நேபாளத்தில் நாளை முதல் நடைபெறவுள்ள தெற்காசிய 18 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து தொடருக்கான இலங்கை அணியில் 20 பேரில் 13 பேர் தமிழ்பேசும் வீரர்கள்.
வடக்கு, கிழக்கு, மலையகத்தைச் சேர்ந்த வீரர்கள் பாடசாலைகள் மூலமாகவும், கழகங்கள் மூலமாகவும் அவர்கள் காட்டிய திறமையின் அடிப்படையில் தேசிய அணிக்குள் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள்.
இதிலே யாழ்ப்பாணம் இளவாலை புனித ஹென்றி கல்லூரியின் இரு மாணவர்களும், முதல் தடவையாக கிளிநொச்சியில் இருந்து தேனுஷன் என்ற மாணவனும் தெரிவாகியுள்ளார்கள்.
இலங்கை 18 வயதுக்குட்பட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் தேசிய வீரர் M.M.அமானுல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை - இந்தியா, பங்களாதேஷ் அடங்கிய பிரிவில் விளையாடவுள்ளது.
அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விபரங்கள்.
தம்பிமாருக்கு வென்று வர அன்பான வாழ்த்துகள்
தம்பிமாருக்கு வென்று வர அன்பான வாழ்த்துகள்