January 21, 2011

சிறுத்தைதமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் தங்கள் ஜனரஞ்சக அந்தஸ்தை நாடி பிடித்து அறிவதற்கும் வெற்றிகள் தொடர்ந்துவரும்  நிலையில் தமது அடுத்த கட்ட உயர்ச்சியாக வெளிப்படுத்தவும் பயன்படுத்தும் இரட்டை வேடத்தை கார்த்தி பத்துப் படங்களுக்குள்ளேயே ஏற்றுள்ள படம் சிறுத்தை.

இதுவரை கார்த்தி நடித்துள்ள எந்தவொரு படமும் படுதோல்வி ஆனதில்லை என்ற தயாரிப்பாளரின் நல்ல பிள்ளைப் பெயரோடு மீண்டும் ஒரு மசாலா கலவை.

தெலுங்கு மெகா ஹிட் திரைப்படமான விக்க்ரமார்க்குடுவை சுட சுட ரீமேக் செய்து தமிழில் அந்த சூடு குறையாமல் தந்துள்ளார்கள்.

பட ஆரம்பத்திலேயே ஆந்திரப்பக்கம் நடைபெறுவதாகக் கதை இருந்தாலும் புரிவதற்காக பாத்திரங்கள் தமிழில் பேசுவதாக அறிவித்தல் போட்டு லாஜிக் மீறல் என்ற பேச்சு இல்லாமல் செய்கிறார்கள்.

ஆனால் படத்தில் ஆங்காங்கே வரும் முழக் கணக்கான அல்ல கூடை,லொறிக் கணக்கான பூச்சுற்றல்களை எல்லாம் கல கலப்பாகப் படம் செல்வதால் பொறுத்துக் கொள்ள முடிகிறது.
(மவனே சீரியசாப் பஞ்ச வசனம் பேசி இருந்தால் மட்டும் தாங்கி இருக்கவே முடியாமல் போயிருக்கும்)

கார்த்தி நேரெதிர் பாத்திரங்கள் இரண்டில்..
வழமையான கார்த்தியின் கலகல காமெடி பாத்திரம் ராக்கெட் ராஜாவாக சந்தானத்தொடு கல கல + இடுப்பு அழகி தமன்னாவுடன் கிளு கிளு...
நான் மகான் அல்ல இரண்டாம் பாதியில் பார்த்த சீரியசான + இறுக்கமான கார்த்தியாக நேர்மை+துணிச்சலான ரத்தினவேல் பாண்டியன் IPS ஆக விறுவிறு..
                                ஜிந்தாக்கா ஜிந்தா குத்து - ராக்கெட் ராஜா 

பரட்டைத் தலையும் தாடி மீசையுமாக கண்களில் திருட்டு முழியும் உதடுகளில் சதா வழியும் புன்னகையுமாக அலையும் ராக்கட் ராஜாவாகட்டும், கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக விறைப்பும் மிடுக்குமாக நிமிர்ந்த நெஞ்சோடும் தீர்க்கமான பார்வையோடும் முறுக்கு மீசையோடும் ரத்தினவேல் பாண்டியனாகட்டும் 'சிறுத்தை'யில் விஸ்வரூபமெடுத்து சிம்மாசனம் போட்டு இருக்கிறார் கார்த்தி.

மசாலாத்திரைப்படங்களில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளத் தேவையான அத்தனை விஷயங்களையும் அழகாக வெளிப்படுத்தித் தன்னை நிரூபிக்கிறார் கார்த்தி.
அண்ணன் சூர்யாவை விடக் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக மிளிர்கிறார்.
இயல்பான நகைச்சுவையில் சந்தானத்தையும் விஞ்சுகிறார்.

சரியான கலவையை இயக்குனர் சிவா வழங்கி இருக்கிறார். கார்த்தியும் வெளுத்து வாங்கி விருந்து படைத்திருக்கிறார்.

என்னைப் பொருத்தவரை ஒரே எட்டில் சிம்பு,தனுஷ்,ஜீவா வகையறாக்களைத் தாண்டி அஜித்,விஜய்,சூர்யா,விக்ரம் ஆகியோருக்கு அடுத்ததாக துண்டு போட்டிருக்கிறார் இந்தப் பருத்திவீரன்.
மிடுக்கு 

பருத்திவீரனில் ரசித்த பிறகு அனேக காட்சிகளில் கார்த்தியை ரசித்தேன்..
நான் மகான் அல்ல பார்த்த பிறகு பலரிடமும் நான் சொன்னது - கார்த்தி ஒரு போலீஸ் பாத்திரம் ஏற்றால் பின்னுவார் என்று.. நடந்திருக்கிறது.

படம் பார்க்க சென்ற ஈரோஸ் அரங்கில் ஆச்சரியமாக கார்த்தியின் ஆளுயர கட் அவுட்டுகள்.
படம் ஆரம்பித்தவுடனும் கார்த்தியின் பெயர் காண்பிக்கப்பட்டவுடனும் கரகோஷம்+காதைக் கிழிக்கும் விசில்கள்...
ம்ம்ம்ம்.. கார்த்தி மாஸ் ஆகிவிட்டார்.

வில்லன்கள் கொடூரம் என்பதை விட கோமாளித்தனம்.. ஆனால் கார்த்தியினாலும் அக்ஷன் சரவெடிகளாலும் ரசிக்க வைக்கின்றன வில்லன் - ஹீரோ மோதல்கள்.
சந்தானம் - நவீன கால கவுண்டமணி. ஹீரோவைக் கிடைக்கும் இடைவெளியில் ஓவர் டேக் பண்ணிவிடக் கூடிய அசத்தல் நக்கல்,நையாண்டிகள்.

கார்த்தியுடன் காட்டுப்பூச்சியாக சந்தானம் போடும் ரகளையில் திரையரங்கே கலகலக்கிறது.
இடைவேளைக்குப் பின்பும் சந்தானத்தின் ஆட்டம் கலக்கல்.

தமன்னா பாவம்.. ஆனந்தத் தாண்டவம் மதுமிதா முதல் லூசுப் பெண்ணாகவே இவரை மாற்றிவிட்டார்கள். ஒரு சம்பவத்துடன் ஒரு பொறுக்கி என்று ஊகிக்க்கூடியளவு அறிவில்லாதவரா என்று பரிதாபம் தான் வருகிறது.
வெளிறிய வெள்ளை வெளேர் இடுப்பை அடிக்கடி காட்டி ராக்கெட் ராஜாவை மூடாக்கி எம்மைக் காண்டாக்குகிறார்.


                                இடுப்பு 

போலீசின் குட்டி மகள் அழகாக இருக்கிறாள். பாவமாக இருக்கிறது.மகள் சென்டிமெண்ட்..
பையா தறுதலை கார்த்தியைத் தந்தையாகக் காட்டியபோதும் அதற்கும் பொருத்தமாக இருக்கிறார்.

முதல் பாதியின் நகைச்சுவைகளும் நையாண்டி வசனங்களும் ரசிக வைத்தது போலவே, இரண்டாம் பாதியில் கொஞ்சம் சீரியசான சில பிளாஷ்பக்குகளின் செண்டிமெண்ட்,சவால்,உணர்ச்சி மிகு வசனங்களும் ரசிக்க வைப்பன.
போலீஸ் கார்த்தி பயம் பற்றி சொல்லும் இடமும் போலீஸ்காரர்கள் பற்றி நீளமாகப் பேசும் இடமும் டச்சிங்.

இன்னும் சில வசனங்கள் நிறையப் பழைய உணர்வுகளைக் கொஞ்சம் கிளறிவிட்டன.
'அண்ணன் வருவார்'
'அண்ணன் வந்திட்டார்'
'தாயைக் கூட்டிக் கொடுத்தவனும் தலைவனைக் காட்டிக் கொடுத்தவனும் நல்லா வாழவே மாட்டான்'

வித்யாசாகரின் இசையில் எல்லாப் பாடலுமே முன்பே ஹிட். படத்தில் இன்னும் ரசிக்க வைத்துள்ளார்கள். ஆனால் எல்லாப் பாடலையுமே தெலுங்குப் பாணியிலேயே கலர் கலராய் சிங்கு சக்கா போட்டிருப்பது தான் கொஞ்சம் அன் சகிக்கபில்.

இன்னொரு ரசிக்க வைத்த விடயம்.. இது ஒரிஜினல் தெலுங்குப் படத்தில் இருக்கிறதா எனப் பார்த்தவர்கள் தான் சொல்லவேண்டும்..
அந்த 'ஜிந்தாக்கா தக்கா தக்கா' கைகள் கும்மும் விளையாட்டு.. கலாய்த்தலாக ஆரம்பித்து கடைசிக் காட்சி வரை கலக்குகிறது.

இடைவேளைக்குப் பிறகான சீரியஸ் ப்ளாஷ் பக்கினால் ரொம்பவே சீரியஸ் ஆகாமல் கல கல ராக்கெட் ராஜாவை வைத்து சிரிப்பாகவும் நையாண்டியாகவுமே வில்லன்களை ஐடியாக்கள் மூலமாகக் கவிழ்ப்பதும் ரசிக்கவைக்கும் டெக்னிக்.

இப்படி பல காட்சிகளை ரசித்து சிரிக்கலாம்..

அளவான காரம், சிரிப்பு,ரசிப்பு மசாலா தடவி வந்துள்ள பொங்கல் படையல் சிறுத்தை சிரித்து ரசிக்க சூப்பர் படம்.

சிறுத்தை - சீறுகிறது.

 சிரிப்பதற்காக மீண்டும் ஒரு தடவை பார்க்கலாம் என்றிருக்கிறேன்..
ஓசி டிக்கெட் தானே.. யார் யார் வாறீங்க?

* ரத்தினவேல் பாண்டியனின் மிடுக்குப் பார்த்து மீண்டும் மீசையை முறுக்கலாமா என்று ஒரு ஆசை.. ;)


26 comments:

கன்கொன் || Kangon said...

உள்ளேன்.... :-))))

Anonymous said...

'ஜிந்தாக்கா தக்கா தக்கா' ஒரிஜினல் தெலுங்கு படத்திலும் இருக்கிறது.

தெலுங்கில் இந்தப்படம் தெலுங்கு நேட்டிவிட்டியுன் இருப்பது, தமிழிலும் அப்படியே இருப்பது தான் கொஞ்சம் இடிக்கிறது.

ஆனால் ரவி தேஜாவை விட கார்த்தி இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பதாகவே தோன்றுகிறது.

மற்றப்படி இது சிரிச்சு சிரிச்சு பார்க்க ஒரு நல்ல படம்.

Vijayakanth said...

pazhaiya technique nu solli atha wida pazhaiya technique a wachchi kaarththi thappichcha maadiri.... Siruththaiyum thappichchuduchchu... sema hit than :)

Vathees Varunan said...

விமர்சனம் அருமை, சிறுத்தை பற்றி என் எண்ணஓட்டங்களுடன் பலவிடயங்கள் ஒத்துப்போகின்றது, வித்தியாசாரின் இசை ரொம்பவே ஆட்டம்போடவைத்தாலும் காதால் இரத்தம் வரவைக்கிறஅளவுக்கு கொடுமையாகவும் இருக்கிறது. கார்த்திக்கு கிடைத்த விசில்கள் ஆர்புரிப்புக்களால் இலங்கையிலும் இவ்வளவு கார்த்தியினுடைய இரசிகர்கள் இருக்கிறார்களா என்று நானும் வியந்தேன். நான் அடுத்தநாளே இரண்டாவது தடவையாகவும் பார்த்துவிட்டேன், ஓசியில ரிக்கட் தந்தால் 3வது முறையும் பார்ப்பதற்கு தயார்...

Vathees Varunan said...

அந்த மூன்றுவயது சின்னப்பிள்ளையின் காட்சிகள் அருமை, அத்தோடு சந்தானத்தின் நகச்சுவைகள் இரசிக்க வைக்கின்றது

Anonymous said...

u can't expect logic from SS rajamouli's films....

no its 100 % raviteaja film
when its come 2 tamil the template is not matching

the characterization and the body language are native of raviteaja..
copied or imitated version of karti is not that much

in KICK(remake thillalankadi) ravi try to imitate raviteaja but he fails but karti is better than ravi

Anonymous said...

naanum padam parthen theater ye sirippal athirnthathu ...nalla njoyable movie...karthi acting also nice..santhanam rockz

வந்தியத்தேவன் said...

ம்ம்ம் நல்ல டிவிடி வரப்பார்க்கவேண்டியதுதான்.

இதே படத்தை விஜய் நடித்திருந்தால் லோஷன் கிழிகிழி எனக் கிழித்திருப்பார் என விஜய் ரசிகர்கள் விமர்சிக்கின்றார்கள்.

வெள்ளைப்பூரான் தமன்னாவை ஏனைய்யா எல்லாப் படங்களிலும் லூசாகக் காட்டுகின்றார்கள்.

என்னாது ஈரோசிலையா பார்த்தது நல்ல மூட்டைப்பூச்சிகள் எல்லாம் இருக்குமே?

Anonymous said...

அண்ணன் வருவார்'
'அண்ணன் வந்திட்டார்'
'தாயைக் கூட்டிக் கொடுத்தவனும் தலைவனைக் காட்டிக் கொடுத்தவனும் நல்லா வாழவே மாட்டான்'

தர்ஷன் said...

ரசித்து பார்த்திருக்கிறீர்கள்

//ராக்கெட் ராஜாவை மூடாக்கி எம்மைக் காண்டாக்குகிறார்.//

ரைமிங்கோடு எழுதியிருக்கீங்க

ம.தி.சுதா said...

படத்தை மீண்டும் பார்த்தது போலுள்ளது... அண்ணா..

roomno104 said...

i saw the flim.. i felt mass didn't suit Karthik.. he looking like a joker in mass stunts...

santhanam comey is saviour of the flim..

already movie is competing in illayanan in box office..

kethees said...

வெளிறிய வெள்ளை வெளேர் இடுப்பை அடிக்கடி காட்டி ராக்கெட் ராஜாவை மூடாக்கி எம்மைக் காண்டாக்குகிறார்.
nice anna...

kethees said...

வெளிறிய வெள்ளை வெளேர் இடுப்பை அடிக்கடி காட்டி ராக்கெட் ராஜாவை மூடாக்கி எம்மைக் காண்டாக்குகிறார்.
nice anna...

yeskha said...

"சரியான கலவையாக இருக்கிறார் கார்த்தி" சரியான விமர்சனம். ஏற்கனவே சிவகுமார், சூர்யா என அவர்கள் குடும்பத்திற்கே இருக்கும் குட் பாய் இமேஜ் கார்த்தியின் கிராஃபுக்கு ஒரு நல்ல ப்ளஸ். ஆயிரத்தில் ஒருவன் மட்டும் கொஞ்சம் தடுமாறினாலும் (அதுவும் தட்டுத்தடுமாறி வசூல் செய்து விட்டதாகக் கேள்வி) மற்ற மூன்று படங்களுமே வெற்றிதானே. இப்போது சிறுத்தையும்.

MANO நாஞ்சில் மனோ said...

//சிறுத்தை - சீறுகிறது///

சீறட்டும்
சீறட்டும்

lalithsmash said...

படம் ஓகேதான் ஆனால் கார்த்தி இன்னொரு விஜய் ஆகாமல் இருந்தால் சரி.

lalithsmash said...

லோஷன் உங்கள் ஆடுகளம் விமர்சனத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

Jana said...

இன்னும் ஒரு படமும் பார்க்கவில்லை. பார்க்கணும். சிலவரிகள், சில கட்டங்களை பலர் பார்த்துவிட்டுவந்து குறிப்பட்டு சொல்லுகின்றார்கள். தாங்கள் சொன்னதுபோல கார்த்தி, சிம்பு,தனுஸ், ஜெயம்ரவி லிஸ்டில்போட்டி இல்லை, விஜய், அஜித், சூர்யா லிஸ்டில் போட்டியாளராக நிற்கின்றார்.

ஷஹன்ஷா said...

ம்ம்ம்ம்....சூப்பரா ரசித்துள்ளீர்கள் அண்ணா...

நல்ல படம்தான்..அட்டகாசமான நகைச்சுவை..தமன்னா(எனக்கு பிடிக்காதே..!)மிடுக்கான கார்த்தி என அருமையான மசாலா விருந்து சிறுத்தை...


மீண்டும் திங்கள் பார்க்க உள்ளேன்....வருவோர் தொடர்புகொள்ளலாம்...


இங்கு உள்ளது பாடல் விமர்சனம்-
http://sivagnanam-janakan.blogspot.com/2011/01/blog-post_21.html

Bavan said...

ஜிந்தாதக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக்தக் தா..:D #எனது_மசேஜ்_TONE

பொங்கலன்று முதன் SHOWவிலேயே பார்த்துவிட்டேன்..:D

கார்த்திக் என் பேவரிட் ஹரோக்களில் ஒருவராகிவிட்டார், இனி அவரின் படங்களை தவறவிடுவதில்லை என்று முடிவு..:D

எனக்கு டிக்கெட் எடுத்தால் நானும் வருகிறேன்..:D

Anonymous said...

//இதே படத்தை விஜய் நடித்திருந்தால் லோஷன் கிழிகிழி எனக் கிழித்திருப்பார் என விஜய் ரசிகர்கள் விமர்சிக்கின்றார்கள்.

உண்மைதான் அவ்வாறே நடந்து இருக்கும்

வானேறி said...

நீங்கள் வெள்ளம பற்றி எழுதிய பதிவுக்கு பின்னூட்டங்கள் குறைவு மற்றும் வருகை தந்த வாசகர்களும் குறைவாகவே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இங்கேயும் மசாலா பதிவுக்குதான் மதிப்பு என்று இருக்கும்போதுதான் எவ்வாறு தமிழ் சினிமாவில் மசாலா நாயகர்கள் உருவாகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. ஹ்ம்ம்

Anonymous said...

வானேறி கூற்றை ஆதரிக்கிறேன்.பதிவர்கள் வெறும் சினிமா,விளையாட்டு ரசிகர்களா?சமூகத்தையும் ரசியுங்கள் தோழர்களே...

தமிழ் நெட்வேர்க் said...

Siruthai (Vikramarkudu) Telugu Original Version Watch Online

http://www.youtube.com/watch?v=m-Lwl608dnY&feature=player_embedded

OR

http://www.tamilnetwork.info

suthan said...

இதே படத்தை விஜய் நடித்திருந்தால் லோஷன் கிழிகிழி எனக் கிழித்திருப்பார் என விஜய் ரசிகர்கள் விமர்சிக்கின்றார்கள்.

உண்மைதான் அவ்வாறே நடந்து இருக்கும். Loshan anna vukku vijey yaa pidekkathu . Athanal nalla vijey movie vanthal onrum solla maddar . ethukum kochcham over enral athai vachchu ethoo than periyaa nallavar enaa oru vilamparam . anna ungalaai rempaa pidekkum but eppa ungal pakka sarpanaa nadavadikkai ungal methu oru veruppai vara vakkirathu . thanks suthan canada.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner