எனக்கு என்ன போபியா?

ARV Loshan
13


ஒரு குறுகிய கால குடும்ப பயணம் (இந்தியாவுக்கு) போய்வந்த பிறகு கொஞ்ச நாளாக பதிவுலகம் வந்து பதிவிடவே சோம்பலாகவும், எதைப் பற்றி எழுத என்று போராகவும் இருக்கிறது..

பதிவிட நிறைய விஷயம் இருப்பது போலவும் இருக்கு. ஒன்றுமே இல்லாதது மாதிரியும் இருக்கு.. இதுக்கு ஏதாவது ப்லோகொபோபியா என்று பெயராக இருக்குமோ..

நண்பர்களின் பதிவுகள் மற்றும் நல்ல பதிவுகள்(சுவாரஸ்யம் அல்லது தரம்) பக்கம் போய் வாசித்து பின்னூட்டம் போடுவதோடு சரி.. என் பதிவுகளுக்கு முன்னர் நண்பர்கள் போட்ட பின்னூட்டங்களுக்கு பதில் போட தோனுதில்லையே.. அது ஏன்?

இதுக்கும் ஏதாவது பின்நூட்டபோபியா என்று நோய்க் கிருமிகள் காரணமாக இருக்கலாமோ??


கிரிக்கெட் பற்றி எழுதலாம்னா சாம்பியன்ஸ் லீக் கொஞ்சம் போரடிக்குது..

சினிமா பற்றி எழுதினாலே நாற்றமெடுக்குது..

அரசியல் சோக காமெடியாகப் போய்க் கிடக்கு.. யார் வந்து போயென்ன.
வாய்ச் சொல்லில் வீரரடி?

எது பற்றி எழுத?? உதவி ப்ளீஸ்..

இந்த யோசனையின் பொது தான் சுவாமி பதிவானந்தா என் கணினித் திரையில் காட்சி தந்து
"தம்பி லோஷா, நிறையப் பதிவுகள் பெண்டிங்கில் இருக்கே மறந்துவிட்டாயா? அவையெல்லாம் எழுதப்பா.. "என்று ஞாபகப் படுத்தினார்.

ஓகோ..

சிங்கைப் பயணம் அரை வழியில் நிற்குது இல்லையா? (நான் மறந்தாலும் விட மாட்டாங்க போலிருக்கே..)

கமல் பற்றி ஒரு பதிவும், ஒலிபரப்பு பற்றி ஒரு பதிவும்.. இரு தொடர் பதிவுகளும் எழுதவேண்டும் என்று நினைத்து சிறு குறிப்புக்களோடு இருக்கின்றன..

இன்று மாலை ஆதவன் முதல் காட்சி பார்க்கப் போகிறேன்.. பார்த்திட்டு வந்து அது பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்..

ஆனால் இத்தனை நாளாக எந்தவொரு பதிவும் இடாவிட்டாலும் 13 நாட்களாக சராசரியாக 200பேருக்கு மேல் என் தளத்துக்கு வந்திருக்காங்களே.. ரொம்ப நல்லவங்களான அவங்களுக்கு என் நன்றிகள்..

இப்ப ஸ்டார்ட் பண்ணிட்டமில்ல.. இனி அடிக்கடி வரும்.. ;)

நான் தனிப்பட்ட முறையில் பண்டிகைகள் கொண்டாடி பல வருடங்களாச்சு.. எனினும் கொண்டாடுவோருக்கு எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

எனினும் கொண்டாடும்போது ஒருவேளை உணவும் , முகத்தில் எந்தவொரு மலர்ச்சியும், மனதில் அமைதியும் இல்லாத எம் சகோதர,சகோதரிகள் பல லட்சம் பேர் இருப்பதையும் கொஞ்சம் மனதில் கொள்ளுங்கள்..


பிற்சேர்க்கை - வட இந்திய ஸ்டைலில் இப்போது நம்மவர்களும் Happy Diwali என்று வாழ்த்து மடல்களும் மின் மடல்களும் அனுப்புகிறார்களே.. வெகுவிரைவில் தமிழிலும் டிவாளி என்றாகிவிடுமோ?? தமிழ் விரும்பிகள் குரல் கொடுக்க மாட்டார்களா?

என்ன தான் இருந்தாலும் எங்களுக்கென்னவோ இன்னமும் தீ(நெருப்பு) வாழி தானே..


இப்போது சின்னதாக ஒரு குரல் கொடுக்கும் சின்ன சந்தேகம்..
தெரிந்தோர் விடை தாருங்கள் -
நேற்று விஜய் டிவியில் தமிழில் ஸ்லம் டோக் மில்லியனயர் பார்த்தேன்.. இளைஞன் ஜமாலுக்கு(பட நாயகன்) தமிழில் குரல் கொடுத்திருப்பது யார்?
அலுவலக நண்பர் பிரதீப் சிம்புவாக இருக்கலாம் என்று சொன்னார்.. உண்மையா?

அனில் கபூருக்கு எஸ்.பீ.பீயின் குரலும்,இர்பான் கானுக்கு ராதாரவியின் குரலும் அப்படிப் பொருந்தியிருந்தன.



Post a Comment

13Comments

Please Select Embedded Mode To show the Comment System.*