மதமும் மண்ணாங்கட்டியும்..

ARV Loshan
84

ஞாயிற்றுக்கிழமை எனக்கு ஒரு sms வந்தது.

GREAT NEWS :

The Lion of Cricket game "Brian Lara" accepts Islam by the hands of Tableeghi Jamat under Junaid Jamshed & Saeed Anwer.

"ALLAHU AKBAR"

உலகப் பிரபல கிரிக்கெட் வீரர் பிரயன் லாரா இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார். அல்லாவுக்கு வெற்றி எனப் பொருள்படும் தகவலே அது.

பொதுவாக சமயங்களில் பெரிதாக ஈடுபாடில்லாத எனக்கு, இது போன்ற சமயம் பரப்பும், சமயங்களைத் திணிக்கிற, என் மதமே பெரிது, 7 பேருக்கு அனுப்பு என்று வருகிற smsகளைப் பார்த்தாலே கோபமும் எரிச்சலும் பற்றிக்கொண்டு வரும்.(sms மட்டுமல்ல கடிதம்,துண்டுப் பிரசுரம் வந்தாலும் கூடத்தான்)

இதே smsஐ ஒரு இந்துவோ, கிறிஸ்துவோ அனுப்பியிருந்தாலும் கூட இதேயளவு எரிச்சல் எனக்கு ஏற்பட்டிருக்கும்.

இதிலென்ன சிறப்பு/அதிசயம் இருக்கிறது? இஸ்லாம் மதத்துக்கு லாரா மாறியதால் அவரது முன்னைய சமயத்தவர் வருத்தமடையமாட்டார்களா என்று பதிலனுப்பினேன்.

அந்த நண்பர் அதற்கு 'இஸ்லாமுக்கு இது ஒரு வெற்றி தான்! இஸ்லாம் சமயத்தவருக்கு எதிராக உலகில் இடம்பெறும் மேற்குலக சதிகளுக்கெதிராக இப்படிப்பட்ட வெற்றிகள் முக்கியமே..... நீல் ஆம்ஸ்ரோங் கூட சந்திரனுக்குப் போய் வந்த பிறகு இஸ்லாமியரானார். அதை மேற்குலக ஊடகங்கள் மறைத்துவிட்டன.' என்று பதில் அனுப்பியிருந்தார்.

அத்தோடு அவர் விட்டிருந்தால் பரவாயில்லை. நேற்றுக் காலை நான் வானொலியில் நிகழ்ச்சி செய்யும் போதும் எனது நிகழ்ச்சிக்கு 2, 3 smsகளை (அதே Great News) அனுப்பி வைத்தார்.

அதில் என்ன இன்பமோ?
நான் அவற்றைப் பொருட்படுத்தவில்லை.

ஒருவர் மதம்விட்டு மதம் மாறுவது பெரிய வெற்றியா?

ஒருவரது மனதை மாற்றுவதே கடினமானதே தவிர மதம் மாற்றுவது அல்ல!

மீண்டும் நாடு காண் பயணங்களின் மதம் பரப்பும் காலத்துக்குள் நுழைகிறோமோ?

லாரா சமயம் மாறியது பற்றி வேறெங்கிலும் எந்த செய்திகளையும் நான் பார்க்கவில்லை.
உண்மை, பொய்களை தேடிப் பார்க்கவும் எனக்கு இது ஒன்றும் பெரிய விஷயமாக இருக்கவில்லை..

யாரோ ஒருவன் என்ன காரணத்துக்காகவோ சமயம் மாறினால் அது அந்த சமயத்தின் வெற்றி என்று வெறியோடு கொண்டாடுவதில் என்ன பயனுள்ளது என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை..

யாராவது என் மனதில் பட்ட இந்தக் கருத்துக்களை இங்கே வெளிப்படையாக சொல்வதால் மனம் புண்பட்டால் மன்னித்து விடுங்கள்.. மதங்களை விட நான் மனிதர்கள் பார்த்தே பழகிப் பழக்கப்பட்டவன்.

மதவெறி, பரப்புரைகள்,மதமாற்றங்கள் ஏற்கனவே விதைத்துள்ள விஷ விருட்சங்கள் போதாதா?

இன்னும் மதமாற்றங்கள் மாறல்களைக் கொண்டாடப் போகிறோமா?

கவலைப்படவும், கோபப்படவும் உலகில் எத்தனையோ பல முக்கியமான விடயங்கள் இருக்கும் நேரம் இதெல்லாம் மயிராச்சு..

அவரவர் விரும்பிய பாதையைத் தேர்ந்தெடுக்கட்டும்....

அதைக் கொண்டாடவும் வேண்டாம்.. கொலை வெறியுடன் துரத்தவும் வேண்டாம்!

இது 21ம் நூற்றாண்டு.... இன்னமும் மதங்களை வைத்துக்கொண்டு மலிவான விளையாட்டுக்கள் வேண்டாம்!

மதமும் மண்ணாங்கட்டியும்..
போங்கடா போய் மனிதர்களைப் பாருங்கள் முதலில்..




Post a Comment

84Comments

Please Select Embedded Mode To show the Comment System.*