கடந்த வருடம் ஐ போன் - Iphone 4 பயன்படுத்த ஆரம்பித்த நாளில் இருந்து பிடித்துக் கொண்ட/ பீடித்துக் கொண்ட ஒரு புதிய பொழுதுபோக்கு இந்த Instagram.
புகைப்படக் கலையில் முன்பிருந்தே ஆர்வம் இருந்தாலும், எனக்கு அதன் நுணுக்கங்கள் எல்லாம் பெரிதாகத் தெரியாது.. கற்றுக் கொள்ளும் ஆர்வமும் இருந்ததில்லை; ஆனால் எதோ நம்மிடம் உள்ள டப்பா கமெராக்களால் எனது மூஞ்சியை எடுத்த இடைவெளியில் கிடைக்கும் நேரத்தில் கொஞ்சம் இயற்கைக் காட்சிகள், வித்தியாசமான காட்சிகள் இப்படி ஏதாவது எடுத்து நானே வைத்து ரசிப்பதோடு சரி..
எனக்குத் தெரிந்த நண்பர்கள் பலர் நல்ல படப்பிடிப்பாளர்களாக இருப்பதால் ஒரு வெட்கம் வேறு..
ஆனால் இந்த Instagram என்னைப் போன்றவர்களுக்கும் சேர்த்தே இருக்கிறது. நாங்கள் எங்கள் ஐ போன்களில் எடுக்கும் போட்டோக்களை (இப்போதைக்கு ஐ போன்களில் மட்டுமே Instagram இயங்கும்படி செய்துள்ளார்கள்) இலவச, மற்றும் இலகுவாகப் பெறக்கூடிய சீராக்கிகள், மெருகூட்டிகள் (Filters + Photo Apps) மூலமாக செதுக்கி, ஒரு அழகான படமாக்கி நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள Instagram உதவுகிறது.
சும்மா எடுக்கிற படங்களே, இப்படியான சின்ன சின்ன மெருகூட்டல் மூலம் சூப்பரான படங்களாக மாறிவிடும்.. அட நான் தான் எடுத்தேனா என்று ஆச்சரியப்பட்டுப் போவதும் உண்டு...
(உண்மையாத் தான்.. நம்பலேன்னா கீழே நீங்களே பாருங்களேன்)
வெள்ளவத்தை கடற்கரையில் ஒருநாள் மாலைப் பொழுது..
இணுவிலில் எங்கள் வீட்டில் எடுத்தது..
கொழும்பு, திம்பிரிகஸ்யாய பகுதியில் உள்ள ஒரு பழைய நீர்த்தாங்கி
யாழ்ப்பாணம், பருத்தித்துறை - வல்வெட்டித்துறை கடற்கரை வீதி வழியான பயணத்தின் பொது
மதியம் சாயும் நேர வெயில்...
யாழில் நிறுவப்பட்ட புதிய சங்கிலியன் சிலை.. உயர்த்திய வாளோடு
மணற்காட்டினூடான பயணத்தின்போது மாலை சூரியன்
கொழும்பு நகர மண்டபம்..
ஒருநாள் மத்தியான வனத்தில் தெரிந்த முகிலின் வர்ணப் பொட்டு...
இன்னொரு நாள் இன்னொரு வடிவம் + வர்ணத்தில் அதே வெள்ளவத்தை கடற்கரை..
மீண்டும் வெள்ளவத்தை கடற்கரை.. அந்தி சாயும் பொழுதில்...
கடற்கரையோரம்.. காத்துக் கிடக்கும் தண்டவாளம்..
காய்கறிகளின் வர்ணக்கலவை.. எப்போதுமே எனக்கு இந்தக் கண்கவர் நிறங்கள் பிடித்தவை..
அழகிய அன்னாசி...
மழையுடன் ஒரு மாலை.. என் வீட்டு பல்கனி வழியாக
ஒரு நாள் மஞ்சள் வெயில் மாலை.. எந்தவொரு கலவையும் செய்யப்படாத இயற்கைப் படம்..
என் படுக்கை அறையின் இரவு விளக்கு..
ஒருநாள் திடீரெனக் குவிந்த கருமேகக் குவியல்... கொஞ்சம் பயங்கரமாக இல்லை?
ஹர்ஷுவின் செல்ல விளையாட்டு பன்டா :)
ஒரு சனி மதியப் பொழுதில் வானில் ஜெட் விமானம் கிழித்த கொடு...
*** இந்தப் படங்கள் எல்லாம் சும்மா போகிற போக்கில் பொழுதுபோக்காக நான் எடுத்தவை.. இதிலே கலையழகோ, கமெராத் தொழினுட்பமோ, நுணுக்கமோ இருக்காது :)
எனவே துறைசார்ந்தோர், தொழில் நுணுக்கம் அறிந்தோர் மன்னிக்கவும். குறைகள் இருப்பின் மனம் திறந்து பின்னூட்டங்களில் தெரிவிக்கவும்.
**** 'நண்பன்' விமர்சனம் எங்கே எனக் கேட்கும் அன்பு நண்பர்களுக்கு - இன்று காலையில் நான் ட்விட்டரில் சொன்னது போல.....
நண்பன் - நான் இன்னும் பார்க்கல பார்க்கல பார்க்கல
நாளை பார்க்கலாம்..
பார்க்கணும் :)