நாளை மறுதினம் கிரிக்கெட்டின் களியாட்டத் திருவிழாவான IPL 2009 தென் ஆபிரிக்காவில் ஆரம்பிக்கப் போகிறது.
ஒரு விறு விறுப்பான திரைப்படத்துக்குரிய அத்தனை திருப்பங்கள்,மர்மங்கள்,பிரம்மாண்டங்கள் இவற்றுடன் கதாநாயகர்கள்,கவர்ச்சிக் கன்னிகளுடன் (Cheer girls & bollywood beauties) இந்தத் திருவிழாவை எதிர்பார்த்து என்னைப் போல உங்களைப் போல உலகம் முழுதும் ஏராளமானோர் காத்திருக்கிறோம்..
ஒவ்வொரு நாளும் பற்பல திருப்பங்கள்.. புதுப் புது பரபரப்புக்கள்..
Action ஹீரோக்களும்,கட்டழகிகளும் பண முதலைகளும் ஸாரி முதலாளிகளும் IPLஇல் அங்கம் வகிப்பதால் ஒவ்வொரு நாளும் புதுப் புது செய்திகளுக்குக் குறைவில்லை..
கிரிக்கெட் ஆர்வம் இல்லாதோருக்கும் (நம்ம புல்லட் மாதிரி ஆக்கள்) இந்த செய்திகள் அவல் தான்..
என்ன தான் விவகாரம் நடந்தாலும் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்த பிறகு எல்லாம் கிரிக்கெட் மயமாகி விடும் என்று நம்புவோமாக..
இதோ இந்த வார IPL அவல் துளிகள்..
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியிலிருந்து ஏழு வீரர்களை 'தேவையில்லை போங்கப்பா' என்று சொல்லி திருப்பி இந்தியா அனுப்பப்பட்டுள்ளார்கள்..
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும்,எதிர்கால இந்திய அணியின் தலைவர் என்றும் உச்சத்தில் வைக்கப்பட்ட மொகமட் கைபும் (Kaif) அதில் ஒருவர் என்பது தான் விஷயமே..
எப்படி இருந்தவர் எப்படி ஆயிட்டார்?
ஷேன் வோர்ன் எப்போதுமே ஒரு மந்திரவாதி தான் போலும்.. நட்சத்திரங்களே அதிகளவில் இல்லாத ஒரு அணியான ராஜஸ்தானை கடந்த முறை சாம்பியன் ஆக்கிக் காட்டியதில் அவர் பங்கு எவ்வளவுன்னு எல்லோருக்குமே தெரியும்.
இந்த முறை ஷேன் வொட்சன்,சொகைல் தன்வீர்,கம்ரன் அக்மல் இல்லாமல் என்ன செய்யப் போகிறார் என்று பார்த்தால், அவரது அடியாளான (அடித்து ஆடுவதால்) யூசுப் பத்தானுடன், கம்ரான் கான் என்ற புதுமுகப் புயலுடன் வந்திருக்கிறார்..
பதினெட்டு வயதே ஆன கம்ரான் இம்முறை எல்லா எதிரணி துடுப்பாட்ட வீரர்களையும் கதற வைப்பார் என்கிறார் வோர்ன்.. பார்ப்போம்..
மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களுக்கு இம்முறை கொண்டாட்டம் தான் போங்கள்.. (எந்த ஒரு பாலிவுட் நாயகியும் அவர்களது உரிமையாளராக இல்லாவிட்டாலும்)
அம்பானியின் அணியாயிற்றே.. கொழுத்த பணப்பரிசுகளுடன் உலகின் பிரபல நட்சத்திர வீரர்கள் பலபேரை (சச்சின்,சனத் ஜெயசூரிய,சகீர் கான், பிராவோ, ஹர்பஜன் உட்பட) தன்னகத்தே கொண்டிருக்கும் மும்பை இம்முறை வெற்றிக் கிண்ணத்தை பெறும் வாய்ப்புடைய அணிகளில் முக்கியமான ஒன்று.
இப்போது மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு தங்கத்திலும் வைரத்திலும் குளிக்கும் வாய்ப்பு.. ஒவ்வொரு தடவையும் ஒரு மும்பை வீரர் போட்டி சிறப்பாட்டக்காரர் விருதை (Player of the match) வெல்லும் போதும் அவருக்கு தங்கத்தாலும் வைரங்களாலும் இழைக்கப்பட்ட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கப்படவுள்ளது..
கங்குலி,புக்கானன் பிரச்சினையைத் தீர்த்து/அடக்கியது, கவாஸ்கருக்கு எதிரான ஆவேசம், பின்னர் அடங்கி காவஸ்கரிடம் மன்னிப்பு கோரியது என்று போல்லிவூடின் கனவு நாயகன் ஷாருக் கான் ஏக பிசி..
இவ்வளவு பிசியிலும் தானே மினக்கெட்டு தனக்கு தெரிந்த நடிகைகள்,நடிகர்கள் ஆகியோரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ஆதரவு தருமாறு அன்போடு அழைக்கிறாராம்.. (நானும் சப்போர்ட் பண்ண ரெடி தென் ஆபிரிக்கா கூட்டிட்டு போவிங்களா?)
தோனி விட்டாலும் நம்ம லக்ஷ்மி ராய் விடுற மாதிரி இல்லை.. நேற்று NDTV தொலைக்காட்சியில் தங்கள்'உறவு' பற்றி விரிவாக அலம்பல் பண்ணிக் கொண்டிருந்தார்..
இதுல வேற மும்பை பக்கம் போய் ஹிந்தி படங்களில் தனது 'திறமை'யைக் காட்டப் போறாராம். தோனியுடனான கிசு கிசு பப்ளிசிடியை நல்லாப் பயன்படுத்துறாங்கோ..
(நல்லா படுத்துங்கோ.. ஸாரி.. நடத்துங்கோ)
ஆஸ்திரேலிய வீரர்களின் பிசி,ஓய்வு, IPLக்கு வராமல் ஆஷசுக்கான தயார்ப்படுத்தல்களால் அதிகமாகப் பாதிக்கப்படப் போகின்ற அணி பஞ்சாப் கிங்க்ஸ் XI ஆகத் தான் இருக்கும்..
கடந்த வருடம் கலக்கிய ஷோன் மார்ஷ்,ஜேம்ஸ் ஹோப்ஸ் இருவருமே இம்முறை இல்லை.
இவர்களுக்கு பதிலாக இம்முறை இங்கிலாந்தின் ரவி போபரா பிரகாசிப்பார் என்று நம்புகிறார் ப்ரீத்தி சிந்தா.. (உரிமையாளருங்கோ)
இதுல உள்ள விசேஷம் என்ன என்றால் போபராவின் வம்சாவளி வழியாக அவருக்கு பஞ்சாப் தொடர்புகள் இருக்காம்.. (பஞ்சாபின் பேரன்??)
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உரிமையாளர் ஷில்பா ஷெட்டியை ஆகா ஓகோ என்று புகழ்கிறார் ஷேன் வோர்ன். இவர் தான் தான் 'கண்ட' best boss என்கிறார்..
ஷில்பாவும் வோர்னை ஐஸ் மழையால் குளிர்விக்கிறார்..தங்களது புரிந்துணர்வுக்கு காரணம் ஒருவர் வேளையில் ஒருவர் தலையிடுவதில்லை என்று இருவரும் பரஸ்பரம் மனம் நெகிழ்கிறார்கள்.. (ஷில்பாவின் மொபைல் நம்பர் வோர்னுக்கு தெரியுமா?)
தகவல்களை விட தேடியெடுத்த கலர்புல் படங்கள் கண்களைக் குளிர்வித்திருக்கும் என நினைக்கிறேன்.. இன்னும் அவல் கிடைத்தால் மெல்லுவதற்கு தருகிறேன்..
ஓட்டு போட்டிங்களா? (தேர்தல் காலமண்ணே..) நாலுக்கும் குத்துங்க..