August 20, 2010

அன்புள்ள சந்தியா - தொடர்ச்சி

இந்தக் கதையைப் படிக்க முதல் இங்கே சென்று முழுவதும் வாசித்து விட்டு வாருங்கள்..

அன்புள்ள சந்தியா





அதன் தொடர்ச்சி..


அந்தக் கதையின் ஹீரோ.. வேண்டுமானால் பெயரை சுதா என்று வைத்துக் கொள்வோம்..


பிறந்த திகதி பார்த்த சுதாவுக்கு மனதெல்லாம் மல்லிகைப் பூ.. இனித் தொடரலாம் என்று நினைத்தவனுக்கு கண்ணை மூடினால் கனவில் "காதல்அணுக்கள்" பாடலுக்கு சந்தியாவுடன் தான் டூயட் பாடி ஆடுவது சன் டி வியில் போகும் பட ட்றேயிலராக மீண்டும் மீண்டும் ஓடுகிறது.


பல தமிழ்ப் படங்களில் பார்த்த ஹீரோவாக அந்த நொடியிலிருந்து மாறிப் போனான் சுதா.. 


மண் சரிவில் சிக்கியிருந்த காரை எடுக்க ஊரவரை எல்லாம் உதவிக்கு அழைத்து சந்தியாவின் புன்னகையுடன் கூடிய நன்றியைப் பரிசாக எடுத்துக் கொண்டபோது உலகமே தன் காலடியில் வீழ்ந்து கிடப்பதாக உணர்ந்தான்.
புன்னகையா அது? ஆயிரம் கோடி வெண் மல்லிகையை பனித்துகள்களோடு ஒரே நேரத்தில் கொட்டி இறைத்து மனசுக்குள் தூவியது போல இருந்தது..


கண்களில் அப்படியொரு நன்றியுணர்வு..


போய் வருகிறேன் சொல்லிக் காரில் ஏறி சந்தியா செல்லும் நேரம் தன்னிடம் இருந்து இதயம் அவளுடனே ஏறிக் காரில் செல்வதாய் ஒரு உணர்வு..
மனது கனத்துப் போய் இருந்தாலும் மனசெங்கும் எதோ ஒரு குளு குளு உணர்வு பரவி இருந்ததாக உணர்ந்தான்,,

வாழ்க்கையில் முதல் தடவை என்று அவன் நினைக்கப் பார்த்தாலும் மனசு "டே பொய் சொல்லாதடா.. போன கிழமை கொடிகாமப் பக்கத்திலேயும் இப்படி ஒரு பீலிங் வரலையா?" என்று கேட்டு குட்டி அடக்கியது.


சந்தியா சந்தியா என்று கையில் கிடைத்த தாள்களிலெல்லாம் ஒரு ஆயிரம் தடவையாவது தனக்குத் தெரிந்த மொழிகளிலெல்லாம் எழுதிப் பார்த்து பரவசமடைந்துகொண்டான்.

போதாக்குறைக்கு சந்தியா என்ற பெயரை தனக்குத் தெரிந்த Facebook,Orkut என்று சகல இடங்களிலும் அவள் இருக்கிறாளா எனத் தேட ஆரம்பித்தான்..


வானொலியில் எப்போதுமே அன்புள்ள சந்தியா பாடல் ஒலிக்காதா என்று ஏங்கினான்.. 
அந்த கதாநாயகனாக நடித்த சொங்கி ஹீரோவை விடத் தானே ஹீரோவாகவும், சந்தியாவே தன் காதலியாகவும் ஏங்க ஆரம்பித்தான்..


Facebook,Gmail ஸ்டேட்டஸ் ஆகப் போட 'அன்புள்ள சந்தியா' பாடலின் வரிகளைத் தேடி எடுத்து உருகினான்.. 


இந்தக் காதல் என்பதே தொல்லை..
உயிரோடு எரிக்குதே என்னை..
உன்னை நீங்கினால் நானும் எங்கே போவேனோடி




கிடைத்த இடைவெளிக்குள் ஏழாம் இலக்க,இரண்டாம் இலக்கப் பொருத்த,பலாபலன்களைப் பஞ்சாங்கம்,நியூமேரோலோஜி என்று கிடைத்த எல்லாவற்றிலும் தேடுவதில் சாப்பாடு,தண்ணியும் மறந்து போனது.


விடுமுறையில் வீடு வந்தவன் இப்படியாகி விட்டானே எனத் தாயாரும் தங்கையும் அங்கலாய்க்க ஆரம்பித்தனர்.
தங்கைக்கு கொஞ்சம் புரிந்துவிட்டது..


பக்கத்து நாடு சந்தியா எனும் அளவுக்கு போய் விட்டான். அதைவிட அவனது பெயரே மறந்து அதுவும் சந்தியா என்று உளறிவிடுவான் போல அப்படியொரு மயக்கம்..

இணையத்தில் onlineஇல் இருந்துகொண்டே ஸ்டேட்டசில் பிசி போட்டு சந்தியா பற்றி சகல விஷயத்தையும் கூகிளிட்டுக் கொண்டிருந்தான்.
பல்லாயிரம் சந்தியாக்களில் படமில்லாத தன் அழகுதேவதை எங்கே என்று ஏங்கிய அவன் தங்கையின் ஆளரவம் அறையில் கேட்டு திரும்பினான்.. 


என்ன எனும் பாவனையில் தங்கையை நோக்க, "உங்க ஆள் லைனில் இருக்கு.. உன்னோட பேசணுமாம்" என்று கொஞ்சம் கிண்டலாகவே சொன்னாள்.


வானத்திலிருந்து தேவதைகள் ஆயிரம் மலர்க்கூடைகளை தன் மேல் கவிழ்த்தமாதிரி சந்தோசத்துடன் மனதில் ஆயிரம் வயலின்கள் இசை மீட்ட, ஆனால் அந்த மகிழ்ச்சியைப் பெரிதாக வெளிக்காட்டமால் "எப்படி நம்ம வீட்டு டெலிபோன் நம்பர்???.. " என்று தங்கையிடம் இழுத்தான்..


"ஆ.. அதான் சந்தியா போகும்போது அம்மாட்ட வாங்கீட்டு போனா.. சரி சரி வழியாம போய்க் கதை" என்று தங்கை சீண்டினாள்..


சிறகு முளைத்து கிட்டத்தட்ட பறந்தே தொலைபேசியை பதற்றம்,மகிழ்ச்சி,பரவசத்துடன் எடுத்தான்..


"ஹலோ"
"மிஸ்டர்.சுதா?"
"ஓமோம்.. சந்தியா?"
"ம்ம்.."
"பத்திரமா போய் சேர்ந்தீங்களா?"
"ஓ யா.. தாங்க்ஸ்.. உங்கட உதவியை வாழ்க்கையில் மறக்க மாட்டேன்"
"இதெல்லாம் என்ன.. சிம்பிள் விஷயம்..உங்களுக்காக இதைக் கூட செய்யாட்டில் எப்பிடி?" 


போனில் வழிவது வெளியே தெரியுதோ என்று எதேச்சையாக உதட்டோரத்தைத் துடைத்துக் கொண்டான்..


"மிஸ்டர்.சுதா உங்க வீட்டு அட்ரசைக் கொஞ்சம் சொல்றீங்களா?"
முகவரியை சொல்லிப் போட்டு.. "விரும்பினால் என்னுடைய மொபைல் இலக்கமும் வேணுமா?"
என்று இழுத்தான் நம்ம ஹீரோ..
"ம்ம் சொல்லுங்களேன்"


நின்ற இடத்திலிருந்தே பாய்ஸ் சித்தார்த் மாதிரி,அலைபாயுதே மாதவன் மாதிரி ஒரு ஜம்ப்.. 
அடுத்து அவளின் இலக்கத்தைக் கேட்கலாம் என்று நினைத்து விட்டு,
"அது சரி ஏன் அட்ரஸ்?" என்று கேட்டான்..
"இல்லை.. இன்னும் பத்து நாளில் எனக்கு கல்யாணம்.அதான் கார்ட் அனுப்ப"


டமார்.. 
தொலைபேசி ஒரு பக்கம் விழுந்து கிடக்க.. சுதா மயக்கமாய் நிலத்தில்..
"ஐயோ அம்மா. அண்ணா மயங்கி விழுந்திட்டார்" என்ற தங்கையின் குரல் சந்தியாவுக்கும் கேட்டது.. 


சுதாவின் அறையில் போட்டிருந்த வானொலியில் 
"அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்" என்று கார்த்திக் உருக ஆரம்பித்தார். 




பி.கு - இது சிறுகதை போல இருந்தா அப்படியே நினையுங்க.இல்லேன்னா எதிர்வினை,புனைவு,மொக்கை அப்பிடி எதுவேணும்னாலும் வச்சுக் கொள்ளலாம்.. 


சுதா=சுபாங்கன் அப்படி நினைத்தால் அதற்கும் நினைப்பவர்களே பொறுப்பு..


மேலதிக குறிப்பு
இதற்கு முன்னைய பதிவுக்கான பின்னூட்டங்களுக்கு பின்னூட்டமிடும் அவரவரே பொறுப்பு.
அவரவருக்கு அவரவர் பதில் கொடுப்பதால் நான் என் பதில்களை மேலதிகமாகத் தரவில்லை.
ஒட்டுமொத்தமாக இரவு பதிலிடுகிறேன்.


.

16 comments:

கன்கொன் || Kangon said...

// போன கிழமை கொடிகாமப் பக்கத்திலேயும் இப்படி ஒரு பீலிங் வரலையா? //

:D :D :D


// விடுமுறையில் வீடு வந்தவன் இப்படியாகி விட்டானே //

:D :D :D


// இல்லை.. இன்னும் பத்து நாளில் எனக்கு கல்யாணம்.அதான் கார்ட் அனுப்ப //

ஹி ஹி...
இதுக்குத்தான் சொல்றது கொடிகாமப்பக்கத்தில பாத்தா அங்க மட்டும் பாக்கோணும் எண்டு. ;-)


பிற்குறிப்பு எல்லாவற்றையும் விட அருமை...


// சுதா=சுபாங்கன் அப்படி நினைத்தால் அதற்கும் நினைப்பவர்களே பொறுப்பு.. //

சீ சீ...
நானெங்க நினைச்சன்?


கலக்கல் அண்ணா.... ;-)

Bavan said...

அவ்வ்வ்.. முடியல.. பாவம் சுபா சாரி சுதா..;)

வந்தியத்தேவன் said...

பாவம் சந்தியா...
சுபாங்கன் மன்னிக்கவும் சுதா போன்ற நல்ல குணமுள்ள பொடியனை விட்டுவிட்டு யாரோ ஒருத்தனைக் கலியாணம் முடிக்கின்றார்.

அஜுவத் said...

என்ன கொடும சார்.........

anuthinan said...

//பி.கு - இது சிறுகதை போல இருந்தா அப்படியே நினையுங்க.இல்லேன்னா எதிர்வினை,புனைவு,மொக்கை அப்பிடி எதுவேணும்னாலும் வச்சுக் கொள்ளலாம்.. //

ரைட்டு நான் எனக்கு பிடிச்ச மாதிரி வச்சு கொள்ளுறன்!!!

//"இல்லை.. இன்னும் பத்து நாளில் எனக்கு கல்யாணம்.அதான் கார்ட் அனுப்ப"..//

ஹா ஹா வழமையான கலட்டி விடுதல் இங்கும் சுதா என்கிற சுதாவுக்கு நேர்ந்து இருக்கிறது!!

//"ஐயோ அம்மா. அண்ணா மயங்கி விழுந்திட்டார்"//

//சுதாவின் அறையில் போட்டிருந்த வானொலியில்
"அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்" என்று கார்த்திக் உருக ஆரம்பித்தார்.//


யாருக்கு தெரியும் சுதா எழும்பும் போது யுவன் என்னொரு பாட்டு பாடி கொண்டு இருக்கப் போறார். அதுக்கு தகுந்த மாதிரி ஒரு பொண்ணு பஸ்லயோ, கார்லையோ இல்ல நடந்தாவது வராமலா போகும் சுதா என்கிற சுதா!!

கதையில் வந்த சுதாவுக்கும், லோஷன் அண்ணாவுக்கும் இந்த அனுபவம் இல்லை என்பதால் (உண்மை என்று நம்புவோம்) கதைகளில் சிறப்பாகவே தங்களது எண்ணங்களை வெளிபடுத்தி இருக்கிறார்கள் என்பதால் இருவருக்கும் வாழ்த்துக்கள்!!!

தர்ஷன் said...

அய்யய்யோ கதை இப்படி முடிந்து விட்டதா? sorry சுபாங்கன்

Jana said...

ஏன் இந்த கொலை வெறி!!! பாவம்தானே அந்த சுதா????
இதுவும் கடந்துபோகும்...என்று அவன் அமைதி கொள்ளட்டும்.
இந்தக்கதையும் தொடரலாம்...
ஜெஸ் தொடரும்.

Subankan said...

:D

யோ வொய்ஸ் (யோகா) said...

யாரந்த சுபாங்கன்?, எங்கேயோ கேட்ட பெயர் மாதிரி இருக்கு..

எங்க மாப்பிள்ளைய இன்னும் காணும்?

Bavan said...

//இன்னும் பத்து நாளில் எனக்கு கல்யாணம்.அதான் கார்ட் அனுப்ப//

அந்தக்கார்ட்டில் சுதா weds சுந்தியா என்றா இருந்தது???

ம.தி.சுதா said...

என் அன்பு அண்ணனே உது நானில்லை தானே.... சுதா - சந்தியா 91 வீதம் எண்கணித பொருத்தமுங்க.... மனதில் ஒரு நெருடல்... இழந்தவைகள் எப்போதும் மீளக் கிடைப்பதில்லை... மீளக் கிடைத்தால்... கிடைக்காது... பானையில் இருப்பது தான் அகப்பையில் வரும்... காற்று மட்டும் விதிவிலக்கு... அது எங்கும் இருப்பதால்...

Kiruthigan said...

சுபாங்கனண்ணா.. ஆரம்பித்த விறுவிறுப்பு கூடிக்கொண்டே போகிறது..
அருமையோ அருமை..
:-)
இங்கயும் ஒரு பதிவரின் சொந்த கதை தொடராக எழுதுறன்..
இந்த கதையும் தொடருமா?
http://tamilpp.blogspot.com/2010/08/blog-post.html

ம.தி.சுதா said...

ராமர் வேண்டுமென்றே தவளை மேல் வில்லை ஊன்றல அதன் விதி அதுவா மாட்டிக்கிச்சு....

Jana said...

இந்த கதையின் தொடர்ச்சி இங்க
http://janavin.blogspot.com/2010/08/03_21.html

ஆர்வா said...

"சந்தியா"

ஒரே நேரத்தில்
சந்தோஷப்படவும்,
சங்கடப்படவும்
வைக்கிறாள்

செழியன் said...

"நின்ற இடத்திலிருந்தே பாய்ஸ் சித்தார்த் மாதிரி,அலைபாயுதே மாதவன் மாதிரி ஒரு ஜம்ப்.. அடுத்து அவளின் இலக்கத்தைக் கேட்கலாம் என்று நினைத்து விட்டு,
"அது சரி ஏன் அட்ரஸ்?" என்று கேட்டான்..
"இல்லை.. இன்னும் பத்து நாளில் எனக்கு கல்யாணம்.அதான் கார்ட் அனுப்ப"

திடீர்த் திருப்பம்....சூப்பர்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner