கடந்த ஒரு மாதத்திய ட்வீட்களின் தொகுப்பு...
பெரிதாக விசேடம் இல்லாவிட்டாலும் ஏனோ இந்தப் பாடல் முன்பிருந்தே பிடிச்சிருக்கு ;p
2/2 கோவக்காரப் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பதாலோ? ;) கோவக்காரக் கிளியே - வேல்
ஆரிரரோ.. தந்தையின் தாலாட்டு -தெய்வத் திருமகள் ஹரிச்சரண் இதுவரை பாடிய பாடல்களில் மற்றொரு முத்து :) முத்துக்குமாரின் வரிகள் உருகவைக்கின்றன
அண்ணனும் தம்பியும் விட்டுக் கொடுக்காமல் வஞ்சனையில்லாமல் வாங்கிக்கட்டுகிறார்கள்.. #engvind #slvaus
இணையத்தில் தமிழை ஏற்றப் படாதபாடு பாடும் ஒரு அர்ப்பணிப்புள்ள கூட்டம்.. இன்னொரு கூட்டம் விஜயையும் அஜித்தையும் வைத்து /மொழிபெயர்த்து' படுத்துதுகள்..
என்ன பாவம் செய்துதோ கூகிளும் தமிழும்
#googleTranslate
முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன என்று சொல்லும் Zee Tamizh இறுதிப் போரில் இந்தியா இலங்கை ராணுவத்துக்கு செய்த உதவிகள் பற்றி மூச்சே விடவில்லை
நடக்க முடியாத நாக்கிளிப் புழு எல்லாத்தையும் நக்கிப் பார்க்குமாம்..
அணையப் போகும் விளக்கு கடைசி நேரத்தில் பிரகாசமாகக் கொஞ்ச நேரம் எரியுமாம் ;) Praveen & MSD partnership - INDIA s losing match,series & No.1
வெயிலுடன் மழை. வாகனத்தில் பயணிக்க நல்லாத் தான் இருக்கு, பாவம் குடையும் அற்ற பாதசாரிகள்
நிறைவாக உணர்கிறேன். பாராட்டுக்களால் மட்டுமல்ல சொல்லவேண்டியதை சரியாக சொல்லிமுடித்தேன் என்பதாலும். தயார்ப்படுத்தல் தக்கபலன் தரும்.
பூரித்து இருப்பதால் தான் பூரி என்று பெயர் வந்ததோ? #சாப்பாட்டுமேசை #சந்தேகம்
தண்ணி அடிங்கப்பா - மகனின் மழலை. வீதியோரத்தில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை வாகன சக்கரத்தினால் விசிறி அடிப்பதை ஜன்னலோர சீட்டில் ரசிக்கிறான்.
2/2 கோவக்காரப் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பதாலோ? ;) கோவக்காரக் கிளியே - வேல்
ஆரிரரோ.. தந்தையின் தாலாட்டு -தெய்வத் திருமகள் ஹரிச்சரண் இதுவரை பாடிய பாடல்களில் மற்றொரு முத்து :) முத்துக்குமாரின் வரிகள் உருகவைக்கின்றன
வெள்ளைக்கரப்பான் என்று சொன்னவனேல்லாம் 'தலைவி' என்று சொலும் காலம்..யூத்து என்று காட்ட எப்படியெல்லாம் கஷ்டப்படவேண்டி இருக்கு ;)
-தன்னை யூத் என்று காட்டிக்கொள்ள தமன்னா ரசிகராக மாறிய மாமா ஒருவருக்கு ;)
பாடல் கொஞ்சம் பழசாப் போனாலும், எப்போது கேட்டாலும் ஒரு உற்சாகம் மனசுக்குள் துள்ளும் :) அடடா - சந்தோஷ் சுப்பிரமணியம் #vidiyal
தைரியமுள்ளவனுக்குத் தான் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை - ரௌத்திரம் படத்தில் பிடித்த வசனங்களில் ஒன்று
வெயில் நாட்களில் கேட்கும்போதே மனதில் மழைகொண்டுவரும் பாடல்.. இப்போது மழை கொட்டும் நாழி.. வாவ்.. மனதுள்ளேயும் அடை மழை. #நீ கோரினால் - 180
ஆசையாய் பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும் நேரம் 5 மௌன அழைப்புக்கள். ஹெலோ சொன்னால் சத்தம் மறுமுனையில் இல்லை. கடுப்பேத்திறாங்க யுவர் ஆனர்.
அவசரகாலச் சட்டம் நீக்கியாச்சு.. அடுத்து இனி? எது சேரும், எது நீங்கும்? எது காணாமல் போகும்? #lka
சில சொற்களின் உண்மையான வலிமை சொல்லப்படும் விதத்திலும் சொல்வோரின் தகமையிலும் சொல்லப்படும் இடத்திலும் தங்கியிருப்பதை உணர்கிறேன்
அடப் பாவிகளா.. ER போனாலும் PTA இருக்கும் போல இருக்கே.. அப்போ ஒரு மாற்றமும் இல்லையா? எல்லாம் தேர்தல் செய்யும் வேலை #LKA
எப்போதோ பலியான ஒருவருக்காக இப்போது உயிருக்காக மன்றாடும் மூவரைத் தூக்கிலிடுவது எப்போதும் ஏற்கத்தக்கதல்ல.. #stopdeathpenalty
அகிம்சையின் தேசம் அகிம்சையையும் மதிக்கவில்லை; ஆயுளையும் மதிக்கவில்லை; மகாத்மாவின் தேசத்தில் மனிதாபிமானம் இனியாவது? #stopdeathpenalty
நல்லூருக்கும் கொழும்புக்கும் வெகு தூரம்; அதைவிட எனக்கும் பக்திக்கும் தூரம். அரோகரா ;)
நல்லூர் தேருக்கு போகவில்லையா என்று கேட்ட ஒருவருக்கான பதில்..
ஒரு பக்கம் மூவர் உயிர்கள் ஊசலாடிக்கொண்டிருக்க, மறுபக்கம் எம்மவர்கள் மங்காத்தாவுக்கும் வேலாயுதத்துக்கும் காவடி தூக்குகிறார்கள் #தமிழன்டா
எமக்கு விருப்பமானதை நாம் செய்யலாம். முக்கியமான விடயங்களுக்கு ஒரு முனகலாவது எம்மிடமிருந்து வெளிவந்த பிறகு #சமூகக்கடமை #stopdeathpenalty
இப்போதைக்குத் தூக்கு இல்லை என்பதால் ஆறுதல் அடைவோம் நாம். ஆனால் இனி நாம் மறந்துபோக தூக்குக் கயிறுகள் மெதுவாக முறுக்கேற ஆரம்பிக்குமோ? :(
ஒரு உயிர்த்தியாகமும் மக்களின் ஒன்றுபட்ட திரட்சியும் தூக்கைத் தள்ளிப் போட்டுள்ளன.. செங்கொடிக்கு அஞ்சலிகள்.. நண்பர்களுக்கு நன்றிகள்.
பருத்தித்துறையிலிருந்து யாழ் நோக்கிப் பயணம் செய்யும் இந்த அரை மணி நேரத்தில் இப்போது தான் முதலாவது பேரூந்து கண்டேன். #நல்ல சேவை
அப்பராகிப் போனார் எங்கள் அப்பர். கோவில் கதவு மூடியதால். மூன்று மணிக்குத் தான் திறக்குமாம். கதவு திறக்கப் பாடியும் பயனில்லை
சிறு வயதில் உருண்டு, தவழ்ந்த ஞாபகங்களை மனைவி, மகனோடும் அம்மா அப்பா , தம்பியோடும் மீட்பதில் நேரம் கரைகிறது
தோட்டத்துக் கிணற்றில் இறைத்த தண்ணீரில் மகன் ஆனந்தமாகக்குளிக்கிறான் . மனதில் இருபத்தைந்து வருடத்துக்கு முந்திய ஞாபகக் குளிர்மைகள்....
என்ன பாவம் செய்துதோ கூகிளும் தமிழும்#googleTranslatehttps://www.facebook.com/arvloshan/posts/10150780729790368
என்ன பாவம் செய்துதோ கூகிளும் தமிழும்
#googleTranslate
கண்ணைக் கட்டிக் கொள்ளாதே - இருவர் ... நேற்றைய நாளின் நிஜப் பிரபலம் - சீமான் (நேயர் தெரிவு), உங்கப்பனுக்கும் பே பே-ராஜா சின்ன ரோஜா..
யார் பாடிக் கேட்டாலும் இந்தப் பாடல் மனதைத் தொடுகிறதே.. என்ன மாயம்? #மலரே மௌனமா#NowPlaying #Unplugged female version #vidiyal @vettrifm
அடி கெழக்கால - நாட்டுப்புறப்பாட்டு .. அருண்மொழி பாடிய பாடல்களில் பாடகியின் குரலுக்காகவும் பிடித்த ஒரு பாடல் என்று இதைச் சொல்வேன் #vidiyal
காதல் பாடல் ஒன்றில் 'பன்றி' பற்றி சொன்னது மங்காத்தாவில் மட்டும் தான் போலும்.. வாடா பின் லேடா.. கவிஞர் - வாலி வாழ்க #அவதானிப்பு