivazhakan, who contacted TamilNet Friday categorically denied the reports that the LTTE leader Mr. Velupillai Pirapharan has been killed. Mr. Arivazhakan urged the global Tamil community not to trust the "engineered rumours," being spread by the Government of Sri Lanka and its military establishment.

"Our beloved leader is alive," he said and added that the LTTE leadership will make contact with its people at a suitable time in future.

"These rumours have been set afloat to confuse the global Tamil community which has been voicing support for the liberation of Tamil Eelam," he further said.

thanks TAMIL NET

Subankan said...

அண்ணா, நேற்றே பதிவைப் படித்துவிட்டாலும் படித்து முடித்தபின் பின்னூட்டமிடும் நிலையில் நான் இல்லை. அனைவரின் மனநிலையும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அவரவர் கேள்விப்பட்ட விடயங்களைக் கொண்டு தம்மைத்தாமே சமாதானப்படுத்திக்கொண்டு இருப்பதைத்தவிர வேறு வழியில்லை. உங்கள் அலுவலகத்தைப் போல்தான் எனது பல்கலையிலும். படித்த சிங்களவர்கள் மத்தியில் வந்துவிட்ட இந்தப்பக்குவம் அனைவரிடமும் இருந்துவிட்டால் எவ்வளவு நல்லது?

Nimalesh said...

sri lanka vula irukoom anna so no commets here....

Anonymous said...

பேசாம பேசாம தான் இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குதுங்க பருந்து.

அதாவது பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல்


அட! தோழா ரொம்ப நாளா!
கேக்காம கேக்காம இருந்து நாம போனமடா சூடு சொரணை மறந்து

அதாவது ஏன் எதற்கு என்று மக்களாகிய நாங்கள் கேட்காமல் இருந்து


இப்போ போகுதடா கோவணமும் பறந்து.

அதாவது.. அதுதான் எல்லாருக்கும் தெரியுமே..

Anonymous said...

நக்கீரனில் வெளியான புலிகளின் தலைவர் படம் எப்படி செய்யப்பட்டது என்று முழு விளக்கம். நக்கீரனுக்கு தேவை வியாபாரமே.. தமிழ மக்களின் உணர்ச்சியும் வியாபாரம் ஆக்குவது எந்த நியாயம்?
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=49695

Rama said...

அண்ணே, இந்த தம்பி ஏதோ கேட்டவர். அவருக்கும் பதில் சொல்லுங்கோ எண்டு சொன்னதை மறக்க முடியுமோ?

ஆனா ஒண்டு மட்டும் உண்மை. நடந்த, நடக்க போற கொடுமை களை தட்டி கேட்க அண்ணன் திரும்பி வருவான். அந்த நம்பிக்கை எல்லா தமிழனுக்கும் இருக்கு. கெட்டிக்காரன் புளுகு கொஞ்ச நாளுக்குத்தான்

ரமா (லண்டன்)

Rama said...

அண்ணே, இந்த தம்பி ஏதோ கேட்டவர். அவருக்கும் பதில் சொல்லுங்கோ எண்டு சொன்னதை மறக்க முடியுமோ?

ஆனா ஒண்டு மட்டும் உண்மை. நடந்த, நடக்க போற கொடுமை களை தட்டி கேட்க அண்ணன் திரும்பி வருவான். அந்த நம்பிக்கை எல்லா தமிழனுக்கும் இருக்கு. கெட்டிக்காரன் புளுகு கொஞ்ச நாளுக்குத்தான்

ரமா (லண்டன்)

Anonymous said...

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரச்சாரத்தினை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அறிவழகன் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:

எமது பாசத்துக்குரிய தேசியத் தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணாத்தில் தொடர்பு கொள்வார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு உலகு எங்கும் பரந்து விரிந்து ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் ஆதரவுக்குரலை அடக்கி ஒடுக்கும் முகமாக சிறிலங்கா அரசாங்கம் தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பான பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக உள்ளது என்றார் அவர்.

monica said...

புல்லட் சொன்னது போல.. எது எவ்வாறாகினும் இனி வருபவர்களாவது பழயதை மறந்து தமிழ் மக்களிற்கு கொஞ்சமாவது செய்தால் சரி..
என்ன அண்ணா செய்யுறது.. உண்மையில் அந்த செய்தியை பார்ததும் உலகமே உடைந்து விட்டமாரி இருந்திச்சு... அழாமலே கண்களில் நீர். .. விரிவுரைகள் சரியாக விளங்கவில்லை.. மனதெல்லாம் அந்த வீரனை பற்றிய நினைவுகள்.. அவர்களது செயற்ப்பாடுகள், திறமைகள், மக்களை கையாண்ட விதம், அவர்களின் பெயரை சொன்னவுடன்.. கொடியவர்கள் கண்ட கலக்கம், திருடர்களிற்கும் ரவுடிகளிற்கும் அவர்கள் மேல் உள்ள பயம்.. மன்னிப்பு இல்லாத தீர்ப்புக்கள்.. எத்தனையோ.. , அந்த ஒரு இடத்தில் இருந்து கொண்டு சும்மா இல்லை ஒரு 30 வருடம் இந்த இலங்கை மட்டும் இல்லை எத்தைனையோ நாடுகளை அரசியல் ரீதியாக கூட தனடு கைக்குள் வைத்திருந்தமை எல்லாமே.. எவ்வளவு ஒரு பெரிய நெற்வேர்க் இப்படி நிலைகுழைந்தது... என்னால் தாங்கிக்கொள்ள முடியாது உள்ளது..
பொறுத்து இருந்து பார்ப்போம்.. கார்த்திகை மாதம் தெரியும் தானே... குடுத்த கிரிபத் எல்லாம் திரும்ப வாங்கிறாங்களா இல்லையா எண்டு...

திறமையும் ஒரு அளவு தானே இருக்கும் வர் என்ன கடவுளா? மனிசன் தனே... எத்தனை துரோகங்கள்.. எத்தனை நாட்டுப்படைகள்...எவ்வளவு இழப்புக்கள்... இதோடையும் ஒரு தமிழன் 30 வருடகாலமாக சும்மா கட்டுப்படுத்தி இருக்கான். அதில நாம சந்தோஸ படனும் ஸார்.. ஒரு தமிழன்... எத்தனை சும்மா நினைச்சுப்பார்க்க முடியாத அளவு சாதனைகள் செய்து அதை செய்து காட்டியும் உள்ளான்.. ஒரு பயங்கரவாதியாக இல்லாமல் சிங்கள மக்களுக்கு எந்த துன்பமும் கொடுக்காமல் தனது வழியில் சென்றவனின் பிள்ளைகளை காட்டுமிராண்டித்தனாமாக கொண்று பெற்ற வெற்றியை மார்தட்டி கொண்டாடுகிறார்கள் மனிதாபிமானமில்லாதவர்கள்.... வீதிகளில் கூச்சலிட்டு கொண்டாடுபவர்களை கூப்பிட்டு வரலாறு சொல்லி அவர்களீடமே நியாயம் கேட்க்க வேண்டும் போல் உள்ளது... முடியாது..

எது எவ்வாறாகினும் இந்த போரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஒரு தமிழனும் இருந்து இருக்கிறான்.. இனபேததுடன் பேசவில்லை... இனபேதத்துடன் வெற்றியை கொண்டாடும் சிங்கள சகோதரர்களிற்கு மட்டும்.. 30 வருடம் உங்களிற்கு எடுத்திருக்கு ஒரு தமிழனை வெல்ல என்பதை கொஞ்சம் யோசியுங்க.. அதுவும் அயிரம் நாட்டு படை சகிதம்... இலட்ச்கணக்கில் மக்களை கொன்று... இப்படி யாரால் தான் செய்ய முடியாது.. மக்களை பற்றி அந்த வீரன் கருதுபவனாக இல்லாது விட்டால் இப்ப அகில இலங்கை அவனுக்கு கீழ இருந்திருக்கும்...

எது எப்படியோ தமிழரிற்க்கு இப்படி ஒரு நிலை வந்ததிற்கு சில தமிழ் நண்பர்களும் காரணமாயிருக்கலாம்...
எனது கருத்து... துரோகங்கள் மறக்கப்படலாம்.. மன்னிக்கப்படக்கூடாது..

கிரி said...

லோஷன் பலரின் எண்ணங்களை அப்படியே எழுத்தில் தந்துள்ளீர்கள்..

எண்ணங்களுக்கு பலம் அதிகம்.. எனவே நல்லதே நடக்கும் என்று நம்புவோம்

indran said...

லோஷன், உங்களை போலவே என்னாலும் கண்ணீரை படுத்த முடியவில்லை,;
வான் வழியே வந்த செய்தி பொய்யாகி போகாதோ,,,,,

`` ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல் வந்த மாமணியை தோற்றோமோ ??

இனி தமிழர் நாம் என்ன செய்ய போகிறோம்?
கை கட்டி, வாய் பொத்தி ... கூனி , குறுகி வாழ பழகிக்கொள்ள வேணுமோ??

Anonymous said...

மோனிகாவின் ஒவ்வொரு வார்த்தைகளுமே முற்றிலும் உண்மை மட்டுமல்ல, நெஞ்சைத் தொடுவனவாகவும் உள்ளன.

hamshi said...

enna pathivai kanam endu think panninenan.Anna ungali polave nanum every tamilmaganudija feelings up.ethanai nalikku poi perachcharam enru poriththirunthu pappam.tamilanaga piranthavanukku porumai endu eluthujirukkakakkum.kuda ernthe kuli parikkiranga nama sagothararkal.ethukku entha nadagam?purijala..2000eniliruthu nanum konja ethiri than namma poradda kulivinarukku ehtiraga.Bocz rombave pathikkappaddom Thenmaradchchi war ell.we lost our land in mugamalai attack and lost anther land and belogins in Usan.But eppo robave feelaga erukku.Anyway we r tamil people.en diary2009 fularga mudichchuthu afther the18th may.Last friday i visited my own place.On the time i saw 1 picture in Koddikamam junction.PADUTHTIRUKKUM PULLIMANITHANIL SINGALA MANITHAN ERI NEKKIRA POSTER.Pathtavudan robave kasstamaga erunthuthu.nanum poraddathil ennithikkalam pola.All r pastaway..KAdvl than pathaji kaddavendum

Anonymous said...

காலத்தைக் கடந்து சிந்திப்பவருக்கு மரணமில்லை! மீண்டும் வரும்போது ஏற்படப்போகும் எழுச்சி - எமக்கு விடியலைப் பெற்றுத்தரும்.

உங்கள் தனிப்பட்ட 'தவறுகளை'க் களைந்து ஒரே சிந்தனையில் இருங்கள்! - காத்திருங்கள்!!

ஆதிரை said...

நீண்டதொரு பெருமூச்சு - அதுவும் சுட்டெரிக்கும் வெம்மையுடன் ஏக்கமும் கலந்திருக்க
அதை மட்டும் இங்கு உதிர்த்துவிட்டு செல்கின்றேன்.

காலம் மாறுமென யார் சொன்னாலும், 30 வருடங்கள் பின்னோக்கி வந்துள்ளோம் என்பதும் நிஜம்.

Anonymous said...

இன்று நம்மில் சிலர் தாயகத்தின் வலிகளை விற்று புலம்பெயர் நாடுகளில் அதன் "குடியுரிமையை" பெற்றுவிட்டு "அகதி" என்ற சொல்லை சொல்லவே வெட்கப்படுகிறோம்.

"அகதி" என்று சொல்லும் போது வலிக்காது.வாழ்ந்து பாருங்கள் வலி தெரியும்............

Anonymous said...

லோஷன் ,யாருக்கு ஆறுதல் சொல்வது...கவலையாக இருப்பதைக்கூட வெளிக்காட்ட பயம்...தலைவா வந்துவிடு எங்களிடம்

சிவனேஸ் said...

கவலைப்படாதே சகோதரா! அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும், மாவீரன் அண்ணன் பிரபாகரன் அவர்களுக்கு என்றுமே அழிவில்லை! இருந்தாலும், மறைந்தாலும் பேர்சொல்ல வேண்டும், இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!எனும் வரிகளை மெய்ப்பித்தவர்

சிவபார்கவி said...

நண்பா... தற்பொது இலங்கை நிலவரம் என்ன. குறிப்பாக.. கொழுப்பில் உள்ளவர்களின் பாதுகாப்பு எப்படி உள்ளது.

ARV Loshan said...

இலங்கை மிக அமைதியாக உள்ளது.. எந்த ஒரு வன் சம்பவமும் பதிவாகவில்லை.. ஒரு சூட்டு சம்பவம் தவிர.

மக்கள் மிக அமைதியாக,பாதுகாப்பாக இருக்கிறார்கள்..

நான் அறிந்தது இவை தான்..

Unknown said...

லோசன் உங்கள் மனவோட்டம் தான் என்னிடமும் மற்றும் எல்லோரிடமும் ஓடிக்கொண்டு இருக்கிறது. நீங்கள் தட்டச்சு மூலமாவது கொட்டி தீர்த்தீர்கள். ஆனால் நாங்கள் மனதில் வைத்து புழுங்கி கொண்டு இருக்கிறோம். ஆனால் நம்பிக்கை தளராமல் காலவோட்டத்தில் காத்திருப்போம்.

SKN said...

அண்ணா நாங்களும் அமைதியை தன விரும்புகின்றோம் அது நமது வெட்டு மொழி சகோதிடரகள் கையிலும் அரசாங்கத்தில் கையுளும் தன இருக்கின்றது இன்னுமொரு புரட்சி தேவையா என்று... தலைவர் இல்லை என்று இபொழுது தமிழ் இணைய தளங்களிலும் செய்தி வந்தாலும் (தமிழ்வின்).....!! அதையும் நம்பாமல் நம்பிக்கையுடன்....
'காத்திருக்கிறோம் அவரின் குரல் கேட்கவே...'

Anonymous said...

anna unkal yeankaluku.vidivu piranthullathu. uttham mudivu patrathan moolam.pulihalin pirathana lost yem muslim peoples meethu thanathu maamisa kodumai kaatiyatuthanbt neenkal onra purinchu kollanum.uttham moolam unkalathu ealam parapadathu.arasial neerotam yeana solhirathu yranrum paarpam.unkalathu puli thalamai.muslimkalodu panpaaha irunthal .vetrifm moolam unkalathu vetri arivikkapatirikkym.kadaisil varum ilapputhan ithaithan naaankalum ethirpaartham allah athaiya thanthirukiran.1990.1991 kattan kudy sootu sambavm yyavum ninaivirukattum ok.lost yatru kolvathuthan unkal manam paathithu irunthal sry mudikiran

தமிழன் said...

ஓராண்டு வரப்போகும் நேரத்திலும் நடந்ததை நினைத்தாலே மரணதேவனுக்கே மரண தண்டனை கொடுக்க தோன்றும், சிறு வயது முதல் அருகில் பார்த்து வளர்ந்தவர்களில் ஒருவன்,சிறுவன்,மாணவன்,இளைஞன் போன்ற பருவங்களில் அருகாமை அவர்களின் சுவாசக்காற்றாகையால் உணர்வும் ஊட்டமாகிப்போனது.அருகில் வீழ்ந்த தீயின் கோரங்களில் எனது கோபத்தின் வீச்சுக்களே வீரியம் கொண்டிருந்தன, உலகம் திகைத்த எம்மினத்தை சிதைக்க எம்மவர்களே திட சங்கற்பம் பூண்டதை நினைத்தால் ... இறுதி நாட்களில் அனைவரும் சரணடைந்த போது இராணுவ தளபதி பார்த்து கூறிய வார்த்தைகளில் பலர் கூனிக்குறுகிப்போனார்கள்... நாம் எதிராக போராடினாலும் எங்களின் ஹீரோ உங்கள் தலைவர் தான், அவரை விட்டு விட்டு ஏன் இப்படி சரணடைந்தீர்கள் ,என்று கேட்ட போது அனைவரும் அம்மணமாகி நின்றதாய் உணர்வு...உறங்கிப்போன பல உண்மைகளை தெளிவுபடுத்த நினைத்தாலும் இந்த நாடு விடாது,தளபதியே இன்று உள்ளே என்றால் நாம் உண்மை சொன்னால் .... . பகை நெருங்கி வந்த நேரம் உரமூட்டிய இறைவனும் கபி....இன்னும் பலர் சேர்ந்து ஒரேதாக வாகனத்துடன் தம்மை ஈகுதியாகியதை இன்னும் நினைப்பெட்டகத்தில் ......

காலம் கனியும் நேரத்தில் எழுதுவேன்...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner