July 21, 2010

இலங்கை இலங்கை இலங்கை + முரளி

நேற்றைய விடியலில் கொஞ்சம் நல்ல,பயனுள்ள விஷயம் பேசலாமேன்னு ஒரு தலைப்புக் கொடுத்தேன்.

ஒரு நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறவேண்டுமானால், தன்னிறைவு காணவேண்டுமாக இருந்தால் எந்தக் காரணி மிக முக்கியமானது எனக் கருதுகிறீர்கள்?

இதற்கு விடைகள் வருவதன் மூலம் எம்மவர்கள் இப்போது நாடு பற்றி நினைப்பது என்னவென அறியலாம் என்றும் அவர்கள் சொன்ன விடைகளை கணக்குப் பண்ணி வைத்துக் கொண்டேன்.

அதிகமாக சொல்லப்பட்ட காரணிகள் வரிசையாக..

உழைப்பு/கடின உழைப்பு
கல்வியறிவு வளர்ச்சி
ஊழலற்ற ஆட்சி,சீரான ஆளுகை,சிறந்த தலைமைத்துவம் + அரசியல் பற்றிய etc etc etc
உள்நாட்டு உற்பத்தி
ஒற்றுமை
மனித வளப் பூரணப் பயன்பாடு
அதிகாரப் பகிர்வு


நம்ம நேயர்களாகிய மக்கள் தெளிவாத் தான் இருக்காங்க..
ஆனால் வாக்களிக்கும்போது இவங்கல்லாம் எங்கே போயிடுறாங்க என்ற கேள்வியும் வருகிறது.

உழைப்பில் எம்மவர் கடுமையாகவே ஈடுபடுகிறார்கள். நாட்டிலே எடுத்ததுக்கெல்லாம் விடுமுறைகள் கொட்டி இருந்தாலும்..
கல்வி மீதான அக்கறை முன்பை விட இப்போது நிறையவே உண்டு.
கல்வியில் பின் தங்கிய,புறக்கணிக்கப்பட்ட மலையகமும் இப்போது விழித்துள்ளது.
உள் நாட்டு உற்பத்தி அதன் வளர்ச்சியும் பற்றியும் இப்போது அக்கறைப்படுகிறோம்..

ஆனால் இந்த அனைத்துக் காரணிகளும் பிரதானமாகத் தங்கியிருப்பது அரசியல்,அரசியல்,அரசியலில் தான்..
அரசியல் பற்றி????
நான் என்ன சொல்வது?
நீங்களே தேடிப் பாருங்கோ..

--------------------------------

இலங்கை இப்போது சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்தான நாடாக மாறிவருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஐந்து பாலியல் வல்லுறவுகள்,ஒரு சில வழிப்பறிகள்,கொள்ளைகள் & இரு கொலைகள்.
இவை அனைத்தும் இடம்பெறுவது தென் பிராந்தியங்களிலேயே.

பணமும் வெள்ளைத் தோல் மீதான ஆசையுமே காரணம்.

நேற்றும் 63 வயதான ஜெர்மன் பிரஜையொருவர் தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அண்மையில் உல்லாச விடுதியொன்றில் பெற்றோரோடு வந்திருந்த 14 வயது மட்டும் நிரம்பிய பிரித்தானிய சிறுமியொருத்தி அந்த விடுதி உரிமையாலராலேயே வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறாள்.
இவனெல்லாம் மனித ஜென்மமா?

இந்த இழிசெயலுக்கெல்லாம் காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறதா?
பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடுகள் வழங்கப்படுகின்றனவா என்பது பற்றித் தகவல்கள் இல்லை.

ஏற்கெனவே உண்ணாவிரதம்,பிடிவாதங்களால் வெளிநாடுகளில் கிழிந்து கிடக்கும் பெயரை ரிப்பெயர் செய்ய சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கை அரசு படாத பாடுகள் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இவையெல்லாம் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருவதில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தலாம்.

ஐபா வைத்து ஐயோ அம்மா சொன்ன கசப்பான அனுபவத்திலிருந்து இன்னும் மீளாத அரசுக்கு எப்போது ஐ.நா ஆப்பு அடிக்க என்று பார்த்திருக்கும் நிலையில் தத்தம் உல்லாசப் பிரயாணிகளுக்கு மேலை நாடுகள் 'இலங்கை உல்லாசப் பிரயாணிகளுக்கு ஆபத்தான நாடு' என்று முத்திரை குத்தினால் அவ்வளவு தான்.

யுத்தம் நடந்தபோது அந்தப் பகுதிகளில் ஏற்படாத ஆபத்து எல்லாம் யுத்தமே நடக்காத காலத்தில் தென் பகுதியில் நடக்குது..
யோசியுங்கோ..

--------------------------
நாளை காலி போகலாம்.. (இதுவும் தென் பகுதி தான்.. ஆனால் நான் தான் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணி இல்லையே)
முரளியின் இறுதி டெஸ்ட் ஆட்டத்தின் இறுதி நாளைப் பார்க்கலாம் என்று ஆசியோடு திட்டம் போட்டால், இந்தியா கவித்திடும் போல இருக்கே..

சகல விக்கெட்டுக்களையும் முதலாவது இன்னிங்க்சில் இழந்துவிட்டது..
276.
244 ஓட்டங்களால் இலங்கை முன்னணியில் உளது..

முரளி ஐந்து விக்கெட்டுக்கள்..
இன்னும் மூன்றே மூன்று..

இது முரளியின் 67 வது ஐந்து விக்கெட் பெறுதி.

இன்று பழைய முரளியின் பெரிதாகத் திரும்பும் பந்துகள் பலவற்றைப் பார்த்தபோது மகிழ்ச்சியாகவும் இனி இந்தப் பந்துகளைப் பார்க்க முடியாது என்று ஏக்கமாகவும் இருக்கிறது.


இந்தியாவுக்கு இலங்கை follow onஐப் பிரயோகிக்கப் போகிறது. இன்றே இந்தியா சுருண்டுவிடுமா? அல்லது நாளை காலை நான் காலி மைதானத்துக்குப் போகும் வரை போராடுமா? ;)

அட்லீஸ்ட் கடைசி விக்கெட்டையாவது முரளி மிச்சம் வையப்பா..
நான் வந்து மைதானத்தில் கை தட்டி ஆரவாரப்படனும்..

ஆகா.. கம்பீர் GONE....
மீண்டும் மாலிங்க.....
இந்தியா O FOR 1.

முரளிக்கு இன்னும் மூணு மிச்சம் வையுங்கப்பா..

பிற்சேர்க்கை..
ஒரு வெறித்தனமான stat விரும்பி(நம்ம கங்கோன் இல்லை என நம்புகிறேன்) Cricinfo இல் சொன்னது - "I would like Murali to finish with 799 wickets. Looks cooler than 800+ wickets. Like the Don's 99.94 figure.."


ஏன்யா இப்படி ஒரு stat வெறி???

12 comments:

கன்கொன் || Kangon said...

நேயர்கள்- இருக்கிற எல்லாருமே இப்பிடி இருந்தா நாங்கள் என்ன செய்யிறது...?
அரக்கர்களில் சிறந்த அரக்கனை தெரிவு செய் எண்டுறது கஷ்ரம். அதுதான் அந்த நேரத்தில விரும்பிறத போட்டுட்டிற்று போறம்.

சுற்றுலாப்பயணத்துறை - கவனமப்பா...
நாட்டில ஓரளவுக்கு ஒழுங்கா வேல செய்யுது எண்டு நான் நினைச்சது அதுதான், அதிலயும் கைய வச்சிடாதயுங்கோ... :(
எங்கட காவல்துறைக்கு கையப் பிடிச்சுக் கொண்டு திரியிற காதலர்கள கைது செய்யவே நேரம் போதாது, உதுக்கெங்க நேரம்... :(

// யுத்தம் நடந்தபோது அந்தப் பகுதிகளில் ஏற்படாத ஆபத்து எல்லாம் யுத்தமே நடக்காத காலத்தில் தென் பகுதியில் நடக்குது.. //

:D :D :D


காலி - :)
வேளைக்கு செவாக்க எடுத்திற்றா பிரச்சினை முக்காவாசி முடிஞ்சிடும்.
எடுங்கோ எடுங்கோ...
நாளைக்கு வியாழன் விடியலுக்கு லோஷன் அண்ணா வாற மாதிரி துடுப்பெடுத்தாடுங்கோ...
இண்டைக்கு இந்தியா துடுப்பெடுத்தாட 61 பந்துப்பரிமாற்றங்கள்.
முடிக்கலாம். :D

anuthinan said...

//நம்ம நேயர்களாகிய மக்கள் தெளிவாத் தான் இருக்காங்க..
ஆனால் வாக்களிக்கும்போது இவங்கல்லாம் எங்கே போயிடுறாங்க என்ற கேள்வியும் வருகிறது.//

:))

//யுத்தம் நடந்தபோது அந்தப் பகுதிகளில் ஏற்படாத ஆபத்து எல்லாம் யுத்தமே நடக்காத காலத்தில் தென் பகுதியில் நடக்குது..
யோசியுங்கோ..//

இனித்தான் ஆப்பு என்றது இதைத்தானோ!!!

//இன்று பழைய முரளியின் பெரிதாகத் திரும்பும் பந்துகள் பலவற்றைப் பார்த்தபோது மகிழ்ச்சியாகவும் இனி இந்தப் பந்துகளைப் பார்க்க முடியாது என்று ஏக்கமாகவும் இருக்கிறது.//

எனக்கும், இன்றியு போட்டியை பார்த்த பிறகு மனிதர் ஏன் ஓய்வு பெறுகிறார் என்று கோவம்!!!

KUMS said...

அண்ணா நீங்க நாளைக்கு காலியில் கிரிக்கெட் பார்க்கிறதும் இல்லாவிட்டால் கா(K)லி மைதானத்தை பார்க்கிறதும் இந்திய வீரர்களில் கைகளில் (மன்னிக்கவும்) துடுப்பாட்டத்தில் தான் தங்கியுள்ளது.

Subankan said...

முடிவுக்கு நன்றிகள் அண்ணா, என்ன ஒன்று, நம்ம கன்கோனை விட்டிருந்தால் புள்ளிவிபரத்தோடு வந்திருக்கும்.

//ஒரு வெறித்தனமான stat விரும்பி(நம்ம கங்கோன் இல்லை என நம்புகிறேன்) Cricinfo இல் சொன்னது - "I would like Murali to finish with 799 wickets. Looks cooler than 800+ wickets. Like the Don's 99.94 figure.."
//

அடப்பாவிங்களா....


//வேளைக்கு செவாக்க எடுத்திற்றா பிரச்சினை முக்காவாசி முடிஞ்சிடும்.
எடுங்கோ எடுங்கோ...//

அதுக்கு நோ-பால் போடப்படாதப்பு :)

SShathiesh-சதீஷ். said...

முரளி 800 எடுக்கணும் எடுப்பார் என நம்புவோம். நான் ஒரு இந்திய அணி விசிரியானாலும் இந்த போட்டியில் இலங்கை வெல்லவேண்டும் என்றும் முரளி சாதனை படைக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகின்றேன். முரளி என்னும் ஒரு வீரனுக்காய் இப்படி ஆசைப்படும் உள்ளம பழ அதுவே அவர் பெற்ற மாபெரும் சொத்தும். வாழ்த்துக்கள் முரளி. முரளியுடன் பேசினால் நான் கேட்டதாய் சொல்லுங்கோ

தர்ஷன் said...

//ம்ம நேயர்களாகிய மக்கள் தெளிவாத் தான் இருக்காங்க..
ஆனால் வாக்களிக்கும்போது இவங்கல்லாம் எங்கே போயிடுறாங்க என்ற கேள்வியும் வருகிறது.//

TV பார்த்துக்கிட்டு இருந்திருப்பாங்க


உண்மையை சொல்வதென்றால் முதலில் முரளி 800 ஐ நெருங்குவார் என்றே நான் நம்பவில்லை. ஆனால் இதோ கையருகே சாதனை. அதை நேரில் காண உங்களுக்கு வாழ்த்துக்கள். அந்தக் கணங்கள் தந்த பரவச அனுபவத்தை நாளை பதிவாக எதிர்பார்க்கிறேன்.

Mohamed Faaique said...

பாடசாலை அணியில் முரளி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் என்பது பலருக்கு தெரியாது..

Mohamed Faaique said...

பாடசாலை அணியில் முரளி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் என்பது பலருக்கு தெரியாது.. (முரளியுடைய பக்கத்து வீட்டு பையன் சொன்னது..)

கரன் said...

Test Cricket இல் தனது கடைசிப் பந்தில் 800.
வாழ்த்துகள் முரளி...!

Vijayakanth said...

singalavar serinthu vaalum pirathesaththil thamizhanukku kidaiththa varavetpum oru magizhchchi tharum vidayam...

Naan indian supporteraa irunthum i really prayed for murali to get 800 and win the match...cos rest of the match would go to india which play against a team without murali..appo than muraliyoda arumai puriyum..mendis ai muraliyoda compare panninawangalukkum unmai vilangum

ராசராசசோழன் said...

உங்கள் பதிவுகளை பார்க்கும் பொழுது சில தமிழர்கள் இலங்கையில் நன்றாகத்தான் உள்ளனரோ என்று எண்ண தோன்றுகிறது... எழுதிய வார்த்தைகளில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்...

Gajen Dissanayake said...

அண்ணா....இந்த Comment முரளி 800ஐத் தொட்டதும் நான் எழுதுகிறேன்..(24.July 2010)
இனி இந்த சாதனையை எவராலும் முறியடிக்க முடியாது..ஏனெனில் அந்தக் காலத்தில் குறிப்பிட்ட ஒரு சிலர் தான் Cricket விளையாடுவார்கள்..அவர்கள் இல்லையென்றால் Team கவுந்துடும் என்ற நிலைமைகள் இருந்தன..ஆனால் இப்போது குப்பனும் சுப்பனும் எல்லோரும் Cricket விளையாடுகிறார்கள்..ஒருவர் இல்லையென்றால் இன்னொருவர்..Cricket வியாபாரமாகி விட்டது..இதில Match fixing, I.P.L, ஊக்கமருந்துபாவனை எக்ஸ்செட்ரா எக்ஸ்செட்ரா. 19 வருடங்கள் தொடர்ந்து சாதனைகள் மட்டுமல்லாமல் தொடர்ந்த சோதனைகளும் முரளிக்கு வந்தன. எந்தவொரு வீரரும் இவரைப்போல கடுமையாக பந்துவீச்சு பரிசோதனைக்கு உட்படவில்லை..தமிழ் வீரர்-இலங்கை வீரர்-முரளி! நாம் அனைவரும்
பெருமைப்படவேண்டிய விடயம். எனது எதிர்பார்ப்பு என்னவெனில் அவரது எதிர்காலம் அரசியலிலோ,I.P.L லிலோ சென்று நாசமாகி விடாமல் ஒரு வர்ணனையாளராகவோ நடுவராகவோ (ஆஸ்திரேலியாவின் முகத்தில் கரியை பூச வேண்டும்)பரிணமித்தால் மகிழ்வேன் !
சச்சின் பற்றிய LATEST செய்தி..(படித்திருப்பீர்களோ தெரியாது)...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner