
ஒரு காட்டில் ஒரு நாள் ஒரு சிங்கம், ஒரு கரடி, ஒரு பன்றி ஆகியன சந்தித்துக் கொண்டன..
இனி சந்திப்பென்றாலே வேறு என்ன தம்பட்டம், பேச்சு தானே.. (ஐயா சாமிகளா நான் பதிவர் சந்திப்பையெல்லாம் பற்றி எதுவுமே சொல்லலைங்கோ.. )
சிங்கம் தனது வீரப் பிரதாபத்தை ஆரம்பித்தது..
"ஆபிரிக்காக் காட்டில் நான் கர்ச்சித்தால் ஆபிரிக்காவே அதிரும்.. ஐரோப்பா ஆசியா வரை எதிரொலிக்கும்"
கரடியும் விட்டதா..
"வட அமெரிக்க மலைகளில் நான் சத்தமிட்டால் தென் அமெரிக்க நாடுகள் வரை அதிரும்" என்று ஜம்பமாக சொன்னது..
அப்பாவியாக நின்ற பன்றியை சிங்கமும்,கரடியும் ஏளனமாக பார்த்தன.
பன்றி அமைதியாக சொன்னது..
"நான் இப்ப எல்லாம் சும்மா இருமினாலே போதும், உலகமே நடுங்கி விடும்" என்றது...
அவ்வளவு தான் சிங்கமும் கரடியும் அப்போது தான் பன்றிக் காய்ச்சல் (Swine flu) ஞாபகம் வர தலை தெறிக்க ஓடி மறைந்து விட்டன..
=========
ஒரு பன்றிக் காய்ச்சல் கார்டூன்...

இது போன்ற மேலும் சில பன்றிக் காய்ச்சல் கார்டூன்களுக்கு இங்கே சொடுக்குங்க...
பயப்படாதீங்க.. கார்டூன் பார்த்ததெல்லாம் பன்றிக் காய்ச்சல் வராது..
===============
ரொம்ப நாளாக விடுமுறைகளும்,வேலைகளும் பதிவுகளை இட முடியாதவாறு பண்ணி விட்டன..
தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தால் எழுத விஷயங்கள் கிடைத்த வண்ணமே இருக்கும். இடை நடுவே நிறுத்தி சின்ன ஓய்வுக்கு பின்னர் மறுபடி வருகையில் எதை,எப்படி எழுவது என்று குழப்பம் கலந்த தயக்கம்.
அது தான் இந்த நகைச்சுவையோடு மறுபடி ரெடி, ஸ்டார்ட்....
(இது காலையில் வானொலியில் நான் சொன்னது)
சிங்கப்பூர் பயணம் பற்றி எழுதலாம் என்று இரண்டு மூன்று நாட்களாக எழுத உட்கார்ந்தால் மாறி மாறி பயணங்களும் பல வேலைகளும்.. காமெராவின் மெமரி கார்டும் வேலை செய்யுதில்லை.. படங்கள் இல்லாமல் பயணக் கட்டுரையா?
எனவே கொஞ்சம் வெயிட் ப்ளீஸ்..
வரும்....
11 comments:
//காமெராவின் மெமரி கார்டும் வேலை செய்யுதில்லை.. //
காமெரா வேல செஞ்சுதா எண்டு பாருங்க அப்பு..
இனிமேலாவது ஒழுங்கா அங்க இங்க போகாம இருந்து எழுதுங்கோ.. புதுசா எழுதாத blog க்கு எல்லாம் அடிக்கடி போய் பார்த்து அநியாய hit கொடுத்ததுதான் மிச்சம்..
அப்படியே எங்க பக்கமும் வந்து பாருங்கோ..
உங்க கதை (எல்லாமே) சூப்பர் அண்ணா எங்க ஒரு வாரமா காணலையே என்று பார்த்து இருந்தேன் வந்துட்டிங்கல்ல இனி என்ன கலக்கப்போரிங்க..... கலக்குங்க கலக்குங்க. பயணங்கள் எல்லாம் எப்படி அண்ணா. பயணங்கள் முடிவதில்லை தொடரட்டும்....
ஆஹா...ஆஹா சூப்பர்..
அப்படியே என் பக்கமும் வந்து பாருங்கோ
http://dshan2009.blogspot.com
வந்துட்டாரு வேந்தரு!வெண்டரு!!!
உலகம் சுற்றும் வாலிபனா?
(வாலிபன்?)
நல்ல ஜோக்ஸ் தான், அண்ணா எப்ப பயணத்தைப் பற்றி எழுதப் போறீங்க... ஆவலுடன்,
Thanks for the link...
வெளிநாடு போட்டு வந்திருக்கிறிங்க உங்களுக்கு ஒரு காய்ச்சலும் வரேலதானே????
Happy to welcome again.enna roba nala vanthu paththuddu thrumpi pojiddan.anyway eni kalakkal than.best wishes.
//சிங்கப்பூர் பயணம் பற்றி எழுதலாம் என்று இரண்டு மூன்று நாட்களாக எழுத உட்கார்ந்தால் மாறி மாறி பயணங்களும் பல வேலைகளும்.. காமெராவின் மெமரி கார்டும் வேலை செய்யுதில்லை.. படங்கள் இல்லாமல் பயணக் கட்டுரையா?
எனவே கொஞ்சம் வெயிட் ப்ளீஸ்..
வரும்....//
காத்திருக்கின்றோம்......
...
(ஐயா சாமிகளா நான் பதிவர் சந்திப்பையெல்லாம் பற்றி எதுவுமே சொல்லலைங்கோ.. )
...
அதானே....பார்த்தன்..
வாங்க பாஸ்!!
வெயிட் பண்றோம்...
கண்டிபாக படங்களுடன்
சிங்கபூர் டிரிப்பை வெளியிடவும்!
Post a Comment