May 20, 2011

இந்துக் கல்லூரியும் இலங்கை ஜனாதிபதியும்கடந்த ஞாயிற்றுக் கிழமை, நான் கல்வி கற்ற கொழும்பு பம்பலப்பிட்டிய இந்துக்கல்லூரியின் வைர விழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெற்ற கலை கலாசார நிகழ்வுகளுக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டியது.

சிறப்பு அழைப்புக் கிடைத்தும் உள்ளே நுழைவதற்குள் கொஞ்சம் சலித்துவிட்டது.

அதிமேதகு ஜனாதிபதி பிரதம விருந்தினராக வருகை தருவதால் இறுக்கமான மிக இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள்..
வாகனத்தை தொலைவில் நிறுத்திவிட்டு, உடலில் இன்னொரு உறுப்பாகவே கடந்த சில வருடங்களாக ஒட்டியுள்ள செல்பேசியையும் உள்ளே வைத்துவிட்டுத் தான் விழா நடந்த கல்லூரி மைதானத்துக்குள் நுழைய முடிந்தது.

கல்லூரியின் விளையாட்டு அரங்கு (பவிலியன்)க்கு முன்னால் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான மேடையும், மேடைக்கு சில அடிகள் முன்னால் அமைக்கப்பட்ட தடுப்பின் பின்னால் அமைக்கப்பட்ட தற்காலிகக் கொட்டகையும் மைதானத்தின் புற்றரையை முக்கால்வாசியாவது மறைத்திருந்தன.

மைதானத்தில் நிறைந்திருந்த மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஈடாக ஜனாதிபதிக்கான பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினரும் இருந்தனர்.

தலைநகரில் அறுபது ஆண்டுகளைக் கடந்து தனித்துவத்தை இழக்காமல் ஒரு பாடசாலை தனித்தமிழ் மொழியில் (கடந்த சில வருடங்களாக ஆங்கில மொழிக் கல்வியும் உள்ளது) இயங்கி வருவது உண்மையில் பெருமைப்படக்கூடிய விஷயம் தான்.

சிற்சில சலசலப்புகள், சர்ச்சைகள் (அதிபர், அதிகார சர்ச்சை) ஆங்காங்கே கல்லூரியை இடையிடையே 'பிரபலம்' ஆக்கிக் கொண்டிருந்தாலும் கல்லூரியின் கல்வித் தரமும், வளர்ச்சியும் ஏறுமுகமாகவே இருந்துவருகிறது.

நாற்பதாவது வருடப் பூர்த்தியைக் கல்லூரி கொண்டாடியபோது தேசியப் பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டது இன்னமும் மனதிலே பசுமையாக நினைவில் உள்ளது.

அது என் கொழும்பு இந்துக் கல்லூரி வாழ்க்கையில் முதல் வருடம். அதற்கு முதலும் ஒரு இந்துக் கல்லூரி தான் எனக்குப் பாடசாலையாக இருந்தது. (யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி)

கொழும்பின் முதலாவது தமிழ்த் தேசியப் பாடசாலைக்கு இலங்கையின் அரச தலைவரின் முதல் விஜயம் என்று மேடையில் அறிவிப்பு செய்துகொண்டிருந்த அறிவிப்பாளர் மூன்று தடவையாவது சொல்லி இருப்பார். ஆனால் உண்மை அதுவல்ல..

ஜனாதிபதி ராஜபக்ச எமது பாடசாலைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாக இருக்கலாம்.

ஆனால் இலங்கையின் அரச தலைவர் இந்துக் கல்லூரிக்கு வருவது இது முதல் தடவையல்ல என்பது அங்கே இருந்த அனேக ஆசிரியருக்கும், என் போன்ற நீண்ட காலம் கல்லூரியில் கற்ற பழைய மாணவருக்கும் நன்றாகவே ஞாபகம் இருக்கக் கூடியவை.

அது 1991ஆம் வருடம்..

எம் இந்துக் கல்லூரி நாற்பதாவது அகவையைப் பூர்த்தி செய்த அந்த வருடத்தில் எம் பழைய மாணவர்கள், அபிவிருத்தி சபையினர், கொழும்பு கல்வியியலாளர்கள் பலரின் ஒன்றுபட்ட முயற்சியினாலும், அப்போதைய கல்வி ராஜாங்க அமைச்சராக இருந்த திருமதி ராஜமனோகரி புலேந்திரனின் தூண்டுதலாலுமே இந்துக் கல்லூரி கொழும்பின் முதலாவது தமிழ் தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.

அந்த ஆண்டு எனக்கு மறக்க முடியாதது.. கல்லூரியில் முதல் ஆண்டிலேயே நடந்த பரிசளிப்பு விழாவில் எட்டு பரிசுகள்..

அதுவும் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அப்போதைய ஜனாதிபதியான பிரேமதாசவின் கைகளினால்.
முதல் தடவையாக வெள்ளை முழுநீளக் கால் சட்டை அணிந்து நின்ற பெருமிதம் இருந்தாலும் மனதில் அப்போதிருந்த ஒரே ஒரு விடயம், பிரேமதாசவிடமிருந்து எனக்குப் பரிசும் சான்றிதழும் கிடைக்கக் கூடாது என்பது தான்.. ஆனால் எனது பெயர் வாசித்தபோது அவர் தான் சான்றிதழ்களைக் கொடுத்தார்..

அந்தப் பரிசளிப்பு விழா நடந்தது பவிலியனில்.. இப்போதைப் போல அவ்வளவு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கவில்லை என்றே ஞாபகம்.
எனவே தான் முன்னர் ஜனாதிபதியொருவர் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டது என்னைப் பொறுத்தவரை நன்றாகவே ஞாபகம் இருக்கிறது.

ஆனால் இரண்டு முக்கிய விஷயங்கள்..

அப்போது ரணசிங்க பிரேமதாச தமிழில் உரையாற்றவில்லை..
ஜனாதிபதி மகிந்த ஒரு தமிழ்ப் பாடசாலைக்கு செல்வது இதுவே முதல் தடவை...

கவனித்த ஒரு சில விஷயங்கள்...

ஜனாதிபதியை வரவேற்ற அவர் பாணியில் சால்வை அணிந்த சிறார்கள்..
ஆனால் பவம் அவர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொடிகளை ஆட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்.


மாலை வெயில் முகத்துக்கு அடிக்க கைகளால் அல்லது அழைப்பிழ்களால் கண்ணைக் கூசும் வெயிலை மறைத்துக் கொண்டிருந்த என் போன்ற முன் வரிசை விருந்தினர்கள்..


ஜனாதிபதியிடம் பாடசாலை, பாடசாலை சமூகம் சார்பாகக் கோரிக்கை முன்வைத்தவர்களின் அந்தக் கால ஆங்கில உச்சரிப்புக் கொஞ்சம் கடுப்பேற்றியது. இவ்வளவுக்கும் நன்றாகக் கற்றுத் தேர்ந்த புலமை வாய்ந்தவர்கள்...
அத்துடன் எல்லோருமே தனியே நீச்சல் தடாகத்தைக் கோருவதிலே குறியாக இருந்தார்கள்.

இதிலும் இந்தியாவிருத்திச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பேசும் நேரம் ஜனாதிபதியைப் புகழ்வதாக முன்னைய ஆட்சியில் பாடசாலைக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று குறைவாக சொல்லியது அவ்வளவு நாகரிகமாகப் படவில்லை.

ஜனாதிபதியின் உரையை ரசித்தேன்.. (உடனே யாராவது வந்து கும்மாதேங்கப்பா)

சிங்களத்தில் அவர் பேசப் பேச அறிவிப்பாளர் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரத்தில் ஜனாதிபதி வழமையாகவே அவர் தமிழர் மத்தியில் பேசும்போது செய்வதைப் போல,
"இங்கே நீங்கள் யாரும் சிரிக்கவில்லை என்றால் நான் எனக்குத் தெரிந்த தமிழில் பேசுகிறேன்" என்று ஆரம்பித்தார் பாருங்கள்...
"நான் இங்கே வந்ததைப் பாடசாலைக்குப் பெருமையான விஷயமாகப் பலர் சொன்னீர்கள்..

ஆனால் உண்மையில் இந்தப் பாடசாலைக்கு வந்தது எனக்குத் தான் பெருமை " என்று கரகோஷங்களை அள்ளிக் கொண்டவர், விடாமல் கஷ்டமான தமிழ் வார்த்தைகளையும் கடித்துத் துப்பி அரை மணிநேரத்துக்குக் கிட்ட சொற்பொழிவாற்றினார்.

அதிலே ரசித்த முக்கிய விடயம்.. சில தமிழ் சொற்றொடர்களை சொல்லிமுடித்து அதன் அர்த்தத்தை சிங்கள மொழியில் சொன்னது.. Tele prompterகள் முன்னால் இருந்தும் அதைத் தான் பயன்படுத்தவில்லை என்று காட்ட இந்த யுக்தியா?

ஆனால் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்திய விடயம், Diaspora என்று புலம்பெயர் தமிழர் பற்றிக் காட்டமாக ஜனாதிபதி சொன்ன சில விஷயங்கள்..

"இங்கே இருக்கும் உங்களுக்குத் தான் இந்த நாட்டின் உண்மை நிலவரங்கள் தெரியும்.. வெளிநாட்டிலிருந்து ஒரு போதும் இங்கே வராமல் இந்த நாட்டைப் பற்றிப் பேசுவோர் இங்கே வந்து பார்க்கவேண்டும்.. அவர்களில் பலருக்கு தமிழே தெரியாது... " அப்படி அண்மைக் காலத்தில் புலம் பெயர் தமிழர்களைத் தாக்கும் தன் வழமையான பிரசங்கத்தையே நடத்தி முடித்தார்.

ஆனால் ஒவ்வொரு பஞ்ச் வசனங்களுக்கும் கிடைத்த கரகோஷங்களைப் பார்த்தால் அன்றைய கூட்டம் மேலதிகமாக ஒரு ஆயிரம் வாக்குகளை மேதகுவுக்குக் கொடுக்கும் போலத் தெரியுது..
அவரது உரை முடிந்து விருதுகள் வழங்கி விடைபெற்றதுடன் பலரையும் காணவில்லை..
பாதுகாப்புகளும் வாபஸ்..

ஜனாதிபதி சென்ற பின் கலைஞர் கருணாநிதி எழுதி இசைப்புயல் இசை அமைத்த 'செம்மொழியாம்' பாடலுக்கான நடனம் ஆரம்பித்தது..
உலகத்தை நினைத்தேன் சிரிப்புத் தான் வந்தது..

கவனித்த இன்னொரு விடயம்...

அதிபர் அடுத்த நாளுடன் தான் பதவி விலகுவதை மேடையில் அறிவித்திருந்தார்.. ஒரு பிரம்மாண்ட விழாவேடுத்துத் தான் இந்த அறிவித்தல் வரும் என்பது பலரும் எதிர்பார்த்தது தான்..

ஆனால் அவர் சொல்லாமலே இன்னொருவர் அவரது இறுதி நாளாக அதிபர்  அறிவித்த நாளை விடுமுறை தினமாக இன்னொருவர் அறிவித்தது எதோ ஒன்றை சொல்வது போல் இருந்தது..

எப்போ வரும் நீச்சல் தடாகம் என்று பலர் யோசித்துக் கொண்டிருக்க, புதிய அதிபர் எப்படியிருப்பார், யார் வருவார் என்று சிலர் குழம்பிக் கொண்டிருக்க காத்திருந்த நண்பன் ஒருவனின் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் வெளுத்து வாங்குவதற்காக நான் புறப்பட்டேன்..

பி.கு - படங்கள் Facebookல் J A L A l THASS STUDIO  இருந்து எடுத்துக் கொண்டேன். நன்றிகள்..
எனது புகைப்படம் ஒன்றையும் ஏற்றாமல் விட்டதற்குக் கண்டனங்கள்.

வைர விழா சிறப்பிதழ் அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்கிறது..

19 comments:

Unknown said...

ஓஹோ..இவர் வந்திருந்தாரா அன்று??

Unknown said...

//திய அதிபர் எப்படியிருப்பார், யார் வருவார் என்று சிலர் குழம்பிக் கொண்டிருக்க காத்திருந்த நண்பன் ஒருவனின் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் வெளுத்து வாங்குவதற்காக நான் புறப்பட்டேன்..//
ஹிஹி அனு ராக்ஸ் !!!

இறக்குவானை நிர்ஷன் said...

ஜனாதிபதியின் உரை வரவேற்கத்தக்கதாக இருந்தது. தமிழர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களில் புலம்பெயர் தமிழர்கள் பற்றிச் சொல்வதற்கு அவர் மறப்பதில்லை. எனினும் அவரது உரையில் யதார்த்தமான பல்வேறு விடயங்கள் அடங்கியிருந்தன.

தன் மூன்றாவது மகனைச் சேர்ப்பதற்காக ஒரு கூலித்தொழிலாளி கெஞ்சிக் கூத்தாடியும் கேட்காமல் பல்லாயிரம் ரூபா பணத்தை கட்டாயப்படுத்தி வாங்கிக்கொண்டது இந்துக்கல்லூரி. அவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்துவிட்டு மாதாந்தம் வட்டியைக் கட்ட முடியாமல் அல்லல்படும் ஒரு ஏழைக் குடும்பத்தையும் இத்தனை பிரமாண்டத்தையும் நினைத்து ஒப்பிட்டுக்கொண்டேன்.

அதிலும் உண்மைகள் பல தெரிந்தும் தெரியாததுபோல் இருக்கும் சமூக அந்தஸ்துள்ளவர்கள் முன்வரிசையில் இருந்து சந்தோஷப்பட்டதன் பின்னணி என்னவோ தெரியவில்லை. எதுவாயினும் இனி நல்ல காலம் பிறக்க வேண்டும் என ஏழை மாணவர்களின் சார்பில் பிரார்த்திக்கிறேன்.

கன்கொன் || Kangon said...

// அதிமேதகு ஜனாதிபதி //

:-)))


//ஜனாதிபதியின் உரையை ரசித்தேன்.. //

2015 நம்ம கையில... சந்திப்போன்டா தோழா நாம பாராளுமன்றத்தில. :P


// "இங்கே இருக்கும் உங்களுக்குத் தான் இந்த நாட்டின் உண்மை நிலவரங்கள் தெரியும்.. வெளிநாட்டிலிருந்து ஒரு போதும் இங்கே வராமல் இந்த நாட்டைப் பற்றிப் பேசுவோர் இங்கே வந்து பார்க்கவேண்டும்.. அவர்களில் பலருக்கு தமிழே தெரியாது... " //

உண்மைகள் பலருக்கு உறைக்கும்.
இங்கும் உறைக்கும். ;-)


// முகப்புத்தகத்தில் //

நீங்களுமா!!!


பதிவு சம்பந்தமா,
ஜனாதிபதியின் இப்படியான விடயங்களின் இரசிகன் நான். நல்லது நடந்தாச் சரி. :-)

அனுகோபன் said...

உலகத்தை நினைத்தேன் சிரிப்புத் தான் வந்தது........

முதல் தடவையாக வெள்ளை முழுநீளக் கால் சட்டை அணிந்து நின்ற பெருமிதம் இருந்தாலும் மனதில் அப்போதிருந்த ஒரே ஒரு விடயம், பிரேமதாசவிடமிருந்து எனக்குப் பரிசும் சான்றிதழும் கிடைக்கக் கூடாது என்பது தான்..


அவர் சொல்லாமலே இன்னொருவர் அவரது இறுதி நாளாக அதிபர் அறிவித்த நாளை விடுமுறை தினமாக இன்னொருவர் அறிவித்தது எதோ ஒன்றை சொல்வது போல் இருந்தது..

Anonymous said...

கல்லுாரி வரலர்றறில் ஒரு கறை. இனத்தை அழித்தவரை வரவேற்று உபசரித்தது பழைய மாணவன் என்ற ரீதியில் அவமானப்பட்டு நிற்கின்றேன். தமிழனத்தை இனவழிப்புச்செய்த ஒரு இன வெறியனை கல்லூரிக்குள் விட்டதே அவமானம். உலகநாடுகள் இனவழிப்புக் குற்றம் செய்தவர் என்று அடையாளப்படுத்தி உள்ள ஒருவரை அந்த இனமே பூரண கும்ப வரவேற்பை அழித்தது இனத்தை நேசிக்கும எவருமே ஏற்றுக் கொள்ள முடியாத களங்கம்.

Anonymous said...

////பிரேமதாசவிடமிருந்து எனக்குப் பரிசும் சான்றிதழும் கிடைக்கக் கூடாது என்பது தான்.//// .......))

Unknown said...

இந்துக்கல்லூரி பெருமை அடைந்ததா ஜனாதிபதி வருகையால் ...........உங்களுக்கும் அதிபருக்கும் எதோ கறார் போல

Anonymous said...

கல்லுரி வரலாற்றில் ஜனாதிபதி கலந்து கொண்டது பற்றிய ஒரு சிறப்பான பதிவு. நன்றி.

//ஜனாதிபதி பிரதம விருந்தினராக வருகை தருவதால் இறுக்கமான மிக இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள்.// வன்னியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தின் போது என்ன நடந்தது என்று விசாரித்தால் தெரியும் இது இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுதானா என்று.

Vijayakanth said...

நம்ம ஸ்கூல் ல ஜனாதிபதி கட்டிடம்னு ஒரு கட்டிடம் இருக்கிறது அந்த அறிவிப்பாளருக்கு தெரியல போல.....
பிரேமதாசா வந்து தான் அந்த கட்டிடத்தையே திறந்து வைச்சார் :)

HajasreeN said...

நானும் வர ட்ரை பணினேன் பட் முடியாம போயிட்டு நீங்க படம் எடுக்கலையா?

anuthinan said...

நீண்ட நாட்களுக்கு பின்பு இப்போதுதான் பதிவு ஒன்றுக்கு கமெண்ட் போடுகிறேன்..!!!

ஜனாதிபதி வந்தார்.. போனார் என்று சொன்னார்கள்

//"இங்கே நீங்கள் யாரும் சிரிக்கவில்லை என்றால் நான் எனக்குத் தெரிந்த தமிழில் பேசுகிறேன்"//

எங்களை பார்த்து நாங்களே அடிக்கடி சிறிது கொள்ளுவாம்...! பிறகு எப்படி அண்ணே அவரை பார்த்து சிரிக்கிறது??

//"இங்கே இருக்கும் உங்களுக்குத் தான் இந்த நாட்டின் உண்மை நிலவரங்கள் தெரியும்.. வெளிநாட்டிலிருந்து ஒரு போதும் இங்கே வராமல் இந்த நாட்டைப் பற்றிப் பேசுவோர் இங்கே வந்து பார்க்கவேண்டும்.. அவர்களில் பலருக்கு தமிழே தெரியாது... " //

ஏதோ சொல்லி இருக்கிறார் ஆனா, எனக்கு புரியல!!!! புரிபவர்களுக்கு புரியும் எண்டு மட்டும் நினைக்கிறேன்.

// காத்திருந்த நண்பன் ஒருவனின் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் வெளுத்து வாங்குவதற்காக நான் புறப்பட்டேன்..//

சின்ன திருத்தம் போட்டு கொடுத்து, தட்டி கொடுத்து வெளுத்து வாங்க... என்று மாற்றலாம்!!!!!

Anonymous said...

பிள்ளைகளை ஜனாதிபதி போல சால்வையுடுத்தி நிற்க வைத்ததெல்லாம் “வால்பிடிக்கும்” சிலரின் வேண்டாத வேலை.

இங்கு ஜனாதிபதியின் வருகை பற்றி எதிர்மறையான கருத்துச் சொல்பவர்கள் ஒன்றை யோசிக்க வேண்டும், தனிமனிதனான “மஹிந்த” விழாவுக்கு அழைக்கப்படவில்லை, தேசத்தின் தலைவரே அழைக்கப்பட்டார். ஒரு பாடசாலைக்கு தேசத்தின் தலைவர் வருவது அந்தப் பாடசாலைக்குப் பெருமையான விஷயம் தான்.

இந்துக் கல்லூரிக்குள் நிறையப் பிரச்சினைகள் இருக்கிறது கவலைக்குரியது ஆனாலும் தலைநகரில் தலைசிறந்த தமிழ்ப்பாடசாலை அறுபது ஆண்டுகளைப் பூர்த்தி செய்வது பெருமையான விடயமே.

வந்தியத்தேவன் said...

என் வருகையையும் பதிவு செய்துகொள்கின்றேன்.
பிரேமதாசா அவர்கள் இந்துக் கல்லூரிக்கு வருகை தந்தமை எனக்கும் ஞாபகம்.
ஆனாலும் ஒரு அதிபரின் காலத்தில் மாணவர்களிடம் பணத்தை கொள்ளையடித்ததும் இதே கல்லூரிதான். இந்துவின் மைந்தர்கள் இதனையும் சீர்திருத்தினால் தலைநகரில் கோலோச்சலாம்.

N.சுரேஷ் said...

"ஜனாதிபதியை வரவேற்ற அவர் பாணியில் சால்வை அணிந்த சிறார்கள்..""

இப்படிதான் வரவேற்கவேண்டும் என்று உத்தரவு ஏதும் இடப்பட்டிருந்ததா??

பாடசாலையின் முக்கிய நிகழ்வில்,சீருடை இல்லாமல்...

ஆகவே வரவேற்ற மாணவர்களும் வசதி படைத்தவராக இருந்திருக்க வேண்டும்..இங்கேயும் எழை மாணவர்கள் புறக்கணிப்பு எற்றுக்கொள்ள கூடியதொன்றல்ல...

maadhumai said...

Hi Loshan,

(If this feedback poses any problamatic issues, you can aviod this to be posted)

I ve been reading your posts regularly. When we were studying in uni we used to listen your programme in Shakthi. Then often we came across your name in the media world. Now you are well known by your blog and which speaks various subjects and mostly giving true justifications.

But this post and the feedbacks were careless and confused. I am having only one humble opinion as I am afterall a very normal person who can't make a change to Tamils in Sri Lanka.

I think the impact this post made is negative which did not give a fine image about the school and and the management (of course, the boys from that school are brilliant). Words about Mahinda were dramatized gave a confusion that it came from a clear honest estimation. If that so, God can only help Tamils....We dont have a gut to critisize DMK, Jeyalalitha on her staement about war, Asin, Thiruma, ect.

But, there is a ground not to critisize the post as you are a media person who are in Srilanka. If I made any unnecesary comments pl skip those. We are fans of your simple and humble posts.

But some of those feed backs:
'Careless shepherd make excellent dinner for wolf'....

கார்த்தி said...

அந்த பாடசாலை நிச்சயமாக பாவம் செய்திருக்கவேண்டும் இல்லாவிடில் இப்பிடியொருவர் அந்த மேன்மையான பாடசாலையில் ......................

Anonymous said...

பாடசாலைக்கு நாட்டின் தலைவர் என்ற ரீதியில் மகிந்த அவர்களை அழைத்திருப்பது ஏதும் பிழையாக நான் நினைக்கவில்லை.

நிரூஜா said...

:)

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner