June 27, 2011

ஆன்டி பேர் டார்லிங் ????


இன்று காலை விடியலில் சொன்ன ஜோக்ஸ்....
எங்கேயாவது  கேட்டிருந்தாலோ, வாசித்திருந்தாலோ கூடப் பரவாயில்லை..
மீண்டும் சிரித்தாலும் ஒன்றும் நஷ்டம் இல்லை...



1.உங்க தாத்தாவா?

நீண்ட காலத்துக்கு முன்பு...
கஞ்சிபாயின் வகுப்பு ஆசிரியர்... "உங்க பொது அறிவை சோதிக்க ஒரு கஷ்டமான கேள்வி...
ஆழமான கடல்.. நீந்தித் தான் போகவேண்டும்..
அந்தக் கடல் நடுவில ஒரு மாமரம் அதுல இருக்கிற ருசியான மாங்காயை எப்படி பறிப்பாய்?

கஞ்சி பாய் : பறவை போல மாறி பறந்து போய் பறிப்பேன்.

ஆசிரியர் : பறவை போல உன்னை உன் தாத்தாவா மாத்துவாரு?

கஞ்சி பாய் : அப்ப கடல் நடுவில மரம் உங்க தாத்தாவா வச்சாரு?

கஞ்சி பாய் என்னிடம் அடித்த பஞ்ச் -
ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கிற அவருக்கே இவ்வளவுன்னா............, 10 பாடம் படிக்கிற எனக்கு எவ்வளவு இருக்கும்......!


2. பத்து ரூபா 

கஞ்சிபாயின் மகன் : அப்பா, எனக்கு ஒரு பத்து ரூபா வேணும்..

கஞ்சி பாய் :எதுக்கு?

கஞ்சிபாயின் மகன் : சொக்லெட் வாங்கி சாப்பிட அப்பா..

கஞ்சி பாய் : இதப் பாரு மகனே.. நான் எல்லாம் அப்பாவின் காசி இப்பிடி அநியாயமாக்கினது இல்லை. அந்தக் காலத்திலேயே ஒவ்வொரு சதமா எண்ணி, எண்ணி சிக்கனமா செலவளிச்சென் தெரியுமா? அந்தக் காலத்திலேயே எனக்கு ஒவ்வொரு சதத்தின் அருமையும் தெரிஞ்சிருந்தது.. தெரியுமா?
(இப்படியே ஒரு அரை மணி நேரம் லெக்சர் அடித்து மகனின் காதால் ரத்தம் வர்றா மாதிரி செய்த பிறகு.....)

கஞ்சிபாயின் மகன் : சரிப்பா.. இவ்வளவு நீங்க சொல்ற நேரம் நான் அப்பிடிக் கேட்டது தப்புத் தான்.. எனக்கு ஒரு ஆயிரம் சதம் தாங்களேன் ;)



விடியலில் சொல்லாத, சொல்ல விரும்பாத ஆன்டி ஜோக் ;)

ஆன்டி பேர் டார்லிங் 



கஞ்சி பாயின் மகன் : அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா?

கஞ்சி பாயின் மனைவி : ஹன்சிகா டா...

கஞ்சி பாயின் மகன் : அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேங்குதும்மா. அந்த ஆன்டியை "டார்லிங்"னு கூப்புடுறார்....



10 comments:

வந்தியத்தேவன் said...

அன்பானவர்களை டார்லிங் என அழைப்பதில் எந்த தப்புமில்லை. அது கட்டாயம் மனைவியாகவோ காதலியாகவோ இருக்கவேண்டிய அவசியமுமில்லை.

கன்கொன் || Kangon said...

ஹா ஹா ஹா ஹா....

ஆதிரை said...

எதிர்வீட்டுக்காரி,
டார்லிங்,
வந்தியத்தேவனின் பின்னூட்டம்...

ம்ம்ம்...
பொருந்திப் போகுது!!!

வந்தியத்தேவன் said...

யாருக்கு லோஷனுக்குத் தானே பொருந்துகின்றது சித்தப்பூ ;-)

ஆதிரை said...

இல்லை மாமா...

வந்தியத்தேவன் எனும் தியாகச் செம்மலுக்குத்தான்..!

ஒரு சங்கீதம் பிண்ணனியில் ராகமிசைக்க என் பின்னூட்டத்தை வாசித்துப்பாருங்கள். அப்போது புரியும்!!!

Mathuran said...

ஹா ஹா ஹா
ஜோக் எல்லாம் செமயா இருக்குது அண்ணா... சிரிப்பு தாங்கல்ல

Anonymous said...

மூன்றும் சூப்பர் ;-)

Unknown said...

ஹன்சிகா???ஹிஹி என்னுடைய பழைய...(X )

Shafna said...

ஆசிரியர்:: ரமேஷ் உனக்கு கஞ்சி பாயை தெரியுமா? ரமேஷ்:: ஆமாம் சேர். ஆசிரியர்:: அப்படின்னா அவரப் பற்றி மற்ற மாணவர்களுக்கெல்லாம் விளங்கப்படுத்து.. ரமேஷ்:: சரி சார்...அவரு நல்ல வெள்ளையா இருப்பாரு..மாதவன்,கமல் ரேஞ்சுக்கு தன்னைத்தானே கற்பனை பண்ணிக்கொண்டு ரொம்ப பீத்திக்குவாரு.ஆனா அவரு அப்டியில்ல. ப்ரேம் ஜீ அமரன் மாதிரி மொக்கையா இருப்பாரு.. ரொம்ப இல்லாட்டியும் ஓரளவு புத்திசாலி..கிழமை நாட்டளில் காலைல வெற்றி எப் எம் ல விடியல் என்கிற சூப்பர் நிகழ்ச்சி செய்து அனைவரையும் சந்தோஷப்படுத்துவாரு.. தான் ஒரு சிறந்த மொக்கைனு எப்பவுமே தற்பெருமை கொள்ளாத சிறந்த மனிதர்...எப்பூடி? ஆசிரியர்:: சூப்பர்... உங்க தாத்தாவா? ஜோக் சூப்பர்..ஆன்டி ஜோக்குக்கும் அண்ணன் லோஷனுக்கும் ஏதோ லிங்க் இருக்குறாமாரியேயீக்குதுங்க..ம்ம்..நமக்கெதுக்கு ஊர் வம்பு? ரமேஷ்:: ஆமாம் சேர். ஆசிரியர்:: அப்படின்னா அவரப் பற்றி மற்ற மாணவர்களுக்கெல்லாம் விளங்கப்படுத்து.. ரமேஷ்:: சரி சார்...அவரு நல்ல வெள்ளையா இருப்பாரு..மாதவன்,கமல் ரேஞ்சுக்கு தன்னைத்தானே கற்பனை பண்ணிக்கொண்டு ரொம்ப பீத்திக்குவாரு.ஆனா அவரு அப்டியில்ல. ப்ரேம் ஜீ அமரன் மாதிரி மொக்கையா இருப்பாரு.. ரொம்ப இல்லாட்டியும் ஓரளவு புத்திசாலி..கிழமை நாட்டளில் காலைல வெற்றி எப் எம் ல விடியல் என்கிற சூப்பர் நிகழ்ச்சி செய்து அனைவரையும் சந்தோஷப்படுத்துவாரு.. தான் ஒரு சிறந்த மொக்கைனு எப்பவுமே தற்பெருமை கொள்ளாத சிறந்த மனிதர்...எப்பூடி? ஆசிரியர்:: சூப்பர்... உங்க தாத்தாவா? ஜோக் சூப்பர்..ஆன்டி ஜோக்குக்கும் அண்ணன் லோஷனுக்கும் ஏதோ லிங்க் இருக்குறாமாரியேயீக்குதுங்க..ம்ம்..நமக்கெதுக்கு ஊர் வம்பு?

ம.தி.சுதா said...

முதலாவதை வாசிச்சுச் சிரிச்சதை விட கேட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாய் சிரித்திருப்பேனோ தெரியல....

நன்றி அண்ணா..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner