அன்புள்ள வாசக நண்பர்களே, பதிவுலக நண்பர்களே...
வலைப்பதிவராக மாறி மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ள இந்த மாதத்தில் (என்னுடைய முதலாவது பதிவு வெளியானது 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி.
வணக்கம்
என்னுடைய வலைப்பதிவை இணையத்தளமாக மாற்றும் நேரம் வந்தாச்சு என்று நினைக்கிறேன்.
பல அன்பு நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாளை இப்போது முதல் என்னுடைய வலைப்பதிவு
http://loshan-loshan.blogspot.com/ நான் இவ்வளவு காலமும் பெயருக்கு வைத்திருந்து re direct பண்ணி இருந்த www.arvloshan.com என்ற இணையத்தளத்தில் இயங்கும் என்பதை அன்போடும் மகிழ்ச்சியோடும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால்
http://loshan-loshan.blogspot.com/ ஐ மனப்பாடமாக வைத்திருந்து என் பதிவுகளை வாசித்துவரும் நீங்கள் அப்படியே வருகை தரலாம்.. அங்கிருந்தும் நேரடியாக இங்கே வரலாம் :)இன்று என் விசாரணைகள், தொல்லைகள், சந்தேகங்களை பாதி வேலை நாளில் பொறுத்து என்னுடன் இருந்து வலைப்பதிவில் தேவையற்ற Gadgetsஐ அகற்றி, இன்னும் அகற்றுவதற்கு பரிந்துரைகளை செய்து தந்த தம்பிமார் ஜது, கன்கோன் ஆகியோருக்கு நன்றிகள்.
குறை, நிறைகள், விமர்சனங்கள், மேலதிக ஆலோசனைகளைத் தாராளமாக வரவேற்கிறேன்.
உங்கள் தொடரும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்...
** தலைப்பு விளக்கம் - எத்தன நாளுக்குத் தான் எல்லாரும்போலவே "ஆத்தா பாஸ் ஆகிட்டேன்" "ஆத்தா பியூஸ் ஆகிட்டேன்" என்று தலைப்பு போடுவது?
அதான் சீசனுக்கு ஏற்றது போல "மங்காத்தா"வைக் கூப்பிட்டேன்.