.jpg)
இலங்கைப் பதிவர்களின் முதலாவது சந்திப்புக்கு உங்களின் ஆதரவும் வரவேற்பும் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்துள்ளோம். நாங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட அதிகமான நண்பர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
மீண்டும் நாங்கள் சொல்கின்ற விடயம், பதிவர்கள் மட்டுமன்றி, பதிவுலக வாசகர்கள், பதிவிட ஆர்வமுள்ள எதிர்கால பதிவர்கள்,பின்னூட்ட ஆர்வலர்கள் என்று அனைவரையும் அழைக்கிறோம்..
இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு
காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்.
குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும்.. (வழமையான கொழும்பு நேரம் என்று தப்பாக நினைத்து யாரும் தயவு செய்து 9.30க்கு பிறகு வரவேண்டாம் என்று முன்னெச்சரிக்கை செய்யப்படுகிறது)
நிகழ்ச்சி நிரல்
அறிமுகவுரை
பதிவர்கள் அறிமுகம்
வலைப்பதிவு ஒரு முன்னோட்டம்
திரட்டிகள்
சிறப்பு அதிதி உரை
இடைவேளை
வலைப்பதிவு தொழில்நுட்பங்கள்
வலைப்பதிவும் சட்டமும்
பதிவுலக அனுபவங்கள்
எதிர்காலத் திட்டங்கள்
கலந்துரையாடல்
நன்றியுரை
இந்நிகழ்ச்சி நிரல் இதுவரை தாமாக முன்வந்த பதிவுலகப் பெருந்தகைகளை வைத்து நாம் தயாரித்த முன்னோடி நிகழ்ச்சி நிரல்.. யாராவது மேலும் முன்வந்து மேலும் பயனுள்ள விடயங்கள் பதிவுலகத்துக்கு/பதிவர்களுக்கு பயனுள்ள விடயங்கள் தொடர்பாக உரையாற்றவோ வித்தியாசமான நிகழ்ச்சி படைக்கவோ விரும்பின் தயங்காமல் தொடர்பு கொள்ளவும்.
Blogger இன் பத்தாவது பிறந்த நாளும் எமது முதலாவது இலங்கைப் பதிவர் சந்திப்புடன் இணைந்தே வருவதால் ஒரு சிறப்பு ஏற்பாடும் செய்யலாம் என நினைத்துள்ளோம்.
ஆரம்பத்தில் நான்கு பேராக பெயரளவில் ஆரம்பித்த இந்த ஏற்பாட்டுக் குழு இப்போது பலத்துடன் அதிகரித்துள்ளது.. சந்திக்க முடிந்தவர்கள் எமக்குள் சந்திப்புக்களை இந்த வாரத்துள் மீண்டும் நடத்தி இறுதிக்கட்ட ஏற்பாடுகளை மேற்கொள்கிறோம்..
இதுவரை எம்முடன் தொடர்புகொண்டு வருகையை உறுதி செய்யாதவர்கள் தயவு செய்து எதிர்வரும் புதன்கிழமைக்கு(19.08.2009) முன்னர் தொடர்புகொள்ளவும்.
லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com
பல்வேறு ஊடகங்களையும் சேர்ந்த நண்பர்கள் தாமாக முன்வந்து இந்த சந்திப்பு பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறீர்கள்.. நன்றிகள்..
இதுபற்றிய தகவல்களை வெளியிட்டு பங்குபற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க ஆதரவை அளித்த அணித்துப் பதிவர்கள் மற்றும் பல்வேறு திரட்டிகளுக்கும் நன்றிகள்..
ஒற்றுமையே பலம்..
அனைவரும் வாரீர்.. (வர முதல் வருகையை உறுதிப்படுத்துவீர்..)
இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.
