June 21, 2011

வில்லங்கமான கதை - அப்பிடி & இப்படி


எச்சரிக்கை - வாசிக்கும்போதும், வாசித்து முடித்தபின்பும் அகிம்சையையே மனதில் கொள்ளுங்கள்..
யாரும் அதிரடியா,கொலைவெறியா ஆட்டோ,கீட்டோ, அரிவாள், பொல்லு என்று தேடிப் புறப்படக்கூடாது.. ஆமா..ஒரு ஊரில அப்பிடி, இப்பிடின்னு ரெண்டு பேர் இருந்தாங்களாம்..
ஒரு நாள் அப்பிடி, இப்பிடியைப் பார்த்து "எப்பிடி இருக்கீங்க" என்று கேட்டார்.
அதுக்கு இப்பிடி "எப்பிடியோ இருக்கன்" என்று சொன்னார்.
அப்பிடி"இப்பிடி சொன்னா எப்பிடி? அப்பிடி இருக்கேன் இல்லை இப்பிடி இருக்கேன்னு இல்லையா சொல்லணும்" என்றார்.
உடனே இப்படிக்கு அப்படியொரு கோபம் வந்திட்டு.. "டே அப்பிடி, நான் எப்படி இருந்தா உனக்கென்ன" என்று கோபமாகக் கேட்டார்.
அதற்கு அப்படி "அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை..சும்மா தான் எப்பிடி இருக்கீங்கன்னு கேட்டேன்" என்று இப்பிடியை சமாதானப்படுத்தினார்.
அப்பாடா, எப்படியோ அப்பிடியும் இப்பிடியும் மறுபடி நட்பாகிட்டாங்க..

அப்புறம் நீங்க எப்பிடி?


நண்பர் ஒருத்தர் அனுப்பிய கடி எஸ் எம் எஸ் இது..
காலையிலேயே விடியலில் பலரைக் கடித்து ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டது..
எப்பூடி? ;)


27 comments:

JAWID RAIZ (ஜாவிட் ரயிஸ்) said...

நான் கோவமா இருக்கன்..... :D

Ashwin-WIN said...

ஐயாம் ஆஜர். வெயிட்.. ஐ கம்மு..

Nishan Thirumalaisami said...

Head Hot Agiruchi...... Kaduppula irukken....

Ashwin-WIN said...

ஏலே மாமு அப்பிடி இப்பிடி எது போட்டாலும் இப்பிடி வந்து வாசிச்சிடுவம்னு எப்புடி உப்புடி நெனச்சாலும் நினைக்கலாம். அப்டியே நெனச்சாலும் அப்டி இப்டி கதை எண்டு தலைப்ப போட்டு அப்டி இப்டி சின்ன பசங்கள நெனைக்க வச்சு உப்புடி எமாத்தப்படகூடாது.. எப்பூடி???

maruthamooran said...

அடேய் மருதமூரா........!

இது உனக்கு தேவையா? வில்லங்கமான கதை என்டவுடனேயே ஓடிப்போய் வாசிக்கிறதா? கதை சொல்லுறது யாருண்ணு ஆராயிறதில்லையா?? இது வேணும், இன்னமும் வேணும்.

அடுத்தவரின் வலைப்பக்கத்தில் என்னை திட்டிய முதலாவது சந்தர்ப்பம். பொறுத்தருள்ள!!

ஆதிரை said...

ஒரு ஊரில X, Yன்னு ரெண்டு பேர் இருந்தாங்களாம்..
ஒரு நாள் X, Yயைப் பார்த்து "எப்பிடி இருக்கீங்க" என்று கேட்டார்.
அதுக்கு Y "எப்பிடியோ இருக்கன்" என்று சொன்னார்.
X "Y சொன்னா எப்பிடி? X இருக்கேன் இல்லை Y இருக்கேன்னு இல்லையா சொல்லணும்" என்றார்.
உடனே Yக்கு Xயொரு கோபம் வந்திட்டு.. "டே X, நான் எப்படி இருந்தா உனக்கென்ன" என்று கோபமாகக் கேட்டார்.
அதற்கு X "Xயெல்லாம் ஒண்ணுமில்லை..சும்மா தான் எப்பிடி இருக்கீங்கன்னு கேட்டேன்" என்று Yயை சமாதானப்படுத்தினார்.
அப்பாடா, எப்படியோ Xயும் Yயும் மறுபடி நட்பாகிட்டாங்க...


அப்படி (அப்பிடி)யை X என்றும் இப்படி (இப்பிடி)யை Y என்றும் போட்டுப்பார்த்தேன்... ஏதோ விளங்குறமாதிரி இருக்கு? ஆனால், என்னவென்றுதான் தெரியல...

வந்தியத்தேவன் said...

எப்படியோ இப்படி மொக்கைப் பதிவுகள் எழுதி உங்கள் இருப்பை தக்கவைக்கீன்றீர்கள், நாங்கள் இப்படியும் எழுதமுடியாமல் அப்படியும் எழுதமுடியாமல் இருக்கிறம்,

ARV Loshan said...

JAWID RAIZ (ஜாவிட் ரயிஸ்) said...
நான் கோவமா இருக்கன்..... :D //

வை? இனி ப்ராப்ளம் வித் அப்பிடி ஓர் இப்பிடி?

==================

Ashwin-WIN said...
ஐயாம் ஆஜர். வெயிட்.. ஐ கம்மு..//

ப்ளீஸ் கம்மு அண்ட் கும்மு

==============


T.Nishan said...
Head Hot Agiruchi...... Kaduppula irukken....//

கடுப்பு? நோ.. பீ கூல்

====================

Ashwin-WIN said...
ஏலே மாமு அப்பிடி இப்பிடி எது போட்டாலும் இப்பிடி வந்து வாசிச்சிடுவம்னு எப்புடி உப்புடி நெனச்சாலும் நினைக்கலாம். அப்டியே நெனச்சாலும் அப்டி இப்டி கதை எண்டு தலைப்ப போட்டு அப்டி இப்டி சின்ன பசங்கள நெனைக்க வச்சு உப்புடி எமாத்தப்படகூடாது.. எப்பூடி???//

அட இப்ப தானே உண்மை வந்தது ;) சோ நீங்க தான் முதல் போனியா? ;)

ARV Loshan said...

மருதமூரான். said...
அடேய் மருதமூரா........!

இது உனக்கு தேவையா? வில்லங்கமான கதை என்டவுடனேயே ஓடிப்போய் வாசிக்கிறதா? கதை சொல்லுறது யாருண்ணு ஆராயிறதில்லையா?? இது வேணும், இன்னமும் வேணும். //

ஆகாகா.. இதை எக்சார் எங்கே இருந்தாலும் பார்க்கணுமே.. அப்புறம் ஒரு ஸ்டேட்டஸ் போடணுமே ;)

அடுத்தவரின் வலைப்பக்கத்தில் என்னை திட்டிய முதலாவது சந்தர்ப்பம். பொறுத்தருள்ள!!//

அட அட அட.. பொருத்தருள்கிறோம்.. ;)

Riyas said...

அப்பிடி இப்பிடி எப்பிடியோ நல்லாயிருக்கு..

இலங்கை வானொலிகளுடன் எனது அனுபவன் நான் எழுதிய பதிவு நேரம் கிடைத்தால் படித்துப்பாருங்கள் அண்ணா..

http://riyasdreams.blogspot.com/2011/06/blog-post_20.html

ARV Loshan said...

ஆதிரை said...

அப்படி (அப்பிடி)யை X என்றும் இப்படி (இப்பிடி)யை Y என்றும் போட்டுப்பார்த்தேன்... ஏதோ விளங்குறமாதிரி இருக்கு? ஆனால், என்னவென்றுதான் தெரியல...//

அன்பின் சித்து இதென்ன 'வட்டம்' பற்றிய பதிவெண்டு நினைச்சியளே.. இல்லாவிட்டால் ஏதாவது பின்நவீனத்துவம் என்று குழம்பிட்டியலே.. இது வெறும் மொக்கை, மொக்கை மொக்கையலாமல் வேறொன்றும் இல்லை.

இதுக்கால்ம் போட்டுக்கொண்டு.. சீ சீ சீ..

(சிலவேளை நீங்கள் அந்த இரண்டு நண்பர்களின் சண்டை என்று நினைச்சீங்களோ? ;)=========================

ARV Loshan said...

வந்தியத்தேவன் said...

எப்படியோ இப்படி மொக்கைப் பதிவுகள் எழுதி உங்கள் இருப்பை தக்கவைக்கீன்றீர்கள்,//

இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன் யுவர் ஆனர்.மொக்கை எழுதுவது தான் க்ரியேட்டிவிட்டியின் உச்சம்.உங்களால் மொக்கை எழுத முடியாது என்றால் தோல்வியை ஏற்கவேண்டும் முன்னாள் மொக்கை மன்னரே ;)

மொக்கை எழுதுவோர் எல்லாம் இருப்பைத் தக்க வைக்க எழுதுகிறார்கள் என்று உங்களால் பகிரங்கமாக சொல்ல முடியுமா? #சவால்.நாங்கள் இப்படியும் எழுதமுடியாமல் அப்படியும் எழுதமுடியாமல் இருக்கிறம்//

'இருக்கிறம்'??? ;)

உங்களுக்கு அப்படி எழுத விடாமல் செய்வோர் யார்?

பகிரங்கமாக சொல்லுங்கள். அதிகார மையம் நடவடிக்கை எடுப்பார்

ARV Loshan said...

Riyas said...
அப்பிடி இப்பிடி எப்பிடியோ நல்லாயிருக்கு..//

நன்றி :)இலங்கை வானொலிகளுடன் எனது அனுபவன் நான் எழுதிய பதிவு நேரம் கிடைத்தால் படித்துப்பாருங்கள் அண்ணா..//

நிச்சயம் வாசிக்கிறேன் தம்பி

தனிமரம் said...

நல்ல கடி தான் போங்கோ லோசன் அண்ணா கதை நீளும் என்று பார்த்தால் இப்படி முடிச்சுப் போட்டீங்களே!

Anonymous said...

////எப்பூடி /// ஒருபடியா அப்பிடியே தலையும் சுற்றி வந்துடிச்சு ....))

Imran Saheer said...

அப்படி, இப்படி என்று shortஆக ஒரு jest!! அருமை --

அப்படி இப்படி எண்டு இன்னும் எதிர்பக்கிறோம் உங்களிடமிருந்து :)

Yoga.s.FR said...

LOSHAN said...///யாரும் அதிரடியா,கொலைவெறியா ஆட்டோ,கீட்டோ,அரிவாள்,பொல்லு என்று தேடிப் புறப்படக்கூடாது..ஆமா..///இதுக்கெல்லாம் போய் ஆட்டோ,கீட்டோ?!அரிவாள்,பொல்லுன்னு ஏன் செலவு செய்ய வேண்டும்!பஸ்ஸைப் பிடித்து வெள்ளவத்தை வந்தால் போதாது?ஆரம்ப எச்சரிக்கையையும் மீறி?!உள் நுழைந்ததற்கு,இதுவும் வேண்டும்,இன்னமும் வேண்டும்!§§§§ப்ரீயா வுட்டானுல்ல கூகிள்காரன்?இதுவும் வேணும் இன்னமும் வேணும்!§§§( நன்றி:ஓட்ட வட நாராயணன்)

Shafna said...

அப்படியா? எப்புடி பார்த்தாலும் அப்படியும் இப்படியுமா கதச்சு அப்படியும் இப்படியும் எப்படி நண்பரானாங்கன்னு நாங்க எப்படி நம்புறது..அப்படித்தான் நம்பினாலும் அத அப்படி இப்படி நம்பமுடியுமா? எப்புடி உங்க நண்பர் அப்படி இப்படி கதை சொன்னாலும் நீங்க அதை எப்படி இப்படியொரு அப்படியா எழுதுனிங்க? சும்மா சொல்லப்படாது நீங்க அப்படி இப்படி ஆளில்ல... அப்படியான ஒரு உருப்படி..அதை எப்படி சொல்ரது? இப்படி சொல்லவா? இல்ல அப்படி சொல்லவா? எதுக்கும் அப்பறமாவே சொல்றேன்...

Rinas MHM (Doha) said...

ஆபிஸ்ல இருக்குற ஒரே ஒரு தமிழனை கூட்டி வந்து வாசிச்சு காட்டினேன், அவன் என்னை அடியா குறையாய் திட்டி விட்டு போனான். அதுக்கு பிறகு, கோல் பண்ணி அந்த லிங்க் கொடுக்க சொல்லி கெஞ்சினார். ஹி ஹி ஹி ,,,,

கார்த்தி said...

விடியலிலேயே நல்லா அடி வாங்கிட்டம்!! திருப்பி திருப்பியுமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!!!

கன்கொன் || Kangon said...

ஓகோ இப்பிடி அப்பிடியெல்லாம் கதை நடக்குதே?
நடக்கட்டும் நடக்கட்டும்.

//
(சிலவேளை நீங்கள் அந்த இரண்டு நண்பர்களின் சண்டை என்று நினைச்சீங்களோ? ;) //

சண்டை என்று வந்தபின் நட்பென்ன பணியாரமென்ன?
அந்த இரண்டு நண்பர்களையும் ஒழுங்காச் சண்டை போடச் சொல்லுங்கோ. சண்டைக்குப் பிறகு நட்பெல்லாம் தேவையில்லை எண்டும் சொல்லிவிடுங்கோ.

யோ வொய்ஸ் (யோகா) said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

முடியல

நிரூஜா said...

:'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'(

விஜய் ரசிகன் சுஜன் said...

உங்களால மட்டும் எப்பிடி அண்ணா இப்பிடி முடியுது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K. Sethu | கா. சேது said...

ஒரு ஊரில அடுப்பிடி, இடுப்பிடின்னு ரெண்டு பேர் இருந்தாங்களாம்..
ஒரு நாள் அடுப்பிடி, இடுப்பிடியைப் பார்த்து "எடுப்பிடி இருக்கீங்க" என்று கேட்டார்.
அதுக்கு இடுப்பிடி "எடுப்பிடியோ இருக்கன்" என்று சொன்னார்.
அடுப்பிடி"இடுப்பிடி சொன்னா எடுப்பிடி? அடுப்பிடி இருக்கேன் இல்லை இடுப்பிடி இருக்கேன்னு இல்லையா சொல்லணும்" என்றார்.
உடனே இடுப்படிக்கு அடுப்படியொரு கோபம் வந்திட்டு.. "டே அடுப்பிடி, நான் எடுப்படி இருந்தா உனக்கென்ன" என்று கோபமாகக் கேட்டார்.
அதற்கு அடுப்படி "அடுப்படியெல்லாம் ஒண்ணுமில்லை..சும்மா தான் எடுப்பிடி இருக்கீங்கன்னு கேட்டேன்" என்று இடுப்பிடியை சமாதானப்படுத்தினார்.
அடுப்பாடா, எடுப்படியோ அடுப்பிடியும் இடுப்பிடியும் மறுபடி நட்பாகிட்டாங்க..

அடுப்புறம் நீங்க எடுப்பிடி?
------------
எடுப்பூடி ?

Unknown said...

நாங்க இப்படிதான் , அப்படி இருப்போம்

Unknown said...

நாங்க இப்படிதான் , அப்படி இருப்போம்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner