May 16, 2009

நரமாமிச உண்ணிகளிடம் மாட்டிக்கொண்டால்...
மூன்று நண்பர்கள் பயங்கரமான காட்டு வழியாகப் போய்க்கொண்டிருந்த நேரத்திலே நரமாமிசம் உண்போரிடம் - cannibals அகப்பட்டுக்கொண்டார்கள். அந்த மூன்று பேரில் ஒருவர் நம்ம ஹீரோ கஞ்சிபாய்.

மூன்று பேரையும் கம்பங்களில் கட்டிப்போட்டு விட்டு – நரமாமிசம் உண்போரின் தலைவன் சொன்னான். 'உங்களை அவித்துப் பொரித்து பலவிதமாக சாப்பிடப்போகிறோம். அதன் பின் உங்கள் தோல்களினால் படகு, பாய்மரப்படகு செய்து எங்கள் பயணங்களுக்குப் பயன் படுத்துவோம்.'

மூன்று பேருமே பாதி செத்துவிட்டார்கள். 

வெலவெலத்து நடுங்கிய அவர்களைப் பார்த்து நரமாமிச உண்ணிகளின் தலைவன் சொன்னான் 'எனினும் உங்களைப் பார்த்தால் பாவமாகவும் இருக்கிறது. உங்கள் மரணத்தின் முன் இறுதி ஆசையொன்றைச் சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன்'

முதலாமவர் 'எனக்கு துடிதுடித்தெல்லாம் சாக முடியாது. நீங்கள் கொல்ல முதல் நானே இறந்து விடுகிறேன். தயவு செய்து எனக்கு விஷம் கொடுங்கள்' என்றார். 

கொடுக்கப்பட்டது.

அடுத்தவர் 'நான் இறந்தது பற்றி எனது வீட்டவருக்கு தகவல் சொல்லவேண்டும். தாளொன்றும் பேனாவும் கொடுங்கள்' என்று சென்டிமென்டானார்.

கொடுக்கப்பட்டது.

மூன்றாமவர் – நம்ம கஞ்சிபாய்...

'எனக்கு ஒரு முள்ளுக்கரண்டி – fork  கொடுங்கள்' என்றார். 

நரமாமிச உண்ணிகளுக்குப் புரியவில்லை.... முள்ளுக்கரண்டி எதற்கு? 
எனினும் கொடுத்தார்கள். 

அதை வாங்கிய கஞ்சிபாய் தன் உடலெங்கும் சரமாரியாகக் குத்த ஆரம்பித்தார். உடலெங்கும் காயம், துளைகள்... இரத்தம் ஓடுகிறது.

ஒரு இடம் மிச்சமில்லாமல் காயங்கள்.

நரமாமிச உண்ணிகள் பயந்து போய், அசந்து போய், திடுக்கிட்டுப் போய் நிற்கிறார்கள்...

தலைவன் உட்பட எல்லோரையும் ஒரு தடவை பார்த்தார்.

 ஒரு குரூரச் சிரிப்போடு கேட்டார் கஞ்சிபாய் 'ஏனடா என்னைச் சாப்பிட்ட பிறகு என் தோலில் படகு கட்டப் போறீங்களா? இப்ப என்ன செய்வீங்கடா? ஓட்டைப் படகிலே மூழ்கி நரகத்துக்குப் போங்கடா'

இது நேற்றைய காலை நிகழ்ச்சியில் சொன்ன நகைச்சுவை!

இதைக் கேட்ட எனது நண்பரொருவர் 'ஜோக்கிலேயும் நாட்டு நடப்பு சொல்லுறீங்க போல' என்று ளுஆளு அனுப்பிருந்தார். (மறுபடியும் SMSஆ... கிளம்பிட்டாங்கய்யா...)

அப்படியேதாவது இந்தக் கதைக்குள்ள 'பொடி' இருக்கா என்ன?

பி.கு - தொடர்ந்து ஒரே சீரியஸ் & IPL விஷயமே வருவதாக சில மடல்கள் வந்திருந்தன. அவர்களுக்காக(வும்)..14 comments:

mano said...

அப்படியேதாவது இந்தக் கதைக்குள்ள 'பொடி' இருக்கா என்ன?

ம்...............ம்

Subankan said...

:-))))

வேற என்னத்தைச் சொல்ல...

Anonymous said...

என்ன கொடும சார்

யப்பா இன்னொரு தடவ சொல்லாதங்கப்பா.. தாங்கல.. நீங்க நீட்டி முழக்கி சொல்லதொடங்கும்போதே உங்க கஷ்டம் பார்த்து சிரிப்பு வந்துடும்..

நிகழ்காலத்தில்... said...

அருமையான கதை

மனிதனின் குணத்தை படம் பிடித்து காட்டுகிறது

#Jegatheepan# said...

அட அட அட கலக்குறீங்க அண்ணே ...!

ஆதிரை said...

//அப்படியேதாவது இந்தக் கதைக்குள்ள 'பொடி' இருக்கா என்ன?

சத்தியமாக இல்லை... :-)

உங்கள் 'body' தாங்கினாலும் எங்கள் 'body' தாங்காதையா.. :P

ஆதிரை said...

//அப்படியேதாவது இந்தக் கதைக்குள்ள 'பொடி' இருக்கா என்ன?

சத்தியமாக இல்லை... :-)

உங்கள் 'body' தாங்கினாலும் எங்கள் 'body' தாங்காதையா.. :P

Thusha said...

அண்ணா எதோ சொல்லணும் போல இருக்கு அன்னாளும் வேண்டாம் கன்சிபாய்யை கேட்டேன் என்று சொல்லுங்க போதும்

hamshi said...

Anna Indian election busy ya?or Ipl busy ya?bcoz kathai elutha arampichchiddinga.Anyway kanchchibay yai kana nala kedkala.roba nanri kanchchibay yai edagila kondanthathattku.But story lines etho message solla vanthmathri errukku.ok.supper.why?nega pesama kathai eluthidunga

ers said...

ஒரு குரூரச் சிரிப்போடு கேட்டார் கஞ்சிபாய் 'ஏனடா என்னைச் சாப்பிட்ட பிறகு என் தோலில் படகு கட்டப் போறீங்களா? இப்ப என்ன செய்வீங்கடா? ஓட்டைப் படகிலே மூழ்கி நரகத்துக்குப் போங்கடா'


வானொலியில் சொன்ன நகைச்சுவையா லோசன்.

Prabhu said...

இதே மாதிரி இன்னும் நிறைய கான்னிபால்ஸ் ஜோக் இருக்கு. அத நான் போடுறேன்.

Unknown said...

ஆம் , நரகத்துக்கு தான் செல்லவேண்டும்.

என்ன செய்ய காலைச் செய்திகள் காதை துளைக்கின்றன.

Abiman said...

Write something please... Today bit releif.No?

KUMS said...

முடியல

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner