நேற்று எனது வானொலி காலை நேர நிகழ்ச்சியில் (வெற்றி FM- விடியல்- Onlineஇல் கேட்க வாரநாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை www.vettri.lk ) ஒரு புதிய பாடலை அறிமுகப் படுத்தினேன். (இப்போதெல்லாம் புற்றீசல் போல ஒவ்வொரு நாளும் வெளிவருகின்ற புதிய பாடல்களும், விபரமறியா புதிய திரைப்படங்களும் எண்ணிக்கையிலடங்கா.. தொல்லை தாங்கலப்பா..)
இந்த வாரம் மட்டும் முத்திரை, ஞாபகங்கள், அழகர்மலை, அங்காடித் தெரு இப்படி ஒரு பத்துப் புதிய படங்களின் பாடல்களையாவது அறிமுகம் செய்திருப்போம்.. (ஆனால் முதலில் தந்தது நாங்களே என்று பறை தட்டிக் கொள்வதில்லை.. முன்பு வேறெங்கோ செய்த சிறுபிள்ளைத் தனங்களையெல்லாம் வெற்றியில் வெட்டியெறிந்து விட்டோம்)
கேட்டவுடனேயே வரிகளும்,குரலும், இசையும் கூட மனதில் உட்கார்ந்து விட்டன.வரிகள் ஒரு கணம் மனதை சொடுக்கி விட்டது. குரலிலும் அதற்கேற்ற பாவம்.
அட பாடி இருப்பது நம்ம இயக்குனர் சீமான் அல்லவா?
விபரக் கொத்தைப் பார்த்தேன் ஆமாம்.. சீமானே தான்..
இசைக்கட்டுப்பாட்டாளர் பிரதீப்பிடம் கேட்டேன் "ஆமாம் அண்ணா இயக்குனர் சீமானே தான்" என்று பதில் வந்தது.
சாட்டையடி வரிகளையும் அவரே எழுதியிருக்கிறார்.
மீண்டும் மீண்டும் அடிக்கடி நேற்று கேட்டேன்.. இப்போது பார்த்தால் நேயர்களுக்கும் பிடித்துப் போனது, அறிவிப்பாளர்களுக்கும் பிடித்துப் போனதால் இப்போது இரண்டு நாட்களுள் எங்கள் வெற்றி வானொலியின் ஹிட் பாடலாகி விட்டது..

மாயாண்டி குடும்பத்தார் என்பது தான் திரைப்படத்தின் பெயர்.
ராசு மதுரவன் (ஏற்கனவே 'பாண்டி' திரைப்படத்தை இயக்கியவர்) இயக்கம் இந்தத் திரைப்படத்தில் முக்கியமான பாத்திரங்கள் ஏற்போர் எல்லாமே இயக்குனர்களாம்.. 10 பேர். (எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா)
இந்தப் படம் பற்றி ஏற்கெனவே எனது சினிமா நிகழ்ச்சியான சினிமாலையில் சொல்லி இருந்தேன். பத்து இயக்குனர்களில் ஒருவரான கைது செய்யப்பட்ட சீமான் கூட இந்தப் படத்தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படக் கூடாதென்று பிணையில் வெளியே வந்து டப்பிங் பேசி செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்தப்படத்தின் சில பகுதிகளில் நடிப்பதற்காகத் தான் சில நாட்கள் அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததாகவும் எதோ ஒரு சில இணையத்தளங்களில் படித்த ஞாபகம்.
பாடலைத் தேடி தரவிறக்கி பதிவில் தரமுடியவில்லை..
தேடித் பார்த்துக் கேட்டு பாருங்கள்.. நிச்சயமாகப் பிடிக்கும்.
வரிகளை மட்டும் இங்கே தருகிறேன்..
பேசாம பேசாம தான் இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குதுங்க பருந்து.
பேசாம பேசாம தான் இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குதுங்க பருந்து.
அட! தோழா ரொம்ப நாளா!
கேக்காம கேக்காம இருந்து நாம போனமடா சூடு சொரணை மறந்து
இப்போ போகுதடா கோவணமும் பறந்து.
விதச்ச பயிறு அறுவடைக்கு விளைஞ்சு கிடக்குது.
உணவில்லாம உழைச்ச வயிறு காஞ்சு கெடக்குது.
அடிக்கும் புழுவும் கூட எழுந்து துடிக்குது.
அறிவிருந்தும் அடிமைத்தனம் போக மறக்குது.
அட! தோழா ரொம்ப நாளா!
பேசாம பேசாம இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குங்க பருந்து.
வருஷம் நாலு தேருதலு நாட்டில் நடக்குது.
அதனால நமக்கு இங்கே என்ன கிடைக்குது.
எரியும் போது பொணமும் கூட எழுந்து நிற்குது.
உசிர் இருந்தும் உன் முதுகேன் குனிஞ்சி நிற்குது.
அட! தோழா ரொம்ப நாளா!
பேசாம பேசாம இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குங்க பருந்து.
கேக்காம கேக்காம இருந்து நாம போனமட சூடு சொரணை மறந்து
இப்போ போகுதடா கோவணமும் பறந்து.
இசை - சபேஷ் & முரளி
பாடல் வரிகள் & பாடியவர் - இயக்குனர் சீமான்
வரிகள் எங்கள் நிலைமைக்கும் பொருத்தமாத்தான் இருக்கு.. கேட்டு உணர்ச்சிவசப்படவும்,பெருமூச்சு விடவும் தான் முடிகிறது..
பின்னிணைப்பு
நண்பர் சங்கீத் (மது) அனுப்பிய சுட்டி இது..
இன்னும் பலர் தாங்கள் அறிந்த தரவிறக்கம் செய்யும் சுட்டிகளைத் தந்துள்ளார்கள் கீழே.. எனினும் முடியுமானவரை தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தாமல் ஒலித்தட்டுக்களையும் வாங்குங்கள் என்று அன்போடு கேட்கிறேன்.
13 comments:
வரிகள் எங்கள் நிலைமைக்கும் பொருத்தமாத்தான் இருக்கு.. கேட்டு உணர்ச்சிவசப்படவும்,பெருமூச்சு விடவும் தான் முடிகிறது..//
எனக்கும் அந்த பாடலை கேட்டவுடன் ஏதோ அடி நெஞ்சு கனத்தது என்ன செய்ய
Hats off to the writer of these touching lines.. willing to hear this soon. Thanks Loshan anna.
If any one wants to get a copy of the song they could get it from this link.......
http://tamilmusica.net/musica/A-Z%20Songs/M/Maayaandi%20Kudumbathaar
But I would recommend everyone to buy the original CD as mark to encourage everyone who is involved in this.
As far as I know the song was penned by Seeman himself......
இப்படிதான் வில்லு பாட்டுக்கும் உணர்ச்சிவசப்பட்டீங்க. அப்புறம் என்ன ஆச்சு என்று ஊருக்கே தெரியுமே..
ya bro, i was i listening to this song, realy supperb lines,,
///பேசாம பேசாம இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குங்க பருந்து.
கேக்காம கேக்காம இருந்து நாம போனமட சூடு சொரணை மறந்து
இப்போ போகுதடா கோவணமும் பறந்து. ////
நிதர்சனமான வரிகள்
///வரிகள் எங்கள் நிலைமைக்கும் பொருத்தமாத்தான் இருக்கு.. கேட்டு உணர்ச்சிவசப்படவும்,பெருமூச்சு விடவும் தான் முடிகிறது..//
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
//எரியும் போது பொணமும் கூட எழுந்து நிற்குது.
உசிர் இருந்தும் உன் முதுகேன் குனிஞ்சி நிற்குது//
சாட்டையடி வரிகள்..
பாடலை அறியப்படித்தியமைக்கு நன்றி!!
"அறிவிப்பாளர்களுக்கும் பிடித்துப் போனதால் இப்போது இரண்டு நாட்களுள் எங்கள் வெற்றி வானொலியின் ஹிட் பாடலாகி விட்டது.. "
This song is a hit song for last two weeks in europe and middle east. Several downloads in various sites. The reason is in several protests this song was broadcasted along with Seeman's speach... A video version was specially created for this by friends.
Click this link for the impressive video - http://www.tubetamil.com/view_video.php?viewkey=edd36aa11414db3ba285
Seeman is doing his level best for Eelam Tamils. Thanks and Hats-off to him.
Thiru
Qatar
yes here also this song hit song.. thanks for thae information.. ippadiyana song ellam iruntha enkalukkum theriviunka...
great seeman voice....
சீமான் அண்ணா பாடிய பாடல் சூப்பர் .சீமான் அண்ணா சூப்பர்
http://dshan2009.blogspot.com
ha ha ha haaaaaaaaaa...
முதலில் வெற்றிக்கனியை கழகத்துக்கு உரித்தாக்கிய வாக்காளர் பெருமக்களுக்கும், களப்பணி ஆற்றிய லக்கி போன்ற தோழர்களுக்கும் கழகம் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்
தினப்படி மூன்று வேளை சாப்பிட்டார்களோ இல்லையோ கலைஞரை தூற்றி மூன்று வேளை பதிவு எழுதினார்கள், அவர்கள் பிரயோகப்படுத்திய வார்த்தைகள் எல்லாம் அச்சிட முடியாதவை. *ட்டிக் கதைகளையே தணிக்கை செய்த தமிழ்மணம் இவர்களின் வார்த்தைகளை கண்டுகொள்ளாதது மட்டுமல்லாமல் கழகம் தோற்பதற்கு இந்த வாரம் வரை தனது நட்சத்திரங்களாக கழக எதிர்ப்பாளர்களை களமிறக்கி அழகு பார்த்தது. நடுநிலையாக இருக்க வேண்டிய தமிழ்மணம் கட்சி பத்திரிக்கை போல் ஒரு கட்சி தளமானது, அதற்கு மாற்றம்நம்பி என்ற முகமூடி வேறு. அவர்களுக்கு மக்கள் கொடுத்தது மரண அடி. வசைபாடிய வாயெல்லாம் ஓய்ந்து போய் இருக்கும் அடுத்த தேர்தல் வரைக்கும் மூடிகிட்டு இருங்கள் அன்பின் சொந்தங்களே. ஒரு பத்து பேர் சேர்ந்து கொண்டு ஏதோ இணையமே தங்கள் கைகளில் இருப்பது போல் நடந்து கொண்டார்கள். அவர்களுக்கு ஜால்ரா தட்டுவதற்கு ஒரு செம்மறி ஆட்டு கூட்டம் வேறு சொந்த அறிவை எல்லாம் எங்கே சென்று அடகு வைத்தார்களோ
இந்த வெற்றி பணத்தினால் கிடைத்த வெற்றி என்று மெத்தப் படித்த மேதாவிகள் ஏற்கனவே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இருக்கட்டும், போன மாதம் வரை நம் கூட்டணியில் இருந்து எல்லாத்தையும் அனுபவித்துவிட்டு போன வாரம் கூட்டணி மாறி நமக்கு எதிராக ஓட்டு கேட்டார்களே, இவர்களை மாதிரி குழி பறிப்பவர்கள் எல்லாம் வேறு எப்படி பேசுவார்கள் அவர்கள் புத்திக்கு ஏற்ற மாதிரி தானே பேசுவார்கள். இவர்கள் கேட்ட மாதிரியே மக்கள் அவர்களுக்கு சவுக்கடி கொடுத்து இருக்கிறார்கள். நாளை கூட்டணி என்று மீண்டும் நம்மிடமே வருவார்கள் நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
very nice song.thank u anna.I download this song and listened.வருஷம் நாலு தேருதலு நாட்டில் நடக்குது.
அதனால நமக்கு இங்கே என்ன கிடைக்குது.
எரியும் போது பொணமும் கூட எழுந்து நிற்குது.
உசிர் இருந்தும் உன் முதுகேன் குனிஞ்சி நிற்குது.I like these lines.One doubt for me.entha paddu election nukku muthlla releaseda?ok nama naddula nadakkera mathiri erukku.Athellam pokaddum.Eppo namma இசைக்கட்டுப்பாட்டாளர் piradeep anna vukku wed?evara "NAMETHA mathiri ponu thedijavar"oru pathevilla poddu ernthinga.DOOM DOOM Pirdeep anna.ok vallththukkal(Anna ethu roba distrubant enda cut pannuga.I mean piradeep anna wed matter.)vegu sekkiraththila wed amm?Its true?Loshan anna Unga own place ella ponu peddichchiddaru.Than ura viddiddu.(Punnalaikadduvan.Summa oru guessing)
wanni manil vetri perathan mudiyala vetri fm avathu kedkalama???? thats okay
Post a Comment