Showing posts with label ஷேன் வோர்ன். Show all posts
Showing posts with label ஷேன் வோர்ன். Show all posts

March 06, 2022

Shane Warne - எனக்கு ராஜாவா நான் வாழுறேன் - இறந்த பின்பும் !

 Shane Warne !

1990களில் அவுஸ்திரேலியா அங்கொன்றும் இங்கொன்றுமாக அரைகுறை சுழல்பந்துவீச்சாளரை அறிமுகப்படுத்தி வந்திருந்த காலத்தில், ‘யார்ரா இது ?’ என்று ஆச்சரியப்படுத்திய ஒருவர்.
கொழும்பு SSC மைதானத்தில் 1992 டெஸ்ட் போட்டி - 16 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு இறுதி இன்னிங்ஸில் வோர்னின் மூன்று விக்கெட்டுகள் மிக முக்கியமானவையாக அமைந்தன.
மைதானம் சென்று பார்த்த அந்தப் போட்டியில் வோர்ன் என்ற இந்தப் புதியவரின் சுழல், எனக்கு மிகப்பிடித்த அலன் போர்டர் இவரைக் கையாண்டு, தட்டிக்கொடுத்த விதம் ஆகியவற்றோடு ஈர்ப்பொன்று ஏற்பட்டது.


அத்தனை காலமும் அதிகமாக off spin வீசிய நான் leg spin ஐ டென்னிஸ் பந்து கிரிக்கெட்டிலும் - எத்தனை அடி விழுந்தாலும் - போட ஆரம்பித்தது வோர்னின் தாக்கத்தில்.
அப்துல் காதிருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலும் சில காலமாக அருகி வந்திருந்த லெக் ஸ்பின் பந்துவீச்சை மீண்டும் உயிர்ப்பித்த மூவர் வோர்ன், கும்ப்ளே, முஷ்டாக் அஹ்மட்.
இதில் வோர்னுக்கு வாய்த்தது ‘சுழல் பந்து’ என்று துண்டுக் காகிதத்திலேயே எழுதிப்போட்டாலும் சுருண்டுவிடக்கூடிய இங்கிலாந்து அதிகமான போட்டிகளில் வோர்னிடம் மாட்டியது.
ஆனாலும் வோர்ன் Gatting க்கு போட்ட ball of the century, Straussஐ மிரட்டிய sharp turner, 1994 Ashes Boxing Day hat trick இதெல்லாம் King special கள்.
நாக்கைக் கடித்து பந்தை அசாதாரண திருப்புகோணத்தில் மணிக்கட்டினால் சுழற்றுவது, வோர்ன் special wrong un, பல வேகப்பந்துவீச்சாளரின் stockballs ஐ விட வேகமான flipper என்று வோர்ன் எந்த formatஇல் பந்துவீச வந்தாலும் ஒரு பரபர தான். (Warne க்காகவே YouTube இல்லாத காலத்தில் எத்தனை போட்டிகளின் highlights உட்கார்ந்து இருந்து ஒவ்வொரு பந்தாகப் பார்த்திருப்பேன்)
கும்ப்ளேயும் முஷ்டாக்கும் ஒருநாள் போட்டிகளில் கலக்கியிருந்தாலும், டெஸ்ட் போட்டிகளை வெல்வதற்கு பிரம்மாஸ்திரமாக லெக் ஸ்பின்னை பயன்படுத்த நிரூபணம் ஆனவர் ஷேன் வோர்ன் தான்.
அவர் உருவாக்கிய ஒரு legacy, பல அணிகளுக்கும் ஒரு blue print ஆனது.
708 டெஸ்ட் விக்கெட்டுகள், 300ஐ அண்மித்த ஒருநாள் விக்கெட்டுகள் - தேவையான போது அதிரடி துடுப்பாட்டம், slip மற்றும் close in சிறப்பு களத்தடுப்பு, தலைமைத்துவத்துக்கு தேவையான கூர்மதி & ஆராயும் ஆழமான விளையாட்டு ஞானம்.
சாதனைகளோடு சேர்த்து சர்ச்சைகளையும் சம்பாதித்துக்கொண்டதனால் வோர்னுக்கு அவுஸி டெஸ்ட் தலைமை கிடைக்காமலே போனது.
அவுஸ்திரேலிய அணிக்கு கிடைக்காமல் போன மிகச்சிறந்த ஒரு தலைவர்.
பின்னாளில் franchise அணிகளுக்குத் தலைமை தாங்கியபோது இளையோரை ஊக்குவித்தும் புதுமைகளையும் வெற்றிக்கான உத்வேகத்தையும் புகுத்தி தன்னை நிரூபித்திருந்தார்.
Healy - Warne “bowling Warnie” இணைப்பு, வோர்னின் பந்துவீச்சில் டெய்லரின் பிடிகள், மக்ராவுடனான deadly combination,
Lara, Sachin ஆகியோரோடு வோர்னின் மோதல்கள், முரளியோடு இருந்த போட்டி, அர்ஜுன, இலங்கை ரசிகரோடு இருந்த விரோதமும் வசவுகளும் மறக்கமுடியாதவை.
52 வயதில் கிரிக்கெட்டில் தொடவேண்டிய சிகரங்களையும் தொட்டு, எவன் என்ன சொன்னாலும் வாழ்க்கையை தன் இஷ்டப்படி வாழ்ந்து தீர்க்கவேண்டும் என்று ‘வாழ்ந்து’ போயிருக்கிறார் King Warne.
இன்னும் கொஞ்சம் தன்னை சீர்ப்படுத்தி, தனக்கும் கிரிக்கெட்டுக்கும் இன்னும் அதிகம் வழங்கியிருக்கலாம்.
ஆனால் அவரது ஆரம்பம் முதல் இறுதிவரை - எனக்கு ராஜாவா நான் வாழுறேன் - பாணி வாழ்க்கையில் யார் என்ன சொல்ல ?
இனியும் கிரிக்கெட்டில் பலர் வரலாம், சாதனையாளராகவும் மாறலாம். ஷேனின் 708ஐயும் முந்தலாம்.
ஆனால் மெல்பேர்ன் மைதானத்தில் ஓங்கி நிற்கப்போகும் King S.K.Warne stand போல Warne legacy என்றும் நிலையானது.
போய் வா சுழல் மன்னனே.
#ShaneWarne YouTube இல் நேரலையாக ஷேன் வோர்ன் பற்றி பகிர்ந்தது : https://www.youtube.com/watch?v=8e-g9siqV4I

April 04, 2012

ஐந்தாவது IPL ஐந்து அணிகள் பற்றி - IPL 2012 அலசல் 2


நானும் அரசியல்வாதியாகிப் போனேனே என்பது தான் கவலை.. சொன்ன வாக்கைக் காப்பாற்ற முடியல.. (பதிவுலக வாழ்க்கையில் இதென்ன புதுசா? ) ஆனாலும் என்ன முதல் போட்டி முடியிற நேரம் இடுகை வருதில்ல ;)
இதோ IPL 2012 இன் அணிகளின் அலசல் பகுதி 2


முதல் பாகத்தை வாசிப்பதற்கு இங்கே சொடுக்குக..அல்லது கீழே உள்ள சுட்டி வழி செல்க..

ஆரம்பமாகிறது IPL 2012
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ்
இல் எப்போதுமே பரபரப்பான அணியாக இருக்கும் அணி - இவர்களது உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக் கானே எப்படியும் அணி தோற்றுக் கொண்டிருந்தாலும் வெல்கின்ற அணிகளை விடப் பிரபலமாக்கிக் காட்டிவிடுவார்.

தொடர்ச்சியாக மண் கவ்விக் கொண்டிருந்த அணி, கடந்த வருடம் கௌதம் கம்பீரின் தலைமையில் உயர்வு கண்டது.
அதை இந்த வருடம் மேலும் தொடரக்கூடிய ஆற்றலும், வீரர்களும் தெரிகிறார்கள்.

உலகின் மிகச் சிறந்த இரு சகலதுறை வீரர்கள் & match winners ஆன ஜக்ஸ் கல்லிஸ் மற்றும் ஷகிப் அல் ஹசன், உலகில் சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்துள்ள அதிரடி வீரரான பிரெண்டன் மக்கலம், உலகின் அதிவேகப் பந்துவீச்சாளர் ப்ரெட் லீ, தனியாக நின்று போட்டியொன்றின் போக்கை மாற்றக் கூடிய யூசுப் பதான், நெதர்லாந்தின் ரயான் டென் டொச்கட், ஒயின் மோர்கன் ஆகிய மூன்று பெரும், ஆஸ்திரேலியாவின் பிரட் ஹடின், அண்மைக்காலத்தில் வேகமாக முன்னேறி வரும் ஜேம்ஸ் பட்டின்சன் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் சுழல் பந்துவீச்சாளர் சுனில் நரேனும் இருக்கிறார்கள்.
பலம் வாய்ந்த இந்த நட்சத்திர வரிசையில் இந்தியாவின் எதிர்கால நட்சத்திரங்களில் ஒருவரான மனோஜ் திவாரியும் இருக்கிறார்.

இன்னொரு கவனிக்கக் கூடிய வீரர் வளர்ந்துவரும் இந்திய சுழல் பந்துவீச்சாளரான இக்பால் அப்துல்லா.. அதேபோல தென் ஆபிரிக்காவுக்கான தன் அறிமுகப் போட்டியில் அசத்திய மெர்ச்சன்ட் டீ லங்கேயும் இம்முறை கவனிக்கப் படக் கூடியவர்.

இன்னொரு சுவாரஸ்யமான விடயம், முதலாவது IPL இல் கொல்கொத்தாவுக்காக முதல் போட்டியிலேயே பட்டை கிளப்பிய மக்கலம், கடந்த வருடம் கொச்சின் அணியால் வாங்கப்பட்டிருந்தாலும், இப்போது மீண்டும் தனது முதல் அணிக்கே திரும்புகிறார். கொல்கொத்தா எதிர்பார்த்துள்ள பெரிய மாற்றம் இவரால் கிடைக்குமா என்பது கேள்வியே..

கம்பீர் தனது தலைமைத்துவத்தைத் தேசிய தேர்வாளர்களுக்கும் நிரூபிக்கக் கூடிய வாய்ப்பு ஒன்று அமைகிறது.

அணியின் கட்டமைப்பைப் பார்த்தால் அரையிறுதி உறுதி; ஆனால் ஆடுகளத்தில் ஆடுவது தானே முடிவு சொல்லும்.


மும்பாய் இந்தியன்ஸ்சச்சினின் அணி.. இப்படி சொன்னால் தான் இந்த அணிக்கே அது மகுடம்.
அம்பானியின் அணி; பணக்கார அணி என்பதெல்லாம் அடுத்தவை தான்.
முதலாவது IPLஇல் இருந்து முன்னணி அணி, முக்கியமான அணி, பலமான அணி, நட்சத்திர அணி என்றெல்லாம் உசுப்பேற்றப்பட்டு வந்தாலும், இதுவரை அந்தப் பெயருக்கேற்ற மாதிரிக் கிண்ணம் கிடைக்கவில்லை.
கடந்தவருடம் கொஞ்சம் விஸ்வரூபம் எடுத்தாலும் இறுதியில் கவிழ்ந்துபோனது.
ஆனால் இம்முறை இவ்வளவுகாலமும் இருந்த ஓட்டைகள், ஓடிசல்களை எல்லாம் அடைத்து ஒரு உறுதியான அணியாகக் களம் காண்கிறது.

சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், லசித் மாலிங்க, கெய்ரோன் பொலர்ட், ரோஹித் ஷர்மா, ஜேம்ஸ் பிராங்க்ளின் ஆகிய நிரந்தர (!!) மும்பாய் இந்தியர்களோடு, இம்முறை ஏலத்தில் மும்பாய் திட்டமிட்டு எடுத்த வீரர்கள் முக்கியமானவர்கள்.

தங்களது கடந்த காலப் பலவீனங்களை உணர்ந்து அவர்கள் தெரிவு செய்த வீரர்களைப் பாருங்கள்....
விக்கெட் காப்புக்கு - தினேஷ் கார்த்திக்
பந்துவீச்சு வரிசையை மேலும் பலப்படுத்த IPLஇன் கூடிய விக்கெட் சேகரிப்பாளர்களான R.P.சிங், பிரக்யான் ஓஜா மற்றும் ஆஸ்திரேலியரான மிட்செல் ஜோன்சன் & கிளின்ட் மக்கே
சகலதுறை வீரர்கள் திசர பெரேரா, ரொபின் பீட்டர்சன்
T20 சர்வதேசப் போட்டிகளில் வேகமான சதம் அடித்து சாதனை படைத்த தென் ஆபிரிக்காவின் ரிச்சர்ட் லெவி
அனுபவம் வாய்ந்த ஹெர்ஷேல் கிப்ஸ் உம் இருக்கிறார்.
இது தவிர கடந்த வருடங்களில் கலக்கிய முனாப் பட்டேல், அம்பாத்தி ராயுடு ஆகியோரும் உள்ளார்கள்.
இவர்களோடு நான் மிக ஆர்வத்தோடு எதிர்பார்க்கும் வயது இளைஞன் இருக்கிறார். சூர்யகுமார் யாதவ்.
சாம்பியன் ஆவதற்கு வேறு என்ன வேண்டும்.

ஆனால் சச்சின் ஆரம்பம் முதல் பிரகாசிக்க வேண்டும்; 'முன்னாள்' இந்திய பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தன்னை எல்லோரும் பார்க்கும் அரங்கில் நிரூபிக்க வேண்டும் என்ற அழுத்தங்கள் இல்லாமல் இல்லை.
கடைசி நேரத்தில் சச்சின் தலைமைப் பதவியை ஹர்பஜனுக்குக் கை மாற்றியதும் கவனிக்கக்கூடியது.

ஆனால் சச்சின் இல்லாமல் கடந்த வருடத்தின் Champions Leagueஐ வென்றெடுத்த உற்சாகத்தோடு இருக்கும் மும்பாய் இந்தியன்ஸ் இம்முறை அம்பானியினதும் சச்சினினதும் கனவை நிறைவேற்றும் போலவே தெரிகிறது.

(இந்த இடுகையைத் தட்டிக்கொண்டே இன்றைய முதலாவது போட்டியைப் பார்க்கும் நேரம் நடப்பு சாம்பியன் சென்னை மும்பாயிடம் அடி வாங்கித் திணறுவதைப் பார்த்தாலே மும்பாய் இம்முறை ஏதோ சாதிக்கும் போலவே தெரிகிறது.
ஆனால் சென்னை கொஞ்சம் தாமதமாகத் தான் பிக் அப் ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே..)பூனே வொரியர்ஸ்பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டுக் கடந்த ஆண்டில் யுவராஜின் தலைமையில் புஸ் ஆகிப் போன பூனே, இம்முறை யுவராஜ் இல்லாமல், கங்குலி என்ற கிழச் சிங்கத்தின் தலைமையில் தேடித் பொறுக்கி எடுத்த வீரர்களோடு, பெரிய நம்பிக்கையோடு களம் காண்கிறது.

இவ்வளவு நாளும் IPL பக்கம் வராமல் இருந்த ஆஸ்திரேலியத் தலைவர் கிளார்க் முதல் தடவையாக விளையாடுவதும், ஷகிப் அல் ஹசனுக்குப் பிறகு பங்களாதேஷில் இருந்து ஒரு வீரர் (தமீம் இக்பால்) IPLஇல் விளையாடுவதையும் வைத்துப் பார்த்தாலே கங்குலி தன் அணியை எப்படி சிரத்தையோடு தெரிவு செய்துள்ளார் என்பது தெரியும்.

யுவராஜ் இல்லை; காயம் காரணமாக தென் ஆபிரிக்காவின் கிரேம் ஸ்மித் இல்லை; டெல்லியிலிருந்து வாங்கிய சகலதுறை வீரர் ஜேம்ஸ் ஹோப்ஸ் உபாதை  என்ற பெரிய இழப்புக்களை ஈடு செய்ய, நேதன் மக்கலம், அஞ்சேலோ மத்தியூஸ், மார்லன் சாமுவேல்ஸ், முரளி கார்த்திக், ஆசிஷ் நெஹ்ரா, ஜெசி ரைடர் (குடிகார, குழப்படிகாரன்), ரொபின் உத்தப்பா, வெய்ன் பார்நெல், ஆலோன்சோ தோமஸ், கலும் பெர்குசன் போன்ற தம்மால் முடிந்தளவு தமது உழைப்பை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களை வைத்து போராட எண்ணியுள்ளது.

ரொபின் உத்தப்பா, தமீம் இக்பால் ஆரமாப் ஜோடியாக இறங்கினால் எப்படி இருக்கும் என்று இப்போதே ஆர்வம் வருகிறது.
அஷோக் டிண்டா அண்மைக்காலமாக சிறப்பாகப் பந்துவீசி வருவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

மேலே குறிப்பிட்ட முக்கிய வீரர்களுடன் சகலதுறை வீரர்கள் லூக் ரைட், மிட்செல் மார்ஷ், மிதுன் மன்ஹாஸ் (டெல்லியைச் சேர்ந்த இவர் எப்போதுமே தன் பங்களிப்பை உச்சபட்சம் வழங்கக் கூடிய ஒருவர்) இவர்களோடு ஸ்டீவ் 'சகலதுறை' ஸ்மித்தும் இருக்கிறார்.

கங்குலியின் போராட்ட குணமும், சோர்ந்துகிடக்கும் அணியை உத்வேகப்படுத்தி வெற்றிபெறச் செய்யும் குணமும் சரித்திரப்புகழ் பெற்றவையாக இருந்தாலும் இந்தக் குறுகிய ஓவர்கள் T20 போட்டியில் இது இந்த அணியுடன் எவ்வாறு சாத்தியப்படும் என்பது சந்தேகமே.

அரையிறுதி வாய்ப்பு மிக மிகக் குறைவு.ராஜஸ்தான் ரோயல்ஸ்

ஷேன் வோர்னின் மந்திரஜாலத்தால் முதலாவது IPLஇல் வெற்றி மாங்காய் பறித்த ராஜஸ்தான் அதற்குப் பிறகு அதேயளவு அதிர்ஷ்டங்களை அடைய முடியாவிட்டாலும், அதிர்ச்சிகளை ஏற்படுத்தக் கூடிய அணியாகவே இருந்துவந்துள்ளது.

முதல் தடவையாக ஷேன் வோர்ன் இல்லாமல் களமிறங்கும் ராஜஸ்தான், வோர்ன் இல்லாமல் பார்க்கையில் அடையாளம் தொலைத்த அணியாகவே தெரிகிறது.

ஆனால் ராகுல் டிராவிட் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவருக்கான ஒரு கௌரவமாக ராஜஸ்தான் தலைமைப் பதவியை இப்போது நாம் பார்க்கலாம்.

இந்த அணியின் துருப்புச் சீட்டாக இருக்கக்கூடிய ஷேன் வொட்சன் மே மாத ஆரம்பத்தில் தான் வருவார் என்பது ஒரு பெரிய இழப்பே. (ஆஸ்திரேலிய அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுலா முடிந்த பிறகே வொட்சன் வருவார்)

அனுபவம் நிறைந்த பிரட் ஹொட்ஜ், போல் கொல்லிங்க்வூட், பிரட் ஹொக், ஓவைஸ் ஷா, ஜொஹான் போதா என்ற இந்த வரிசையைப் பார்க்கும்போது ராகுல் டிராவிட் போன்றே ஓய்வே பெற்ற/ பெறும் வயதுடைய வீரர்களின் குழாம் (எழுத்தாளராக அதிகம் பிரகாசிக்கும் ஆகாஷ் சோப்ரா வேறு இந்தக் குழாமில் இருக்கிறார்)என்ற நினைப்பைத் தவிர்க்க முடியவில்லை.

ஆனால் வேகம், தாகம் உடைய இளம் வீரர் தினேஷ் சந்திமால், ஆஸ்திரேலிய மின்னல் வேக ஷோன் டெய்ட், மற்றும் ஷேன் வோர்னினால் பட்டை தீட்டப்பட்ட இளம் வீரர்கள் நம்பிக்கை தருகிறார்கள்.
அட மறந்திட்டேன்.. இவர்களோடு இந்தியாவின் அழுகுனிப் பையன் ஸ்ரீசாந்தும் இருக்கிறார்.

பாவம் டிராவிட்.. மிகப்பெரிய சிக்கலான பொறுப்பை சுமக்கப் போகிறார்.

யாரவது ஒருவர் நட்சத்திரமாக எழுந்தால் ஒழிய ராஜஸ்தான் ராஜநடை போடாது.


ரோயல் சல்லேஞ்சர்ஸ் பெங்களுர்பணக்கார, அதிர்ஷ்டக்காரம் அணி; விஜய் மல்லையா எப்பாடுபட்டாவது நட்சத்திர வீரர்களைத் தன் வசம் ஈர்த்து ஏதோ ஒப்பெற்றிவிட்டுக் கொண்டிருக்கிறார் என்ற நிலையை மாற்றி, கடந்த வருட ஏலத்தில் தேவையான வீரர்களை எடுத்து கிட்டத்தட்ட கிண்ணத்தை வென்றெடுக்கும் நிலை வரை வந்தது.
ஆனாலும் வழக்கமான தடுமாற்றம் கவிழ்த்தது. இதுவரை இரண்டு IPL இறுதிப்போட்டிகள், ஒரு Champions League இறுதிப்போட்டியில் வந்து தோற்றுப்போன துரதிர்ஷ்டசாலி அணி இது.
இம்முறையாவது மாற்றிக்காட்டுவார்களா என்பது தான் மல்லையாவினதும், RCBயின் ரசிகர்களினதும் எதிர்பார்ப்பு + ஏக்கம்.
டானியல் வேட்டோரியின் தலைமையில் கடந்த வருடம் பெங்களூரை வீறு நடை போட வைத்த விராட் கோஹ்லி, கிறிஸ் கெய்ல், சாகிர் கான், டேர்க் நன்னஸ், டீ வில்லியர்ஸ், டில்ஷான் ஆகியோரோடு இம்முறை ஏலத்தில் தேர்ந்து எடுக்கப்பட்ட இலங்கையின் உலகசாதனை நட்சத்திரம் முரளிதரன், அன்றூ மக்டோனால்ட் இவர்களோடு மிலியன் டொலருக்கு வாங்கப்பட்ட இப்போதைய இந்தியாவின் முன்னணிப் பந்துவீச்சாளர் வினய்குமார் ஆகியோர் பலமான அணியொன்றை உருவாக்கி உள்ளார்கள்.

இவர்கள் தவிர தென் ஆபிரிக்காவின் அனுபவம் வாய்ந்த கார்ல் லங்காவேல்ட், இந்தியாவின் எதிர்கால நட்சத்திரம் செடேஷ்வர் புஜாரா, சௌரப் திவாரி, தென் ஆபிரிக்காவின் இளைய வீரர் ரிலீ ரொஸூ, அபிமன்யு மிதுன், அருண் கார்த்திக், மாயன்க் அகர்வால் என்று இன்னொரு நீண்ட இளம் வரிசையும் உள்ளது.

பார்க்கப்போனால் இந்தப் பணக்கார அணி மட்டுமே இப்போதைக்கு மும்பாய்க்கு சவால் விடுக்கக் கூடிய அணியாகத் தெரிகிறது.
(நம்ம முரளிக்கு அணியில் இடம் கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருக்கையில் பலம் பற்றி வேறு கேள்வி வேண்டுமா?)

-----------------

இன்றைய முதலாவது போட்டியே நடப்பு சம்பியனுக்கு ஆப்பு வைத்திருக்கையில் இனி நடப்பதை யார் அறிவார்?
ஆனாலும் எனது கணிப்புக்கள் சரியாகப் போனால் அத்தனை புகழும் விக்கிரமாதித்தனுக்கே....October 06, 2008

ஷேன் வோர்னின் நூறு! சர்ச்சைகள் தொடருமா?

பரபரப்புக்களுக்கு எப்போதுமே குறைவில்லாத ஒருவர் ஷேன் வோர்ன்..கிரிக்கெட் விளையாடும் போது சரி, ஓய்வு பெற்ற பிறகும் சரி அவர் ஒரு பரபரப்பு நாயகனே தான்..சாதனைகளுக்கும் அவர் ரொம்பப் பிரபல்யம்;சர்ச்சைகளுக்கும் அவரை ரொம்பவே பிடிக்கும்..
உலக சாதனை,மந்திரப் பந்து வீச்சு,ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை உருட்டியது, ஓய்வு பெற்ற பிறகும் ராஜஸ்தான் அணியை IPLஇல் சாம்பியன் ஆக்கியது என்று அவரது சாதனைகளாக இருக்கட்டும்.. குறுந்தகவல் மூலம் பாலியல் தொல்லை,ஊக்க மருந்து உட்கொள்ளல்,எதிரணி வீரர்களோடு சண்டை,வாய்ச் சவடால்,புகை பிடித்தல் என்று சர்ச்சைகளாக இருக்கட்டும்..அவருக்கு நிகர் அவரே தான்.

ஓய்வு பெற்ற பிறகும் தன் மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாகச் சொன்னவர் வோர்ன்.இவை பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைகளை உருவாக்கினாலும்,வோர்ன் பின் நிற்கவில்லை.சுழல் பந்துவீச்சாளர் ஆச்சே கூக்ளிக்கேல்லாம் அஞ்சுவாரா?

இந்த வரிசையில் தான் நூல்களை எழுத ஆரம்பித்தார் வோர்ன்.கடந்த வருடம் தனக்குப் பிடித்த ஐம்பது வீரர்களை வரிசைப்படுத்தினார்.
சச்சினுக்கு முதலிடம்.. சில சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத வீரர்களை எல்லாம் பிரபல வீரர்களை விட முன்னுக்குக் கொண்டுவந்தார்.கேட்டபோது தன்னுடன்,தனக்கெதிராக விளையாடிய வீரர்களையே வரிசைப்படுத்தியதாக சொன்னார்.

இதற்கும் ஒருபடி மேலே போய்,இம்முறை ஷேன் வோர்ன் தனது நூறு பேரைக்கொண்ட சிறப்புப் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்.
கடந்த வருடம் இங்கிலாந்தின் பிரபல நாளேடான த டைம்ஸ்(The Times) ஷேன் வோர்னின் பிரபல வீரர்கள் 50பேரின் பட்டியலை வெளியிட்டிருந்தது.கடந்த 2ஆம் திகதி நூலாக இந்த நூறு பேர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
நூலின் பெயர் Shane Warne's Century.

இதிலும் சச்சின் டெண்டுல்கர் முதலாமிடம்.லாரா இரண்டாமிடம்;லாராவை விட சச்சின் புத்திசாலி என்றும்,சச்சின் ஒரு கிரிக்கெட் ஜீனியஸ்(புத்தி ஜீவி)என்றும் வர்ணிக்கிறார் வோர்ன்.தனக்கு சச்சினுக்குப் பந்து வீசுவதற்கு மிகச் சிரமமாக இருந்ததாகவும்,தன்னுடைய எந்தப்பந்தையும் இலகுவாக சச்சின் அடையாளம் கண்டுகொள்வார் என்றும் வோர்ன் புகழாரம் சூட்டி இருக்கிறார்.

இலங்கை வீரர்களில் முரளிதரன் ஏழாம் இடத்தைப் பெறுகிறார்.பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் ஆறாமிடத்தில் உள்ளார்.
பதினோரு இந்தியர்களும்,ஒன்பது பாகிஸ்தானியர்களும்,எட்டு இலங்கைக் கிரிக்கெட் வீரர்களும் இந்தப் பட்டியலுள் அடங்குகின்றனர்.

இந்தப் பட்டியலை முழுமையாகத் தருவதற்கு முதல்,பட்டியலில் இருந்து சில சுவையான அம்சங்கள்..

வோர்னை அறிமுகப்படுத்திய அணித்தலைவர் அலன் போர்டர் நான்காமிடத்தில்.
தற்போதைய ஆஸ்திரேலிய அணித்தலைவர் பொண்டிங் எட்டாம் இடத்தில்.
வோர்னோடு மிக நீண்ட காலம் விளையாடிய ஸ்டீவ் வோ,மார்க் டெய்லர் போன்ற முன்னாள் தலைவர்களுக்கு முதல் இடங்களுக்குள் வோர்ன் இடம் வழங்கவில்லை.
கில்க்ரிஸ்ட்டை 16ஆம் இடத்திலும்,ஹீலியை பத்தாம் இடத்திலும் வோர்ன் வரிசைப்படுத்தியுள்ளார்.ஹீலி ஒரு ஒப்பிட முடியா சிறந்த விக்கெட் காப்பாளர் என்றும்,கில்க்ரிச்ட்டுக்கு முதலிலேயே துடுப்பாடும் காப்பாளராகத் திகழ்ந்தவர் என்றும் வோர்ன் சொல்கிறார்.கில்க்ரிஸ்டுக்கும் வோனுக்கும் இடையில் மிக நீண்ட காலம் பனிப்போர் இருந்து வந்தது.2000ஆம் ஆண்டில் துர் நடத்தை காரணமாக வோர்னின் உப தலைவர் பதவி பறிக்கப்பட்டு இடம் கொடுக்கப் பட்டதே இந்த முறுகலுக்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஸ்டீவ் வோவைப் பின் தள்ளிய வோர்ன்,அவரது சகோதரரான மார்க்கிற்கு ஒன்பதாம் இடத்தைக் கொடுத்திருக்கிறார்.இதற்கு வோர்ன் சொல்லும் காரணம்,தான் எப்போதும் ரசித்த ஒரு துடுப்பாட்ட வீரர் மார்க் வோ என்றும்,ஆஸ்திரேலியா அணியில் தான் விளையாடிய காலத்தில் நேர்த்தியான ஒரு துடுப்பாட்ட வீரர் இவர் என்றும் கூறுகிறார்.
ஆனால் உண்மையில் நெருங்கிய நண்பர்களாக இருந்துவந்த,வோர்னும்,ஸ்டீவ் வோவும் 1999இல் இருந்து முரண்பட்டுக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1999இல் வோ,வோர்னை முந்தி ஆஸ்திரேலிய அணித்தலைவர் பதவியைக் கைப்பற்றிய பிறகில் இருந்து இருவரும் மோதிவந்தனர்.ஒரு சில மாதங்களின் பின்னர் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்ற ஆஸ்திரேலியக் குழுவில் வோர்னுக்கு இடம் வழங்கப்படாததும் வோவினால் தான் என வோர்ன் இன்றும் கருதிவருகிறார்.
ஷேன் வோர்ன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அடிக்கடி மோதிக்கொண்ட இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்கவை 93ஆம் இடத்தில் இட்டுள்ளார்.அவரை முதலில் பார்த்த பொது ஒரு செம்மறியாட்டைத் தன் வயிற்றில் விழுங்கியவர் போல் காணப்பட்டதாகச் சொல்லும் வோர்ன்,பல இடங்களில் அர்ஜுனவைக் கிண்டலடித்துள்ளார்.அதைப் பற்றித் தனியாக ஒரு பதிவே போடுமளவுக்கு சுவாரசியமாக உள்ளது.அர்ஜுனவை ஆம் இடத்தில் போடுவதானால் தான் விரும்பிச் செய்வேன் என்றும்,ஆனால் அவரை ஒரு கிரிக்கெட் வீரராக மதிப்பதனாலேயே இந்த இடத்தைக் கொடுத்ததாகவும் பெருமைப்படுகிறார்.

இந்தியாவின் கங்குலிக்கு 96ஆம் இடம்.கங்குலியோடும் அண்மையில் IPLஇல் வோர்ன் மோதியது குறிப்பிடத்தக்கது.கங்குலி வேண்டுமென்ற எதிரணிகளை உசுப்பேற்றுபவர் என்றும்,ஸ்டீவ் வோவை நாணய சுழற்சியின் போது ஒரு தடவை காக்கவைத்து வெறுப்பேற்றியது என்று பல விஷயங்களை சொல்கிறார்.
மேலும் பலர் பற்றித் தன் பார்வையில் பல விஷயங்கள் சொல்லும் வோர்ன்,ஒரு விடயத்தைத் தெளிவாக சொல்கிறார்.

இந்தப் பட்டியல் ஷேன் வோர்னின் தனிப்பட்ட தெரிவு.சராசரிகள்,சாதனைகள் என்பவற்றை விட அணுகுமுறைகள்,ஆளுமைகள், கிரிக்கெட்டில் அவர்கள் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பேரின் வரிசை தரப்பட்டபோது நண்பர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக விமர்சனங்கள் எழுந்தன.எனவே கூடுமானவரை நட்பை விட கிரிக்கெட்டையே அளவுகோலாக்கி இருக்கிறேன்.

இதோ தொடர்கிறது ஷேன் வோர்னின் 100பேரடங்கிய பட்டியல்..
(இனி எங்கெங்கு இருந்து,என்னென்ன சர்ச்சைகளும்,விமர்சனங்களும் எழப் போகின்றனவோ? ஆனால் வோர்ன் எதற்கும் தயார்..)

The top 100
100 Jamie Siddons / 99 Andrew Caddick / 98 Graham Thorpe / 97 Shahid Afridi
96 Sourav Ganguly / 95 Moin Khan / 94 Devon Malcolm / 93 Arjuna Ranatunga
92 Monty Panesar / 91 Graeme Hick / 90 Inzamam-ul-Haq / 89 Jack Russell
88 Mushtaq Ahmed / 87 Gary Kirsten / 86 Ian Bishop / 85 Chris Gayle
84 Simon Jones / 83 Paul Reiffel / 82 Craig McMillan / 81 Greg Matthews
80 Darren Berry / 79 Mark Boucher / 78 Stuart Clark / 77 V. V. S. Laxman
76 Shane Watson / 75 Mahela Jayawardene / 74 Shane Bond / 73 Mike Gatting
72 John Wright / 71 Darren Gough / 70 Richie Richardson / 69 Alec Stewart
68 Jonty Rhodes / 67 Harbhajan Singh / 66 Hansie Cronje / 65 Carl Hooper
64 Shivnarine Chanderpaul / 63 Daniel Vettori / 62 Mike Atherton / 61 Desmond Haynes
60 Mike Hussey / 59 Craig McDermott / 58 Andrew Symonds / 57 Tim May
56 Damien Martyn / 55 Mohammad Azharuddin / 54 Michael Vaughan / 53 Mohammad Yousuf
52 Brian McMillan / 51 Chris Cairns / 50 Stephen Harmison / 49 Dilip Vengsarkar
48 Dean Jones / 47 Robin Smith / 46 Justin Langer / 45 Ravi Shastri
44 Graeme Smith / 43 Kapil Dev / 42 Stuart MacGill / 41 Sanath Jayasuriya
40 Stephen Fleming / 39 Michael Slater / 38 Michael Clarke / 37 Bruce Reid
36 Allan Donald / 35 Virender Sehwag / 34 Shoaib Akhtar / 33 Kevin Pietersen
32 Darren Lehmann / 31 Waqar Younis / 30 Andrew Flintoff / 29 Saeed Anwar
28 Shaun Pollock / 27 Jason Gillespie / 26 Steve Waugh / 25 Andy Flower
24 Brett Lee / 23 Kumar Sangakkara / 22 Martin Crowe / 21 David Boon
20 Rahul Dravid / 19 Aravinda de Silva / 18 Merv Hughes / 17 Jacques Kallis
16 Adam Gilchrist / 15 Matthew Hayden / 14 Graham Gooch / 13 Anil Kumble
12 Mark Taylor / 11 Courtney Walsh / 10 Ian Healy / 9 Mark Waugh
8 Ricky Ponting / 7 Muttiah Muralitharan / 6 Wasim Akram / 5 Glenn McGrath
4 Allan Border
3 Curtly Ambrose
2 Brian Lara
1 Sachin Tendulkar


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner