February 27, 2014

விராட் கோளியின் மணிக்கூடு


காலை சூரிய ராகங்களின் பிறகு சாப்பாட்டு அறையில் வீட்டிலிருந்து கொண்டு வந்த ரொட்டியைப் பிய்த்து போராடிக் கொண்டிருக்கும் நேரம், கஞ்சிபாயின் தொலைபேசி அழைப்பு..

நேற்றைய விருதுகள் - பரிந்துரைப்பு பற்றி ஏதாவது மேலதிக சந்தேகம் கேட்கப் போகிறாரோ என்று யோசித்துக்கொண்டே "ஹெலோ" சொன்னேன்...

"இண்டைக்கு சுஜாதா நினைவு தினம் தானே?" தெரிந்துகொண்டே மீண்டும் கேட்கும் அதே கஞ்சிபாய்த்தனம்.

"அதான் காலையிலேயே சொன்னேனே? ஏன்? சுஜாதா பற்றி ஏதாவது விசேஷமா விஷயம் இருக்கா?"

"சீச்சீ.. சும்மா தான்.. சாப்பிடுறீங்க போல?" 

"ம்ம்ம். பசிக் கொடுமை அய்யா. அப்புறம்?" வைக்கமாட்டாரா என்ற அங்கலாய்ப்புடனும் வாயில் மென்று கொண்டிருக்கும் ரொட்டியுடனும் நான்.

"நேற்று இரவு award functionல இருந்தபடியா விராட் கோளிட அடி பார்த்திருக்க மாட்டீங்க என்ன?"

"இல்லை கொஞ்சம் கொஞ்சம் பார்த்தேன்... செம form. அணியைத் தனிய நிண்டு தாங்குறான் போல இருக்கு""தோனி fansக்கெல்லாம் நல்ல நோண்டி என்ன? இனி கோளி தான் தொடர்ந்து கப்டன். இந்தியா இனி உருப்படும். நீங்க என்ன சொல்றீங்க?" ஸ்ரீனிவாசன் இதைக் கேட்டால் என்ன சொல்வாரோ என்றெல்லாம் யோசிக்காமலேயே கஞ்சிபாய் அள்ளிக் கொட்டிக்கொண்டிருந்தார்.

விளக்கம் சொல்லி வேலையும் இல்லை, கஞ்சிபாய் விளங்கிக் கொள்ளும் 'கிரிக்கெட் ரசிகரும்' இல்லை என்பதை விட அகோரப் பசியுடன் வாயில் இருந்து வயிற்றுக்குள் அவசரமாக தாவிக்கொண்டிருந்த ரொட்டிகள் சொல்ல விடாமல்,

"ம்ம் பார்ப்போம் பார்ப்போம் அடுத்த போட்டிகளில்" என்று சொல்லி வைத்தேன்.

"அதுசரி, கோளியோட பாகிஸ்தான்காரங்கள் ரெண்டு பேரை ஒப்பிட்டு எதோ tweet பண்ணீங்களாம்" அதே கஞ்சிபாய்த்தனம்.

"ஓமோம்.. அனேக shots, aggression, அடித்தாடுற நேரம் உறுதி, timing  எல்லாம் ஒரே மாதிரி தான் எனக்குத் தெரியுது"

"ஆனா கோளிய நெருங்க முடியாது.அடுத்த சச்சின் கோளி தான்" உறுதியாக கஞ்சிபாய் என்னை இப்போதைக்கு பசியாற்ற விடமாட்டார் என்று தெரிஞ்சு போச்சு.

"அப்பிடியா?" கஞ்சிபாயின் பதில் நீ......ளமா வாறதுக்கு இடையில் இன்னும் ரெண்டு ரொட்டித் துண்டுகளை சம்பலில் தொட்டு வயித்துக்கு அனுப்பலாம் என்று இந்தக் கொக்கி.

"பின்ன? என்ன அடி.. அசுர அடி. அவர்ட்ட battingகு கிட்ட அவனும் இல்ல. அடுத்த Mr.Cricket. லோஷன், நேற்று match பார்த்திருந்தீங்கன்னா விளங்கி இருக்கும்"

"ம்ம்ம் பார்த்தேன் சில shots. பார்த்தவரைக்கும் நேற்று கோளிட Timing சூப்பர்" உண்மையாக நேற்று ரசித்த கோளி இன்னிங்க்ஸை பாராட்டினேன்.

"அட ஆமா... அதான் அவர் அடிக்கடி கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்து பார்த்தே batting செய்துகொண்டிருந்தார்"

தொண்டைக்குள்ளிருந்த ரொட்டி சளேர் என்று நேரே வயிற்றுக்குள் விழ, காதில் சரித்து வைத்திருந்த மொபைல் சரிந்து சம்பல் அப்பிக்கொண்டது.

---- 
கஞ்சிபாய் என்பதை வேறு யாராவதாக பிரதியீடு செய்துகொண்டால் பதிவர் பொறுப்பாளியல்ல.
உருவகக் கதையாக இதை நினைத்தாலும் பதிவர் பொறுப்பெடுக்க மாட்டார்.
மனைவி சம்பலுக்கு சேர்த்த உப்பு, ரொட்டிக்கு சேர்த்த தேங்காய்ச் சொட்டு போல உண்மை சம்பவத்தில் கொஞ்சம் மேலதிக சுவை சேர்க்கப்பட்டது.


2 comments:

Vijayakanth said...

Sambal ragasiyaththa sollitteengale anna

Vijayakanth said...

One and only comment by me 😂😂

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner