August 12, 2010

குரங்கு + குடிகாரன் + கங்கோனின் காதல்

குரங்கு
ஒரு மிருகக்காட்சி சாலையிலிருந்து குரங்கு ஒன்று ஒருநாள் தப்பிவிட்டது.
பல்வேறு இடங்கள் சுற்றியலைந்து தெரியாத் தனமாக ஒரு திரையரங்குக்குள் நுழைந்து விட்டது.
அங்கே ஒரு பிரபல ஹீரோவின் படம் ஓடிக் கொண்டிருந்தது.
திரையில் ஹீரோவின் நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் தலையிலடித்துக் கொள்கிறார்கள்;கண்ணீர் விடுகிறார்கள்(கருமாந்திரமே என்று);கொட்டாவி விடுகிறார்கள்;வெளியே எழுந்து போகலாமா என்றும் யோசிக்கிறார்கள்.

ஆனால் நம்ம குரங்கார் மட்டும் ஒரு ஆசனத்தில் அமர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக,உற்சாகமாக கை தட்டி பயங்கரமாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

என்னடா இது இந்த ரோதனை பிடிச்சவனின் படம் இந்தக் குரங்குக்குப் பிடிச்சிருக்கே என்று ஆச்சரியப்பட்ட நம்ம கஞ்சிபாய் "இந்தப் படத்தை எப்பிடி இவ்வளவு ரசிச்சுப் பார்க்கிறீங்க?" என்று கேட்டார்.

குரங்கு சொல்லிச்சாம் " இதை எப்படி ரசிக்காமல் இருக்க முடியும். என்னுடன் சேர்ந்து எஸ்கேப்பாகிய என் அண்ணனைக் காணலை என்று தேடிக் கவலையுடன் இங்கே வந்தேன்.. ஆனால் பாருங்க என் அண்ணன்  எப்பிடியெல்லாம் பாடுறான்,ஆடுறான்,சண்டைப் பிடிக்கிறான்,சிரிக்கிறான். அது தான் பெருமையா இருக்கு"

என்ன படம்,யார் ஹீரோ என்று அறிய விரும்புபவர்கள் கஞ்சிபாயைத் தொடர்பு கொள்ளவும்..

தனது 22 வது பிறந்தநாளை பத்து வருஷங்கள் தாமதமாகக் குழந்தை,குட்டிகளோடு(பக்கத்து வீடு+உறவினர்கள்) கேக் வெட்டிக் கொண்டாடிய சதீஸ் ட்ரீட் தராததனால் அவரை சீண்ட வந்த ஜோக் என்று யாராவது எண்ணினால் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும். 
சொல்லிப்புட்டேன்..
குடிகாரன்
வெளிநாட்டில் இருக்கிற நம்ம நண்பர் ஒருத்தர் பயங்கர நல்லவர்.. ஐ மீன் ரொம்ப நல்லவர்னு சொல்லவந்தேன்..
பச்சைத் தண்ணியும் சூப்பும் மட்டும் குடிக்கிற அளவுக்கு அப்பாவி..
பார்ட்டிகளுக்குப் போனாலும் இவரது நண்பர்கள் அடித்தாலும் குடித்தாலும் அப்பாவியா இருந்திட்டு வரும் அம்பி.
வாசனையிலேயே நொக் அவுட் ஆகிவிடும் நோஞ்சான்.

ஆனாலும் நாமும் இவரது குடிகார நண்பர்களும் உசுப்பேற்றி "ஒரு நாள் எப்பிடியாவது இன்று இரவு பார்ட்டியில் மட்டையாகிற அளவுக்கு மூக்கு முட்டக் குடிச்சிட்டுத் தான் மறுவேலை" என்று எமக்கு மெயில் அனுப்பியிருந்தார்.

பிறகு நடந்தவை..

நம்ம நண்பர் கச்சேரியில் இணைந்திருக்கிறார்.. கையில் அவரது நண்பர்கள் கொடுத்ததையெல்லாம் வாங்கி வாங்கி கண்ணை,மூக்கை மூடிக் கொண்டு குடித்திருக்கிறார்.
பார்ட்டி முடிந்தது..

நண்பரின் அலப்பறை தாங்க முடியவில்லை.. கத்துகிறார்..குழறுகிறார்.. தடுமாறி விழப்பார்க்கிறார்.
"இரண்டிரண்டாத் தெரியுது,.. மிதக்கிற மாதிரி இருக்கு" அப்படியெல்லாம் புலம்பிய அவரை அவரது அறையிலே சேர்க்கும்போது மற்ற நண்பர்களுக்குப் பெரும்பாடாகிவிட்டதாம்..

அடுத்த நாள் காலையில் நண்பர்கள் எல்லோருக்கும் தொலைபேசியில் தன்னுடைய முதல் நாள் இரவு கூத்துகளுக்கு மன்னிப்பு கோரியிருக்கிறார்.

அதுக்கு எல்லோரும் சொன்னது " டேய் போத்தல் கணக்குல குடிச்ச நாங்களே அடக்க ஒடுக்கமாக இருக்கையில்,பச்சைத் தண்ணியை கிளாஸ் கணக்கில் குடிச்ச நீ ஏன் அப்படி ஆட்டம் போட்டு சீன் காட்டினாய்?"

அப்போ தான் நம்மவருக்கு விளங்கிச்சாம் கிளாஸ் கணக்கில் தனக்கு ஊற்றித் தந்து வெறும் தண்ணீர் என்று.
அடடா மாம்சுக்கு மறுபடி சொ.செ.சூ?
கங்கோனின் காதல் 
புதுசாக் காதல் கோட்டை கட்டும் நம்ம கங்கோன் மூன்று வருடங்களாக ஒரு பெண்ணைக் (இலங்கையில் தான் தடை எடுக்கலியே.. அதனால் பெண்ணையே தான்) காதலித்து வருகிறார்.
ஆனால் எட்ட முடியாமலே இருக்கு காதல்..
என்னடா இது ஒவ்வொரு நாளும் சந்திக்கிறான்.. gift கூடக் கொண்டு போய்க் கொடுக்கிறானாம்.. அப்போ ஏன் காதல் மட்டும் பின்நவீனத்துவ சிக்கலாய்க் கிடக்கிறது என்று எனக்கு சந்தேகம்.

சரி ஒரு நாள் அவனுக்குப் பின்னாலேயே போய்ப் பார்க்கலாம் என்று பின் தொடர்ந்தேன்.
ஒரேயொரு லெமன் பப்(lemon puff) பிஸ்கெட்டோடு அந்தப் பெண்ணை சந்தித்து சிரித்துக் கொண்டே காதலை சொன்னான்.பிஸ்கெட்டைக் கொடுத்தான்.
சொல்லிக் கொஞ்ச நேரத்தில் சடாரென்று அந்தப் பிஸ்கெட்டைப் பறித்துக் கொண்டு புறப்பட்டுவிட்டான்..

என்னடா இதுவென்று திகைத்துவிட்டேன்.
இதே மாதிரி இரண்டு,மூன்று நாள்..

பொறுக்க முடியாமல் ஒரு நாள் கேட்டேன்.. "ஏன் கங்கோன் பிஸ்கெட்டைக் கொடுத்துப் பின் பறிக்கிறாய்?"

"இல்லை அண்ணே அன்றொரு ஆங்கிலத் தளத்தில் படித்தேன்.. காதல் என்றால் கொடுப்பதும் எடுப்பதுமாம்"
என்றான் கங்கோன் கூலாக..

இப்ப ஒத்துக் கொள்கிறேன்.. உன் சொ.செ.சூ குருவுக்கு நீ நல்லதொரு சீடன் தான் ;)
இவை மூன்றும் இன்று காலை 'விடியல்' நிகழ்ச்சியில் நான் சொன்னவை.
கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட்டுக்களுடன் இங்கே..

22 comments:

வந்தியத்தேவன் said...

அண்ணே குரங்கு ஜோக் புதிசு மற்ற இரண்டும் பழசு. அதிலும் கங்கோன் லெமன் பவ் கதை என்னுடைய ஒரு சூப்பில் வந்தது கொஞ்சம் வித்தியாசமாக அது உண்மைக் கதை ஜோக் அல்ல.

அந்த லிங்கை பிரபல அனலிஸ்ட் கங்கோன் தேடி எடுத்துத் தருவார்.

சதீஸ் எனக்கு பார்ட்டி தருவதாக வாக்களித்திருக்கின்றார்.

ஒரு சின்ன சந்தேகம் உங்களுக்கு வாய்க்கும் நண்பர்களும் எப்படி உங்களைப்போல் பச்சைப் புள்ளைகளாகவே இருக்கின்றார்கள்.

http://twitter.com/sivaruban said...

Anna,
Really nice jokes.
Sivaruban

Prapa said...

//தனது 22 வது பிறந்தநாளை பத்து வருஷங்கள் தாமதமாகக் குழந்தை,குட்டிகளோடு(பக்கத்து வீடு+உறவினர்கள்) கேக் வெட்டிக் கொண்டாடிய சதீஸ் ட்ரீட் தராததனால் அவரை சீண்ட வந்த ஜோக் என்று யாராவது எண்ணினால் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்.
சொல்லிப்புட்டேன்..///

சதீசுக்கு இது தான் வேலை பிரதர் ,,,, ஹீ ஹீ.. .

கன்கொன் || Kangon said...

முதலாவது - ஹி ஹி...
எனக்கு அவரத் தெரியுமே...

இரண்டாவது - இவர எனக்கு இன்னும் வடிவாத் தெரியும்.
இண்டைக்கு அதிகாலையில் கூட இப்படி பீற்றர் விட்டுக் கொண்டு வந்தார்.

முகர்ந்து பார்த்தா மயக்காமாறிய பயபுள்ளைங்க எல்லாம் வொட்கா பற்றிக் கதைக்குதுகள்...
என்ன கொடுமை இளைய தளபதி இது?

கங்கோன் - ஹி ஹி... ;)
நான் நல்லவன் நல்லவன் நல்லவன்....
அப்பாவி அப்பாவி அப்பாவி...

// இப்ப ஒத்துக் கொள்கிறேன்.. உன் சொ.செ.சூ குருவுக்கு நீ நல்லதொரு சீடன் தான் ;) //

:-o
நான் பாவம்.
இப்பிடி அவமானப்படுத்தாதயுங்கோ... ;)

// அதிலும் கங்கோன் லெமன் பவ் கதை என்னுடைய ஒரு சூப்பில் வந்தது கொஞ்சம் வித்தியாசமாக அது உண்மைக் கதை ஜோக் அல்ல.

அந்த லிங்கை பிரபல அனலிஸ்ட் கங்கோன் தேடி எடுத்துத் தருவார். //

அவ்வ்வ்வ்வ்....
அது வேற கதை... ;)

http://enularalkal.blogspot.com/2009/12/16-12-2009.html

Mohamed Faaique said...

"வாசனையிலேயே நொக் அவுட் ஆகிவிடும் நோஞ்சான்."
இதெல்லாம் எங்கிருந்து வருது..

கன்கொன் || Kangon said...

அண்ணா!
ஒரு சந்தேகம் கேட்டால் கோவிக்கமாட்டீர்களா?

இந்தப் பதிவுக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்?
You might also like இல விஜய் படமாக் காட்டுது உங்கட பதிவு...

இங்க பாருங்கோ...
http://a.imageshack.us/img130/7841/sp32439.jpg

என்னண்ணே சம்பந்தம்? #அப்பாவிக்கோயிந்து

Subankan said...

முதலாவது கலக்கல். அந்த நடிகரு பாவமையா. இரண்டாவதில் //வாசனையிலேயே நொக் அவுட் ஆகிவிடும் நோஞ்சான்.
//
இந்த வரியை மட்டும் போய் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு மூன்றாவது ஜோக் புரியவில்லை. ஒருவேளை நான்தான் நிஜமான ப.பாலகனோ? நம்ம ரேஞ்சுக்கு ஒரு ரைம்ஸ் சொல்லிட்டு எஸ் ஆகிடறன். நிலா நிலா ஓடிவா, நில்லாமல் ஓடிவா, மலைமேல் ஏறிவா, மல்லிகைப்பூக்கொண்டுவா :)

anuthinan said...

//குரங்கு கதை//

அண்ணே யார் எண்டு சொல்லாமலே விளங்குது...!!!

//தனது 22 வது பிறந்தநாளை பத்து வருஷங்கள் தாமதமாகக் குழந்தை,குட்டிகளோடு(பக்கத்து வீடு+உறவினர்கள்) கேக் வெட்டிக் கொண்டாடிய சதீஸ் ட்ரீட் தராததனால் அவரை சீண்ட வந்த ஜோக் என்று யாராவது எண்ணினால் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்.
சொல்லிப்புட்டேன்.//

அநேகமாக ட்ரீட் வெகு சீக்கிரத்தில் தருவார் அவர்..... இந்த கதையை படித்தால்....! - குரு சார்பாக சீடனின் அறிக்கை-

//குடிகாரன் கதை//
சூப்பர்

//அப்போ தான் நம்மவருக்கு விளங்கிச்சாம் கிளாஸ் கணக்கில் தனக்கு ஊற்றித் தந்து வெறும் தண்ணீர் என்று.
அடடா மாம்சுக்கு மறுபடி சொ.செ.சூ//

இது கொஞ்சம் வித்தியாசமான சொ.செ.சூ தான்!!! பயபுள்ள அப்ப நம்மள மாதிரி எண்டு சொல்லுங்கோ!!

//கங்கோனின் காதல் //

இது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது!!!

//புதுசாக் காதல் கோட்டை கட்டும் நம்ம கங்கோன் மூன்று வருடங்களாக ஒரு பெண்ணைக் (இலங்கையில் தான் தடை எடுக்கலியே.. அதனால் பெண்ணையே தான்) காதலித்து வருகிறார்.//

ROFL :)

//இல்லை அண்ணே அன்றொரு ஆங்கிலத் தளத்தில் படித்தேன்.. காதல் என்றால் கொடுப்பதும் எடுப்பதுமாம்"
என்றான் கங்கோன் கூலாக..//

NO COMMENTS BUT.....>
"ஊரு உறங்கும் நேரத்தில்
என்னோட செல் போனில்
மிஸ்டு கால் கொடுத்து வச்சே மல்லிகா - நானும்
பில்லு கட்டி சொத்தை அழித்தேன் மல்லிகா
செல் போன் மாறவில்லை மல்லிகா
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா "

//கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட்டுக்களுடன் இங்கே..
//

கொஞ்சம் இல்ல ரொம்பவே எண்டு மாத்திருங்கோ

//அடடா மாம்சுக்கு மறுபடி சொ.செ.சூ//

அஜுவத் said...

அண்ணா என்ன ரொம்ப ஜாலி மூட் போல; அது சரி அந்த தண்ணி மேட்டர் நம்ம சுபாஷ் இல்லயே? இப்படியே போனா இலங்கயிலயும் அனுமதி கேட்பாங்க; இல்leeeeeeeeeee நான் பொthoooooooooooova சொன்னேன்.........

சி.பி.செந்தில்குமார் said...

ஜென் கதை மாதிரி நீங்க ஜின் கதை சொல்லி ஃபேமஸ் ஆகிடலாம்.

Vijayakanth said...

kuruvi, villu......

Unknown said...

என்னமா பட்டும் படாமலும் குத்துறாங்கப்பா!அந்த நடிகர் மேல எம்புட்டு கோபம்!!

யோ வொய்ஸ் (யோகா) said...

சதீஸ், வந்தி, கன்கொனுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

பச்சை தண்ணி குடிச்சிட்டுதான் மனுஷன் இந்த ஆட்டம் போடுதா?

கன்கொனுக்கு எனது சார்பில் லெமன் பவ் அனுப்பலாம் என நினைக்கிறேன், எத்தனை பக்கெற்றுகள் என கன்கொன் சொன்னால் அனுப்புகிறேன், அதில் ஒன்றையாவது அவளுக்கு கொடுக்கட்டும். (நான் பிஸ்கட் நிறுவனத்தில் வேலை புரிவதால் எனக்கு குறைந்த விலைக்கு லெமன் பவ் கிடைக்கும்)

ஆதிரை said...

:D

அஹமட் சுஹைல் said...

நீங்கல்லாம் முன் - பின் அறிமுகமானவிய்ங்க. ஒரு குரூப்பா
ஒரு ஃப்லோவ்ல போயிட்டிருக்கீங்க. அதனால நாங்க இடையில வந்து
குறுக்க நிக்க விரும்பல.
ஆனாலும் எங்கட அட்டண்டன்சும் முக்கியமில்லையா?
அதனலதான் வந்து ஒரு அட்டெண்டன்ச போட்டுட்டு கிளம்பிடலாமெண்டு வந்தம்.

நானும் “உள்ளேன் ஐய்யா”

சரி அப்படியே நாங்களும் ஒரு கடையப் போட்டு பிசினசே இல்லாம
ஈ ஓட்டிட்டு இருக்கம். எங்கட கடப்பக்கமும் வாறது..

நாங்களும் பிசினஸ் பண்ணி பொளப்பு நடத்தனுமா இல்லையா..?
http://aiasuhail.blogspot.com/2010/08/blog-post_08.html

SShathiesh-சதீஷ். said...

//தனது 22 வது பிறந்தநாளை பத்து வருஷங்கள் தாமதமாகக் குழந்தை,குட்டிகளோடு(பக்கத்து வீடு+உறவினர்கள்) கேக் வெட்டிக் கொண்டாடிய சதீஸ் ட்ரீட் தராததனால் அவரை சீண்ட வந்த ஜோக் என்று யாராவது எண்ணினால் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்.
சொல்லிப்புட்டேன்..
//

பயபுள்ள எதுக்கும் அசரமாட்டான் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

யார் பெத்த பிள்ளையோ பாவம்...

இரண்டாவது மாமோய் எப்போ இது சொல்லவே இல்லை....

குரு வழியில் சீடன் இல்லை இதில் இவன் குருவை விஞ்சிய சீடன்....ஒரே பெண்ணை காதலிக்கிறான் என்பதே உறுத்துகிறது. அது பொய்

மதுரை சரவணன் said...

கொடுப்பதும் எடுப்பதும்.... வாழ்த்துக்கள்

ம.தி.சுதா said...

அருமை...அருமை...அண்ணா தமிழை சரியாக உச்சரிக்கும் அதி திறமையுள்ள நீங்கள் எப்படி உங்கள் எழுத்தில் ஆங்கிலத்தை அனுமதித்தீர்கள். (ஐ மீன்)

அஜுவத் said...

சதீஷ் செம அடி.........

Anonymous said...

சதீஸ் அண்ணா பாவம். விட்டுடுங்கோ.
கன்கோன் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் ,உங்கள் பணிதொடர்க....................

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..

View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner