April 15, 2010

லோஷன் எந்த அணி? & மோடி-தரூர்-கொச்சி IPL சர்ச்சை



IPL போட்டிகள் மிகத் தீர்மானமிக்க,விறுவிறுப்பான ஒரு கட்டத்தை எட்டி இருக்கின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே இப்போதைக்கு அரை இறுதிகளை எட்டிய ஒரே அணியாக இருக்கிறது என்று சொல்லப்பட்டாலும் கொஞ்சம் கூட்டல்,கழித்தல் பண்ணிப் பார்த்தால் பெங்களுர் ரோயல் சாள்லேஞ்சர்ஸ் அணியும் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது என்று உறுதியாக சொல்லலாம் என நான் நினைக்கிறேன்.


அடுத்த இரு இடங்களுக்கு பஞ்சாப்,கொல்கத்தா தவிர்ந்த நான்கு அணிகளுக்கிடையில் மோதல் இனி இனி சுவாரஸ்யமாக இருக்கும்.
அதில் முதலாவது இன்று சென்னை,டெல்லி அணிகளுக்கிடையில்..


ஆனால் இந்தப் போட்டிகளின் பரபரப்புக்கு மேலாக கொச்சி அணியின் உரிமை பற்றியும் லலித் மோடி வெளிப்படுத்திய ரகசியக் கொடுக்கல் வாங்கல் பற்றியும் எழுந்துள்ள சர்ச்சைகள் தான் இப்போது சூடான செய்திகள்.


கொச்சி அணியின் பிரதான பங்குதாரராக சஷி தரூரின் எதிர்கால மனைவி சுனந்தா புஷ்கர் இருக்கும் விஷயத்தை லலித் மோடி போட்டுடைத்ததில் எதோ கோக்கு மாக்கு விவகாரம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.


அதை உறுதிப்படுத்துவது போல கொச்சி அணியை ஏலத்தில் இருந்து விலகிக் கொள்ள ஐம்பது மில்லியன் டொலர் லஞ்சம் தங்களுக்கு தருவதாக மோடி சொன்னதாக சத்யேந்திர கேயிக்வாத் என்பவர் (கொச்சி அணியின் உரிமை நிறுவனத்தின் பிரதம அதிகாரி ) தகவல் வெளியிட்டுள்ளார்.


எனினும் மோடி இதனை உடனடியாகவே மறுத்துள்ளார். தான் எந்தவிதத்திலும் வேறு அணிகளை ஏலத்தில் எடுக்கவில்லை என்றும் தனக்கு இவ்வாறு லஞ்சம் கொடுப்பதற்கு எந்தவொரு காரணமும் இல்லை என்கிறார் அவர்.


இத்தனை பிசியான மனிதர், உலக கிரிக்கெட் அமைப்புக்களையே நடுங்க வைக்கின்ற, இந்திய கிரிக்கெட் சபையைக் கையில் வைத்து ஆட்டுகின்ற லலித் மோடி ஒவ்வொரு நாளும் தவறாமல் ஜம்பமாக, சில வேளைகளில் கொஞ்சம் கர்வமாக ட்விட்டரில் தன்னைப் பற்றி தரவுகள் இடும்போதே நினைத்தேன், என்றாவது ஒரு நாள் இந்த ட்விட்டர் தகவல்களாலேயே மனிதர் மாட்டிக் கொள்வார் என்று..
இப்போது அதனாலேயே இந்த கொச்சி அணி விவகாரம் பூதாகாரமாக வெளிவந்துள்ளது.


சஷி தரூரைப் பற்றியும் கொச்சி அணியின் உரிமை பற்றியும் சந்தேகத்தை மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட அது பற்றிப் புகைந்து ஒரு பக்கம் தரூரின் அரசியல் பக்கத்துக்கு ஆப்பு வைக்குமளவு வளர்ந்து நிற்கிறது.. மறுபக்கம் IPL ஏலங்கள்,உரிமைகள்,பணப் புழக்கங்களில் காக்கப்பட்டு வந்த ரகசியம் போதும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.


இவ்விஷயத்தில் யாரோ ஒரு பணக்கார வர்த்தகர் மட்டுமே சம்பந்தப்பட்டிருந்தால் வழமையாக இந்திய கிரிக்கெட் சபை செய்வது போல ஒரு போர்வைக்குள் மூடி மறைத்திருப்பார்கள்.
ஆனால் இந்தியாவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளார்.அவர் குற்றம் சாட்டி இருப்பது அண்மைக்காலத்தில் உலக கிரிக்கெட்டையே ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்த மனிதர்.


என்ன செய்யப் போகிறது இந்திய கிரிக்கெட் சபை?
இவ்விவகாரம் கிளறப்பட கிளறப்பட மேலும் பல சர்ச்சைகள்,பயங்கர ரகசிய விவகாரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.


பஞ்சாப்,கொல்கத்தா,ராஜஸ்தான் அணிகளில் மோடிக்குப் பங்குகள் இருப்பதாகப் பரவலாக கிசுகிசுக்கப்பட்டு வந்துள்ளது.ராஜஸ்தான் அணியின் விவகாரங்களில் அடிக்கடி மோடி அக்கறையுடன் செயல்பட்டு வருவதும் கவனிக்கத் தக்கது.


ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணியிலிருந்து விலக முற்பட்டதை அடுத்து அவர் மீது மோடி முன்னெடுத்த தடை,கம்பீர் ராஜஸ்தான் பற்றிக் குறைவாகப் பேச அவர் மீது மோடி பாய்ந்தது இரு சின்ன உதாரணங்கள்.


லலித் மோடிக்கும் சஷி தரூருக்குமிடையிலான நட்பு இன்னொரு தனிக்கதை..இருவரும் 'சில' விஷயங்களில் மிக நெருங்கியவர்களாம் ..


சஷி தரூர்&லலித் மோடி - ரகசியங்கள் அம்பலத்துக்கு வருமா?


ஆனால் ஆச்சரியம் பாருங்கள் இருவருக்கும் அண்மையில் ட்விட்டர் அப்டேட்டுக்களால் தான் ஆப்புக்கள் தெரிந்தன;தெரிகின்றன.
வெகு விரைவில் தரூர்,மோடி இருவருமே தங்கள் வாய்களையும், ட்விட்டர் கணக்குகளையும் பெரிய பூட்டுக்களால் பூட்டிக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்..


 IPL 2010 இறுதிக் கட்டத்தை நெருங்க நெருங்க விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் இருப்பது போலவே, மோடி-கொச்சி-தரூர் விவகாரமும் பரபரப்பைக் கிளப்பும் என்பது நிச்சயம்.
இந்த விவகாரம் இந்தியாவில் எதிர்க்கட்சிகளுக்கும் மெல்லும் அவலாக மாறி பாரிய சர்ச்சை,ஊழலாக மாறினால் IPL 4  க்கு வாய்ப்பே இல்லாமல் போகலாம்..
ஏற்கெனவே சர்வதேச கிரிக்கெட் பேரவை IPL க்கு என்று தனி சாளரம் சலுகை காட்ட முடியாது என்று கடுமையாக சொல்லியிருப்பதும் முக்கியமானது.


--------0000000-------0000000------------0000000


லோஷன் எந்த அணி?


இதெல்லாவற்றையும் விட முக்கியமான பிரச்சினை எனக்கு IPL பக்கமிருந்து..


அரையிறுதிக்கான அணிகளுக்கிடையிலான இழுபறிகள் ஆரம்பித்திருக்க எனக்க மாறி மாறி செல்பேசி அழைப்புக்கள்,மின்னஞ்சல்கள்,எஸ் எம் எஸ் கள்..


தடுமாறும் அணிகளின் தலைவர்கள்,முகாமைகளிடமிருந்து தான்..


ஒரு பக்கம் தோனியும் ஸ்ரீக்காந்தும்,. மறுபக்கம் ஷாருக் காணும் தாதா கங்குலியும்..
இன்னொருபக்கம் ஷேன் வோர்னும் ஷில்பாவும்..
டெல்லி தூரம் என்பதாலோ என்னவோ இல்லாவிட்டால் கம்பீரிடம் என் தொடர்பிலக்கங்கள் இல்லாமல் போனதாலோ அழைப்பில்லை.
விஜய் மல்லையாவுக்கு என்னைப் பெரிதாகப் பிடிக்காது (கொஞ்சம் எரிச்சல் போலும்)என்பதால் பெங்களூரிடமிருந்தும் அழைப்புக்கள் இல்லை.


பஞ்சாப் கூப்பிட்டால் உடனே ஓடிடலாம்..
ப்ரீத்திக்காக இல்லை.. நம்ம சங்கா,மகேலவுக்காக.. ஆனால் போய் வேலையில்லையே..
அவங்க தான் அவுட்டே..


வேறொன்றும் இல்லை.. தங்கள் அணிகளை வெற்றியின் பாதையில் அழைத்து செல்லவும், நிச்சயமாக வெற்றிகளைப் பெற்றுக் கொள்ளவும் தான் இப்படி மும்முரமான தூண்டில் விரிப்புக்கள்..


சும்மாவா மில்லியன் கணக்கில் டொலர்கள்.. வேறு வேறு சலுகைகள்.. இதர கவனிப்புக்கள்..
தாங்க முடியல சாமிகளா..


ஒரு பக்கம் வானொலிக் கடமைகள்.. விடுமுறை எடுப்பது கஷ்டம்.. அப்படியே எடுத்தாலும் எந்த அணிக்கு எஸ் சொல்வது.. எல்லாரும் நண்பர்கள்..அதைவிட நம்ம பையன்கள்..ரசிகர்களாச்சே..
அதான் முடிவை நானே எடுக்காமல் அவசர அவசரமாக உங்களையெல்லாம் கேட்டு செய்யலாமேன்னு தான் இங்கே வந்தேன்..


வாசகர்களே,சக பதிவுலக நண்பர்களே.. நாட்டாமைகள் போல நல்லதொரு தீர்ப்பை சொல்லுங்க..


எந்த அணிக்கு விளையாடி வென்று கொடுக்க?
சென்னையா,கொல்கத்தாவா,ராஜஸ்தானா?


நீங்கல்லாம் நம்பமாட்டீங்கன்னு தான் அந்தந்த அணி பிரிண்ட் பண்ணி எனக்கு அனுப்பி வைத்துள்ள அணி ஜெர்சிகளையே உங்களுக்காகக் காட்சிப் படுத்துகிறேன்..


சென்னை சூப்பர் கிங்க்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ்.. 


சொல்லுங்க மக்கள்ஸ்.. நான் யார் பக்கம் போக? 


எவ்வளவு அவசரம்,அக்கறை பாருங்களேன்..
நம்ம அதிர்ஷ்ட இலக்கத்தையும் சேர்த்தே அழகா அடிச்சு அனுப்பி இருக்காங்க..


வில்லன் மோடி ஒப்பந்த சிக்கல் பிரச்சினை கிளப்ப முதல் நான் கிளம்பனும்,. முடிவை சட்டென்று சொல்லுங்க..
எட்டு மணிக்கு இன்று சென்னை விளையாடும் முக்கியமான போட்டி வேறு இருக்கு..


பி.கு - யே.. யாருடா அது ஆட்டோ,அரிவாள்,தடி,பொல்லு தேடுறது?என்னைப் பத்தி தெரியுமில்ல.. அப்புறம்.. 


வேறொன்னுமில்ல அழுதுருவேன்..


**
கொச்சி IPL அணி பற்றிய சிரி படம் ஒன்றை இங்கே பாருங்கள்..
Kochi IPL TEAM

15 comments:

KANA VARO said...

அப்ப அசின் கதி?

இனிமேல் டீம் ஜெர்சிகளை டிசைன் பண்ண உங்களை கூப்பிட போறாங்க அண்ணா!

Unknown said...

இந்திய அரசியலையும் விளையாட்டையும் இந்தியர்களை விட அதிகமாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள்.

ஒரு சிறிய திருத்தம்..

//அவர் குற்றம் சாட்டி இருப்பது அண்மைக்காலத்தில் உலக கிரிக்கெட்டையே ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்த மனிதர்.//

ஐ.பி.எல் தவிர மற்ற பி.சி.சி.ஐ விவகாரங்களில் மோடியின் பப்பு வேகாது.. ஆதலால் உலக கிரிக்கெட்டையே ஆட்டிப் படைக்கும் என்று அந்த நாதாரிக்கு பெயர் வாங்கித்தராதீர்கள்.

SShathiesh-சதீஷ். said...

//எந்த அணிக்கு விளையாடி வென்று கொடுக்க?
சென்னையா,கொல்கத்தாவா,ராஜஸ்தானா?//
மன்னிக்கவும் அண்ணா இதில் ஒரு திருத்தம் வென்று கொடுக்க அல்ல ஆப்படித்து வெளியேற்ற

கன்கொன் || Kangon said...

பிடிபட்டான் எங்கள் எதிரி...
ஏனுங்க தரூர் அங்கிள், உங்கட செல்வாக்கப் பயன்படுத்தி உவன அடிச்சுத் துரத்துங்கோவன்?

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே...

அதுசரி, உவர் மோடி அங்கிள் ராஜஸ்தான் கிறிக்கற் சபையில ஏதோ ஊழல் செய்ததெண்டு முந்தி ஏதோ பிரச்சினை நடந்ததேல்லோ?
அப்ப இனி அதையும் இழுத்து விசாரணை செய்யச் சொல்லுங்கோ... :)

அதுசரி,
நாட்டில இத்தனை சிரிப்புப் பதிவர் இருக்கேக்க நீங்கள் ஏன் சிரிப்புப் பதிவராகும் முயற்சி?
உங்களுக்கு சென்னை தானே பிடித்த அணி?
அப்ப ராஜஸ்தான் அல்லது டெல்லிக்காக விளையாடுங்கோ.... உங்களுக்குப் பிடிச்ச அணி வெற்றி பெற்றிடும்.


//SShathiesh-சதீஷ்.
//எந்த அணிக்கு விளையாடி வென்று கொடுக்க?
சென்னையா,கொல்கத்தாவா,ராஜஸ்தானா?//
மன்னிக்கவும் அண்ணா இதில் ஒரு திருத்தம் வென்று கொடுக்க அல்ல ஆப்படித்து வெளியேற்ற
//

ஏனுங்கோ! உவர் சதீஷ் அண்ணா இங்க தானே நிக்கிறார்? :P

SShathiesh-சதீஷ். said...

//SShathiesh-சதீஷ்.
//எந்த அணிக்கு விளையாடி வென்று கொடுக்க?
சென்னையா,கொல்கத்தாவா,ராஜஸ்தானா?//
மன்னிக்கவும் அண்ணா இதில் ஒரு திருத்தம் வென்று கொடுக்க அல்ல ஆப்படித்து வெளியேற்ற
//

ஏனுங்கோ! உவர் சதீஷ் அண்ணா இங்க தானே நிக்கிறார்? :P

//இல்லை நான் இந்தியாவில் இருந்துதான் இதை இட்டேன். சச்சின் என்னிடம் கேட்டுக்கொண்டதற்கினங்க நான் அவருக்கு என்னால் முடிந்தவரை டிப்ஸ் கொடுக்கின்றேன். ஐ.பி.எல் முடிய சந்திப்பம் என்ன தம்பி....அப்ப வரட்டே.....

வந்தியத்தேவன் said...

அண்ணே மைதானத்தில் சைட் ஸ்கிறீன் ஒழுங்காகத் தானே இருக்கின்றது. பிறகு ஏன் நீங்கள் அங்கே செல்கின்றீர்கள். இல்லை ஒருபக்கம் நீங்களும் இன்னொரு பக்கம் உங்கள் தலைவி நமீதாவும் சைட் ஸ்கிறீனாக இருக்கப்போறியளா?

சசி தரூர் எல்லாம் ஒரு அமைச்சர் என்ன கொடுமை?

அதுசரி ப்ரீத்தீ ப்ரெட் லீ காதல் பற்றி செய்திகள் பரவலாக அடிபடுகின்றது அது பற்றி ஏன் நீங்கள் எழுதவில்லை.

SShathiesh-சதீஷ். said...

// வந்தியத்தேவன் said...
அண்ணே மைதானத்தில் சைட் ஸ்கிறீன் ஒழுங்காகத் தானே இருக்கின்றது. பிறகு ஏன் நீங்கள் அங்கே செல்கின்றீர்கள். இல்லை ஒருபக்கம் நீங்களும் இன்னொரு பக்கம் உங்கள் தலைவி நமீதாவும் சைட் ஸ்கிறீனாக இருக்கப்போறியளா?
//

என்னது நமீதாவா என்ன குழப்பம் இது அப்போ நயன்தாரா பாடு என்ன? இருப்பினும் நீங்கள் லோஷன் அண்ணாவை நமீதாவுடன் இணைத்து ஸ்க்ரீனின் இரண்டு பக்கமும் நிர்கவைத்ததுக்கு என் கண்டனங்கள். பக்கத்தில் அல்லவா நிக்க விடவேண்டும்....

//அதுசரி ப்ரீத்தீ ப்ரெட் லீ காதல் பற்றி செய்திகள் பரவலாக அடிபடுகின்றது அது பற்றி ஏன் நீங்கள் எழுதவில்லை//.

நீங்கள் ஏன் ப்ரீத்தி பாட்டி பற்றி விசாரிக்கிரிங்க...ஓஹோ இப்போதானே புரிது உங்க வயசு...அதுசரி நேற்று வரை தமன்ன இன்று முதல் ப்ரீதியோ?

Vijayakanth said...

ஷாருக் தான் யார் வேணும்னாலும் கோச்சிங் டிப்ஸ் sms பண்ணலாம்னு அறிவிச்சிருக்காரே....அதுதான் too many cooks spoil the soup ஆகிடுச்சு போல......

சென்னை இனி உள்ள வரணும்னா டெக்கான் தோற்கணும்.......பாப்போம் நானும் சென்னை ஆதரவாளன் தான்.

அதுசரி...பந்து பொறுக்க நிறைய பேர் அங்க இருக்காங்களே....உங்களை ஏன் கூப்பிடுறாங்க....ஏதோ சதி நடக்குதுன்னு நினைக்கிறேன் :p

மோடி மாமாவை பத்தி தப்பா பேசாதிங்க....அவர் பொண்ணு ரொம்ப வடிவு....FACEBOOK REQUEST அனுப்பிட்டேன் .. ஆனா பதிலை தான் இன்னும் காணோம்

Pavi said...

அண்ணா சென்னை அணிக்கு போங்கோ.

வாலி said...

இன்னைக்கு கிரிக்கெட் விளையாடி... நாளைக்கு தேர்தல்ல நின்னு... அப்படியே சீ.எம்... ஆயிடுவீங்க.. அப்படியே டாட்டா காட்டிக்கிட்டே போவீங்க... நாங்க உங்களுக்கு போஸ்டர் ஒட்டுனும்...

நான் ஒருத்தன் கிரிக்கெட் தானே விளையாடப் போறேன்னேன். என்ன போஸ்டர் வரைக்கும் கொண்டு வந்துட்ட....

balavasakan said...

முடியல அண்ணா...!!!! ரொம்பதான் குசும்பு உங்களுக்கு,,,ஹி..ஹி..

யோ வொய்ஸ் (யோகா) said...

ஐ பீ எல் திருகு தாளங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வர தொடங்கியிருக்கின்றன. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்தால் இன்னும் பல ஆச்சரியம் தரும் செய்திகள் கேட்கலாமாம்.

உங்கள் திறமைக்கு நீங்கள் இந்த இந்தியன் பிரீமியர் லீகில் விளையாண்டு injury லிஸ்டில் சேர்ந்தால் அப்புறம் வேர்ல்ட் கப் போட்டிகள் எப்படி விளையாடுவது

Riyas said...

லோசன்...

IPL போட்டிகளில் முதியோர் விளையாட்டு இல்ல என்று நினைக்கிறேன்.

RIYAS

Anonymous said...

Read this really funny...
http://kusumbuonly.blogspot.com/2010/04/19-4-2010.html

Anonymous said...

please visit http://mayajalcomics.com/index.php

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner