
கொழும்பில் 'ஆனந்த விகடன்' சஞ்சிகை விற்றவர் என்று பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் ஸ்ரீதர்சிங் கைதுசெய்யப்பட்டார் என்றவுடனேயே இந்திய தமிழ் சஞ்சிகைகள் எவற்றையுமே கொழும்பு புத்தகக் கடைகளில் காணவில்லை.
'தடை' என்ற அறிவித்தல் இல்லாமல் இந்த நிலை!
முன்பெல்லாம் வாராவாரம் வீட்டில் வாங்கிப் பத்திரமாக சேமித்துவைத்த பழைய ஆனந்தவிகடன் இதழ்களை எல்லாம் உடனே விற்றோ வீசியோ தொலைக்குமாறு மனைவியினதும் அம்மாவினதும் நச்சரிப்பு தாங்கமுடியவில்லை.
எழுதியவர் யாரோ பதிப்பித்தவர் யாரோ என்றிருந்தபோதும் 30வருடங்களாகத் தொடர்ந்து விற்றுவந்த ஒருவருக்கே சிக்கல் என்றால் அண்மைச் சில வருடங்களாக வாசித்து வரும் எமக்கும் என்னென்ன இனியும் காத்திருக்கோ?
###################### *** ####################
அண்மைக்கால தொலைக்காட்சிகளின் (இந்தியா) என்னைக் கவர்ந்த நான்கு மென்பான (குளிர்பான) விளம்பரங்கள் - கவர்ந்த என்று சொல்வதை விட பார்க்கக் கிடைத்த என்பது பொருத்தமானது.
மிரின்டா - அசின்
இரண்டுமே கலக்கல் விளம்பரங்கள் - பெண் பார்க்க வருமிடத்தில் குத்தாட்டம் ஆடிக் கலாய்ப்பப்பதாகட்டும்; காய்கறிக் கடைக்காரியாக சென்னைத் தமிழில் பாண்டுவைப் பைத்தியம் பிடிக்க வைப்பதிலாகட்டும்! அசின் - அசத்தல்
அசினின் குரலும் குறும்பு கொப்பளிக்கும் கண்களும் 'மிரிண்டா கண்ணு – கொஞ்சம் கலாட்டா பண்ணு' எனும் பஞ்ச்சும் பிரமாதம்.
மிரின்டா பிடிக்குதோ இல்லையோ இனி எங்கே மிரின்டாவைக் கண்டாலும் அசின் ஞாபகம் வரும்.
வாழ்க மிரிண்டா புகழ் பரப்பும் தலைவி.
ஃபான்டா – ஜெனிலியா
ரகளையான இளமை துள்ளும் கலாட்டா பாடல். துள்ளும் இளமையுடன் துடிப்பான பாடலும் கலக்கல் ரகம்.
கொக்காகோலா – விஜய்
கொக்காகோலா விநியோகஸ்தர் அல்லது நடமாடும் வியாபாரி போல் விஜய் பாடி,ஆடி வீதியில் சண்டை சச்சரவிடுவோருக்கு 'கோக்' கொடுக்கிறார். இப்படி இலவசமாய்க் கொடுத்தால் யார்தான் குடிக்கமாட்டோம்?
விஜய் வருவதனால் கொஞ்சமாவது துள்ளல் பாடலொன்றைக் கொடுத்திருக்கலாம். விஜய்யும் கம்பளிப்பூச்சி மீசையுடன் 'போக்கிரி' பட விளம்பரங்களுடன் - விளம்பரம் முன்பு எடுக்கப்பட்டதோ?
கொக்காகோலா நிறுவனத்தார் கொஞ்சம் பார்த்திருக்கலாமே? (அது சரி குருவி,ATM,வில்லு எல்லாம் விளம்பரத்துக்கு பயன்படுத்த முடியுமா)
மாசா – மாம்பழ மேனியா மனிதர் ஒருவர் செய்யும் அளப்பறை இருக்கே - சூப்பர்.
அதுவும் அந்த மாம்பழ டிசைன் சட்டையும் 'லூசு' திட்டும் சிரிப்பை நிச்சயம் வரவழைக்கும்.
############## ************* ################
விஜய் பற்றி சொல்லும்போது தான் நேற்று நண்பர் ஹிஷாமின் பதிவொன்றில் பார்த்த விஷயம் ஞாபகம் வந்தது.

வில்லு திரைப்பட தோல்வி மனிதரை நிலைகுலைய வைத்துள்ளது என்பது தெரிகிறது.. தோல்விகள் என்ன தான் மனப்பாதிப்பை ஏற்படுத்தினாலும்,இப்படியா பொது இடத்தில் எகிறுவது?
நடித்தவருக்கே இப்படி என்றால்,பணம் போட்டு தயாரித்தவரின் நிலை??
பார்த்து கொடுமை அனுபவித்த எம் போன்ற அப்பாவிகளின் நிலை??
நாங்க எல்லாம் கத்தப் புறப்பட்டால் யார் தாங்குவார்?
இதனால் தான் நாம் அஜீத்துக்காக அனுதாபப் படுவது .. மனிதர் எத்தனை தொடர் தோல்வி கண்டாலும் இப்படியா சூடாகிறார்? எத்தனையைத் தாங்குகிறார்?
தளபதியும் இதைப் பழகிக்க வேணாமா? எவ்வளவு படம் தோத்தாலும் தாங்குறான் இவன் ரொம்ப நல்லவன்னு சொல்ல வேணாமா? இப்ப தானே மூணு படம் தோத்திருக்கு.. இன்னும் எவ்வளவோ இருக்கே..
எவ்வளவோ தாங்கிட்டீங்க தளபதி, இதையும் தாங்க மாட்டீங்களா?
############ ***** ###################
அண்மையில் பார்த்த ஒரு சில புதிய தமிழ் திரைப்படங்கள்.. (எனக்கு இப்போ தான் பார்க்கக் கிடைத்தபடியால் என் மட்டில் இவை புதுசு தான்..)
பெருமாள் - இப்படியொரு கொடுமையை நான் அண்மையில் அனுபவித்தது வில்லு மூலம் மட்டுமே.. காதை அடைக்கும் சத்தமும்,காலை உயர்த்தி அடிக்கும் சுந்தர் சீயின் சண்டைகளும்,காட்டுக் கத்தல்களும் தாங்க முடியல சாமி..
விவேக்கும்,மீனாட்சியும் மட்டும் கொஞ்சம் ஆறுதல்.. மீனாட்சி நல்லா தானே இருக்கா? ஏன் யாருமே கண்டுக்க மாட்டேங்கிறாங்க?
நமிதா ரொம்ப ஓவர் சைஸ். இனி போதும் என்று தான் சொல்லத் தோனுது.. அது சரி தொடர்ந்து சுந்தர் இவரையே எல்லாப் படத்திலும் வைத்திருக்கிறாரே(!!).. குஷ்பு கண்டுக்க மாட்டாங்களா? (சும்மா ஒரு டவுட்டு தான்)
படிக்காதவன் - வில்லு,பெருமாளை விட பரவாயில்லை.. ஆனால் நயன்,மீனாட்சியை படிக்காதவனில் போட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்..
சுள்ளானின் கூத்துக்களையும்,கடிகளையும் பார்த்து ஆறுதல் அடைய முடிகிறது.. லாஜிக் என்று எதுவும் பார்க்கவே வேண்டாம் என்று முடிவெடுத்தே பார்க்க இருந்த படியால் ஒரு கார்டூன் பார்ப்பது போலவே இருந்தது..
இதுல வேற வில்லன்கள் பட்டாளமாம்.. விவேக்காம்.. ஐயோ தாங்கல.. பேசாம விஜயையே நடிக்க வச்சிருக்கலாம்..
ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது..
இன்னும் ஒரு சில படங்கள் பார்த்தேன்.. அது பற்றி பிறகு சொல்கிறேன்..
(பயப்படாதீங்க அவை இவற்றை விட கொஞ்சம் பெட்டர்)
############## **************** ##################
அது சரி தலைப்பைப் பற்றி எதுவுமே இல்லைன்னு (நமீதா பற்றி கொஞ்சம் சொல்லிட்டேன்) யோசிக்கிறீங்களா?
தலைப்பு என்னடா ஒரு தினுசா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா?
அர்த்தம் இல்லாமல் சும்மா கிளுகிளுப்புக்கு என்று யோசிக்கவேண்டாம்.
நம்ம அலுவலக நண்பரொருவரின 'காரண' பட்டப் பெயர் தான் காலாண்டி.
அவரது திருமணப் பேச்சுக்கள் இப்போது உச்சக்கடத்தில்.
அவரது பெற்றோர் பெண் தேடுவதில் மும்முரமாக இருக்க, நம்ம காலாண்டி மாப்பிள்ளை போட்ட 'பெரிய' நிபந்தனை – பொண்ணு நமீதா மாதிரி இருக்கணுமாம்!
உடனே யாரும் விவகாரமா கண்டபடி சிந்திக்கவேண்டாமாம்!
நமீதா மாதிரியே உயரமும் பால் வடியும் பிஞ்சு முகமும் பாசமான பேச்சும் உள்ள பெண் வேணுமாம்!
யாராவது அப்படி இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் - நம்ம நண்பரைக் கரை சேர்ப்போம்!
நீங்களும் நம்புங்கப்பா! நான் நம்பிட்டேன்!