நன்றிகள் நண்பர்களே..

ARV Loshan
24

இது பதிவு அல்ல.. நன்றி சொல்லும் ஒரு தகவல் மட்டுமே..

அடியேன் இந்த உலகத்துக்கு கொண்டு வரப்பட்ட (பிறந்த தினத்தைத் தான் கொஞ்சம் வித்தியாசமா சொன்னேன்) தினத்துக்கு பல நண்பர்கள் வாழ்த்து சொல்லி இருந்தார்கள்..

தனிப்பட்ட முறையில் தொலைபேசி அழைப்புக்கள், குறுந்தகவல்,மின்னஞ்சல், Facebook மூலமாக வாழ்த்து சொல்லி இருந்தார்கள்.. வானொலி நிகழ்ச்சிகளில் பலர் தங்கள் அன்பை வாழ்த்து மூலமாக வெளிப்படுத்தி இருந்தார்கள்..

அவர்களில் ஒரு சிலருக்கே நான் நன்றிகளை சொல்லி இருந்தேன்..

பல அன்பர்கள் எனது பதிவுகளின் பின்னூட்டங்களிலும் வாழ்த்து சொல்லி இருந்தார்கள்..

தனித்தனியாக சொல்ல முடியாவிட்டாலும், நன்றிகள் அவர்கள் அனைவருக்கும்.


இது மட்டுமன்றி பூசரம் வலைத் திரட்டியும் வாழ்த்து ஒன்றை வெளியிட்டிருந்தது.

நான் கடந்த ஒரு சில நாட்களாக இணையப் பக்கம் அதிக நேரம் மேயாமல் போனதால் பதிவுகளையும் பெரிதாகப் பார்க்கக் கிடைக்கவில்லை.. என்னுடைய மின்னஞ்சல்களை மட்டும் கிடைத்த நேரத்தில் பார்த்து சிலவற்றுக்கு பதில் அளித்ததுடன் சரி..

காரணம் வீடு மாறி இருந்தேன்..

கல்யாணம் செய்து பார்;வீட்டைக் கட்டிப் பார் என்று யாரோ சொல்லி வைத்தார்கள்.. அவர் யாரென்று தெரிந்தால் அவருக்கு சொல்ல வேண்டும்..
"வீடு மாறிப் பார்" என்று.

தனியாக இருந்த நான்,மனைவி,மகன் கடந்த நவம்பரில் இடம்பெற்ற அந்த சம்பவத்துடன் அம்மா,அப்பாவுடன் சேர்ந்து குடியேறி இருந்தோம்.. மீண்டும் எங்கள் வீட்டில் தனியே இருக்கலாம் என்று முடிவெடுத்து வீடு மாறுவதற்குள் போதும்,போதும் என்றாகி விட்டது..

இவ்வளவுக்கும் பெரிதாகப் பொருள்,பண்டங்கள் என்று இல்லை.. எங்கள் வீடும், அப்பா,அம்மாவின் வீடும் இருப்பது பக்கத்திலே.. என்னுடைய வாகனத்திலே ஏற்றி நானும்,மனைவியும்,தம்பியும் சேர்ந்து பொருட்களை மாற்றி விட்டோம்..

இப்போது அப்பாடா என்று இருந்தாலும், மாற்றி,மாறி முடிப்பதற்குள் போதுமடா சாமி என்றாகி விட்டது..

இதனால் தான் நன்றிகள் சொல்லத் தாமதம் என்பதை தெளிவாகவே சொல்லி விட்டேன்.. :)

முக்கியமாக இன்னொரு நன்றியறிவித்தல் சொல்லியே ஆக வேண்டும்..

தம்பி சுபாங்கனுக்கும் அவரது ஐந்தறைப்பெட்டிக்கும்..

என் மேல் உள்ள மிகுதியான அன்பினால் வாழ்த்தி தனியொரு பதிவே இட்டிருக்கிறார்..

அதிலே அதிகமாகவே பாராட்டி திக்கு முக்காட செய்து விட்டார்..
பின்னூட்டங்கள் மூலமாக வாழ்த்தி உள்ள நண்பர்கள், பல சிரேஷ்ட பதிவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..

நான் பொதுவாகவே எதையும் கொண்டாடுவதில்லை.. என் பிறந்த நாளையும் கூட..
எனினும் நண்பர்களை மகிழ்விக்கவும்,(ட்ரீட் குடுக்கலேனா விடவா போறாங்க?) வீட்டாரை சந்தோஷப்படுத்தவும் ஏதாவது சிறிதா செய்வது வழக்கம்..
ஒவ்வொரு நாளுமே சோகத்தால் வாடும் பலர் இருக்கையில் பண்டிகைஎன்ன, கொண்டாட்டமென்ன என்று மனம் எப்போதோ இந்த கொண்டாட்டங்களின் மீது வெறுப்புக் கொண்டுவிட்டது. (முன்பும் பல பதிவுகளில் இது பற்றி சொல்லி இருக்கிறேன்)

ஆனால் வாழ்த்து சொல்லும்போது நன்றி சொல்லாமல் இருப்பது நல்லதில்லையே.. ;)

(நானே வயசு 22 இல இருந்து 23 ஆகுது என்று கவலையில் இருக்கிறேன்.. இதுக்குள்ள வாழ்த்தால சந்தொஷப்படுறதாவது.. அப்பிடின்னும் மனசு அழுது)

உங்கள் அன்புக்கு மனமார்ந்த நன்றிகள்..

நான் அடிக்கடி வேடிக்கைக்கு சொல்வது போல ஜூன் மாதம் முதல் வாரம் முழுவதும் பிரபலங்கள் பிறந்த மாதம்..

ஜூன் 1 நடிகர் மாதவன்

ஜூன் 2 இசைஞானி இளையராஜா, இயக்குனர் மணிரத்னம்

ஜூன் 3 கலைஞர் கருணாநிதி

ஜூன் 4 பாடகர் பாடும் நிலா பாலசுப்ரமணியம், அனில் அம்பானி

இவர்களோடு சேர்த்து மற்றவர்களால் கொண்டாடப்படும் அளவுக்கு உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதே உங்களைப் பெற்றவர்களுக்கும்,உங்களை வாழ்த்துவோருக்கும் நீங்கள் செய்யும் மிகப்பெரிய கைம்மாறாக இருக்கும் என என்னை சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நேயர் வாழ்த்தியது இன்னமும் மனதில் இருக்கிறது.

இதுவே என் என்னப்பாங்கும் கூட.. எம் பிறந்த நாளை நாம் கொண்டாடி மகிழ்வதில் அர்த்தம் என்ன.. நண்பர்களும்,மற்றவர்களும் எம்மை நினைவில் நிறுத்தி மகிழும் அளவுக்கு வாழ்ந்து காட்டவேண்டும்.


வாழ்த்தியவர்களுக்கு மீண்டும் நன்றிகளோடு, இன்று பிறந்த நாள் கொண்டாடும் நண்பர் சங்கீத்துக்கு (என் வலைப்பதிவின் நல்ல விமர்சகர், எனக்கு என் வலைப்பதிவை புதுப்பிக்க உதவியவர்;மீண்டும் நான் என்னுடைய டெம்ப்ளேட் மாற்றும்போது உதவ இருப்பவர்) வாழ்த்துக்கள்..



பி.கு - கிரிக்கெட்டில் இவ்வளவு திருவிழாக்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையிலும் பதிவுகள் ஒன்றுமே இல்லையா என்று மடல்கள் அனுப்பிய நண்பர்களே, என்னுடைய 'பிசி' வேலைகள் கொஞ்சம் முடிந்திருப்பதால் நாளையில் இருந்து வழக்கமான வேகத்தில் பதிவுகள் வரும் என்று உறுதியளிக்கிறேன்.










Post a Comment

24Comments

Please Select Embedded Mode To show the Comment System.*