April 25, 2012

கள்ளக்கணக்கு காட்டும் Facebookஉம் அதை இனி வாங்கப் போகும் நானும்


உண்மையில் Facebook மதிப்பு என்ன?
இது எங்களுக்கு எப்படித் தெரியும் என்று யாருப்பா கேட்கிறது??

Wall Street ஆய்வாளர்கள் மற்றும் தொழிநுட்ப வலைப்பதிவாளர்கள், போன்றோர் இணைந்து Instagramஐ பேஸ்புக் இணையத்தளம் உரித்தாக்குவது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகிறார்கள்.

சமீப காலங்களில் இது தொடர்பில் எழுப்பப்பட்ட மிகப்பெரிய
கேள்வி,பேஸ்புக்கின் உண்மையான மதிப்பு என்ன என்பது தான்.
(ஏதோ நானே வாங்கப் போறதுமாதிரி இது பற்றி என்னடா ஆராய்ச்சி என்று
யோசிக்காதீங்க.. பங்குச் சந்தை மற்றும் இது போன்ற (Facebook, Instagram)
நான் அன்றாடம் பயன்படுத்துகிற விஷயங்கள் பற்றி இருக்கிற ஆர்வம் தான்..)

இது தொடர்பில், New yorkன் The New York Times சஞ்சிகையின் படி,
பேஸ்புக்கின் மதிப்பு 104 பில்லியன் டொலர்களாம். Instagramன் கொள்முதல்
ஆலோசனை பற்றி Facebook ஆர்வம் காட்டியபோது உத்தியோகபூர்வமாக அறிவித்தது எழுபத்தைந்து பில்லியன் டொலர்கள் மட்டுமே. இருந்தும் பேஸ்புக்கின் உண்மையான மொத்த சொத்துப் பெறுமதி அதனைவிட இருபத்தைந்து பில்லியன் டொலர்கள்ஆவது அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.


பேஸ்புக் இந்த மாத ஆரம்பத்தில் Instagramஐக் கொள்வனவு செய்தபோது வெறும் ஒரு பில்லியன் டொலர்களுக்கு வாங்கவே தன் பெறுமதியைக்
குறைத்துக்காட்டியதாகக் கருதப்படுகிறது.
(Instagram என்றால் என்ன என்று Smartphones பயன்படுத்தும் அனேகருக்குத்
தெரிந்திருக்கும்.. முன்பு iPhoneக்கு என்று மட்டும் இருந்தது இப்போது
Android OS போன்களிலும் இயங்குகிறது.)

இந்த ஒரு பில்லியனில்,  கிட்டத்தட்ட முப்பது வீதம் பணமாகவும், எழுபது
வீதம் பங்குகளாகவும் கொடுத்துத் தீர்க்கப்படவுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தான் தம் பெறுமதியைத் தாமே குறைத்துக் காண்பித்துள்ளார்கள் Mark Zuckerbergகின் ஆட்கள்.

நூற்றுநான்கு பில்லியன் டொலர்கள் என்பது, கிட்டத்தட்ட, இரண்டாம் தரப்
பங்குச்சந்தையில் தனியார் நிறுவனங்கள் தம் பங்குகளை விற்கும் பெறுமதி என பிரபல நிதியியல் ஆய்வாளரான எவெலின் ருஸ்லி சொல்கிறார். காரணம் தனியார் நிறுவனங்கள் தமது பங்குகளை அதிக பட்சமாக நாற்பது டொலருக்கு விற்பனை செய்வது வழமை.
முன்னதாக Facebookகின் பங்குகளும் விற்கப்பட்டது இதே 40 $ க்கு தானாம்..

Instagram தொடர்பில் பேஸ்புக் நிர்ணயித்திருக்கும் இந்த 104 பில்லியன் டொலர்களுக்கும் Instagram நிர்ணயித்துள்ள எழுபத்தைந்து பில்லியன் டொலர் என்ற கொள்முதல் தொகைக்குமிடையிலுள்ள வித்தியாசமானது,
பேஸ் புக்கின் பங்குகள் நுகர்வோர் பொது வழங்குகைக்காக (IPO ) காத்திருக்கும் நேரத்தில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

எது எப்படி இருப்பினும் பேஸ்புக்கின் இராட்சத வலையமைப்பான 31 வங்கிகளும் இப்போதே கூட்டிக் கழித்து கணக்குப் போட்டு பேஸ்புக்கின் (பங்குகளின்) உண்மையான பெறுமதியைத் தீர்மானித்திருக்கும் என்பது தெளிவு.
(இது நம் போன்ற பேஸ்புக் வாடிக்கையாளரைப் பாதிக்காத வரை ஓகே தான்)
பில்லியனில் 75ஓ அல்லது 104ஓ Mark Zuckerberg அடையப்போவது மகிழ்ச்சி மட்டுமே..
ஆரம்பித்து எட்டு வருடங்களில் இப்படியொரு வளர்ச்சி என்றால் பெரிய விஷயம் தானே..

எனக்கு இப்போ இதில் தனியாக பிரத்தியேக அக்கறை வருவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு..

Facebookஐ விட, எனக்கு Instagramஇல் தனியான ஈடுபாடு உண்டு..

அந்தப் படங்களை வைத்தே ஒரு இடுகையை இட்டு, இன்னும் சில இடுகைகளுக்கான படங்களும் உள்ளன..

படம் காட்டப் போறேன்...Instagram பார்த்து ரசிக்கும் விடயங்களைப் பகிர்வதற்கும், மற்ற உலகளாவிய நண்பர்கள் பகிரும் படங்களை ரசிப்பதற்குமான ஒரு பயனுள்ள தளம்.

Facebook அதனை வாங்குவதனால் ஏதும் விரும்பத்தகாத மாற்றங்கள் வந்துவிடுமோ என்பது ஒன்று..

அடுத்தது எங்கள் புகைப்படங்களை தனியே iPhone, Androidகளில் மட்டுமில்லாமல் உலகளாவிய ரீதியில் இணையத்தளங்களில் காட்சிப்படுத்தவும், விற்கவும் வாய்ப்பை வழங்கும் ஒரு தளம் உருவாகியுள்ளது.
Instacanv.as
இது எங்கள் படங்களை ரசித்தோர் வழங்கிய வாக்குகள்/விண்ணப்பங்கள் மூலமாகவே வரிசையாக வழங்கப்பட்டன..
உங்களில் யாரோ நல்லவர்கள், வல்லவர்கள் வழங்கிய வாக்குகளால் நேற்று எனக்கான ஒரு Instacanvas Galleryயும் திறக்கப்பட்டுவிட்டது.


இப்போ ரசிகப் பெருமான்கள் நீங்கள் யாராவது என் படங்களில் பிடித்ததை விலைகொடுத்து வாங்கினால் எனக்கும் ஒரு கணிசமான தொகை சேருமாம்.. $$$$
அப்படியே அதை சேமித்து சேமித்து நானும் ஒருகாலத்தில் Instagramஐயோ ஏன் Facebookஐயோ வாங்குவேணாம் ;)

--------------------------------

இவ்வகையான பதிவுகள் எனக்குத் தனியான ஒரு திருப்தி + உங்களுக்கு மகிழ்ச்சி :)
இவையும் தொடரும்..
விரைவில் படங்களைத் 'தனி'ப் பதிவாக வலையேற்றுகிறேன்.

6 comments:

Komalan Erampamoorthy said...

அண்ணா பெருமாச்சட்டியாருடைய கதை தெரியுமோ?

Unknown said...

வாங்குவீங்களா?

Unknown said...

வாங்கபோறீங்களா?

ம.தி.சுதா said...

இந்தளவு பெறுமதியான இடத்திலயா அப்படி குழப்படி செய்கிறோம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்

Shafna said...

ஐயா லோஷம்பானி, நமக்கும் பங்கு இருக்குதுங்க...

தனிமரம் said...

அதிகம் இப்போது முகநூலில் தான் பல நண்பர்களைப்பிடிக்க முடியுது உங்கள் படம்  விரைவில் வரட்டும் லோசன் அண்ணா.நீங்க பங்கு வாங்குங்கோ நானும் விளையாட்டுச் சாமன் விற்க வாரன்!அவ்வ்வ்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner