October 13, 2011

நவீனகால இலத்திரனியல் ஊடகங்கள் எதிர்நோக்கும் சவால்கள்.


அண்மையில் கொழும்பு தமிழ் சங்கத்தில் வாராந்த நிகழ்ச்சி ஒன்றில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் பற்றி உரையாற்ற அழைத்திருந்தார்கள்.
நான் எடுத்துக் கொண்டு உரையாற்றிய தலைப்பு -
நவீனகால இலத்திரனியல் ஊடகங்கள் எதிர்நோக்கும் சவால்கள்.



கட்டுரை வடிவில் அந்த உரையை இங்கே பதிவிட முடியாமல் இருந்தாலும் ஒலிப்பதிவு செய்து ஒலிவடிவில் தரவேற்றியுள்ளேன்.
கேட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஊடகவியலாளர்கள், ஊடக விமர்சகர்களும் உங்களது கருத்துக்களை இங்கே தரலாம்....

எனது உரை..
பாகம் 1




பாகம் 2




சபையோரின் கருத்துக்கள் + விமர்சனங்கள் + கேள்விகள்




எனது முடிவுரை + பதில்கள்




ஒலிப்பதிவைத் தொகுத்து பதிவேற்றும் விதமாகத் தயார்ப்படுத்தித் தந்த தம்பி கன்கோன் கோபிகிருஷ்ணாவுக்கு நன்றிகள்.


12 comments:

நிரூஜா said...

கேட்டிங்க்...!

ம.தி.சுதா said...

அண்ணா முதலாவது பகுதி தான் இப்போ கேட்க முடிந்தது... இணையம் ஒத்துழைக்குதில்லை..

நீங்கள் குறிப்பிட்டது போல இங்கிருந்து தொழிற்படும் இணையத்தளங்களுக்கும் அனுமதிப்பத்திரம் தொடர்பான சட்டம் கொண்டு வர வேண்டும்...

Anonymous said...

சபையோரின் கருத்துக்கள் + விமர்சனங்கள் + கேள்விகள் NOT CLEAR

கார்த்தி said...

வணக்கம் நீண்ட காலத்திற்கு பிறகு வலைத்தளப்பக்கம் வருகிறேன்!
ஆறுதலாக கேட்கிறேன்! இப்ப நேரம் போதுமானதாக இல்லை!

Komalan Erampamoorthy said...

அண்ணா அருமையான‌ ஒரு உரை ஆனால் என்னை பொறுத்த‌ வரை ராஜ்மோக‌னை ஒரு சிற‌ந்த‌ அறிவிப்பால‌ராக‌ ஏற்க‌ முடியாது கார‌ண‌ம் அவர் ஒரு த‌ற்பெருமை வாதி மற்றும் இங்கு ந‌ல்ல‌ அறிவிப்பால‌ர் இல்லாம‌ல‌ இந்தியா இவில் இருந்து இற‌க்கும‌தி??
மேலும் அன்று உங்க‌ளுக்கு நிக‌ழ்ந்த‌ அதேக‌தி அங்கு 2 அனுப‌வ‌ அறிவிப்பாள‌ர்க‌ளுக்ககும் நிக‌ழ்ந்துள்ள‌து!!!! "இது என்னுட‌ய‌ த‌னிப்ப‌ட்ட‌ க‌ருத்து ம‌ட்டுமே!!!"

Unknown said...

feed option a maatra maatteengala. allow us to read full post

T.R.Mathan said...

வணக்கம் அண்ணா... நீண்ட நாட்களாக யாராவது தட்டிக்கேட்கமாட்டார்களா என்றிருந்த ஒரு பிரச்சினை உங்கள் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்டமை மனதுக்கு மிக்க ஆறுதலை தந்தாலும் தண்டிக்கப்படவேண்டியர்கள் இன்னும் சுதந்திரமாக இருப்பது கவலையாக உள்ளது. நான் கூறும் விடயம் இலங்கையில் அப்பாவி இளைஞர் யுவதிகளிடம் படிப்பு சொல்லித்தருவதாக கூறி பணம் பறிக்கும் இணையத்தள வானொலியைப்பற்றி. இதற்கு வரையறையே இல்லையா? இதனால் பாதிக்கப்பட்ட பலர் இருக்கிறார்கள்.. இவர்கள் மீது தயவு செய்து ஏதாவது ஒரு கட்டுப்பாட்டை விதியுங்கள்... தேவையேற்படின் தனது பெயரில் தமிழை வைத்துக்கொண்டு தமிழையும் தமிழ் இளைஞர் யுவதிகளையும் ஏமாற்றும் ஒரு இணையத்தள வானொலி பற்றி கசப்பான உண்மைகளை நாம் பகிரங்கப்படுத்த தயாராக உள்ளோம். நன்றி அண்ணா.
www.puthiyaulakam.com

ஷஹன்ஷா said...

நல்லது அண்ணா.. இந்த நள்ளிரவு கடந்த நேரத்தில் என் கற்றலுக்கான செயற்திட்டம் தயாரித்து கொண்டிருக்கும் போது இடையில் ஏற்பட்ட அசதியினால் இணைய பக்கம் வந்தேன்.

மீண்டும் உற்சாகம் தரும் வகையில் இப்பதிவு.

கிட்டத்தட்ட ஒரு மாத நிறைவில் இப்பதிவை கேட்கின்றேன்.

உண்மையை சொல்லப்போனால் உங்கள் உரை ஒன்றை முதன்முதலில் இன்றுதான் கேட்கின்றேன். மகிழ்ச்சி.

இந்த இலத்திரனியல் ஊடகங்கள் பற்றியும் அதன் செயற்பாடுகள்,சவால்கள் பற்றியும் அறிந்து கொள்வதற்கு தகுதி உள்ளவன் என்ற காரணத்தினால் துாக்கத்தை துார வைத்துவிட்டு பதிவுடன் இணைந்துள்ளேன்.. பாகம் 1 ஐ கேட்டு விட்டேன்.. 2ம் பாகத்தின் ஆரம்பத்தின் போது என் முதல் கருத்திடுகை..

கடந்த 2 மாதங்களுக்கு முன் யாழ்ப்பாண நகர வீதியில் நடந்து செல்கையில் திரு.நிர்சன் அண்ணா அவர்களுடன் உரையாடியிருந்தேன். அப்போது அவரிடம் நான் கேட்ட கேள்விகளில் ஒன்று, இன்றைய நிலையில் இலத்திரனியல் ஊடகங்களின் சவால்கள்..?? அது எதிர்காலத்தில் அவற்றின் வளர்ச்சியை பாதிக்குமா..?? என்பது.

எதிர்காலத்தில் எப்படியோ இலத்திரனியல் ஊடகத்தில் இருக்க போகின்றவன் என்றபடியால் அப்போது நான் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் எல்லா மீடியாவுக்கும் இருக்கிற பிரச்சனைதான்.. ஆனா இது எலக்ரோனிக் மீடியாவின்ட எதிர்காலத்தில பாதிப்பை கொடுக்காது.. ஏன் என்டா இதில இருக்கிறவங்க எப்போதும் எதையும் புதிதாக செய்பவர்கள்..

அதிசயம் என்னவென்றால் எனக்குள் எழுந்த கேள்விக்கான பதில் இன்று மீண்டும் கிடைத்திருப்பது..அதுவும் உங்களிடம் இருந்து கிடைத்திருப்பது மகிழ்ச்சி.

என்னை பொறுத்தவரையில் வானொலிகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் அரசியல் என்பது பெரும் பிரச்சனையாக இருப்பதில்லை (கட்சி அல்ல நான் கூறுவது சாதாரண அரசியல்) காரணம் மக்களுக்கு மறைமுகமாக சொன்னாலேயே உடனே புரிந்து கொள்வார்கள். அப்படி செய்திகளை வழங்கும் திறமையானவர்களும் உள்ளனர். ஆனால் புலம்பெயர் நாடுகளில் இருப்போரிடம் எம்மை கொண்டு சேர்ப்பதில் தான் பெரும் சவால் இருக்கின்றது இந்த சட்டவிரோத இணையதளங்கள், இணைய வானொலிகளின் காரணமாக..

தமிழ் என்ற சொல்லை பெயரில் மட்டும் வைத்துக்கொண்டு காலாசாரத்தை இழிவுபடுத்தும் செய்திகளையும் தமிழை கொல்லும் ஒலிபரப்புகளையும் செய்யும் இவ் இணைய ஊடகங்கள் இலகுவில் புலம்பெயர் மக்களிடம் சென்றுவிடுகின்றன. காரணம் ஆங்கிலேய கலாசாரத்தை பார்த்து பார்த்து வாழும் அவர்கள் மத்தியில் தாய் நாட்டில் கலாசார சீர்கேடு இருக்கிறதா என்ற அங்கலாய்ப்பு வேதனை மிகுந்த எண்ணத்துடன் தோன்றும். அப்போது அவர்களின் ஆவலை உணர்ந்த சட்டவிரோத இணையதள ஊடகங்கள் எம்மை விற்று சம்பாதிக்கும் செய்திகளை வெளியிடுகின்றன.

இதனால் தமிழை பாதுகாத்து, தமிழரை பாதுகாத்து, இலங்கை வாழ் தமிழரோடு எப்போதும் இருக்கும் எம் ஊடகங்கள் பற்றி அவர்களுக்கு தெரியாமலேயே போய்விடுகின்றன.

இரண்டாவது சவால்.
தமிழ் ஊடகங்களில் இருக்கும் தமிழை கொல்லும் பாங்கு.
புதிதாக ஒரு பாணியை உருவாக்குகின்றோம் என்ற பெயரில், அதில் இந்திய ஊடகங்களின் தாக்கமும் இருக்கின்றது) தமிழை தமிழாக உச்சரிக்கும் தன்மை இல்லாமல் போகின்றது. அத்துடன் இப்போது தமிழை சரியாக உச்சரிக்கும் இளைஞர்களை காண்பதே அரிதாகவும் இருக்கின்றது. சில பயிற்சி நிறுவனங்களின் செயற்பாடும் அதற்கு காரணமாகின்றது என்பது உண்மையே.
என்னை பொறுத்தவரையில் வடக்கில் சரியானதும், வசதியான பயிற்சி நிறுவனங்கள், செயற்பாடுகள் இருக்குமானால் தலைசிறந்த பல ஊடகவியலாளர்களை எதிர்காலத்தில் பெறமுடியும்.

இங்கிருப்பவர்கள் தென்னிலங்கைக்கு வந்து கற்கும் போது அங்குள்ளவர்கள் இவர்களை இவர்களாக இருக்க அனுமதிப்பதில்லை என்று அண்மையில் எம்மை சந்திக்க வந்த சில ஊடகவியல் மாணவர்கள் குறிப்பிட்டனர். அதனால் தாம் ஒதுங்கியிருப்பதாகவும் வேதனைப்பட்டனர்.

2ம் பகுதியின் ஆரம்பத்தில் நீங்கள் குறிப்பிட்டது போன்று சவால்கள் எம்மை வீழ்த்தி விட அல்ல.. எம்மை தொடர்ந்து பட்டை தீட்டவே என்பதுதான் உண்மை..

தொடர்ந்து கேட்டபின் அடுத்த பின்னுாட்டத்துடன் வருகின்றேன்...

ஷஹன்ஷா said...

காத்திரமான உரை ஒன்றை என் வேலைகளுடன் சேர்த்து கேட்டு முடித்துள்ளேன்.. சந்தோசம்.
சவால்கள் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள்.. அத்துடன் தமிழ் உச்சரிப்பு குறித்தும் பல புதியவர்களுக்கு கற்பித்து இருக்கின்றீர்கள்..

அத்துடன் சவால்கள் என்பது சாதிப்பதற்காகவே என்ற என் கருத்துடன் உங்கள் உரையும் ஒன்றிப்போனது மகிழ்ச்சி
எங்கு எதிர்ப்பும் அழுத்தமும் இருக்கின்றதோ அங்கே நின்று சாதித்தால் தான் அது சாதனை ..நல்லது. இலங்கை வானொலி துறை அஸ்தமிக்காத சூரியன். அதனை எப்போதும் வெற்றிகரமாக உலகின் விடியலாக வைத்திருப்பார்கள் எதிர்கால இளைஞர்கள். அந்த சக்தி அவர்களுக்குள் உள்ளது..

இறுதியாக
கஞ்சிபாய் ஜோக் கலக்கல்..

மயில்வாகனம் செந்தூரன். said...

வணக்கம் அண்ணா.. இந்த பதிவினை நீங்கள் இட்டு பல மாதங்கள் கடந்த போதிலும் நேற்றுத்தான் முழுமையாக கேட்க முடிந்தது. அந்த வகையில் நீண்ட காலத்துக்கு பின்னர் உங்கள் குரலில் ஒரு நீண்ட உரையை கேட்ட திருப்தி.. அதுவும் உங்களுக்கும், எனக்கும் மிக மிக பிடித்த இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பான விடயதானங்களை உள்ளடக்கிய உரை..

நீங்கள் சொன்ன பெரும்பாலான விடயங்களுடன் உடன்பட முடிகின்ற போதிலும் ஒரு சில விடயங்கள் கொஞ்சம் நெருடலாக உள்ளது.. எனக்கு நெருடலாக தோன்றும் அந்த விடயங்களை கொஞ்சம் விளக்கமாக விபரிக்க விரும்புகின்றேன்..


அண்ணா நீங்கள் இணையங்களுக்கு ஒரு கட்டுப்பாடு இல்லை அதற்கு பிரத்தியேக அனுமதி தேவையில்லை அதனால் பல இணையங்கள் உருவாகின்றன என்று சொல்லியிருந்தீர்கள்..
உண்மைதான்..

இணையங்களுக்கு இலங்கையில் மட்டுமல்ல பெரும்பாலான உலக நாடுகளில் ஒரு கட்டுப்பாடும் இல்லைத்தான். சிலமாதங்களுக்கு முன்னர்தான் இலங்கையிலிருந்து செய்திகளை வெளியிடும் இணையங்களை பதிவு செய்யுமாறு தகவல் ஊடகத்துறை அமைச்சு அறிவித்திருந்தது. எனினும் அதற்கென ஒரு காலக் கெடுவினை அவர்கள் விதிக்கவில்லை.

நீங்கள் சொல்வது போல செய்திகளை வெளியிடும் இணையங்கள் கொஞ்சம் பொறுப்புடனும், நிதானமாகவும் செயற்படுவது அவசியம் எனினும் இணையங்கள் எல்லாம் பதிவு செய்து அனுமதி பெற்ற பின்னர்தான் இயங்க வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் வலைப்பூவையும் பதிவு செய்து அனுமதி பெற்றே இயக்க வேண்டியிருக்கும், நானும் எனது வலைப்பூவை பதிவு செய்து இயக்க வேண்டியிருக்கும்.

மேலும் இப்போது சமூக வலைத்தளத்தின் பயன்பாடுகள் காரணமாக பிரத்தியேக இணையத்தளங்களின் மவுசு குறைந்துள்ளது என்று நான் கருதுகின்றேன்.

அந்த வகையில் ஒருவர் பிரத்தியேக இணையத்தளம் ஒன்றை பேணி தனது கருத்துக்கள், சிந்தனைகள், கிடைக்கும் செய்திகள் என்பவற்றை மற்றவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதை விட சமூக இணையத்தளங்களில் இலவச கணக்கு ஒன்றை வைத்திருப்பதன் ஊடாக இலகுவாக கொண்டு சேர்க்க முடிகின்றது. அத்துடன் இப்போது திரட்டிகளுக்கு அடுத்தபடியாக சமூக வலைத்தளங்களின் ஊடாகத்தானே பிரத்தியேக இணையங்களை விளம்பரம் செய்கின்றோம்/செய்கின்றார்கள்.

இந்த நிலையில் இணையத்தளங்களுக்கான கட்டுப்பாடு என்பது எவ்வளவு தூரத்துக்கு வெற்றியளிக்கும்?

மயில்வாகனம் செந்தூரன். said...

மேலும் அண்ணா இணையத்தளங்கள், இணைய வானொலிகளை சட்ட விரோதமானவை என்று குறிப்பிடுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கை உட்பட பல நாடுகளில் அவற்றிற்கென சட்டமே இல்லை.. இந்த நிலையில் எவ்வாறு சட்டவிரோதமானவையாக இருக்க முடியும்?

நீங்கள் உங்கள் உரையில் இணையப்பயன்பாடுகள், சமூக வலைத்தளங்களின் வருகையின் பின்னர் வானொலி, தொலைக்காட்சிகளுக்கான மவுசு குறையும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது நடக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.. இந்த நிலையில் இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகும் பண்பலை வானொலிகளுக்கோ அல்லது தொலைக்காட்சிகளுக்கோ இணையங்களால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றால் ஏன் அவை குறித்து கவலை கொள்ள வேண்டும்?இணையத்தளங்களையும், இணைய வானொலிகளையும் இலத்திரனியல் ஊடகங்களுக்குள் வகைப்படுத்த முடியாதா?

நீங்கள் சொன்ன வானொலி அறிவிப்பாளர்கள் பயிற்சி என்ற பெயரில் பணப்பறிப்பு செய்பவர்கள் தொடர்பான கருத்து முற்றிலும் உண்மை.. இணைய வானொலிகள் என்ற பெயரில் ஆர்வத்துடன் வருபவர்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் பறித்து இந்த துறையையே வெறுக்க செய்பவர்கள் தொடர்பில் உங்கள் ஆதங்கம், கருத்து புரிகின்றது என்கின்ற போதிலும் ஒட்டுமொத்தமாக எல்லா இணைய வானொலிகளும் அதைத்தான் செய்கின்றன என்று சொல்வது நம்மை போன்று எந்தவித லாப நோக்கும் இன்றி செயற்படும் இணைய வானொலிகளுக்கும் அவப்பெயரையே ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கின்றோம்.

நமது வானொலியில் சமூக சேவை வானொலி என்ற பெயர் இல்லையே தவிர மற்றப்படி நாம் செய்வது ஒன்றும் வியாபாரம் அல்ல.

மேலும் அண்ணா இலங்கையில் இணைய வானொலிகள் இல்லாத நிலையில் பண்பலை வானொலிகள்தான் அறிவிப்பாளர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டுமென்றால் இலங்கையில், கொழும்பில் உள்ள முக்கியமான தமிழ் வானொலிகளான வெற்றி fm , சூரியன் fm , சக்தி fm , வசந்தம் fm , அலை fm , இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இந்த வானொலிகளால் அறிவிப்புத் துறையில் ஆர்வமுள்ள இலங்கையின் வெவேறு பாகங்களிலுமிருந்து வருகின்ற எல்லோருக்கும் சந்தர்ப்பம் கொடுக்க முடியுமா? மேலும் இலங்கையின் எல்லா பாகங்களிலுமிருந்து கொழும்பை நோக்கி வந்து எத்தனை பேரால் தாக்கு பிடிக்க முடியும்?

நீங்கள் முன்பு ஒரு பத்திரிகை நேர்காணலில் உங்கள் சார்ந்திருந்த வானொலி அறிவிப்பாளர்கள் பற்றி சொல்லும் போது வைரங்களை பட்டை தீட்டி எடுத்தாதாக சொன்னீர்கள். இவ்வாறாக உங்களால் பட்டை மட்டும் தீட்டினால் போதும் என்கின்ற நிலைமை உருவாக காரணமாக இருந்ததில் இணைய வானொலிகளுக்கும் கணிசமான பங்கு உண்டு..

இன்று இலங்கையிலும், பிற நாடுகளிலும் தமிழ் வானொலிகளில் அறிவிப்பாளர்களாக இருக்கும் பலர் இணைய வானொலிகளில்தான் தங்கள் அறிவிப்பு பயணத்தை ஆரம்பித்தார்கள் என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரியும்.

ஒரு குறிப்பிட்ட இணைய வானொலியில் அறிவிப்பு பயணத்தை ஆரம்பித்து இன்று பண்பலை வானொலிகளில் அறிவிப்பாளர்களாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்களின் பெயர் விபரங்களை தொகுத்து பார்த்தால் இன்று பண்பலை வானொலிகளை ஆக்கிரமித்திருப்பவர்கள் அவர்கள்தான் என்று எண்ண தோன்றும்.

மயில்வாகனம் செந்தூரன். said...

இணைய வானொலிகள் அனுமதி பெற்றுத்தான் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்றால் தமிழர்கள் அதனை ஆரம்பிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இலங்கையில் இருக்கும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்த நிலையில் நீங்கள் உங்கள் உரையில் குறிப்பிட்டது போல எதையும் கேட்டுப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை இருக்கும்.
காரணம் அனுமதி பெற்றுத்தான் இணைய வானொலிகள் இயங்க வேண்டுமென்றால் கட்டாயம் அதற்கு மேலிடமாக இருப்பவர் தமிழராக இருக்க சந்தர்ப்பம் குறைவாகவே இருக்கும்.

இப்படியான நிலையில் வெள்ளையை கறுப்பு என்று சொல்வதை, அல்லது ஒன்றையும் சொல்லாமல் இருப்பதை நம்மை போன்ற அறிவிப்பாளர்களாலும், உங்களை போன்று மேலதிகாரிகளாக இருப்பவர்களாலும் கட்டுப்படுத்த முடியாது.

இணைய வானொலிகள் உள்நாட்டு விளம்பர வருவாயில் பண்பலை வானொலிகளுக்கு போட்டியாக இருப்பதாகவும் தெரியவில்லை. இந்த நிலையில் ஒரு சிலர் செய்கின்ற தவறுகளுக்காக ஒட்டுமொத்த இணைய வானொலிகள், இணையத்தளங்களை விமர்சிப்பது கவலையாக உள்ளது.

மேலும் அண்ணா நீங்கள் சொன்ன சட்டவிரோத பண்பலை வானொலிகள் தொடர்பில் உடன்படுகின்றேன். இது பண்பலையில் சமகாலத்தில் உள்ள இலத்திரனியல் ஊடகங்களுக்கு சவாலானது என்பதில் சந்தேகம் இல்லை. அவற்றைக் கட்டுப்படுத்த நீங்கள் முயற்சி எடுப்பது நல்லதே. ஆனாலும் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் இயங்கும் அந்த வானொலிகள் தொடர்பில் உருப்படியான ஒரு நடைவடிக்கை எடுக்கப்படும் என்று நான் நம்பவில்லை.

வன்னியிலிருந்து, வவுனியாவை தளமாக கொண்டு மூன்று வானொலிகள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள் ஆனால் இப்போது பண்பலையில் அங்கு சட்ட விரோத வானொலிகள் இருப்பதாக தெரியவில்லை என்பதுடன் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நீங்கள் குறிப்பிட்டது போல வானொலி அறிவிப்பாளர் பயிற்சி என்ற பெயரில் பணப்பறிப்பு முன்பு நடைபெற்ற போதிலும் இப்போது அவர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்று நான் நினைக்கின்றேன்.

நான் அறிந்த வரைக்கும் வடமாகாணத்திலிருந்து இப்போது நிகழ்ச்சிகளை படைக்கும் இணைய வானொலிகள் என்றால் 1 - கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முல்லைத்தீவிலிருந்து நேரடி நிகழ்ச்சிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட சஞ்ஜீவ ஒலி (இப்போது தமிழருவி வானொலி என்னும் நாமத்துடன் இயங்குகின்றோம்), 2 - கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து இயங்க ஆரம்பித்திருக்கும் உதயன் இணைய வானொலி.

இவை தவிர பலரும், பல இணைய வானொலிகளை செய்கின்ற போதிலும் வெறுமனவே அவர்கள் பாடல்களை மட்டுமே ஒலிபரப்புகின்றார்கள் நிகழ்ச்சிகளை படைப்பதில்லை.

நாம் முல்லைத்தீவிலிருந்து ஆரம்பித்து செயற்படுத்தி வரும் தமிழருவி வானொலி ஊடாக இதுவரையில் ஆர்வத்துடன் வந்த 20 இற்கும் அதிகமானவர்களுக்கு அறிவிப்பாளர்கள் என்னும் அடையாளத்தை கொடுத்துள்ளோம். இதற்காக அவர்களிடமிருந்து 1 ரூபாய் பணம் கூட வாங்கியதில்லை.

மேலும் கடந்த 7 மாத காலமாக பண்பலை வானொலிகள் கொழும்பில் கொடுக்கும் வேதனத்துக்கு ஈடாக அறிவிப்பாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் வழங்குகின்றோம் என்பதுடன் இந்த துறையில் யாரையும் முழு நேரமாக ஈடுபடுத்தவில்லை என்பதையும் கவனத்திற் கொள்ளவும்.

அத்துடன் லோஷன் அண்ணா நீங்கள் சொன்னது போன்ற வர்த்தக உத்தி எல்லாம் நமக்கு விதிவிலக்கானவை. அதாவது கோயில் நிகழ்வுகள் போன்ற நிகழ்வுகளுக்கு ஊடக அனுசரணை மட்டும் என்னும் நிலைமை நமக்கு இல்லை என்பதுடன் இந்திய தமிழை பயன்படுத்தும் தேவையும் நமக்கு இல்லை.

அண்ணா இவற்றை இங்கே குறிப்பிடக் காரணம் ஒரு சிலர் செய்யும் தவறான வேலைகளால் நம்மை போன்றவர்களுக்கு அவப்பெயர் ஏற்படக் கூடாது என்ற நோக்கிலே அன்றி எங்களைப்பற்றி புகழாரம் தேட அல்ல.

மேலும் வானொலித் துறையில் எனது குரு நாதராக விளங்கும் லோஷன் அண்ணாவின் உரையை கேட்டு அதற்கு கருத்திடும் அளவுக்கு எனக்கு அனுபவமோ ,அறிவோ இல்லை.

எனினும் எனது மனதில் தோன்றியவற்றை பதிந்துள்ளேன். இந்த கருத்துக்கள், தகவல்கள் தவறாக இருப்பின் முதலில் லோஷன் அண்ணா என்னை மன்னியுங்கள். இந்த கருத்துக்களை பார்ப்பவர்களுக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டால் அவர்களும் மன்னியுங்கள்.
நன்றி.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner