துடுப்பைப் பிடியடா - வெற்றி உலகக் கிண்ணப் பாடல்

ARV Loshan
9

கிரிக்கெட் உலகக் கிண்ணத்துக்கு இன்னும் ஒன்பது நாட்களே இருக்கும் நிலையில் எங்கும் எவரும் பேசும் விடயம் உலகக் கிண்ணம் உலகக் கிண்ணம்.

இந்த உலகக் கிண்ணத்தைப் பார்க்கவுள்ள ரசிகர்களுக்கு உற்சாகம் தருமுகமாக எமது வெற்றி FMஇனால் இலங்கை அணிக்கு உற்சாகம் தரும் விதத்தில் ஒரு உலகக் கிண்ணப் பாடல் உருவாக்கப்பட்டது. கடந்த முதலாம் திகதி வானொலியில் அறிமுகப்படுத்தப்பட்ட 'துடுப்பைப் பிடியடா' என்று ஆரம்பிக்கும் பாடலுக்கு ஏக வரவேற்பு...

அடிக்கடி எமது வெற்றி FMஇல் ஒலிக்கும் பாடலைத் தரவிறக்கும் விதம் பற்றிக் கேட்டுப் பலர் மின்னஞ்சல், மடல்கள் அனுப்பியுள்ளார்கள்..

அதற்காக இந்தப் பதிவு...

வெற்றியின் உலகக் கிண்ணப் பாடல் கேட்க -
http://yourlisten.com/channel/content/79659/Vettri_WC_song

தரவிறக்க
http://www.mediafire.com/?8jdak6d9row6tds

பாடகர்கள் - ரஜீவ், பிரஷாந்தினி, ஷமீல், Nicky(USA), J Light(USA) 


பாடல் எழுதியோர் - லோஷன், பிரதீப், சூர்யா & ஷமீல்


மெட்டமைப்பு + இசை - ஷமீல்


ஒலிச் சேர்க்கை + பாடல் உருவாக்கம் - ஷமீல் + டிரோன் 
பாடலின் முழுமையான வரிகள்..

துடுப்பு பிடியடா
தூர அடியடா
நெருப்பு பந்தினை
நேரே எறியடா

அடித்து நொறுக்கடா
ஆடுகளமடா
ஆணை பிறந்ததும்
ஆடத்தொடங்கடா

தொண்ணூற்றாறில் கையில் ஏந்தினோம்
இந்நூற்றாண்டில் இன்னும் சாதிப்போம்
வெற்றி வெற்றி என்று எங்கும் முழங்குவோம்
தடைகள் தகர்த்திட
புயலாய் நாம் எழுவோம்

வெற்றி வரும் சுற்றி வரும்
கிண்ணம் இனி எங்கள் வசம்
சிக்ஸ் அடிக்கும் எங்கள் கரம்- எட்டுத்திக்கும்
Come on Sri Lanka



சிங்க நடையடா
சீறும் படையடா
அரங்கம் அதிரவே
அசத்தும் அணியடா

யோக்கர் போடடா
பௌன்சர் போடடா
மோதும் அணிகளின்
மூக்கை உடையதா

இலங்கை தேசத்தின் இதயத்துடிப்புகள்
உனக்குள் கேட்கும் உணர்வாய் தோழா
காற்றும் மண்ணும் உந்தன் பக்கம் தான்
எட்டுத்திக்கும் சொல்லும்
Come on Sri Lanka

rap- "Show me that you really wanna roll,
You don't ask for mine, and I'll give it to you,
we 'bout to get up on a roll,
96 wasn't the last time we give it to you,
blue and gold, for the new and old,
and it don't really matter what you've been told,
you'll get bowled out fast or spin
Sri Lanka knows that that's a win.

Never gonna let that pressure in my way,
never be afraid to take what I want,
The lions have come out to play,
C'mon Sri Lanka Vetri namathey.

விதிகளை மீறி எதிரிகள் கூடி
சதி செய்தார் அன்று
வலிகளை மறந்து வழிகளை கண்டோம்
முயற்சியும் பயிற்சியும் மூச்சென கலந்திட..
துணிவுடன் இறங்கு ஜெயம் ஜெயம்...
எதிர்ப்பவன் கண்ணில் பயம் பயம்...
நம்பிக்கையே உன் பலம் பலம்...
அடிகள் இடி போல் வானைப்பிளக்கட்டுமே...

வெற்றி வரும் சுற்றி வரும்
கிண்ணம் இனி எங்கள் வசம்
சிக்ஸ் அடிக்கும் எங்கள் கரம்- எட்டுத்திக்கும்
Come on Srilanka 


வெற்றி வரும் சுற்றி வரும்
கிண்ணம் இனி எங்கள் வசம்
சிக்ஸ் அடிக்கும் எங்கள் கரம்- எட்டுத்திக்கும்
Come on Sri Lanka





இந்த வரிகளில் நான் எழுதிய வரிகள் எவை எனக் கேட்டு இன்றும் விடியலில் ஒரு கேள்வி வந்திருந்தது..


கூட்டு முயற்சி என்பதால் சில வரிகளை மட்டுமே சொல்லி இருந்தேன்.. 
எனினும் இது என் வலைத்தளம் என்பதால் இங்கே பகிரலாம் தானே? 


என் வரிகள்..


துடுப்பு பிடியடா
தூர அடியடா
நெருப்பு பந்தினை
நேரே எறியடா





தொண்ணூற்றாறில் கையில் ஏந்தினோம்
இந்நூற்றாண்டில் இன்னும் சாதிப்போம்
வெற்றி வெற்றி என்று எங்கும் முழங்குவோம்
தடைகள் தகர்த்திட
புயலாய் நாம் எழுவோம்

வெற்றி வரும் சுற்றி வரும்
கிண்ணம் இனி எங்கள் வசம்
சிக்ஸ் அடிக்கும் எங்கள் கரம்- எட்டுத்திக்கும்
Come on Sri Lanka





ஷமீல் எங்களுடன் இணைத்த பிறகு அவரது முதல் பெரிய பணியாக வெற்றிகரமாக முடித்த பணியின் வெற்றி எங்களுக்கும் மகிழ்ச்சி+பெருமை.
ஒரே நாளில் பாடல் எழுதி அடுத்த நாள் ஒலிப்பதிவு, இரு நாட்களில் ஒலிச் சேர்க்கையுடன் வெளியாகியுள்ளது.


பாடலை உருவாக்கியதில் இணைந்த அத்தனை கலைஞருக்கும் வாழ்த்துக்கள்.


வெற்றிகரமாக வரவேற்பினால் ஊக்கமளித்த நேயர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றிகள்.


இன்னொரு முக்கிய விடயம்.. 
ட்விட்டரில் நான் முன்பே பகிர்ந்தது....


வெற்றி FM இன் உலகக் கிண்ணப் பாடலான 'துடுப்பைப் பிடியடா'(Come on Sri Lanka) பாடலை எந்தவொரு வானொலியும் ஒலிபரப்பலாம்.இசை ரசிகர்களுக்காகவும் எமது கலைஞர்களுக்காகவும் எம்முடன் மட்டுப்படுத்தாமல் அனைவருக்கும் பொதுவாக இந்தப் பாடலை கிரிக்கெட் ரசிகர்கள் +இசை ரசிகர்களின் சொத்தாக்குகிறோம்..
இசையமைத்த ஷமீல் + பாடக,பாடகியருக்கு வெற்றியின் வாழ்த்துக்கள்.





உலகக் கிண்ணத்தைப் பார்க்கும் வாய்ப்பை எமது நேயர்களுக்கும் வழங்கி இருக்கிறோம் என்ற பெருமையுடன் இந்த உலகக் கிண்ணப் பாடலையும் பரிசாக வழங்கிய பெருமையுடன் மீண்டும் சொல்கிறோம்....


எட்டுத்திக்கும் Come on Sri Lanka











Post a Comment

9Comments

Please Select Embedded Mode To show the Comment System.*