May 13, 2012

விடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சியும், ஒருவார IPL அலசலும் விக்கிரமாதித்த விளையாட்டும் - ஒலி இடுகை


மீண்டும் ஒரு ஒலிப் பதிவு..
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற V for வெற்றி, V for விளையாட்டு நிகழ்ச்சியின் ஒலிப் பகுதிகளை இடுகையாக இங்கே தருகிறேன்.

இந்த நிகழ்ச்சி ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைகிறது.
காரணம் நாளை (திங்கள்) முதல் எமது வெற்றி FM இல் இடம்பெறுகின்ற நிகழ்ச்சி மாற்றங்களின் காரணமாக இந்த நிகழ்ச்சி தற்காலிகமாக விடைபெறவுள்ளது. 

இரு வருடங்களாக இந்த நிகழ்ச்சி விளையாட்டுப் பிரியர்களுக்குப் பிடித்த ஒரு தொகுப்பு, விவாத, அலசல் நிகழ்ச்சியாக அமைந்திருதது.
ஒன்று இருக்கும்போது அதன் அருமை தெரியாது என்று சொல்வார்களே,.. அதே போல இந்நிகழ்ச்சியும் இனி இல்லாமல் போனபிறகு வரும் "எங்கே இந்நிகழ்ச்சி?" "மீண்டும் V for வெற்றி, V for விளையாட்டு வராதா?" போன்ற கேள்விகள் தான் இந்த நிகழ்ச்சி பெற்றிருந்த வரவேற்பை அறியக்கூடிய அளவீடாக இருக்கும்.

இந்த வேளையில் இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மத்தியில் வரவேற்பு பெறுவதற்குக் காரணமாக இருந்த சிலரை நன்றியுடன் ஞாபகப்படுத்தியே ஆகவேண்டும்..

"நீங்கள் உங்கள் ஒலிபரப்பின் ஆரம்பகாலத்தில் செய்த நிகழ்ச்சி போலே ஒன்று வெற்றியில் செய்தால் என்ன ?" என்று தூண்டிய ஹிஷாம், ஒலிபரப்பு + தயாரிப்பில் முன்பிருந்து துணை வந்த சீலன், ஷமீல், மது(ரன்) ஆகியோரோடு முன்பு நிகழ்ச்சியில் என்னுடன் கலந்துரையாடல்களில் ஆக்கபூர்வமாக இணைந்து நிகழ்ச்சியை முழுமைப்படுத்திய விமல், கோபிக்ருஷ்ணா (சங்கக்காரவின் லோர்ட்ஸ் உரை தமிழ்ப்படுத்தலை எங்கள் நேயர்கள் அவ்வளவு இலகுவில் மறந்திடுவார்களா?) ஆகியோரை நேயர்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்.



இந்த இறுதி நிகழ்ச்சியின் முதல் மூன்று பாகங்களும் கடந்த வார போட்டிகளை அலசுகிறது.
நான்காவதும் இறுதியுமான பகுதி மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தானிய அணியின் தலைமைப் பதவியிலிருந்து விலகியமை & மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சென்று என்ன செய்யப் போகிறது என்பவற்றை சுருக்கமாக ஆராய்கிறது.

கேட்டு விமர்சனம் தாருங்கள்.

பகுதி 1





பகுதி 2



பகுதி 3




பகுதி 4




ஹ்ம்ம்ம்.. அடுத்த வாரம் இதே போன்ற ஒலி இடுகை தருவது இலகுவாக அமையாது போல இருக்கே..
ஆனாலும் சுற்றுக்கள் நெருங்கி வருவதால் பற்றிய ஒரு அலசலைத் தந்தே ஆகவேண்டும் என்று நினைக்கிறேன்..

இன்றைய IPL போட்டிகளை விட, இங்கிலாந்தின் ப்ரீமியர் லீக் (EPL) கால்பந்தாட்டப் போட்டிகளின் முக்கியமான இரு போட்டிகளை அலைவரிசைகளை மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டே இவ்விடுகையை இடுகிறேன்.

ஏராளம் செலவழித்து கடுமையான முயற்சிகளை எடுத்து சிறப்பாகவும் விளையாடிவரும் Manchester City அணிக்கு முற்கூட்டிய வாழ்த்துக்கள்..

Sunderlandஐ Manchester United வெல்லும் என்றாலும், QPRஇடம் Manchester City தோற்காது என்ற ஒரு அசாத்தியமான நம்பிக்கை தான்..

விக்கிரமாதித்தன் விளையாடாமல் இருக்கட்டும்.


ஆகா.. இடுகையை ஏற்றுகிற நேரம் நம்ம விக்கிரமாதித்தர் விளையாட்டைக் காட்டிட்டார் போல கிடக்கே.. ஒரு பக்கம் நம்ம அபிமான அணி New Castle United தோற்றுக்கொண்டிருக்க, மறுபக்கம் Manchester City தோற்கிறது.. Manchester United வெல்கிறது.. ஹ்ம்ம்ம் 



4 comments:

Riyas said...

நல்லதொரு தொகுப்பு லோஷன்..

இது போன்ற ஒலி இடுகைகளை தொடர்ந்து பதிவிடுங்கள்..

வெற்றியின் விளையாட்டு நிகழ்ச்சிகளை தவறவிடும் எங்களை போன்ற வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு உள்ளூரிலிருந்து நிகழ்ச்சி கேட்பது போன்ற உணர்வைத்தருகிறது..

மேற்கத்திய தீவுகள் அணி விடயத்தில் நீங்கள் கூறியது மிகச்சரியே.. உலகில் மிகச்சிறந்த T20 வீரர்கள் பலரைக்கொண்டுள்ள அணி மிக மோசமாக தோற்பது ஏன்.. வேறு அணிகளுக்காக விளையாடும் போது மட்டும் உயிரைக்கொடுத்து விளையாடுகிறார்கள்,, தன் சொந்த அணிக்காக விளையாடும் போது அந்த ஈடுபாடு அவர்களிடமில்லை.. இதற்கெல்லாம் முக்கிய காரணம் அணிக்குள் ஒற்றுமை இல்லை.. இதற்கு வீரர்கள் மட்டுமல்ல கிரிக்கெட் சபையும் பொறுப்புக்கூற வேண்டும்..

Shanojan.A said...

அருமையான பதிவு அண்ணா.. நீங்கள் சொனன்து போலவே V for Vettri V for Vilayattu நிகழ்ச்சியை இழப்பது கவலைதான்...




தகவல் தொழில்நுட்பத்தின் புதிய பரிணாமங்களை தமிழில் தரும் எனது வலைப்பதிவு www.itcornerlk.blogspot.com

கன்கொன் || Kangon said...

பதிவுகளை வாசிப்பது முற்றுமுழுதாத இல்லாது போய்விட்டதன் காரணமாக இதனைக் கவனித்திருக்கவில்லை.
நண்பர் ஒருவர் என்னிடம் இதைப் பகிர்ந்திருந்தார்.

என்னையும் இதில் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி.

பொதுவாக வானொலிகள் கேட்பது குறைவாயினும், இலங்கையில் தமிழ் வானொலிகளில் விளையாட்டுக் கலந்துரையாடல்களுக்காகக் காணப்பட்ட ஒரே நிகழ்ச்சி என்று நம்புகிறேன்.

இந்த விடைபெறல் தற்காலிகமானதாகவே அமையட்டும்.

நன்றி.

priyamudanprabu said...

WHICH TEAMS WILL BE IN SEMI ?

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner