சுனந்தாவும் நானும், கப்பலேறிப்போன கவுண்டமணியும்.. - ட்விட்டடொயிங் - Twitter Log

ARV Loshan
3







மீண்டும் ஒரு ட்விட்டடொயிங் - Twitter Log  :)

கடந்து போன வருடத்தின் காலச் சுவடுகளை மீண்டும் மீட்ட 2011ஆம் வருடத்தின் இறுதி நாள் வரையான என் ட்விட்டர், பேஸ்புக் பகிர்வுகளைத் தொகுத்திருக்கிறேன்...


கலவை உணர்வுகளும் கலாய்ப்புக்களும் கலந்து வருவதை உங்களில் பலர் முதலிலேயே வாசித்திருக்கலாம்.. 
உங்களுடன் சம்பந்தப்பட்டதாகவும் கூட இருந்திருக்கலாம்.
சும்மா வாசியுங்களேன்.. :)









பிறக்கும் புது வருடம் அன்புக்குரிய உங்கள் அனைவருக்கும் நல்லனவற்றையும் மகிழ்ச்சியையும் மட்டுமே வழங்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
11:23 PM - 31 Dec 11 via Twitter for iPhone 


இந்த வருஷம் தந்த நல்ல விஷயங்களுக்கு எல்லாம் நன்றிகள்.. துன்பங்கள் தந்து பாடங்கள் கற்பித்தமைக்கும் நன்றிகள்.
பிரிந்து செல்லும் மறக்க முடியாத 2011க்கும் வாழ்த்துக்கள். 
#YearEnd
Saturday 31st December 2011 from Twitlonger


ஊற்றெடுக்கிற உற்சாகமெல்லாம் ஒரு சில வினாடிகளில் உடைந்துபோய், மூட் மாறிய பின் மீண்டும் எவ்வளவு முயன்றாலும் பழைய உற்சாகத்தைக் கொண்டு வரமுடியாத தருணங்கள் கொடுமையானவை. 
#YearEndதத்துவம்
Saturday 31st December 2011 from Twitlonger


ஓவர் ஸ்பீட்ல ஓட்டிட்டுப் போனா ஓவர் டேக் பண்றவன் அடிச்சுத் தூக்கிட்டுப் போய்டுவான். தெலுங்கு டப்பிங் பட வசனம் #YearEndதத்துவம்
10:39 AM - 31 Dec 11 via Twitter for iPhone 


இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் - தீயில்லை பாடல், எங்கேயும் காதல் கவிஞர் வாலி வாழ்க,... #vidiyal
9:11 AM - 30 Dec 11 via web 


எனது சின்னச்சின்ன எதிர்பார்ப்புக்கள் எனக்கு ஏமாற்றங்களையும், கோபத்தையும் சில சமயம் என்னால் பிறருக்குக் கவலையையும் தருவதால், எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்கப் பழகிக் கொள்ளப் போகிறேன். #2012Resolution
Friday 30th December 2011 from Twitlonger


அடப் பாவிகளா..
எவ்வளவோ நாளைக்குப் பிறகு டிவி நிகழ்ச்சிக்கு அழகான ஒரு பெண் ஜோடியைத் தந்திட்டு,அதைப் பத்து வினாடி துக்கடா அம்சமாக மாற்றுவதைத் தான் விதி என்பதோ? #புலம்பல்

அது சிங்களத்துச் சின்னக் குயில் என்பது தனிக்கதை 



Posted Wednesday 28th December 2011 from Twitlonger



கூண்டை விட்டு வா பூங்கிளியே - ராஜதுரை ஹிந்தியிலிருந்து உருவி தேவா போட்ட பாட்டு.. கொஞ்சம் ஜாலிக்கும் வித்தியாச ரசனைக்கும் #vidiyal
9:51 AM - 28 Dec 11 via web 


Ponting & Hussey தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்க ஒரு முக்கியமான வாய்ப்பு. இறுதியான வாய்ப்பும் கூட?#AusVsInd 
9:32 AM - 28 Dec 11 via web 


@madhankarky Hope u like my review :) அந்தக் காதலின் வர்ணனைகளும், கவித்துவ அழகியலும் மீண்டும் மீண்டும் வரிகளை ரசித்து சுகிக்க வைக்கின்றன 
9:55 PM - 27 Dec 11 via web 


 ஆமாமா ஒற்றைப் படை ஓட்டங்கள் எடுக்கிறதால நம்பர் வன் பட்ஸ்மனே தான் ;) 
9:49 PM - 27 Dec 11 via web 
டில்ஷான் நம்பர் வன் batsman  என்று சொன்ன ஒரு நண்பருக்கு அளித்த பதில்;) 



தே ஜா வூ கனவில் தீ மூட்டினாய் - ஆகா.. காதுக்குள்ளே காதல் சுரக்கிறது :) எனக்கும் சேர்த்தே எழுதினீர்களோ? :)@madhankarky
10:39 PM - 25 Dec 11 via web 


இன்றைய நாளின் இனிமையான பொழுதுகளை மீட்டிக்கொண்டே 'நண்பன்' பாடல்களைத் தனியாக ரசிக்கிறேன்.. ரசிப்பவற்றை நாளை நேரம் கிடைப்பின் பதிவிடலாம் :)
10:27 PM - 25 Dec 11 via web 


வெற்றி டிவி யில் குழந்தை இயேசு. கலைஞர் டிவி க்கு மாற்றினால் கிறிஸ்மஸ் அன்று ரம்யா கிருஷ்ணன் அம்மன் படம். எம்மதமும் சம்மதமே?? ;) 12:08 PM - 25 Dec 11 via Twitter for iPhone 

அட அது குட்டிப் பிசாசாம். ஹர்ஷு சொல்றான். கஞ்சா கருப்புக்கு தங்கச்சி செண்டிமெண்ட் பாட்டு இருக்கும்போதே நினைச்சேன். #kolaveri
12:12 PM - 25 Dec 11 via Twitter for iPhone 


தமிழ் ஈழம் வருதோ இல்லையோ, பாடலில், படத்தில் தமிழ் ஈழம் 'வெறும் வார்த்தை'யாக வருவதை நான் எதிர்க்கிறேன்.
6:12 PM - 24 Dec 11 via web 

காதல் வேதனையுடன் தமிழ் ஈழத்து முள் வேலி மக்களை ஒப்பிடுவதை விட தணிக்கை செய்வது எவ்வளவோ மேல்.
6:11 PM - 24 Dec 11 via web 
ராஜபாட்டை யுகபாரதி பாடல் பற்றிய நண்பர் ஒருவரின் ட்வீட்டிற்குப் பதில்..


நான் விமர்சனங்களுக்கு எப்போதும் எதிரியல்ல.. அவை நல்ல எண்ணத்துடன் நல்ல மனங்களில் இருந்து வருவதாக இருந்தால் :) #AllIsWell 
9:55 AM - 23 Dec 11 via web 


எதிரிகள் இருக்கிறார்களோ இல்லையோ, நண்பர்களை உருவாக்கப் பழகிக்கொள்ளுங்கள். LOSHAN - லோஷன்: அன்புள்ள எதிரிகள் http://www.arvloshan.com/2011/12/blog-post_18.html
9:02 AM - 22 Dec 11 via Tweet Button 


எங்களுக்குப் பிடித்த பிரபலங்கள்,பற்றி அறிந்துகொள்ள ஆசைப்படும் நாம் ஏன் எம்மைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புவதில்லை?/முயல்வதில்லை? 
8:44 AM - 21 Dec 11 via web 


என்னை நான் உணர்வதை விட இன்னும் சிலர் உணர்த்திவிடுகிறார்கள் என்பதே யதார்த்தம். #பட்டறிவு 
8:26 AM - 21 Dec 11 via web 

நல்ல காலம் எனக்குத் தெரிந்த யாருக்கும் 'சுனந்தா' என்று பெயரில்லை.. ஓ.. சுனந்தா - MUK ரசிக்க வைக்கிறது.. வாழ்த்துக்கள் @gvprakash
9:31 AM - 20 Dec 11 via web 

ஒரு முறை, சுனந்தா இரண்டும் இப்போ என் favorites -MUK@gvpragash twitter.com/#!/LoshanARV/s…
8:41 AM - 20 Dec 11 via web 

யார் தூரிகை செய்த ஓவியம்.. யார் சிந்தனை செய்த காவியம்.. இந்தப் பாடலை யாராவது கேட்டுள்ளீர்களா? பாரு பாரு பட்டணம் பாரு திரைப்படம் #vidiyal
8:48 AM - 20 Dec 11 via web 

முப்பொழுதும் உன் கற்பனையில் பாடல்கள் மூலம் வேறொரு இசைத் தளத்துக்கு G.V.பிரகாஷ் சென்றிருப்பதாக நினைக்கிறேன்.. ரசிக்க வைக்கிறார்
8:32 AM - 20 Dec 11 via web · Details


முதல்ல உன்னைப் பற்றி நினை.. பிறகு உலகத்தைப் பற்றி நினைச்சுக்கலாம் ;) #கவுண்டர் ஏதோ ஒரு படத்தில் சொன்னது
7:42 AM - 20 Dec 11 via web 


தன்னைப் பற்றி நினைக்காதவனா உலகத்தைப் பற்றி அக்கறைப்படப் போகிறான்? 
7:56 AM - 20 Dec 11 via web 
முதலில் சமூகம் பற்றியே ஒருவன் சிந்திக்கவேண்டும் என்று சொன்ன ஒருவருக்கு அளித்த பதில் 

கப்பலேறிப் போயாச்சு பாடலைக் கேட்கும் போது நிறையக் கப்பல் ஞாபகங்கள் வந்து தொலைக்குது.. 
9:45 AM - 19 Dec 11 via web 

"உன்னை சுற்றியுள்ள எல்லாமே வெறுப்பைத் தருவதாக நீ உணர்ந்தால் உனக்குள் நீ வெறுப்புடன் இருக்கிறாய் என்று தான் அர்த்தம் " - ஓஷோ
9:46 AM - 16 Dec 11 via web 


சில வினாக்கள் விடையளிக்காமலே விடப்படுவது ஆரோக்கியமானது & ஆபத்தில்லாதது 
9:27 PM - 16 Dec 11 via Twitter for iPhone 


டில்ஷான் பேசாம #BBL ஆடப் போயிருக்கலாம்.. காசுக்குக் காசும் ஆச்சு. இலங்கையும் உருப்பட்டிருக்கும் #SLvSA
5:14 PM - 17 Dec 11 via web 


ஒன்று தானேடா முடிஞ்சிருக்கு.. இன்னும் ரெண்டு இருக்கில்ல? முடிஞ்சா ஒரே நாளில் போட்டியை முடிச்சுக் காட்டுங்கடா #சவால் 
7:14 PM - 17 Dec 11 via web 

தென் ஆபிரிக்கா இலங்கையை முதலாவது டெஸ்ட் போட்டியில் ஓட ஓட அடித்த பின்னர்..


'ராஜ பார்வை' மீண்டும் ஒரு தடவை பார்த்து முடித்தேன். அந்தக் காலத்திலேயே அசத்தியுள்ளார்கள். Technically & musically #wow

12:44 AM - 18 Dec 11 via Twitter for iPhone 



யாரோ ஒருவனால் பலியெடுக்கப்பட்ட கோழி, இறைச்சியாக மாறி என்னைப் பழிவாங்குகுறது பல்லிடுக்கில் சிக்கி #SundayLunch  
1:39 PM - 18 Dec 11 via Twitter for iPhone · 


ஒரு முறை ஒரே முறை - காவியத் தலைவன் பாடல்... எங்கள் வாழ்க்கைக்கான பாடங்கள் உள்ள பாடல்.. அடுத்து விடியலில்.. #vidiyal @vettrifm
8:53 AM - 19 Dec 11 via web ·


பிறப்பிலும் இறப்பிலும் நாம் ஒன்று தான் தெரியுமா? வளர்ப்பிலும் வாய்ப்பிலும் நீ வந்தது புரியுமா? - காவியத் தலைவன் பாடலின் ஈர்ப்பு வரிகள் 9:08 AM - 19 Dec 11 via web 


Post a Comment

3Comments

Please Select Embedded Mode To show the Comment System.*