December 26, 2013

செக்ஸ் !!! - தேடல் சொல்வது - இலங்கையும் கூகிளும்

எல்லாருமே கூகிள் தேடலில் 'செக்ஸ்' பற்றித் தேடி இலங்கையர் சாதனை படைத்ததை 'பெருமை'யோடு பகிர்ந்து கொள்வதை அவதானிக்கிறோம்.

ஆனால் கூகிள் தேடலில் கடந்து செல்லும் இந்த 2013ஆம் ஆண்டில் அதிகமாகத் தேடப்பட்ட விடயங்கள் எவை?

ஒவ்வொரு பிரிவாக கூகிளில் தேடப்பட்ட விடயங்கள் / பெயர்கள் தொடர்பாக கூகிளின் உத்தியோகபூர்வ Zeitgeist report வெளியிட்டுள்ள தகவல்கள் பலருக்கும் ஆச்சரியத்தைத் தரலாம்.

http://www.google.com/trends/topcharts?zg=full&hl=en

அதிகமாகத் தேடப்பட்ட நபர்களாக காலமான தென் ஆபிரிக்க மாமனிதர் நெல்சன் மண்டேலா மற்றும் விபத்தில் மரணித்த போல் வோக்கர் ஆகியோர் இருப்பார்கள் என்பது அனைவருமே ஊகிக்கக் கூடிய விடயங்களே...

ஆனால் இன்னொரு பரபரப்பு நபரான எட்வேர்ட் ஸ்னோடன் - அமெரிக்காவின் தற்போதைய முக்கிய எதிரி முதல் முக்கிய  தேடல்களில் இல்லை என்பது ஆச்சரியமே.

அதிகமாகத் தேடப்படும், விடயங்களில் Apple நிறுவனம் அண்மையில் வெளியிட்ட iPhone 5 s மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

2013இல் நடந்த சம்பவங்களில் அமெரிக்க அரசு ஸ்தாபனம் மூடப்பட்டமை முதல் இடத்தையும் அடுத்த  பிரேசிலில் இடம்பெறப்போகின்ற உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டித்தொடர் இரண்டாம் இடத்தையும் தேடலில் பெற்றுள்ளன.



திரைப்படங்களில் Man of Steel மற்றும் Iron Man 2 ஆகிய எதிர்பார்த்த 2013இன் பிரம்மாண்ட இரு திரைப்படங்கள் முந்தியுள்ளன.

கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட விளையாட்டு வீரராக எந்தவொரு வீரரையும், வீராங்கனையையும் முந்தி -  தன் காதலியைக் கொன்ற தென் ஆபிரிக்க விசேட தேவைக்குரிய மெய்வல்லுன வீரரான ஒஸ்கார் ப்ரிட்டோரியஸ் தேடப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து கிரிக்கெட் பக்தர்களைக் கவலையுற வைத்த 'கடவுள்' சச்சினோ, கால்பந்தாட்ட தெய்வங்கள் மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோரோ முதல் ஐந்துக்குள்ளேயே இல்லை.

ஆனால் ஊக்க மருந்துப் பாவனையால் சர்ச்சை கிளப்பிய சைக்கிளோட்ட வீரர் லான்ஸ் ஆர்ம்ஸ்ஸ்ட்ரோங் ஐந்தாம் இடத்தில்.
கோக்கு மாக்கு செய்தால் தான் தேடப்படுவோம் போல..

இந்த வருடத்தில் கூகிள் பாவனையாளர்களால் உலகளாவிய ரீதியில் அதிகம் தேடப்பட்ட முதல் 1௦

1. Nelson Mandela
2. Paul Walker
3. iPhone 5s
4. Cory Monteith
5. Harlem Shake
6. Boston Marathon
7. Royal Baby
8. Samsung Galaxy S4
9. PlayStation 4
10. North Korea

இலங்கையர் அதிகமாகத் தேடியது பாலியல் சார்ந்த விஷயமாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைத் தான்.  அது தான் தினமும் பத்திரிகைகள் காவி வரும் பாலியல் வரட்சி + வன்முறை செய்திகள் சொல்கின்றனவே.


படம் - Daily Mirror 

ஆனால் எனக்கென்ன ஆர்வம் என்றால் முதல் பத்து இடங்களில் கூகிளில் நம்மவர்கள் தேடிய ஏனைய முக்கிய விடயங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்வது தான்.

Daily Mirror இணையத் தளத்தில் வெளியான இந்தத் தகவல்கள் சில விஷயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளன.

இலங்கையர்கள் ஆர்வமுடன் இந்த ஆண்டில் தேடிய முதல் பத்து பாலியல் சார்ந்த விடயங்கள்....


சீ.. கருமம் என்று யோசிப்பதை விட தெரியாத விஷயங்களைத் தெளிவு படுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள் என்றும் கிடைக்காத விஷயங்களுக்கான வறட்சியைப் போக்கிக்கொள்ள வலையைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் பார்க்கலாம்.
ஆனால் ஆக்கபூர்வமாக (?) பயன்படுத்தும் எம்மில் பெரும்பாலானோருக்கு அவமானத்தை இந்தத் தேடல் சிகாமணிகள் ஏற்படுத்தித் தந்துள்ளார்கள் என்ற கடுப்பும் வேறு.

மேல் மாகாணத்தில் நுகேகொட, ஹோமாகம ஆகியன முன்னிலை 'செக்ஸ்' தேடல் நகரங்களாம். கண்டியும் காலியும்அந்தந்த மாகாணங்களில் முன்னிலை.

இதில் இன்னொரு விடயத்தையும் நோக்கவேண்டும்.
பாலியல் சார்ந்த விடயங்கள் என்றவுடன் 'அப்பாவி'களான நம்மவர்கள் உடனடியாக பயன்படுத்தும் ஒரு சொல் SEX என்பதே....

இதனால் தேடல் 'பொறிகளில்' சிக்கிக் கொண்டார்கள்.
இலங்கையின் பின்னால் வரிசை கட்டி வந்துள்ள அப்பாவி, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் மக்கள் எல்லாருமே அப்படித்தான்.

பெரியண்ணன் இந்தியாவின் பெரும்பாலானோரும் உட்பட.

ஆனால் மேலைத்தேயத்தவர்கள் அப்படியான விஷயங்களுக்கேன்றே வைத்துள்ள பல்வேறு ராகம் ரகமான பதங்களினைத் தத்தம் தேவைகளின் பிரகாரம் பயன்படுத்துவதால் தப்பியிருப்பார்கள்.
(இது என் பக்க ஊகம் மட்டுமே)


இன்னும் இலங்கையர் தேடியவை என்ன, எவை பற்றி என்று முழுதாக அறிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கிறது.

சராசரிக்கும் சற்று கீழான இணையம் சார்ந்த தொழிநுட்ப அறிவுகொண்ட அடியேன் இதற்காக தொழிநுட்பப் புலிகள், இணையத் திமிங்கிலங்களிடம் இது பற்றி இன்னமும் தேடித் துளாவிக்கொண்டே இருக்கிறேன்.

http://www.google.com/trends/explore#geo=LK&date=1%2F2013%2012m&cmpt=q

http://www.google.com/trends/explore#geo=LK&date=today%2012-m&cmpt=date

இப்படியான தேடல் முடிவுகள் கிடைத்தாலும் இன்னும் பூரண திருப்தியில்லை.

ஆர்வமுள்ளவர்கள் கொஞ்சம் பயனுள்ளதாக இப்படியும் தேடிப்பாருங்களேன்.



No comments:

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner