December 16, 2011

நிழல் பார்த்துக் குரைக்கும் நாய்களும், பெயர் போட்டுப் பெயர் கெடுப்போரும் - ட்விட்டடொயிங் - Twitter Log

மீண்டும் ஒரு 

ட்விட்டடொயிங் - Twitter Log


கடந்த இரு மாதங்களில் எனது ட்வீட்களின் தெரிந்தெடுத்த தொகுப்பு. 
பீட்டர் பினாத்தல்கள், கிரிக்கெட் மசாலாக்கள், பிடித்த ட்வீட்களின் Retweet எவையும் இல்லாமல் என்னுடையவை மட்டும்....

இந்த ட்விட்டடொயிங் - Twitter Log க்காக முன்னைய ட்வீட்களை மீண்டும் வாசிக்கின்றபோது தான்..
அந்தந்த ட்வீட்களில் கலந்துள்ள அந்தக் கணங்களின் மகிழ்ச்சிகள் அல்லது மனவருத்தங்கள், கோபங்கள் அல்லது குதூகலிப்புக்கள் என்று உணர்வுகளின் கலவைத் தொகுப்பு..



"உன்னை சுற்றியுள்ள எல்லாமே வெறுப்பைத் தருவதாக நீ உணர்ந்தால் உனக்குள் நீ வெறுப்புடன் இருக்கிறாய் என்று தான் அர்த்தம் " - ஓஷோ
    9:46 AM - 16 Dec 11 via web 
என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளிச்சென்றது நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது #சொல்லாமலே  பழனிபாரதி கலக்கியுள்ளார் :)

எதிர் கருத்து கூடாது என்பதல்ல.எதிர் கருத்தை ஆதாரபூர்வமாக சொல்லுங்கள்..வன்மத்தோடு , உள் நோக்கத்தோடு சொல்லாதீர்கள். #படித்ததில் பிடித்தது
11:01 AM, Dec 14th via web 


பழைய sms, FB msg, Twitter DMகளை மீண்டும் வாசித்து அசைபோடும்போது தான் உறவுகள் விரிவதும், தொடர்வதும், பிரிவதும் எப்படி எனப் புரிகிறது.#LIFE
9:41 AM, Dec 14th via web · Details

அவனுங்க ஏற்கெனவே நொந்து போயிருக்காணுக.. இந்தத் திருட்டுப் பயலுகள் வேற "After Harbhajan's passport, Praveen Kumar's revolver stolen"
2:53 PM, Dec 13th via web · Details

இதென்னைய்யா புது விதமா இருக்கு.. வரமாட்டேன் என்று சொன்னாலும் அழைப்பிதழில் பெயரைப் போட்டு பெயரைக் கெடுக்கிறாங்களே..
9:38 PM, Dec 13th via web · Details

60களில் ராஜா = A .M .ராஜா , எழுபது, எண்பதுகளில் - இளையராஜா, இப்போ திஹார் ராஜா 
2:10 PM, Dec 13th via web · Details
ராஜா என்றாலே இளையராஜா என்று சொன்ன இசைஞானி பிரியருக்கு..

 யோவ் EUROPE தவிர எல்லாக் கண்டமுமே ஆரம்பிப்பதும் முடிவதும் A இல் தான்
2:09 PM, Dec 13th via web · 
நண்பர் ஒருத்தரின் கண்டம் கடந்த காதலுக்குக் கடித்தது

கத்தும் நாய்க்கு காரணம் எது? தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும் - வைரமுத்து
8:05 AM, Dec 13th via web

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேர் என்னடி... பாடலில் SPB ஆரம்பிக்கும் இடம் அற்புதமாக இருக்கும் #Vidiyal
9:52 AM, Dec 8th via web

நீ வெளிச்சத்தில் நேராக நின்றால் உன் நிழல் கோணலாகக் கீழே விழாது - சீனப் பழமொழி
8:06 AM, Dec 8th via web

கடவுளே இல்லை எனும்போது எங்க கடவுள், உங்க கடவுள் என்று சண்டை போட்டால் நான் எங்கே போய் முட்ட?
9:14 PM, Dec 7th via web

பொதுவாச் சொன்னாலும் தனித்தனியாப் பிரிச்சு உயர்வு , தாழ்வு பார்க்கிறாங்களே.. உணரவும் மாட்டாங்க.. உருப்படவும் மாட்டாங்க.
9:08 PM, Dec 7th via web

தங்க விலை தகிடுதத்தோம்.. ஏறின மாதிரியே இறங்கிடுச்சே
11:40 AM, Dec 7th via web 

கனாக்காணும் காலம்.. அக்னி சாட்சி பாடல்... எப்போது கேட்டாலும் ஒரு மேகத்தில் மிதக்கும் உணர்வு... #vidiyal @vettrifm vettrifm.com
9:28 AM, Dec 7th via web

நான் சொன்னதும் மழை வந்துச்சா.. படத்தில் வர்ற நேரம் சரியில்லையே..
8:41 AM - 6 Dec 11 via Tweet Button 

போகும் பாதை தவறானால், போடும் கணக்கும் தவறாகும்.... தற்செயலாக இன்று பார்த்த 'அண்ணன் என்ன தம்பியென்ன' பாடலின் வரிகள்.. #life
8:11 AM - 6 Dec 11 via web

மொழி பெயர்ப்பு , முழி பிதுங்கல்.. இன்றைய நாளில் நான் அதிகமாக சிரித்த விஷயம்.. நல்ல காலம் அவசரப்பட்டு வாழ்த்தேல்லை ;)
8:23 PM - 3 Dec 11 via web 


Kalou காலை வாரி விட்டானே.. கவிழ்ந்தது #NCFU கனவு :( Pizza போச்சே..
8:08 PM - 3 Dec 11 via web 

அந்தியேட்டியில் தயவு செய்து அசைவ சாப்பாடு போடுமாறு எழுதிவிட்டு சாகவும் ப்ளீஸ் ;)
6:25 PM - 3 Dec 11 via web 
சாகலாம் என்று தோன்றுகிறது என்று சொன்ன ஒரு நண்பிக்கு 

சுவரெங்கும் கண்ணாக ஆகும் இனி உயிரோடு சேரும் சுருதி - வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலமிது #vidiyal @vettrifm
8:51 AM - 1 Dec 11 via web 

நேற்றைய நாளின் நிஜப்பிரபலம் - கனிமொழி தொடரும் பாடல் - கலைஞர் பாடுவதாக - வா வா என் தேவதையே - அபியும் நானும் #kolaveri #vidiyal
7:58 AM - 29 Nov 11 via web 

“வாழ்க்கையில நாம என்ஜாய் பண்ற வேலையை செய்யணும்... இல்லைன்னா செத்துடணும்...” #மயக்கம்என்ன
10:58 PM - 28 Nov 11 via web

என்றோ ஒரு நாள் விடியும் என்றே இரவை சுமக்கும் நாளே.. அழாதே #இயலாமை+வெறுப்பு+விரக்தி = வேறென்ன சொல்வது?
10:18 PM - 27 Nov 11 via web 


தாய் தின்ற மண்ணே பிள்ளையின் கதறல் ஒரு பேரரசன் புலம்பல் #எனக்கும் உங்களுக்குமானவர்களுக்கான புலம்பல்
10:12 PM - 27 Nov 11 via web

இருண்ட வானம், இறுக்கமான மனது, விட்டு விட்டுத் தூறும் மழை, மெல்லிய புழுதி வாசம் - மே இறுதிக்கட்ட ஞாபகங்கள் ம்ம்ம்ம் #27thNov
5:49 PM - 27 Nov 11 via Twitter for iPhone 

தலைவர் என்று முதல் முதலாக மனதார நினைத்த ஒருவரை இன்று நினைப்பதை விட வேறேதும் செய்துவிட முடியாது. :( மனம் வலிக்கிறது. #26thNov
5:15 PM - 26 Nov 11 via web 

மாயம் செய்தாயோ, 'காயம்' செய்தாயோ என்று விவேகா வேலாயுதம் பாட்டில் எழுதி இருக்கிறாரே.. வரு முன் எச்சரிக்கிறாரோ?
9:16 AM, Oct 3rd via web

தாத்தா வாலி இன்னும் இளமையை மையில் ஊற்றி ரசிக்க வைக்கிறார். மெட்டும் ரசனை... இச்சு இச்சு இச்சுக் கொடு.. - வெடி
9:02 AM, Oct 4th via web 

நான் கூறிய கருத்துக்களில் தவறிருந்தால் அவற்றைப் பின் வாங்கிக் கொள்வதில் எனக்கு சங்கடம் இருப்பதில்லை. மயக்கம் என்ன பாடல்களும் அவ்வாறே:) 1/3
8:35 AM, Oct 5th via web · 

ஓட ஓட, காதல் என் காதல் - தனுஷ் பாடிய பாடல்கள் கேட்க, கேட்க பிடிக்கின்றன.கவித்துவம் என்பதை விட்டுப் பார்த்தால் ரசிக்க நல்லாவே இருக்கின்றன 2/3
8:45 AM, Oct 5th via web · 

ரசனை வரிகள், இளமை துள்ள, எளிமையான இசையில்.. ம்ம்ம்ம் .. 3/3 but continued.. ;)
8:47 AM, Oct 5th via web


9 comments:

வந்தியத்தேவன் said...

நல்லாத்தான் இருக்கு ஹிஹிஹி.

Anonymous said...

எப்ப இருந்து ஓஷோ books வாசிக்கறீங்க?

K. Sethu | கா. சேது said...

//60களில் ராஜா = A .M .ராஜா , எழுபது, எண்பதுகளில் - இளையராஜா, இப்போ திஹார் ராஜா
2:10 PM, Dec 13th via web · Details
ராஜா என்றாலே இளையராஜா என்று சொன்ன இசைஞானி பிரியருக்கு..//

அய்யே, நீங்க "60களில்" என போட வேண்டிய இடத்தில் "60" போடாமல் அன்று சொதப்பிட்டீங்க. அப்புறம் ராஜா என்றாலே ஏ.எம். ராஜாதான் எண்டு நான் வந்திக்கு அறிவுறுத்தினதுக்குத் தான் தங்களது அந்த (2:10 PM, Dec 13th via web · Details) பதில்.
சான்று: https://twitter.com/#!/LoshanARV/status/146509875105636352

60 என போடத் தவறியதால் எனது கருத்துப்படி "எப்போதும் ஏ.எம். ராஜாதான்" எனத் தாங்கள் ஏற்றுக்கொண்டதாகத்தான் பொருள் ! #இதெப்படி_இருக்கு_வந்தியானந்தா?

வந்தியத்தேவன் said...

ஏன் இந்தக் கொலைவெறி சேது ஐயா

K. Sethu | கா. சேது said...

வந்தியாரே, சந்திர கிரகணம் புடிச்ச நாள்ல இருந்து அப்பிடி அப்பிடி ;)

Bavan said...

//கத்தும் நாய்க்கு காரணம் எது? தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும் - வைரமுத்து//

:-)

//நீ வெளிச்சத்தில் நேராக நின்றால் உன் நிழல் கோணலாகக் கீழே விழாது - சீனப் பழமொழி//

அட ;-)

//கடவுளே இல்லை எனும்போது எங்க கடவுள், உங்க கடவுள் என்று சண்டை போட்டால் நான் எங்கே போய் முட்ட?//

ஹிஹி ஒரே க(கு)ஷ்டமப்பா..

//அந்தியேட்டியில் தயவு செய்து அசைவ சாப்பாடு போடுமாறு எழுதிவிட்டு சாகவும் ப்ளீஸ் ;)//

LOL :D

தர்ஷன் said...

பார்த்ததுதான், இருந்தாலும் தொகுப்பாக ஒரே இடத்தில் பார்க்கையில் மகிழ்ச்சி.
முன்ன மாதிரி தினம் ஓரு பதிவிட வேண்டும் என்பது என் அவா

rishvan said...

nice collections... thanks to share... please read my tamilkavithaigal in www.rishvan.com.

கூகிள்சிறி said...

என்வலையில் கல்லறைக் காதல்!-சிறுகதை-01

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner