September 17, 2012

ஆரம்பமாகிறது ICC World Twenty20


19 நாள் திருவிழா..
பரபரப்புக்குக் குறைவில்லை.
ESPN-STAR ஒளிபரப்பு நிறுவனங்களின் கூற்றுப்படி இம்முறை நடைபெறும் இத்தொடரானது ஒளிபரப்பு, பார்வையாளர் சாதனைகளைஎல்லாம் முறியடித்துவிடுமாம்.

ஆமாம் நாளை ஆரம்பமாகவுள்ள  ICC World Twenty20 என்று அழைக்கப்படுகின்ற Twenty 20 போட்டிகளுக்கான உலகக் கிண்ணத்தொடர்   பற்றித் தான் சொல்கிறேன்.

SLPL வணிகரீதியில் வெற்றியைத் தந்த பின்னர் இன்னுமொரு வசூல் வெற்றியைத் தரக்கூடியதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு இது அமையப் போகிறது.
அநேகமான போட்டிகளுக்கான டிக்கெட்டுக்கள் பெருமளவில் விற்று முடிந்திருக்கின்றன. கண்டி, ஹம்பாந்தோட்டையிலும் கூட.
அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட்டுக்கள் அத்தனையும் காலி.

நல்ல காலம் நான் ஊடகவியலாளனாக ICCயின் அடையாள அட்டை அனுமதிப் பத்திரம் (Media accreditation) பெற்றுக்கொண்டேன்.
ஆர்வமுள்ள அப்பா, குடும்பத்தாருக்கு (நம்ம ஹர்ஷு இப்ப ஒரு கிரிக்கெட் ரசிகன்.. சங்கா, மத்தியூஸ், தோனி, பிராவோ அவனுடைய favorites) டிக்கெட்டுக்கள் வாங்கிவிட்டேன்.

அமெரிக்க சுற்றுலாவுக்குப் பின்னர் வீட்டிலும், வெளியிலும் குவிந்து கிடந்த வேலைகளுக்கு மத்தியிலும் வந்திருந்த கிரிக்கெட் அணிகளின் ஊடக சந்திப்புக்கள், பேட்டிகள், சில பயிற்சிப் போட்டிகள், படம் பிடித்தல்கள் என்று முடியுமானவரை ஓடி ஓடி திருப்தியாக விஷயங்கள் சேகரித்துவிட்டேன்.

படங்களைத் தொகுப்பாக என் பேஸ்புக் பக்கங்களில் பதிந்துள்ளேன்.

அவற்றின் பின்னால் சுவாரஸ்யமான பல சம்பவங்களும் இருக்கின்றன.

இனி போட்டிகள் நடைபெறும் தினங்களிலும் முடியுமானவரை ஒவ்வொரு நாளிலும் சிறு சிறு இடுகைகள் மூலமாக சேர்த்து வைத்துள்ள அந்த விஷயங்களைப் பகிரலாம் என்று நம்புகிறேன்.
(சிரிக்காதீங்க பாஸ்.. நம்பிக்கை தானே வாழ்க்கை)

2011 உலகக் கிண்ண நேரம் ஓடி ஓடி உழைத்துக் களைத்ததை விட,  நான்கு மணி நேரம் மட்டுமே நீடிக்கும் இந்த T20 தொடர் அதிகமான நேரத்தை எடுக்காதே....

அதை விட மனதுக்கு மிகத் திருப்தியான விடயம் ICC World Twenty20 என்று அழைக்கப்படுகின்ற Twenty 20 போட்டிகளுக்கான உலகக் கிண்ணத்தொடர் பற்றிய முழுமையான முன்னோட்டப் பார்வையை ஒரு விரிவான இடுகையாக இட வேண்டும் என்று எண்ணி அதில் வெற்றியும் கண்டுவிட்டேன்.

தமிழ் மிரர் இணையத்துக்காக இரு பகுதிகளாக எழுதியுள்ளேன்.
கீழேயுள்ள சுட்டிகளின் வழி அவற்றை வாசித்து விட்டு மீண்டும் வாருங்கள்..

இன்னும் சில நம்ம ஸ்பெஷல்கள் இங்கே இருக்கின்றன.
அவற்றையும் வாசித்துக் கீழே கருத்திடலாம், கலந்துரையாடலாம், இல்லை கலாய்க்கலாம்..


உலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1
உலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2
வாசித்தீர்களா?

இப்போ வாருங்கள்..

ஆசியாவிலே இடம்பெறும் முதலாவது  Twenty 20 போட்டிகளுக்கான உலகக் கிண்ணத்தொடர் இது.

கடந்த ICC World Twenty20 பற்றிய முன்னோட்ட இடுகைகள்


T 20 உலகக் கிண்ணம் 2010- என் பார்வை

ஆசிய அணிகள்+ஆஸ்திரேலியா - உலகக் கிண்ண உலா

எந்த அணிக்கான/அணிகளுக்கான வாய்ப்பு அதிகம் என்று ஊகிக்க முடியாதவாறு அனேக அணிகள் சம பலத்தோடு இருக்கின்றன/ தெரிகின்றன.அண்மையில் தான் விருதுகளை மலையாகக் குவித்து வென்று வரும் சங்கக்கார ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார், இலங்கையின் ஆடுகளங்கள் இப்போது நிறையவே மாறிவிட்டன.. எனவே சுழல் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே சாதகத்தன்மையை இத்தொடர் வழங்கும் என்று எதிர்பார்க்கவேண்டாம் என்று..

T20 போட்டிகள் என்றாலே அதிகம் சாதிக்கின்ற அல்லது அதிக முக்கியத்துவம் பெறுகின்ற சகலதுறை வீரர்களும், அதிரடி சிக்சர் மன்னர்களும் குதித்துள்ள களத்திலே தனித்துத் தெரியப் போகின்றவர்கள் யார் எனும் ஆர்வம் ....

கடந்த ICC World Twenty20 இல் டில்ஷான், அப்ரிடி ஜொலித்தது போலவும், மத்தியூசின் அபார பிடி உலகப் புகழ் பெற்றது ;போலவும், இம்முறை யார் நட்சத்திரமாகப் போகிறார்?

புதிதாக வெளிவரப் போகிற புதுமுக நட்சத்திரங்கள் யார்?

என்னென்ன புதிய சாதனைகள் படைக்கப்படும்?
இவ்வாறான எதிர்பார்ப்புக்களைத் தாண்டி, எனக்கு இருக்கும் சின்னச் சின்ன ஆசைகளாக ஆப்கானிஸ்தான், அயர்லாது ஆகிய அணிகள் தங்கள் தடம் படைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

இலங்கை கிண்ணம் வெல்லவேண்டும் என்பது ஓவரான ஆசையோ தெரியவில்லை.. ஆனால் இந்த சிறு அணிகள் தங்களைப் பெரியளவில் வெளிப்படுத்தவேண்டும் என்பது நியாயமான ஆசை தானே?

T20 போட்டிகளில் கணிப்புக்கள் செய்வது என்பது எமது மூக்கை நாமே உடைத்துக்கொள்வது போல.. அனுபவப்பட்டிருக்கிறேன்.

அய்யோ அம்மா.. என்னா அடி இது..ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக சொல்வேன்...
Favorites என்ற முத்திரையோடு வருகிற சில அணிகளுக்காவது அதிர்ச்சிகள் காத்திருக்கும்...

நாளை  இரவு 7.30 முதல் இனி கிரிக்கெட் கோலாகலம் தான்...

2 comments:

Nirosh said...

T20 உலககிண்ண உற்சாகத்தை மீண்டும் உயர்ந்திருக்கிறது அண்ணோய் உங்கள் அலசல்.. அதிகபடியான ஆசை அல்ல இலங்கை இம்முறை சம்பியன் ஆவது என்பது.. நியாயமான ஒவ்வொரு இலங்கை ரசிகனினதும் கனவான ஆசைதான். அதற்க்கு தெரிவு குழுவும் நமக்கு சாதகமான வீரர்களை கொடுத்திருக்கிறார்கள். நம்பிக்கையுடன் காத்திருப்போம். இந்தமுறை விக்கிரமாதித்தன் ம்ம்ம்.

பதிவுக்கு வாழ்த்துக்கள்..:)

Vithyarajan said...

Afridi yoda wanted a photo eduthukitingala?lol.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner