March 23, 2011

உலகக் கிண்ண வெற்றி - விக்கிரமாதித்தனின் விருப்பங்கள்


கொஞ்சம் பெரிய உலகக் கிண்ணப் பதிவு வர இருக்கு.. அதுக்கு முன்னதாக ஒரு மாத அஞ்ஞாத வாசத்தை முடித்துக் கொண்டு ஒரு குட்டிப் பதிவு..

விக்கிரமாதித்த ஊகங்களாக ஒரு குட்டிப் பதிவு..இன்றைய கால் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெல்கிறது..
வெல்லவேண்டும்..
ஆசிய அணி.. நிறைய திறமை இருந்தும் ஜெயிக்க அதிர்ஷ்டமும் வீரர்களின் ஒற்றுமையும் இல்லாமல் தவிக்கும் அணி..
பாகிஸ்தான் வென்றால் தான் அரையிறுதி சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

அத்துடன் பாகிஸ்தான் வென்றால் தானே கொழும்பில் வைத்து ஆஸ்திரேலியாவின் தொடர்வேற்றியை நிறுத்திய பாகிஸ்தானை நம்ம ஆஸ்திரேலியாவால் பழிவாங்க முடியும்.

நாளைய காலிறுதியில் ஆஸ்திரேலியா வெல்லவேண்டும்.. வெல்கிறது..
காரணம் எனக்குப் பிடித்த இரண்டாவது அணி :)
சுழல் பந்துவீச்சு ஆடுகளங்களிலும் கலக்கும் வேகப்பந்துவீச்சாளர்களுக்குப் பரிசாக இந்த வெற்றி கிடைக்கும்.
(எனக்கு ஐந்து பிட்சாக்களும் கிடைக்கும்)

ஆஸ்திரேலியாவின் மீது இருக்கும் நம்பிக்கையை விட அதிகமாக இந்தியாவின் பின்வரிசைத் துடுப்பாட்டம் மீது இப்போது இருக்கிறது.
அஹ்மதாபாத் ஆஸ்திரேலியாவின் கோட்டையாகிறது நாளை.

நியூ சீலாந்து - தென் ஆபிரிக்க காலிறுதியில் தென் ஆபிரிக்கா இலகுவாக வென்றுவிடும். வேகப் பந்துவீச்சு, சுழல்பந்துவீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு என்று சகலதுறைகளிலுமே நியூ சீலாந்தை விட தென் ஆபிரிக்கா விஞ்சி நிற்கிறது.

அத்துடன் நியூ சீலாந்தை ஏற்கெனவே இலங்கை அணி மரண அடி அடித்திருப்பதால் செத்த பாம்பாக இல்லாமல், புதிய பாம்பாக அடிக்கலாமே..

இங்கிலாந்தை கொழும்பில் வைத்து அணியில் உள்ள அத்தனை சுழல் பந்துவீச்சாளர்களையும் மொத்தமாக உள்ளே இறக்கி ஒட்டுமொத்தமாக உருட்டித் தள்ளி இலங்கை வென்றுவிடும்.
இங்கிலாந்து தட்டுத் தடுமாறி இதுவரை வந்ததே பெரிய விஷயம்.


அரையிறுதிகள்...

அசுற்றலியா பாகிஸ்தானை பழி தீர்த்துக்கொள்ளும்..
மொஹாலியில் 96ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளை வென்று இறுதிப் போட்டிக்கு வந்த ராசி ஆஸ்திரேலியாவுக்கு இருக்கிறது.

இலங்கை கொழும்பில் வைத்து தென் ஆபிரிக்காவை அவர்களுக்கு ரொம்பவும் பிடித்த மாதிரியே அரையிறுதியுடன் வீட்டுக்கு பார்சல் பண்ணிவிடும்.
தென் ஆபிரிக்கா, நியூ சீலாந்து அணிகள் அரையிறுதிக்கு மேல் சென்றால் அவர்களுக்கும் ஆகாது.. கிரிக்கெட்டுக்கும் ஆகாதாம் என்று சுவாமி வந்தியானந்தா என்ற உலகப் பிரபல நாடி ஜோசியர் சொல்லியுள்ளார்.

எனவே இறுதிப் போட்டி 1996, 2007 இறுதிப் போட்டிகள் போலவே அமையும்..

ஆஸ்திரேலியா - இலங்கை

ஆனால் கடந்த உலகக் கிண்ண இறுதியில் கில்க்ரிச்ட்டாலும் இருளாலும் தோற்கடிக்கப்பட்டமைக்கு இம்முறை மும்பையில் ஆசிய அமோக ஆதரவோடு இலங்கை பழி தீர்த்துக்கொள்ளும்.

இது ஊகம் என்பதை விட விக்கிரமாதித்தனின் விருப்பங்கள்..
இப்படியே அனைத்தும் நடந்தால் சந்தோசம்.

இது எல்லாம் நடக்காவிட்டாலும் அநேகமானவை நடக்க வாய்ப்புள்ளது.
யாராவது இல்லை என சொல்பவர்கள் என் மூக்குக்கு சேதாரமில்லாத பந்தயத்துக்கு அழைக்கப்படுகிறார்கள்.
சாதக பாதகங்கள் பார்த்து விக்கிரமாதித்தன் பந்தயத்தில் இறங்குவார்.
28 comments:

ஆதிரை said...

விக்கிரமாதித்தனின் விருப்பங்கள்???

Anonymous said...

கனம் லோஷன் அவர்களே...
இங்கிலாந்து அணி இலங்கையை வென்றால் நீங்கள் இனி மேல் உங்கள் வாழ் நாளில் கிரிக்கெட் பற்றி கதைப்பதை இத்துடன் நிறுத்தி விடுவீர்களா?
மாறாக இலங்கை வென்றால் நான் உங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பேன்...

யாழ்ப்பாணத்தில் இருந்து சுகந்தன்

கடவுள் said...

நான் நினைக்கிறேன்... அவுஸ்திரேலிய அணியை நாளை கலைத்தால் தவிர.. அவ்வணி கிண்ணத்துடன் தான் செல்லும்...

V I J A Y said...

I feel England will pack SL, or atleast SL will get beating from SA. SL in final, not in 2011 !!!!

ம.தி.சுதா said...

அண்ணா தங்கள் விருப்பமே என் விருப்பமும் ... நிச்சயம் இம்முறை விக்கிரமாதித்தன் தோற்கமாட்டான்...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை

ம.தி.சுதா said...

யாராவது பந்தயத்துக்கழைத்தால் என்னையும் சேருங்களேன்...

Unknown said...

ஆஸ்திரேலியா வேண்டாம் இந்தியாவுடன் இலங்கை இறுதிப்போட்டி

Mohamed Faaique said...

இந்தியாவிடம் அவுஸ்திரேலியா தோற்க வேண்டும். இந்தியா பாகிஸ்தானிடம் தோற்க வேண்டும்.இலங்கை பாகிஸ்தானை வென்று, 20-20, இந்த முறை தோற்றதை பழிக்கு பழி வாங்க வேண்டும். இது என் விருப்பம்..

EKSAAR said...

விக்கிரமாதித்தனின் விருப்பங்கள் அதிக சாத்தியமுள்ளதாக இருந்தாலும், விக்கிரமாதித்ன் என்பதால் பயமாக இருக்கிறது.

இந்தியா பாகிஸ்தான் அரையிறுதிதான் உலககிண்ணப்போட்டிகளை சுவாரசியமாக்கும்.

இன்னும் ஒஸ்ரேலியாவின் தொடர்வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்ததுபோல் உலகக்கிண்ண இந்தியா பாகிஸ்தான் போட்டிகளில் தொடர்வெற்றிபெற்றுக்கொண்டிருக்கும் இந்தியாவுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டவேண்டும்.

அதன்பின் இலங்கை பாகிஸ்தானை பழிதீர்த்துக்கொள்ளும்.

உங்கள் தளம் ஆவதற்கு அதிக நேரம் பிடிக்கிறது. கவனிக்கவும்.

ஜெ.நிதா said...

இது என்ன சின்னப்புள்ளை தனமாய் இருக்கு.

நிரூஜா said...

இலங்கை இங்கிலாந்து இரசிகன் என்ற ரீதியில் இரண்டுமே காலிறுதியில் மோதுவது மனவருத்தமே. இருந்தாலும் எப்போதுமே இலங்கைக்கு தான் முதலிடம்.
1996ல் இலங்கை இங்கிலாந்து தான் காலிறுதியில் மோதியது எனபதை நினைக்கும் போது, மறுபடியும் இலங்கைக்கு கோப்பை கிடைக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.
5பீட்சாவில் எனக்கு ஒன்று. இப்பவே சொல்லீட்டன்

Anonymous said...

எனது கணிப்பு நாளைய போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தும் அரை இறுதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மற்றும் ஸ்ரீலங்காவும் தென் ஆப்ரிக்கா விளையாடும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் தென் ஆப்ரிக்கா விளையாடும்

prassi said...

எனது கணிப்பு நாளைய போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தும் அரை இறுதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மற்றும் ஸ்ரீலங்காவும் தென் ஆப்ரிக்கா விளையாடும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் தென் ஆப்ரிக்கா விளையாடும்

prassi said...

எனது கணிப்பு நாளைய போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தும் அரை இறுதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மற்றும் ஸ்ரீலங்காவும் தென் ஆப்ரிக்கா விளையாடும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் தென் ஆப்ரிக்கா விளையாடும்

Shafna said...

எல்லாம் சரி... எனது எதிர்பார்ப்பும் ஆசையும் இதே..ஆனால் இறுதிப் போட்டியில் நாமா? ஆஸியா? என்பதுதான் ?. பார்க்கலாம்.அதுவரை வெற்றி நமக்கே என்று பிரார்த்திப்போம். Sanga will be d man of d match in d final?

யோ வொய்ஸ் (யோகா) said...

எனது விருப்பமும் அதுவே. ஆனாலும் இந்தியா பாகிஸ்தான் அரையிறுதி ஒன்றை பார்க்க ஆவலாயுள்ளேன்.

ketheeswaran said...

Ha ha, don't worry Indian Fans.

India and Sri Lanka will play in the final and India Will win the 2011 World Cup. If India Win Who are those comment Against India Give Me One Pound Each.but Loshan will give His April month salary to me.

ketheeswaran said...

Loshan, If you Don't publish My comment you scare about Indian team.

Bavan said...

//காலிறுதியில் ஆஸ்திரேலியா வெல்லவேண்டும்.. வெல்கிறது//

இந்த வார்த்தை ஒன்றே போதுமே, இந்தியா வெல்ல..:P

//(எனக்கு ஐந்து பிட்சாக்களும் கிடைக்கும்)//

மன்னிக்கவும் 5 பிட்சா பறக்கும்..:P (எனக்கு 2 pizza கிடைக்கும்..:))

கன்கொன் || Kangon said...

Almost the same, except Aussies winning the cup this time.

ஷஹன்ஷா said...

no comments...இன்னொரு விக்கிரமாதித்தனாக மாற விருப்பமில்லை...:P

lalithsmash said...

See My world Cup Predict
http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/content/site/worldcup2011/predictor/86489.html?frm_src=social

Risamdeen said...

/Mohamed Faaique said...
இந்தியாவிடம் அவுஸ்திரேலியா தோற்க வேண்டும். இந்தியா பாகிஸ்தானிடம் தோற்க வேண்டும்.இலங்கை பாகிஸ்தானை வென்று, 20-20, இந்த முறை தோற்றதை பழிக்கு பழி வாங்க வேண்டும். இது என் விருப்பம்../

me too

Anonymous said...

//இப்படியே அனைத்தும் நடந்தால் சந்தோசம்.//...........
//இப்படியே அனைத்தும் நடந்தால் சந்தோசம்.//......
//இப்படியே அனைத்தும் நடந்தால் சந்தோசம்.//.....
irshath Ahmeth

Ajmeer said...

U watch the match

Anonymous said...

Loshan now how you feel India won against Australia. Your thoughts went wrong no. Now which team are you going to support.

Jainadhiya said...

//நாளைய காலிறுதியில் ஆஸ்திரேலியா வெல்லவேண்டும்.. வெல்கிறது..//
ஐயோ வட போச்சே!! போய் வேலைய பாருங்க லோஷன் ... By உண்மை இந்தியன்.

Prabhu said...

Boss.. this time will win the cup for sure... SA will definetly beat SL in semis..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner